Tuesday, January 8, 2013

அழகு குறிப்புகள்


எலுமிச்சம் பழத்தில் ஒரு பாதியை முகம் முழுவதும் தேய்த்துவிட்டு, சற்று நேரம் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய்ப் பசையுள்ள முகம் உலர்ந்து பளீரென இருக்கும்.

வீட்டிலேயே பின் வருமாறு ‘பிளீச்சிங்’ செய்து கொள்ளலாம். பாலேட்டையும், எலுமிச்சம் பழ ஜூஸையும் கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். இம்மாதிரி தினமும் செய்தால் முகம் பளிச்சென இருக்கும்.

வெயிலில் அலைந்ததால் ஏற்படும் கருமையைப் போக்க எலுமிச்சம் பழ ஜூஸில் ரோஸ் வாட்டர் கலந்து கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தடவலாம்.

குளிர்காலத்தில் சருமம் உலர்ந்து காணப்படும். இதைப் போக்கச் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைக் குழைத்து உபயோகிக்கலாம்.

முகத்திலுள்ள சுருக்கங்களைப் போக்க, ஒரு ஸ்பூன் தேனில், காரட் ஜூஸை கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.

முகத்திலுள்ள தழும்புகளை மறைக்க, சருமத்திற்கேற்றவாறு ஃபவுண்டேஷனை உபயோகிக்கலாம்.

களைப்பாயிருக்கும் போதும், வெயிலில் அலைந்து வந்தவுடனும் உணவு உட்கொள்ள வேண்டாம்.

உதடுகள் வெடித்திருந்தால், ‘பெட்ரோலியம் ஜெல்லி’யை உதடுகளில் இலேசாக மசாஜ் செய்யவும்.

பாலீஷ் போட்டதும், விரைவில் காய்வதற்கு, ஐஸ் வாட்டரில் நகங்களை வைத்தால் உங்கள் நெயில் பாலீஷ் சீக்கிரம் உலரும்.

அடிக்கடி டென்ஷன் ஆகாமல், எதையும் ‘ஈஸி’யாக எடுத்துக் கொள்வது நல்லது. டென்ஷன் அதிகமானால், உடல் அசதி, மனச்சோர்வு படப்படப்பு, பசியின்மை, கண்ணுக்குக் கீழே கருவளையங்கள், குடற்புண்கள் ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு.

No comments:

Post a Comment