Tuesday, January 8, 2013

பால்கோவா



தேவையான பொருள்கள்:

பால் - 1 லிட்டர்
தயிர் - சிறிதளவு
சக்கரை - 100 கிராம்
நெய் - 5 தேக்கரண்டி
முந்திரி - 5 கிராம்செய்முறை:

வாய் அகண்ட இரும்பு வாணலியில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். ஒரு கொதி வந்ததும் சிறிது தயிரை பாலில் விடவும்.
பால் பொங்கி வரும்போது ஒரு கரண்டி வைத்து பாலை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். அடியிலும், ஓரத்திலும் பால் கட்டிவிடக் கூடாது. கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் சிறிது சுண்டி மஞ்சள் நிறத்திற்கு வரும்போது சர்க்கரையைத் தூவி கிளறி விடவும்.
முந்திரியை நெய்விட்டு பொறித்து அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து, அந்த பொடியையும் பாலில் போட்டு கிளறி விடவும்.
சர்க்கரை பாலுடன் நன்கு சேர்ந்ததும் பால் சிறிது கெட்டியாகத் துவங்கும். அப்போது 3 தேக்கரண்டி நெய்யை பாலில் விடவும்.
10 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும். பால்கோவா சிறிது தளதளவென்று இருக்கும்போதே இறக்கிவிடவும். நெய் சேர்த்துள்ளதால் பின்பு இது இறுகும். எனவே தளதளவென்று இறக்கினால் பின்பு இறுகி கோவா பதமாக இருக்கும்.
தற்போது ஒரு கிண்ணத்தில் நெய்யை ஊற்றி அதில் சுடான பால்கோவாவை எடுத்து வைத்துக் கொள்ளவும். வேண்டுமென்றால் வறுத்த முந்திரியை அதன் மீது பரப்பி அழகுபடுத்தலாம்

No comments:

Post a Comment