Tuesday, January 8, 2013

சீனாவில் சர்வதேச பனிக்கட்டி திருவிழா ஆரம்பம்



சீனாவில் ஜனவரி 5ம் திகதி தொடங்கவுள்ள சர்வதேச பனிக்கட்டி திருவிழாவிற்காக பனிக்கட்டிகளை திரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சீனாவின் ஷோன்குவா நதியிலிருந்து இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரம் கனமீற்றர் அளவிற்கு பனிக்கட்டிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

30 வயது முதல் 60 வயதுவரை உள்ள உள்ளூர் விவசாயிகள் இந்த கடுமையான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பனிக்கட்டியை கரையின் எந்த பகுதிக்கு கொண்டுவர வேண்டுமோ அந்த இடத்தில் நின்றுகொண்டு பனிக்கட்டி கட்டப்பட்ட கயிரை அனைவரும் ஒன்று சேர்ந்து இழுத்து கரைக்கு கொண்டுவருகிறார்கள்.

இரவு முழுவதும் கண்விழித்து ஆற்றிலிருந்து பனிக்கட்டிகளை சேகரிக்கும் இவர்கள், சூரியன் உதிக்கத் தொடங்கும்போதுதான் தங்கள் பணியை முடிக்கிறார்கள்.

இந்த பணியில் ஒரு மாதத்தில் சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment