Friday, June 1, 2012

இந்து மத வரலாற்று தொடர் - 1


 அன்பை நிலை நாட்டுவதற்கு உருவானது தான் மதங்களாகும்.  எந்த மதமும் வன்கொடுமையை வலியுறுத்தவில்லை.  ஆனால் மதங்களின் பெயரால் தான் வன்முறைகள் இன்று பரவலாக நடந்து வருகிறது.  அதற்கு காரணம் என்ன?  அன்பை போதிக்கும் மதங்களால் அராஜகங்கள் நிகழ்வது ஏன்?  என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் கிடைக்கும் பதில் ஒன்றுதான்.  மதங்களை தவறுதலாக புரிந்து கொள்வதும் என்மதம் தான் உயர்ந்தது என்று மற்ற மதங்களை ஊதாசினப்படுத்தும் மனப்போக்கும் தான் மத வன்முறைகளின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது என்ற பதில் கிடைக்கும்.

மத வெறியையும் மத அறியாமையையும் நீக்குவதற்கு என்ன வழி என்று மக்களை நேசிக்கும் மனித நேயமிக்க சிந்தனையாளர்கள் பலரும் தங்களது அறிவாற்றலைக் கொண்டு ஆராய்ந்து வருகிறார்கள்.  அவர்களின் சிந்தனைக்கு உரமாகவும் சீர்திருத்தத்திற்கு வழியாகவும் எனக்கொரு யோசனை தோன்றியது அந்த யோசனையின் விளைவுதான் இந்த தொடர் பதிவாகும் 

 மதப்பிரச்சாரம் என்பது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஒரு விஷயமாகும்.  ஆனால் அந்த பிரச்சாரம் எந்த நோக்கில் அமைந்திருக்கிறது என்றால் ஒன்றை தாக்கியும் இன்னொன்றை போற்றியும் தான் அமைந்திருக்கிறது.  இதில் தான் சிக்கல்களும் பிரச்சனைகளும் முளைவிடுகின்றன.  எனவே அந்த மதப்பிரச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.  இதில் இன்னொரு விஷயத்தையும் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  பொதுவாக இன்றைய மதப்பிரச்சாரம் என்பது சுய மதத்தினரிடம் அல்லாமல் மாற்று மதத்தினரிடம் தான் அதிகப்படியாக நடத்தப்படுகிறது.

 எனவே காழ்புணர்ச்சி அற்ற வகையிலும் சுய மதத்தினரே தங்களது மதக் கருத்துகளை நன்கு புரிந்துணரும் வகையிலும் நமது நோக்கம் அமைந்திருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மதங்களில் புகுந்திருக்கும் வெறியுணர்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.  ஆகவே அந்தந்த மத அறிஞர்கள் தங்கள் மக்களுக்கு தம்தமது மதக்கருத்துகளை புரியும் வண்ணம் போதித்து மாற்று மதத்தினரையும் நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மதங்களின் மீது பதிந்திருக்கும் வன்முறை என்ற கொடிய பாவம் கழுவப்படும்.

 சில நாட்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை சார்ந்த ஒரு அன்பரை நான் சந்திக்க நேட்டது.  அவர் பல விஷயங்களைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கடைசியாக மதசம்பந்தப்பட்ட சில கேள்விகளை என்னிடம் கேட்டார்.  அந்த கேள்விகளில் மிகவும் முக்கியமானது இந்துக்களாகிய நீங்கள் சிலைகளை வழிபடுவது ஏன்?  பல கடவுள்களை நம்புவது ஏன்?  என்பதாகும்.  அவருக்கு நான் இந்துக்கள் உருவ வழிபாட்டை கடைபிடிப்பதன் காரணத்தையும் கடவுள் கொள்கைகளையும் விளக்கமாக எடுத்துச் சொன்னேன்.  அந்த விளக்கங்களில் அவர் எந்த வகையிலும் திருப்தி அடையவில்லை.  பொத்தாம் பொதுவாக கல்லை வணங்குவது தவறு என்பதில் பிடிவாதமாக இருந்தாரே தவிர நான் சொன்ன கருத்துகளை புரிந்து கொள்ள எந்த முயற்சியுமே எடுக்காமல் கண்மூடித்தனமாக தான் பேசுவதையே பிடித்துக் கொண்டு நின்றார்.  இத்தகைய பிடிவாதக் காரர்களிடம் வாதம் செய்வது என்பது மலையின் முன்னால் பேசுவதற்கு ஒப்பானதாகும்.  நமது பேச்சு நம் காதில் விழுமே தவிர மலையை எந்த வகையிலும் பாதிக்காது அதனால் அவரிடம் வேறு சில காரியங்களை பேசி அனுப்பி வைத்து விட்டேன்.  இப்படி மற்றவர்களின் கருத்துகளை காது கொடுத்து கேட்காதவாறு பல மனிதர்கள் உருவாக்கப்பட்டு நடமாட விடப்பட்டிருக்கிறார்கள்.  அவர்கள் மற்றவர்களின் கருத்துகளை மட்டுமல்ல மன உணர்வுகளையும் புரிந்து கொள்வது இல்லை.

  சரி ஒரு இஸ்லாமியன் இந்து மதத்தை புரிந்து கொண்டு விடுவதினால் பல நன்மைகள் உண்டு என்றாலும் கூட புரிந்து கொள்ளாமல் போவதனால் பெரும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டு விடப்போவதில்லை.  ஆனால் ஒரு இந்து தனது மதத்தை தெரிந்து கொள்ளாமல் போவதனால் நிச்சயம் பல பாதிப்புகள் ஏற்பட்டே தீரும் அந்த பாதிப்புகள் நமது நாட்டின் ஆத்மாவை அழிப்பதாகவே அமைந்து விடும்.

 மிக வேதனையான ஒரு விஷயத்தை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.  இந்துக்கள் என்று கூறிக்கொள்ளும் எத்தனை பேருக்கு தங்களது மதத்தைப் பற்றிய அறிவும் தெளிவும் இருக்கிறது.  என்னால் சர்வ நிச்சயமாக அறுதியிட்டு கூறமுடியும் நம்மில் நூற்றுக்கு பத்து பேருக்கு கூட நம் மதத்தைப் பற்றி துளி அளவும் ஞானமில்லை என்று.  சரி நம்மவர்கள் ஞானம் இல்லாமல் போனதற்கு அவர்கள் மட்டும் தான் காரணமா என்று கேட்டால் நிச்சயம் அவர்களை மட்டுமே குற்றவாளிகள் என்று கூறி விட முடியாது.  சமயத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய ஆச்சாயர்களே தங்களது பணிகளை திறம்பட செய்யாத குற்றவாளிகள் என்று கருத வேண்டும்.

 புவியியல், பொறியியல் என்று படிப்பதனால் வேலை கிடைக்கிறது.  வருவாய் வருகிறது.  வயறும் நிறைகிறது.  மதத்தை பற்றிய அறிவை பெறுவதினால் என்ன கிடைத்து விடப்போகிறது உலக வாழ்க்கைக்கு உதவாத மத அறிவு தேவையே இல்லை.  என்று சிலர் நினைக்கிறார்கள் இவர்கள் நிச்சயமாக புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே எனது கருத்தாகும்.  ஒரு மனிதன் வாழ்வதற்கு ஆகாரம் மட்டுமே போதுமானது என்றால் மனிதனையும், மிருகத்தையும் சமமான தரத்திலேயே வைத்துவிடலாம்.  மிருகத்திலிருந்து மனிதனை வேறுபடுத்தி உயர்த்தி காட்டுவது பகுத்தறிவோடு கூடிய பண்பாட்டு செறிவாகும்.  பண்பாடு தெரியாத எந்த மனிதனும் அமைதியாக வாழ்ந்து விடமுடியாது.  மதம் என்பதும் மனிதனை பண்படுத்தும் பண்பாடு தான்.  இன்னும் சொல்வதென்றால் மதத்திலிருந்து தான் பண்பாடே தோன்றியது எனலாம்.

