Tuesday, January 8, 2013

அழகு சாதனங்கள் ஆபத்தானவையா?


பொதுவாகவே அழகு ஆபத்தானது என்பார்கள். இது, அழகூட்டச் செய்யும் சில அழகு சாதனங்களுக்கும் கூட பொருந்தும். உடல் பாகங்களுக்கு அழகு சேர்க்கும் பல அழகுச் சாதனப் பொருட்கள் அழிவுக்கும் வழி வகுத்துவிடும் என்பதால், சிலர் நெயில் பாலிஷ் போடுவதை தவிர்க்கின்றனர். இதனால் நகங்கள் அழுகிவிடுமோ என்பது அவர்களது அச்சம்.

ஆனால், நெயில் பாலிஷ் போடுவதால் நகங்கள் அழுகிப் போக வாய்ப்பில்லை. அதிலுள்ள ரசாயனக் கலவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

அதனால் நகத்தை சுற்றி புண், அரிப்பு, தடிப்பு போன்ற தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படிப்பட்டவர்கள் நெயில் பாலிஷ் பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

இதேபோல் முகத்துக்கு பூசும் லோஷங்கள், கிரீம்கள், உதட்டுச் சாயங்களால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடும்.

பொதுவாக இவற்றால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனினும் ஒவ்வாவை ஏற்படுமோ என்ற சந்தேகம் இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று இத்தகைய அழகுச் சாதனங்களைப் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment