Tuesday, January 8, 2013

முகம் பளபளப்பு பெற

பெண்கள் அதிகாலையில் குளித்துவிடுவது நல்லது.அதிகாலை குளியல் அழகுக்கு அழகு சேர்க்கும்.
கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் கவலை வேண்டாம்,சந்தனக்கல்லில் ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்குமுன் கண்ணை சுற்றிதடவினால் போதும்.
கழுத்துக்கு முன்னும் பின்னுமிருக்கும் கருமை நிறத்தை போக்க நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் பீர்க்கங்காய் கூடு வாங்கி குளிக்கும்பொது கழுத்தில் ஸோப் தடவி பீர்க்கங்கூட்டை வைத்து நன்றாக தேய்த்துக் கழுவவும்.
பால் ஏட்டில் கொன்சம் பப்பாளிப் பழத்தை மசித்து கலந்து தடவினால் முகம் பொலிவு பெறும். மேலும் வெளியே கிளம்பும்போது மாய்ச்ஸ்சரைசர் உள்ள ஃபேர்னஸ் கீர்ம்களை தடவிகொள்ளலாம். அது முகத்தை அதிக நேரம் ஈரப்பதத்தோடு வைத்திருக்கும். பச்சை கொத்தமல்லிச் சாறு அல்லது நறுக்கிய பீட்ரூட்டை உதட்டில் தடவி வந்தாலும்,பனி வெடிப்பு குறைவதோடு,உதடும் நல்ல நிறத்தோடு பொலிவு பெறும்.
குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவி,சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் குளித்தால்,சருமம் உலர்வது குறையும்.மற்ற நேரங்களில் மாய்ஸ்ச்சரைசிங் கிரீம்களை கை,கால் முழுக்க நன்கு தடவிக் கொள்வதும் சருமத்தை உலர்விலிருந்து காப்பாற்றும்.
பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்கு,நல்லெண்ணெயை இளம் சூட்டில் காயவைத்து,அதில் மெழுகை கொன்சமாக துருவிப் போட்டு,அதை பாதங்கள் முழுக்க இதமாக தடவிக்கொன்டால், விரைவில் குணமாகும்.
இளம்பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப்போல மீசை முடி வளரும்.இந்த முடிகளை நீக்க கஸ்தூரி மன்சளைப் பொடி செய்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.
முகம் தக்காளி போல் பளபளப்பாக மின்ன அரை டம்ளர் குளிர்ந்த நீரில்,50 மி.லி.பால் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் பன்சைத் தொட்டு முகத்தில் பூசவும்.அரை மணி நேரம் கழித்து முகத்தை நன்றாக கழுவுங்கள். தினமும் இப்படி செய்தால் உங்களுடைய முகம் பளபளப்பாகும்.
பார்லி பவுடரில் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து முகத்தில் பூசுங்கள். அரை மணி நேரம் கழித்து இளன்சூடான நீரில் கழுவவும்.பின்னர் நன்றாக துடைத்து விடவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் வளரும் ரோமங்கள் நீங்கிவிடும். 

No comments:

Post a Comment