  கடிவாளம் இல்லாத குதிரை நாலா திசையும் ஓடி ஆடி வீணாக அலைவது போல் ஒழுக்க நெறியில்லாத மனிதனும் தனது வாழ்நாளை வீனாக்கி கொள்கிறான்.  எனவே மனிதன் தான் அமைதியாக வாழவேண்டும் என்ற சுயநல காரணத்திற்காவது மத அறிவை பெற்றே ஆகவேண்டும்.  அப்படி பெற மறுத்தால் காற்று போன போக்கில் காற்றாடி பறந்து கிழிந்து கிடப்பது போல் நமது வாழ்க்கையும் கிழிந்து போய்விடும்.

 நமது ஜனங்கள் மத அறிவை பெறாமல் இருப்பதற்கு அவர்களின் அசட்டை மட்டும் காரணமல்ல ஆச்சாயர்களின் கவனக் குறைவும் காரணம் என்று முன்பே சொன்னேன்.  அது நான் வேடிக்கைகாக கூறியது அல்ல வேதனையோடு கூறியது ஆகும்.  நமது சங்கராச்சாயர்களும், ஜீயர்களும், பட்டர்களும் தங்களது பார்வைகளை விசாலப்படுத்தாமல் ஒரு சிறு குழுக்களின் மீது கவனம் செலுத்தி பெருவாரியான ஜனங்களை தங்களது ஞானத்தால் வழிநடத்தாமல் போனதே மிகப்பெய குற்றமாகும்.  மடாதிபதிகள் என்பவர்கள் மக்களின் பணியாளர்களே தவிர இறைவனின் அவதாரங்கள் அல்ல.  இவர்கள் தங்களை அவதார புருஷர்களாக கருதிகொண்டதனால் ஏற்பட்ட சோகமே நம்மக்களின் தோல்விகளாகும்.  மன்னர்களின் மானியங்களை திருமடங்களின் கருவறைக்குள் பாதுகாத்து வைக்கும் சிறத்தையை விட்டுவிட்டு மதக்கருத்துகளை மன்னவனுக்கு மாடு மேய்க்கும் சின்னவனுக்கும் சொல்லியிருப்பார்களே யென்றால் இன்றைய அவல நிலை ஏற்பட்டிருக்காது.

 கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மத அமைப்புகளில் ஒரு நடைமுறை இருக்கிறது.  அது என்ன வென்றால் தங்களது மதத்தைச் சார்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது வரை மதக்கல்வி  அளிப்பது ஆகும்.  அந்த நடைமுறை நமது இந்து மதத்தில் எந்த பகுதியிலும் இல்லை அதனால் தான் நம் மதத்தின் புனித நூல் எது என்று கூட அறியாத பலர் இன்றும் இருக்கிறார்கள்.  இந்த நிலைமை இன்னும் தொடர்ந்தால் வருங்காலத்தில் நம் மதத்தின் அறிவுக் கருவூலங்கள் எது என்பதே தெரியாத வன்னம் அழிந்து போகக் கூடிய துயர நிலை ஏற்பட்டுவிடும்.  இதை மாற்ற உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தே ஆகவேண்டும்.

  சிலர் கேட்கலாம் நமது நாடு முழுவதும் இந்து கோவில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  திருப்பதி, சபரிமலை, வைஷ்ணவி, காசி போன்ற புனித ஸ்தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  நகரங்கள் மட்டுமல்லாது கிராமபுறங்களில் கூட ஆன்மீக கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் போன்றவைகள் அதிகத்திருக்கிறது.  நிலைமை இத்தகைய வளர்சி பாதையில் செல்லும் பொழுது மத அறிவு வளர்ந்து தானே இருக்க வேண்டும்.  நூற்றுக்கு பத்துபேருக்கு கூட மத ஞானம் இல்லை என்பது எந்த வகையில் சரியாகும் என்று.

  இவர்கள் கேட்பதில் தவறுகள் இருப்பதாக நான் கருதவில்லை.  ஆனால் இவைகளால் மட்டுமே மதஞானம் பெருகி உள்ளது என்று கூறி விட இயலாது.  ஆலயங்களுக்கு செல்வதும் யாத்திரைகள் மேற்கொள்வதும் கருத்தரங்கங்களை கேட்பதும் ஒரு மனிதனின் சமய அறிவை பெருக்கிவிடும் என்றால் பட்டி தொட்டியெங்கும் பகவத் கீதை பரவியிறுக்கும் பெருவாயான கிறிஸ்துவர்கள் கையில் பைபுளை வைத்துக் கொள்வது கௌரவம் என்று கருதுவது போலானது பகவத் கீதையை வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கும்.

  ஆனால் நிலைமை என்னவென்று நமக்கு தெரியும் மக்கள் இன்று அலகு குத்துவதும், காவடி எடுப்பதும் நெருப்பில் நடப்பதும் தான் சமய வாழ்க்கை என்று கருதும் அறியாமை நிலை மாறியிருக்கும்.  பல கிராமங்களில் சில காட்சிகளை நேரடியாகவே நான் பார்த்திருக்கிறேன் கிறிஸ்துவ மத போதகர்கள் நம் மக்களை பார்த்து நீங்கள் கல்லையும், மண்ணையும் வணங்குகிறீர்கள் அது சாத்தானின் வழிபாடாகும் என்று கேலியும் கிண்டலுமாக பேசுகின்ற பொழுது நம் மக்களில் பலர் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதையும் கோபத்தால் துடிப்பதையும் பார்த்திருக்கிறேன்.  அவர்களிடம் மட்டும் சரியான சமய அறிவு இருந்திருந்தால் கேலி செய்யும் பாதிரிகளை பார்த்து கத்தோலிக்கே ஆலயங்களிலிருக்கும் சிலைகள் மட்டும் கடவுளா முதலில் உங்களது சிலை வழிபாடுகளை நிறுத்தி விட்டு எங்களை பற்றி பேசுங்கள் என்று காரசாரமாக பதில் சொல்லியிருப்பார்கள்.  ஆனால் பாவம் அவர்கள் அப்படி பயிற்றுவிக்கப்படவில்யே நமது மடாதிபதிகள் அவர்களை பல்லாக்கு தூக்குபவர்களாகத்தானே வைத்திருக்கிறார்கள்.

 இந்த மாதிரியான சிந்தனைகள் எனக்குள் எழுந்து கொண்டு இருந்த பொழுது எனது சீடர்களில் ஒருவரான சிவானந்தத்தின் குழந்தை சிவசங்கரி என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள். “ குருஜி இந்து மதம்னா என்ன”?  என்பதே அந்த கேள்வியாகும்.  இது சாதாரணமான ஒரு குழந்தையின் விளையாட்டு தனமான கேள்வியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் அந்த கேள்வியை என்னால் விளையாட்டு தனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  காரணம் நமது மதத்தை பற்றிய அறிவு மக்களிடம் இல்லை மத வல்லுநர்கள் அதை மக்களுக்கு தரவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது இந்து மதம் என்றால் என்ன என்று மக்கள் அறிந்து கொள்ள இதுவரை நாம் செய்தது என்ன என்றெல்லாம் எனக்குள் எத்தனையோ கேள்விகள் எழும்பியது.

 மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சொல்லுவது மிக எளியது.  ஆனால் அப்படி குற்றம் கண்டுபிடிப்பதில் மட்டுமே ஒருவனின் சமூகப்பணி முடிந்து விடுகிறதா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.  குறைகளை பற்றி பேசிக்கொண்டிராமல் அவைகளை நிறைகளாக்க முயற்சிப்பவனே சிறந்த மனிதன் என்று எப்போதுமே நான் கருதுவது உண்டு.  அதனால் என்னால் முடிந்த வரை நமது மதத்தை பற்றி எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்து சொல்வது என்று முடிவு செய்ததின் விளைவே இந்த பதிவாகும் .

