Tuesday, January 8, 2013

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட சன்மானங்கள் அடுத்த மாதம் முதல்....



வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட சம்பளம், கொடுப்பனவு அதிகரிப்பு, வரி நிவாரணம் என்பன அடுத்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்படுமென்று அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது.


இதற்கான நிர்வாக நடவடிக்கைகளை நிதியமைச்சு மேற்கொள்கிறது.

இது தொடர்பான சுற்றுநிருபமும் வெளியிடப்பட்டுள்ளதாக திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவும் ஜுலை வேலைநிறுத்தகாரர்களுக்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.

சிறிய, நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கான வரி நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும். ஒரு சில வரிகள் மாத்திரம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி முதல் அமுலுக்கு வரும். இது தொடர்பான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள நிதியமைச்சு, உரிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதி செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இணைய மற்றும் புறேட்பான்ட் சேவைகளுக்கான கட்டண குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இணைய மற்றும் புறேட்பான்ட் சேவைகளுக்கான கட்டணங்கள் ஐம்பது வீதத்தினால் குறைக்கப்பட்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு முன்னதாக தெரிவித்திருந்தது.

இக்கட்டண குறைப்பு 20 வீதத்திலிருந்து 10 வீதமாக குறைக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment