Tuesday, January 8, 2013

கழுத்தின் கருமை மறைய


*எலுமிச்சைச் சாறில், தக்காளியை நனைத்து அதை கழுத்தில் கறுமை உள்ள இடங்களில் தேய்த்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

*உருளைக்கிழங்கு சாறு, தக்காளிச் சாறு, சிறிது நுங்கு ஆகியவற்றுடன் கொண்டைக்கடலை மாவு சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து அதை கழுத்தில் தேய்த்து வர கறுமை நீங்கும்.

* கடுகு எண்ணெயை கழுத்தில் தேய்த்து சில மணி நேரங்கள் ஊறவிட்ட பின், வெதுவெதுப்பான நீல் பஞ்சை நனைத்து துடைத்து வர கறுமை நீங்கும்.

*கோதுமை மா, பயத்தமாவு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன், சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து கழுத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். சில நாட்களில் கறுமை நீங்கும்.

* எலுமிச்சைச் சாறு மற்றும் பாலுடன் சிறிதளவு பார்லி பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை கழுத்தில் கறுமை உள்ள பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நாளடைவில் கறுமை மறையும். இதில், பார்லி பொடி கலக்காமல் எலுமிச்சைச் சாறு மற்றும் பால் மட்டும் கலந்தும் தேய்க்கலாம்.

*பாதாம் பருப்பை அரைத்து பாலில் கலந்து கறுமை உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால், சில நாட்களில் கறுமை மறையும்

No comments:

Post a Comment