 எந்த ஒரு புத்தகத்தையும் எழுதுவதற்கு முன்னால் அதை எப்படி ஆரம்பிப்பது என்பது சிக்கலான ஒரு விஷயமாகும் அந்த சிக்கலை நிவர்த்தி செய்து விட்டோம் என்றால் எந்த சிக்கலையும் எதிர்கொண்டு சமாளித்து விடலாம்.  எனவே இந்த தொடரை குழந்தை சிவசங்கரி கேட்ட இந்து மதம் என்றால் என்ன என்ற கேள்வியிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

  நாம் அனைவரும் இந்துக்கள் நமது மதம் இந்து மதம் என்பது எப்படி நமக்கு தெளிவாகத் தெரியுமோ அதை விட தெளிவாக இந்து மதம் என்ற பெயர் நமக்கு நாம் சூட்டிக் கொண்டது அல்ல.  அந்நியர்கள் நமக்கு தந்த பெயராகும் என்று தெரியும்.  நமது நாட்டிலுள்ள பழைய கால நூல்கள் எதுவும் நமது மதத்தை இந்து மதம் என்ற பெயரில் அழைக்கவே இல்லை.  அவைகள் நமது மதத்தை சனாதன தர்மம் என்ற பெயரிலேயே அழைக்கிறது.  கி.பி. 5-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தத்த சாஸ்திர நூல் ஒன்றே இந்து மதம் என்ற வார்த்தையை முதல் முதலில் பயன்படுத்துகிறது.  அதற்கு முன்பு உள்ள அனைத்து நூல்களும் என்றும் அழியாது நிலைத்திற்கும் வழிமுறை என்ற பொருள் கொண்ட சனாதன தர்மம் என்ற பெயரையே மதத்தை குறிப்பிட பயன்படுத்துகிறது.  நிலைமை இப்படி இருக்க இந்து மதம் என்ற பெயர் எப்போது யாரால் நமக்கு கொடுக்கப்பட்டது என்ற வினா எழும்புவது இயற்கையே ஆகும்.

   சிந்து நதிக்கு கிழக்கு பக்கத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் கிரேக்கர்கள் இந்துக்கள் என்று அழைத்தார்கள்.  சிந்து நதியோர மக்கள் என்றால் அவர்களை சிந்துக்கள் என்று தானே அழைக்க வேண்டும்.  இந்துக்கள் என்று எப்படி அழைக்கலாம் என்று கேட்டால் அதற்கொரு வேடிக்கையான பதில் இருக்கிறது.  பழைய பாரசீக மொழியில் சீ என்ற எழுத்தே கிடையாது.  அவர்கள் சீ என்று துவங்கும் பதங்களை ஹீ என்ற எழுத்திலேயே அழைப்பார்கள் அதனால் தான் சிந்துக்கள் ஹிந்துக்களானார்கள்.

  உலகிலுள்ள பிற மதங்கள் அனைத்திலேயும் ஒரு குறிப்பிட்ட கொள்கை மட்டும் தான் இருக்கும்.  அந்தக் கொள்கையை மட்டுமே சுட்டிக்காட்டி அந்த மதங்களை விவரித்து விடலாம்.  ஆனால் இந்து மதம் என்பது ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் கொண்டது அல்ல.  அதனால் நமது மதத்தை வேற்றுமைகளின் உரைவிடம் என்று கூறிவிடவும் முடியாது.

   நமது ஒருமைபாடு கொள்கை அடிப்படையிலேயோ அமைப்புருவாலோ இல்லை.  அதே நேரம் நம் மதம் ஒரு இறையியல் கோட்பாடுமாகாது.  கடவுள் என்பது இது தான் இப்படித்தான் என்று பிடிவாதம் செய்யும் சுபாவமும் நம் மதத்திற்கு இல்லை.  குருட்டாம்போக்கிலான நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் ஆட்பட்டது அல்ல.  இன்னென்னவற்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அடம் பிடிப்பதும் நமது மதமாகாது.  குறிப்பிட்ட வரையறைகளோ எல்லைகளோ நமக்கு இல்லை.  கடவுளை இல்லை என்பவனும் இந்து தான்.  அவர் உள்ளார் என்று தூக்கி வைத்து ஆடுபவனும் இந்துதான்.  வேதங்களை மறுத்தாலும் ஏற்றுக் கொண்டாலும் அவன் இந்து தான்.  உருவ வழிபாடு மடத்தனமானது என்பவனும் சிலைகளின் கலைகளில் இறைவனை கானுகிறேன் என்பவனும் நமது மதத்தை சார்ந்தவனாகத் தான் கருதப்படுகிறான்.

 இந்து மதம் எந்த மதத்திலேயும் குற்றம் குறைகளை கண்டுபிடித்து கேலி பேசும் சுபாவம் கொண்டது அல்ல.  விண்ணிலிருந்து விழுகின்ற ஒவ்வொரு மழைதுளியும் எப்படி தூய்மையானதோ, நதிகள் எல்லாம் பல இடங்களில் தோன்றினாலும் எப்படி அனைத்தும் கடலில் போய் சங்கமிக்கிறதோ அதே போலவே எல்லா மதங்களும் புனிதமானவைகள் தான்.  அனைத்து மதங்களும் இறைவனிடம் மனிதனைக் கொண்டு சேர்ப்பவைகள் தான் என்று உயரிய கோட்பாடுகளை கொண்டது தான் இந்து மதம்.

எவனாவது தன்னை வெட்ட வந்தவனை சாகடிக்க முயற்சி செய்தவனை மார்போடு அனைத்து நீயும் என் சகோதரன் தான் என்று கூறுவானா அப்படி கூறுகிறவன் எவனாக இருந்தாலும் மனித நிலையிலிருந்து புனித நிலையில் இருப்பவனாகவே கருதப்படுவான் அல்லவா.  இந்து மதமும் அப்படித் தான் தன்னை அழிக்க வந்த தனது அஸ்தி வாரத்தையே ஆட்டம் காட்ட வந்த புத்த மதத்தை தனது ஒரு பிரிவாகவே கருதி கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக ஏற்று தமதாக்கிக் கொண்ட பெருந்தன்மை நம் மதத்திற்கு மட்டும் தான் உண்டு.

  நம் மதம் எப்போதும் தான்தான் உயர்ந்தது என்று பெருமையடித்து கொண்டது இல்லை.  தனது குருமார்கள் மட்டும் தான் இறைவனின் தூதர்கள் என்று வீண் ஜம்பம் பேசியது இல்லை.  தனது கொள்கைகளை கடைபிடிப்பவர்கள் மட்டும் தான் இறைவனின் குழந்தைகள் மற்றவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்று பேதம் காட்டியது கிடையாது.  பொதுவாக இந்து மதத்தை பற்றி சுருக்கமாக சொல்லுவது என்றால் இது வெறும் மதம் மட்டுமல்ல பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியாக உள்ளது என்றே சொல்லவேண்டும்.

 மற்ற மதங்கள் இன்ன இடத்தில் இன்னாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று சொல்லிவிடலாம்.  ஆனால் இந்து மதம் தானாகவே மெல்ல மெல்ல வளர்ந்து பரவி நிற்கும் ஜீவசக்தியாகும்.  மற்ற மதங்களை தார்சலைக்கு ஒப்பிட்டால் நம் மதத்தை ஒற்றையடி பாதைக்கு ஒப்பிடலாம்.  தார்சாலையை எந்த அளவு மக்கள் பயன்படுத்துகிறார்களோ அந்த அளவு அது பழுதடைந்து காலத்தால் மறைந்துபோய் விடும்.  ஒற்றையடி பாதை நாம் எந்த அளவு பயன்படுத்துகிறோமோ அந்த அளவு பண்படும் உறுதிபடும் காலத்தால் இயற்கை மாற்றங்களால் கூட அழியாமல் நிலைத்து நிற்கும்.

