Showing posts with label சித்தர்கள். Show all posts
Showing posts with label சித்தர்கள். Show all posts

Thursday, December 13, 2012

தரித்திரமே போ…!


1. ஞானகுரு கஷ்டத்தை நீக்க நமக்குக் கொடுக்கும் வாக்கு
நமது குருநாதர், யாம் சரியாகச் சொல்லவில்லை என்றால், உதை கொடுப்பார். அதே போல, இப்பொழுது யாம் உங்களை அடித்தால், என்ன செய்வீர்கள். வாங்கிக் கொள்வீர்களா?

எமக்குத்தான் திருப்பிக் கொடுப்பீர்கள். “என்னடா, சாமி என்னமோ சொல்லிவிட்டு நம்மை உதைக்கிறார். நம்மை உதைக்க முடியுமா” என்றுதான் எண்ணுவீர்கள்.

ஒருவர் என்ன செய்கிறார்? “கஷ்டம் எனைவிட்டுப் போகவே மாட்டேன் என்கிறது” என்று எம்மிடம் சொல்லி அலறுகின்றார்.

யாம் என்ன சொன்னாலும், “போயா, உனக்குக் கஷ்டமுமில்லை, ஒண்ணுமில்லை போ”, என்று சொன்னவுடன், “என்ன சாமி இப்படிக் கோவிக்கின்றார் என்கிறார். இதை உங்களிடம் சொன்னால் என்ன செய்வீர்கள்?

இந்த அழுத்தத்தை உள்ளுக்குள் கொடுத்தவுடனே
என்ன செய்கின்றது? சரி இதோடு போகட்டும்
என்ற நிலையை நினைத்தால், பரவாயில்லை.