Thursday, May 31, 2012

ஆவியை வணங்க மதம் தடை இல்லை


குடும்பங்களில் இறந்து போனவர்களை நினைத்து வழிபடுவது என்பது ஒவ்வொரு வருடமும் நடைபெறும் நிகழ்வாகும்.  இந்த வழிபாட்டுக்குப் பின் இறந்து போனவர்கள் தங்கள் குடும்பத்தினர்க்கு நல்லாசிகளையும் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறவும் வாழ்க்கைச் சிக்கல்களை சுமூகமாக தீர்த்துவைக்கவும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை பல்லாண்டுகளாகவே மக்களின் மனதில் வேறுன்றி உள்ளது.  எந்த ஒரு வழிபாடும் சொந்தத் தேவைகளை மையமாக வைத்து எழுந்தவைகளாகத்தான் இருக்கும்.  ஆனால் முன்னோர் வழிபாடு என்ற ஆவி வழிபாடு சொந்தத் தேவைகளையும் தாண்டி இறந்து போன மூதாதையர்கள் மேலுலகில் அமைதியுடனும் திருப்தியுடனும் வாழ வேண்டும் என்ற நோக்கிலும் நடைமுறையில் இருக்கிறது.

தமிழகத்தின் தென்பகுதியில் கன்னிக்குக் கொடுத்தல் என்ற வழிபாட்டுமுறை அநேகமாக எல்லாக் குடும்பங்களிலும் உள்ளது.  தங்கள் குடும்பத்தில் திருமணம் ஆகாமல் இறந்த போன கன்னிப்பெண்களையோ அல்லது பெண் குழந்தைகளையோ தெய்வமாகக் கருதி அவர்களுக்குப் பிடித்தமான சேலை, பட்டுப்பாவாடை, சட்டை, வளையல்கள், இன்னும் சில மங்கலப் பொருட்களைப் படைப்பார்கள்.  இந்தப் படையலில் அரிசி மாவும் பனை வெல்லமும் கலந்து செய்யப்படும் ஒருவிதமான தின்பண்டம் முக்கியப் பங்கு வகிக்கும்.  தூர தூரத்தில் உள்ள குடும்ப  அங்கத்தினர்கள் அனைவரும அந்த நாளில் ஒன்று கூடி அந்த வழிபாட்டை நிகழ்த்துவார்கள்.  இந்த முறை இன்னும் தென்பகுதி மக்களிடையே எந்த மாற்றமும் ஏற்படாமல் நடைமுறையில் இருந்து வருகிறது.  இதே போன்ற வழிபாட்டுமுறை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜூலு இன மக்களிடையே இன்றும் நடைமுறையில் உள்ளது.  ஆதி ஆப்பிரிக்கா தமிழத்தோடு ஒரு காலத்தில் இணைந்து இருந்ததை இந்த வழிபாட்டின் மூலமாகவும் வேறு சில சடங்குகளின் மூலமாகவும் நாம் அறியலாம்.

உலகப் பண்பாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆவி வழிபாட்டு முறை பேய்களின் மீது உள்ள அச்சத்தின் காரணமாகவே ஏற்பட்டது என்று கருதுகிறார்கள்.  ஆத்மாவினைப் பற்றிய நம்பிக்கை ஆவி வழிபாடு தோன்றுவதற்குக் காரணங்களாக இருக்கக் கூடும் என்றும் சிலர் கருதுகிறார்கள்.  எது எப்படி இருந்தாலும் ஒரு மனிதனின் சாவு எந்த வகையில் அமைந்து இருக்குமோ அந்த வகையிலே வழிபாட்டுத் தன்மையும் அமைந்து இருக்கிறது.

ஆவி வழிபாட்டின் மூலக்கூறை பற்றி சொல்கிறார்கள் உலக சமுதாய பண்பாடுகளில் ஆழமாக வேறுன்றி இருப்பது மரணத்தைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில்தான்.  அதாவது உடலிலிருந்து உயிர் பிரிவதைச் சாதாரண மக்கள் மரணமாகக் கருதுவது இல்லை.  அந்த மரணம் எந்தச் சூழலில் எப்படி நிகழ்கிறது என்பதைப் பொறுத்து நல்லசாவு, கெட்டசாவு என்று வகைப்படுத்துகிறார்கள்.  அந்த வகைப்படுத்துதலில் ஒரு மனிதன் தன்னுடைய எல்லாவிதமான விருப்பங்களையும் நிறைவேற்றிவிட்டு ஆண்டு அனுபவித்து வாழ்ந்து சலித்து தன்னுடைய மக்களுக்கு மணம் முடித்து பேரன் பேத்தி எடுத்து முதுமை அடைந்து இயற்கையான முறையில் மரத்திலிருந்து சருகு உதிர்வது போல் மரணம் ஏற்பட்டால் அது நல்ல சாவு என்றும், கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்டோ கொலை செய்யப்பட்டோ விபத்துக்களில் உயிர் நீத்தோ, பேரிடர்களில் அகப்பட்டு துள்ளத் துடிக்க ஆசைகள் நிறைவேறாமல் மனிதக் கடமைகள் எதையும் நிறைவேற்ற முடியாமல் இறந்தால் அதைக் கெட்ட சாவு என்றும் மக்கள் கருதுகிறார்கள்.

இது சரியா என்பது வேறு விஷயம்.  நல்லாசாவில் உயிர்விட்ட ஆத்மாக்களை வழிபட்டால் தங்களுக்கு நல்லது ஏற்படும் என்றும் அபச்சாவு அடைந்த ஆவிகளை வழிபட்டால் அந்த ஆவிகள் தங்களுக்குக் நன்மை விளைவிக்காமல் ஒதுங்கி நிற்கும் என்றும் உலகம் முழுவதும் நம்பிக்கை உள்ளது. முக்கியமான உடல் சார்ந்த நோக்கில் மரணத்தை நோக்கும் போது அதன் பொருள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிடும்.  எல்லாவிதமான மிக முக்கியமான உடல் செயல்பாடுகள் நின்று போவதே மரணம் என்ற முடிவிற்கு நாம் வந்து விடலாம்.  இறப்புக்குப் பிறகும் வாழ்ககை உண்டு என்ற சித்தாந்தத்தை நம்பும் போதுதான் பல சிக்கல்கள் எழுகிறது.

மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை கிருஸ்துவ சமயத்தில் இல்லை.  ஆனால் இறப்புக்குப் பின்னால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி கிருஸ்துவ சமயம் சிந்திக்கிறது.  அதனால் மூன்று விதமான மரணங்களை கிருஸ்துவ சமயம் நம்பத்தலைப்படுகிறது.  ஒன்று ஆன்மீகச் சாவு.  இது கடவுளிடமிருந்து மனிதனைப் பிரிப்பது போலாகும் என்றும், இரண்டாவது உடலின் சாவு உடலியல் வாழ்வில் அனைத்து செயல்களும் நிறுத்தப்படும் என்றும், மூன்றாவது நித்ய சாவு.  இது இறைவனிடமே மனுஷ ஆத்மாக்களை நிரந்தரமாகத் தங்க வைப்பது என்றும் அச்சமயம் கூறுகிறது.  ஏறக்குறைய இதேபோன்றே கருத்துகளைத்தான் இஸ்லாம் சமயமும் ஜப்பானிய ஹின்டோ சமயமும் கூறுகிறது.

உடலில் சாவு நித்யசாவு என்று கிருஸ்துவம் கூறும் இரண்டு சாவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் ஆன்மீகச் சாவு என்று அவர்கள் கூறுவது எதன் அடிப்படையில் என்று விளங்கவில்லை.  ஒரு வேளை கிருஸ்துவர் அல்லாதவர்களின் மரணத்தில் ஆன்மீகம் செத்து விடுகிறது என்று கருதுகிறார்களோ என்னவோ தெரியவில்லை.  ஹின்டோ மதத்தில் மரணத்தைப் பற்றிய சித்தாந்தத்தில் பெரும் குழப்பம் எதுவும் இல்லை.  இந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதாவது அரச வம்சத்தைச் சேர்நதவர்கள் மட்டுமே முழுமுதற் கடவுளான சூரியனைச் சென்றடைவார்கள்.  மற்ற சாதாரண பொது மக்கள் மரணத்திற்குப் பிறகு எந்த நிலையிலும் கடவுளை அடைய முடியாது என்று ஒளிவு மறைவு இல்லாமல் பளிச்சென்று கூறிவிடுகிறார்கள்.

டிரோவியாண்ட் தீவு மக்கள் தங்களது சமய நம்பிக்கையின் படி இறந்தவர்கள் வாழும் இடத்தைப் பிரித்துப் பார்க்கிறார்கள்.  அந்தப் பிரிவுகளின் அடிப்படையிலேயே வழிபாட்டு முறைகளைத் தங்களது சமூகப் பண்பாட்டின் வழக்கப்படி ஏற்படுத்துகிறார்கள்.  உதாரணமாக போரில் கொல்லப்பட்டோரும் தற்கொலை செய்து கொண்டோரும் நீரில் மூழ்கி இறப்போரும் நெருப்பில் அகப்பட்டு சாவோரும் மிகப் பெரும் பாதிப்புடைய இடத்தில் வசிப்பதாகக் கருதுகிறார்கள்.

  விஷம் கொடுத்து சாகடிக்கப்பட்டோர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டோர் பில்லி சூன்யம் மற்றும் பேய்களினால் செத்தவர்கள் இரண்டாம் நிலை உயரிய ஆவிகளாகக் கருதப்படுகிறார்கள்.

  இயற்கையாக முதுமை எய்தி செத்தவர்கள் அல்லது நோய்வாய்ப் பட்டு இறந்தவர்கள் கடைநிலை ஆத்மாக்களாகக் கருதபடுதிறார்கள்.

  இயற்கை மரணத்தை அவமரணமாக இத்தீவு மக்கள் கருதுவது தொல் பழங்காலத் தமிழகத்தில் சாதாரணமாக இறந்த உடல்களை வாளால் துண்டித்து யுத்தத்தில் இறந்தவர்களாகக் கருதி அடக்கம் செய்ததற்கு ஒப்பானதாகும்.  காரணம் இறைவன் கொடுத்த உயிர் தானாகப் போகக் கூடாது.  ஏதோ ஒரு காரியத்தின் அடிப்படையில் மரணம் நேர்ந்தால்தான் உயிர்கள் மேலுலகில் இன்புற்று வாழ முடியும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் நிலவி இருப்பதே காரணமாகும்.

  வன்கொடுமை சாக்காட்டை ஒருசாரார் மங்களச் சாவு எனக் கருதுவது போல் துறவு பெற்று சாவதே சிறந்தச் சாவு என்றும் சில மக்கள் நம்புகிறார்கள்.  இதற்கு உதாரணமாக இந்திய மார்வாரி இன மக்கள் உயிர் பிரிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சன்னியாச தீட்சை எடுத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருப்பதைக் கூறலாம்.

தற்கொலை செய்து கொள்வதாலோ கொலை செய்ய படுவதாலோ யுத்தத்தில் சாவதாலோ ஆத்மாக்கள் மேலுலகில் சிறப்பான நிலையை அடைகிறார்கள் என்ற நம்பிக்கை எஸ்கிமோ மக்களிடையில் பரவலாகக் காணப்படுகிறது.  இதனாலேயே எஸ்கிமோ மக்களில் முதுமைச் சாவு என்பது அவ்வளவாக இல்லாததற்கு இதுவே காரணமாகும்.

 இந்தோனேஷியா மக்களிடத்தில் மரணத்தைப் பற்றிய விசித்திரமான கோட்பாடுகள் உள்ளன.  காலத்திற்கு முந்தி இறப்பதும் விதிவிலக்கான முறையில் இறப்பதும் இறந்தவர்களுக்கு உயரிய அந்தஸ்த்தைக் கொடுப்பதாகக் கருதப்படுகிறது.  ஒரு மனிதன் வாழ்ந்த காலத்தில் பிறர்ருடைய நம்பிக்கைக்குரிய வகையில் இருந்திருப்பானானால் அவனுடைய சாவுக்குப் பின்னர் அவன் அச்சத்திற்குரியவனாகிறான்.  இந்த முரண்பாடு இந்தோனிஷியர்களுக்கு இடையில் மூன்று வகையாக விளக்கப்படுகிறது.

1. வழக்கமான சடங்குகளுக்கு மாறாக ஈமச் சடங்குகளும் புதைக்கும் இடமும் அச்சத்திற்குரிய மனிதனின் உடலுக்குத் தரப்படுகிறது.  அதாவது சவப்பெட்டி இன்றியோ அல்லது ஏனையோரைப் புதைத்த இடங்களில் இருந்து தள்ளி தனித்தன்மையான சடங்குகளோடு இத்தகையவர்களுக்குக் கடைசி கிரியை செய்யப்படுதிறது.   அல்லது அவர்களைப் புதைக்காமலே விட்டுவிடுகிறார்கள்.  அப்படி இறந்தவன் அந்நியனாக இருந்தால் நிச்சயமாக அவன் உடல் எந்த சடங்குகளும் இன்றி காடுகளில் அப்படியே விடப்பட்டு விடும்.

2. கெட்டசாவு அடைந்தவன் அதாவது பயன் இல்லாத மரணத்தை அடைந்தவன் இறந்தவர்களின் உலகத்தை அடைய முடியாமல் பாதி வழியிலேயே தவித்துக் கிடப்பதாகக் கருதப்படுகிறான் அல்லது ஆவி குழுக்களில் சேர முடியாமல் தனிமையில் கிடந்து உழல்பவனாகவும் கருதப்படுகிறான்.

3. இப்படி மேலுலகை அடையாதவன் தனிமையில் கிடப்பவனை அடிக்கடி உயிர் உள்ள மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து தீங்கு விளைவிப்பதாக நம்பப்படுகிறது.

இந்தோனேஷிய மக்களிடையே ஆவிகளைப் பற்றிய நம்பிக்கை வேறு ஒரு கோணத்திலும் இருக்கிறது.  வழிபாட்டுக்குரிய ஆவிகள் அச்சப்படுத்தும் ஆவிகள் என்று இருவகை பிரிவுகளை ஆவிகளிடத்தில் ஏற்படுத்தி உள்ள அம்மக்கள் இப்படி வகைப்படுத்துவதற்கு இறப்புச் சூழ்நிலையை எல்லா நாட்டு மக்களைப் போலவே காரணிகளாகக் கொள்கிறார்கள்.

  குழந்தைப் பேற்றின் போது இறந்த பெண்களும் இறந்து பிறந்த சிசுக்களும் வளர்ச்சி அடையாது பிறந்த குழந்தைகளும் இறக்கும் படை வீரர்களும் விபத்தில் இறந்தோரும் தொற்று நோயின் விளைவால் மரித்தவர்களும் தூக்கில் இடப்பட்டவர்களும் ஆள் அடையாளம் தெரியாது காலமானவர்களும் அச்ச மூட்டும் ஆவிகளாக அலைந்து திரிந்து மக்களுக்கு நோய்களையும் தோல்விகளையும் மனப் பாதிப்புகளையும் தருவதாக இந்தோனேஷிய மக்களில் ஒரு பிரிவினரும் கருதுகிறார்கள்.

   இப்படிப்பட்ட ஆவிகளைத் திருப்தியுறச் செய்யவும் சாந்திப் படுத்தவும் பல விநோத வழிபாடுகளை நடத்துகிறார்கள். தென்னங் குருத்திற்குள் இருக்கும் உருண்டைப் புழுக்களை எடுத்து வளர்ந்த நாய்களின் வாய்களுக்குள் வைத்துக் கட்டி அந்த நாய்களை இப்படிப்பட்ட ஆவிகளுக்குப் பலி கொடுத்தால் நாயின் ரத்தத்தை ஆவிகள் அருந்தி அமைதியடையும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

    கொரிய நாட்டு மக்களிடத்தில் ஷாமன்ய என்ற ஒரு மந்திர மதப்பிரிவு உள்ளது.  இந்த மதப்பிரிவு முழுக்க முழுக்க ஆவிகளையும் குட்டிச்சாத்தான் மோகினிகள் ரத்தக் காட்டேரி போன்ற அதீத சக்திகளை மையமாக வைத்தே ஷாமன்ய மந்திர மதம் இயங்குகிறது.  இதில் இறந்தவர்களைப் பற்றி கூறப்பட்டு இருக்கும் கருத்துக்கள் ஆவி ஆய்வலர்களுக்கு கணிசமான அளவு ஆர்வத்தை ஊட்டக் கூடியதாக இருக்கிறது.

  இதில் நல்லமுறையில் இருக்கும் ஆவிகளை வைத்து அறுவை சிகிச்சைகள் புதிய விஞ்ஞானக் கருவிகள் கண்டு பிடித்தால் சாதாரண மனிதனையும் அசாதாரண நிலைக்குக் கொண்டு வருதல் போன்ற செயற்கரிய செயல்களை நிகழ்த்த முடியும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

  அதே நேரம் முறைதவறி மரணம் அடைந்த தீய ஆவிகளை வைத்து புதிய நோய்களை உருவாக்குதல் மனிதர்களைப் பைத்தியம் பிடிக்கச் செய்தல் திருட்டு வேலை செய்தல் பொருட்களைக் கடத்துதல் போன்றவைகளைச் செய்யலாம் என்று கருதுகிறார்கள்.  நம் நாட்டிலும் வலுவான ஆவிகளான எட்சினிகளை வைத்து பொருட்களை இடம் மாற்றிக் கொண்டு வரலாம்.  அதாவது நம்மிடம் இல்லாதவற்றை இருப்பவர்களிடமிருந்து அபகரிக்கலாம் என்று மலையாள மாந்தரீக சாஸ்திரம் கூறுவதும் கொரிய நாட்டு ஷாமன்ய மந்திரப் பிரிவு கூறுவதும் ஒப்பு நோக்கத்தக்கது.

   நல்ல ஆவிகள் தீய ஆவிகள் ஆகிய இரண்டுக்குமே கொரிய நாட்டு மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.  இந்த வழிபாடு செய்வதுமே அவர்களின் சுய தேவைகளுக்குத்தான் என்பது குறப்பிடத்தக்கது. ஆவிகளை வசப்படுத்தி சில காரியங்களை நாம் செய்து கொள்ள முடியுமே அல்லாது ஆவிகளின் மேம்பாட்டிற்காக நாம் எதுவும் செய்யத் தேவை இல்லை என்று கொரிய நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.

    தென்னிந்தியா, இந்தோனேஷியா, கொரியா போன்ற நாடுகளில் சாவு பற்றிய கருத்தாக்கங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரும்பாலான விஷயங்களில் ஒற்றுமைகள் காணப்படுகிறது.  இந்த ஒற்றமைகள் எந்த வகையில் அமைந்திருக்கிறது என்பதை சங்க காலத் தமிழர்களின் வழிபாட்டு முறையை சற்று ஆழந்து பார்த்தோம் என்றால் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

    சங்ககாலத் தமிழகத்தின் எல்லைகள் அல்லது உள்கட்டமைப்புகள் திணைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.  ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு கடவுள் வழிபாடு இருந்தது.  நமக்கு தெரியும்

    மாயோன் மேய காடுறை உலகமும்   
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்

  என்ற பாடல் மூலம் தொல்காப்பியம் அழகிய முறையில் எடுத்துக் கூறுகிறது.  அதாவது குறிஞ்சி நில மக்களாகிய குறிஞ்சிக் குறவர்கள் மலைவாசனான முருகப் பெருமானுக்குத் தேனும் தினைமாவும் படைத்த குன்றக் குறவை பாடி பூவும் பொறியும நாற்புறமும் தூவி மதர்த்த எருமைக் கடாவை பலியிட்டு அதன் குருதியில் சாதத்தைப் பிசைந்து அவனுக்குப் படைத்து வெறியாட்டம் ஆடி தங்களது வழிபாட்டை முருகனுக்குச் செலுத்தினார்கள் என்றும்.

    முல்லை நில மக்களாகிய ஆயர் என்ற யாதவப் பெருங்குடி மக்கள் தங்களிடமுள்ள பால், தயிர், வெண்ணை போன்றவற்றை காக்கும் கடவுளான மாயோனுக்கு அதாவது திருமாலுக்குப் படைத்து குறவை இட்டு வழிபட்டு தங்களது நன்றி உணர்வை தாங்கள் வழிபடும் கடவுகளுக்குச் செலுத்தினர்.

    பாலை நிலத்து மக்கள் போர்த் தெய்வமான கொற்றவைக்கு அதாவது துர்க்கைக்கு ஆடு மாடு போன்றவைகளையும் சில நேரம் அங்கலட்சணங்கள் பொருந்திய அழகுடன் அமைந்த வீரனையும் பலியிட்டு தங்களது வழிபாட்டை நடத்தினர்.

    மருத நில மக்கள் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு 28 நாட்கள் பெரும் விழா எடுத்து ஆடிப்பாடி அவனை மகிழ்வித்து வழிபட்டு தாங்களும் மகிழ்ந்து இருந்தார்கள்.

    நெய்தல் நிலக் கடவுளான வருணனை இலக்கியங்கள் கூறினாலும் நெய்தல் நில மக்கள் தனிப்பட்ட வகையில் அவனை வழிபடவில்லை.  தங்களுக்கு வாழ்வும் வசதியும் அளிக்கும் கடல் மாதாவையே அவர்கள் வழிபட்டனர்.  சுறாமீனின் கொம்பு என்ற அம்மீனின் முதுகெலும்பை கடற்கரை மண்ணில் நட்டு ஆணும் பெண்ணும் கூடி மது மாமிசங்களைப் படைத்து சுறா தெய்வத்தை வழிபட்டனர்.

    தொல்காப்பியத்தில் குறிப்பிடும் நான்கு திணைதேவதைகளையும் வணங்கியதோடு மட்டுமல்லாது சங்கால மக்கள் பல்வேறு தெய்வங்களை வணங்கியதாக சங்க இலக்கியங்கள் பலவற்றில் ஆதாரங்கள் இருக்கின்றன.  முக்கட் செல்வன் நான்முகன், மழுவாள் நெடியோன் இராமன், சூரமகளிர் கொள்ளிப்பாவை, வாரை மகளிர் அணங்கு, கள்ளி நிழற்கடவுள், கத்திப்பாவை, மராத்தப் பேய்க்கடவுள் என்று பல்வேறு தெய்வப் பெயர்கள் மக்களின் வழிபாட்டில் இருந்ததாக சங்க இலக்கியக் குறிப்புகளில் பார்க்கிறோம்.

இது மட்டுமல்லாது ஊர்க்காவல் தெய்வங்கள், நகரக் காவல் தெய்வங்கள், கோட்டைக்காவல் தெய்வங்கள் எனப் பல்வேறு தெய்வங்கள் இருந்ததாகவும் அதற்கு சதுக்கபூதம், அந்தணர் பூதம், அரசர் பூதம், வணிக பூதம், வேளாள பூதம் எனப் பெயர்கள் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளன.  மேலும் சாத்தன் என்ற தெய்வம் இருந்தாலும் அக்கோவிலுக்கு தேவித்தி என்பவர் அன்றாடம் சென்று வழிபாடு நடத்தினார் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.  மேலும் அக்காப்பியத்தில் இல்லுரை தெய்வங்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியான குலதெய்வங்கள் இருந்ததாகவும் அதற்குத் தினந்தோறும் பெண்கள் மலர்களும் அன்னங்களும் படைத்து வழிபட்டதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

    இங்கே குறிப்பிடப்பட்ட சூரமகளிர் கொல்லிப்பாவை, வாரை மகளிர், கன்னி நிழற்கடவுள் மற்றும் பல்வேறு பூத தெய்வங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுவது பூமியில் வாழ்ந்து மறைந்து போன மாபெரும் ஆத்மாக்களை வழிபட்டதையே குறிக்கும்.  அதாவது ஆதி தமிழர்கள் ஆவிகளுக்கு இந்த மாதிரியான பெயர்களைச் சூட்டி வழிபட்டார்கள் என்பது வருகிறது.  இதை இன்றைய சிறு தெய்வ வழிபாடுகளை மையமாக வைத்து நோக்கினோம் என்றால் நன்கு புலப்படும்.

    குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறு தெய்வ வழிபாட்டின் மூலக்கூறுகளை ஆராய்ச்சி செய்தோம் என்றால் பழங்காலத் தமிழர்களின் ஆவி வழிபாட்டு முறையை ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.  உதாரணமாக முத்துப்பட்டன் வழிபாட்டை ஆய்வு செய்தால் ஆவி வழிபாடு ஏன் நிகழ்கிறது என்பதை நன்கு அறியலாம்.

ஆரிய நாட்டில் அந்தணர்கள் மரபில் ஆறு அண்ணன்களுக்குத் தம்பியாகப் பிறந்தவன் முத்துப்பட்டன் ஆவான். இவன் ஒரு நாள் அண்ணன்மார்களுக்குத் தெரியாமல் கொட்டார நாட்டிற்கு அதாவது மலையாள நாட்டிற்குச் சென்று விட்டான்.  ஆறு அண்ணன்மார்களும் கேரள மன்னனிடம் தம்பி இருப்பதை அறிந்து மன்னனின் அனுமதி பெற்று தம்பியைத் தங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வர முயற்சித்தனர்.  மன்னனும் முத்துப்பட்டனின் பணிக்காகப் பெரும் பொருளை ஊதியமாகக் கொடுத்து அனுப்பி வைத்தான்.  பொருட்களோடு அண்ணன்மார்கள்அழைக்க பொதிகை மலையைக்கடந்து அரசர்அடித்துறை என்ற பகுதியில் இருக்கும் சொரிமுத்தையன் கோவிலருகில் வந்தார்கள்.  அப்போது முத்துப்பட்டன் தனக்குத் தாகம் எடுப்பதாகவும் நீர்அருந்திவிட்டு தான் பின்னால் வருவதாகவும் பொருட்களோடு அவர்கள் முன்னால் செல்லுமாறு வேண்டி நீர் அருந்தப் புறப்பட்டான்.

    முத்துப்பட்டன் அரசர்அடித்துறையில் ஆற்றில் நீராடி லிங்கம் பிடித்து இறைவனை வழிபட்டான். அப்போது வால்க பகடை என்ற சக்கிலியன் மகள்களான பொம்மக்கால்,  திம்மக்கால் என்ற இரண்டு பெண்களும் பசுக் கூட்டத்தை காவல்காக்கும் தந்தைக்கு உணவு எடுத்துச் செல்ல ஆற்றங்கரை வழியாக வந்தார்கள்.அவர்கள் இருவரையும் பார்த்த முத்துப்பட்டன்.  அவர்கள் மீது மையல் கொண்டான்.  அவர்கள் தாங்கள் கீழ்ச்சாதியான சக்கிலியப் பெண்கள் என்றனர். பட்டன் கண்களை சுய ஜாதி அந்தஸ்த்தை காதல் மறைத்தது.  எது எப்படியாயினும் இருவரையும் மணப்பது உறுதி என்று சூளுரைத்தான். பெண்கள் பட்டனின் சூளுரையைத் தந்தையிடம் சொன்னார்கள்.தந்தை பட்டனிடம் வந்து தன் பெண்களை நீ மணந்தால் செத்த மாடு தூக்க வேண்டும்.  செருப்பு வடம் தைக்க வேண்டும். மதுக்குடங்கள் சுமக்க வேண்டும்.  மாட்டுக்கறி உண்ணவேண்டும். என்றெல்லாம் நிபந்தனை விதித்தான். பட்டனும் அதை ஒத்துக் கட்டுப்பட்டதை எண்ணி மனம் மகிழ்ந்தான். பொம்மக்கா, திம்மக்கா ஆகிய பெண்களும் பட்டனின் உயர்ந்த எண்ணத்தையும், அழகிய வடிவத்தையும் உணர்ந்து மெய்மறந்து போயினர்.

    பட்டனுக்கும், வால் பகடையின் பெண்களுக்கும் இனிதே திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அன்று வால்பகடை காவல் புரிந்த பசுக்கூட்டத்தை ஊத்துமலை வன்னியனும் உக்கிரங்கோட்டை மறவனும் திருடிக்கொண்டு போவதாகச் செய்தி வந்தது.  உடனே பட்டன் பசுக்கூட்டங்கள் மீட்க சண்டைக்குப் புறப்பட்டான்.  ஆதலால் மனைவியர் இருவரும் பூனை குறுக்கிடுவதையும் ஒற்றைப் பார்ப்பான் எதிரில் வருவதையும் கைம்பெண் ஒருத்தி நெருப்பைக் கொண்டு குறுக்கே வருவதையும் எடுத்துக்கூறி சகுணம் சரியில்லை என தடுத்துப் பார்த்தனர்.  தாங்கள் முந்திய நாள் கெட்ட கனவு கண்டதாகவும் அதனால் தற்போது சண்டைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு நாளை மறுநாள் செல்லலாம் என்றும் சொல்லிப் பார்த்தனர்.

    பட்டன் அவர்கள் பேச்சை எடுத்துக் கொள்ளவில்லை.  புதுமாப்பிள்ளை முறுக்கோடு சண்டைக்குப் புறப்பட்டான்.  அங்கு திருடர்கள் நூறுபேரை வெட்டி வீழ்த்தி பகக்கூட்டங்களைக் கைப்பற்றவும் செய்தான்.  சண்டை செய்த களைப்பு அதிகரிக்க யுத்த களத்திலேயே சாய்ந்து படுத்தான். அப்போது பிணங்களுக்கு இடையில் மயங்கிக் கிடந்த நொண்டித்திருடன் என்பவன் மயக்கம் தெளிந்து எழுந்து இளைப்பாறிக் கொண்டு இருந்த பட்டனின் மார்பில் கத்தியைப் பாய்ச்சினான். நெஞ்சில் பாய்ந்த நீளக்கத்தியை உருவிய பட்டன் அதே கத்தியால் திருடனைக் கொன்று தானும் உயிர் விட்டான்.

  பட்டன் வீழ்ந்ததும் அவனது காவல் நாய்களான ஆச்சிநாயும் பூச்சிநாயும் விரைந்து சென்று பொம்மக்கா,  திம்மக்காவின் புடவையைப் பிடித்து இழுத்து வந்தன.  படுகளத்தில் கணவன் முத்துப்ட்டன் இரத்தவெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்த இரண்டு பெண்களும் கதறி அழுது நெருப்பு மூட்டி கணவனோடு உடன் கட்டை ஏறி தங்களது இன்னுயிரை நெருப்புக்கு அர்ப்பணித்தனர். இறந்த முத்துப்பட்டனை தெய்வமான சொரிமுத்தையன் தனது தளபதி ஆக்கிக் கொண்டான்.

    இவ்வாறு சொல்லப்படும் முத்துப்பட்டன் கதையில் தமிழ் மரபுகள் பல அடங்கி உள்ளது. காதலுக்கு குல வேறு பாடு இல்லை. ஆநிரைக் கவருதல், ஆநிரை மீட்டல், உடன்கட்டை ஏறுதல்,  வீர ஆத்மாக்களை வழிபடுதல் என்பவை அவற்றுள் சில.முத்துப்பட்டன் தெய்வமான பின்பு பிடிமண் வாயிலாக மாவட்ட முழுமைக்கும் கொண்டு செல்லப்பட்டு வழிபடப்பட்டான்.  பட்டனுக்கு முத்துராசா, பட்டவராயன் போன்ற பெயர்களை வைத்தும் மக்கள் இன்றுவரை வழிபட்டு வருகிறார்கள்.

    மன்னனின் மைந்தர்களான இந்துப் பெருங்குடி மக்களும் அயல் நாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவ முகமதிய மதங்களை ஏற்றுக் கொண்ட தமிழ்பெருங்குடி மக்களும் ஆவிகள் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். உதாரணமாக செயின்ட் ஆண்டனி என்ற கிறிஸ்துவத் துறவியின் சமாதி இருக்கும் நெல்லை மாவட்டம் புளியம்பட்டி என்ற ஊரில் அந்தோணியார் குருசடி என்ற ஆலயம் நிறுவப்பட்டுள்ளது.இந்த ஆலயத்தில் இந்துக் கோவில்களில் நடைபெறுவது போன்ற வழிபாட்டு முறையில் தேங்காய் உடைத்தல், மாலை சாற்றுதல் சாமி ஊர்வலம் வருதல் போன்ற வழிபாட்டு முறைகளே பின்பற்றப்படுகிறது

  புனித அந்தோணியாரின் தூய ஆவி பைத்தியத்தைத் தெளிவிப்பதாகவும் நோய் நொடிகளை நீக்குவதாகவும் பேய்களை விரட்டுவதாகவும் மக்கள் நம்புகிறார்கள். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கும் புனித அந்தோணியார்க்கு முடிகாணிக்கையும் இங்கு செலுத்தப்படுகிறது.  இது மட்டுமல்லாது கிறிஸ்துவர்களிடம் உள்ள கல்லறைத்திருநாள் என்பது ஆவி வழிபாடே ஆகும்.  ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 2ம் நாளை இறந்த முன்னோர்களை வழிபடும் நாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் கொண்டாடுகிறார்கள்.  அன்று தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்குச் சென்று மாலை அணிவித்து மெழுகு வர்த்திகளை ஏற்றி முன்னோர்கள் தங்களுக்கு நலமளிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

    இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக் கூடாது என்று கண்டிப்பான சட்டதிட்டங்கள் உடைய முகமதியர்கள் இடத்திலே ஆவி வழிபாடு அன்றுமுதல் இன்று வரை நடந்து வருகிறது. துறவு நெறியை மேற்கொண்டு யோகி என்ற நிலையை அடைந்த முகமதிய ஞானிகள் சமாதியான கலலறைகளை வணங்கும் வழக்கம் இந்தியா,  பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள முஸ்லீம்களிடம் வழக்கத்தில் உள்ளது.

   அந்த யோகியின் கல்லறையைச் சுற்றி குத்துவிளக்குகளும் கற்களால்ஆன விளக்குகளும் வைத்து கல்லறையை பச்சைப்பட்டுத்துணியால் போர்த்தி மலரும் சந்தனமும் வாசனைத் திரவியங்களும் தெளித்து பழங்கள் முதலியவனைவற்றைப் படைத்து பாத்தியா ஓதி வணங்குகிறார்கள். இத்தகைய வழிபாட்டு முறையை நமது தமிழ்நாட்டில் நாகூர்,  ஏர்வாடி,  கங்கை கொண்டான் போன்ற இடங்களல் காணலாம்.  மேலும் தர்க்காக்கள் என்று அழைக்கப்படும் அனைத்து இஸ்லாம் வழிபாட்டு இடங்களும் ஆவி வழிபாட்டுத் தலங்களே ஆகும்.

  ஆவிகள் வழிபாடு என்பது மக்களின் இன மொழி மதப்பாகுபாடுகளைக் கடந்து உலகம் முழுவதும் எந்த விதத் தங்குதடையும் இல்லாது நடந்து வருகிறது.  புண்ணிய ஆவிகளும் தங்களால் இயன்றவற்றை மக்களுக்குச் செய்து வருகிறது.

Tuesday, May 22, 2012

அமாவசை தினத்தில் நல்ல காரியங்களை துவங்கலாமா?


கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் போது நமது பெயருக்கு செய்வது நல்லதா? இறைவன் பெயரில் செய்வது நல்லதா?

அர்ச்சனை என்றால் என்ன? இறைவனின் புகழை மனதார வாயார பாடுவதாகும். அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் முறையிடுவது தான் அர்ச்சனை செய்வதன் தாத்பரியம் கடவுள் நமக்கு தந்த நன்மைக்காக நன்றி செலுத்த வேண்டுமென்றால் அவர் பெயரில் அர்ச்சனை செய்யலாம் அவரிடம் எதாவது விண்ணப்பம் வைக்க வேண்டுமென்றால் நம் பெயரில் செய்யலாம். ஆனால் கடவுளுக்கு நம் கோரிக்கை தெரியாதா என்ன? எனவே பொதுவாக அவர் பெயரிலேயே செய்து விடுவது தான் சாலச்சிறந்தது ஆகும். 

அம்மன் ஆலயத்தில் எத்தனை முறை வலம் வரலாம்?

பொதுவாக ஆலயத்தை வலம் வருவது நமது உடமையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கே அதனால் எத்தனை முறை வேண்டுமென்றாலும் வலம் வரலாமென்று சொல்லி விடலாம். ஆயினும் எதற்கும் ஒரு இலக்கணம் வரன்முறை உண்டு அதன் அடிப்படையில் நமது பெரியவர்களும் சாஸ்திரங்களும் அம்மன் ஆலையத்தில் ஐந்துமுறை வலம் வரலாமென்று சொல்கிறார்கள். 

அமாவசை தினத்தில் நல்ல காரியங்களை துவங்கலாமா?

அமாவாசைக்கு பிறகு வரும் நாட்களை வளர்பிறை நாட்கள் என்று அழைக்கிறோம். எனவே புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று நிறையப்பேர் நம்புகிறார்கள். சிலர் அமாவாசை என்பது சந்திரன் இல்லாத நாள் அதாவது பூமிக்கு சந்திரன் தெரியாது அன்று இருட்டாக இருக்கும். எனவே இருட்டு பொழுதில் நற்காரியங்களை செய்ய கூடாது என்றும் சொல்கிறார்கள். இதில் எது சரி எது தவறு என்று முடிவெடுப்பது மகா சிரமமான காரியம். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போகலாம். ஆனால் அது சரியல்ல.

இதை ஜோதிட சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும். அமாவசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன அன்று இவ்விரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும் அந்த நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷன சக்தியும் மிக அதிகமாக இருக்கும். இதனால் மனித மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு அதாவது மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். ஏறக்குறைய கடலை போல எனவே அந்த நாட்களில் சுப காரியங்கள் செய்வது கூட தவறு அல்ல ஆனால் புதிய காரியங்களை துவங்குவது தவறு என்பதே சரியான கருத்தாகும். 

Wednesday, January 25, 2012

சாதம் பிரசாதம் ஆவது எப்படி...?


உறவினர் வீட்டுக்கு போனால் எங்கள் சொந்தகாரரை பார்த்துவிட்டு வருகிறோம் என்கிறார்கள்

 ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள்

 அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்?

 உண்மையில் தரிசனம் என்பது என்ன?  கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும் என்று பலருக்கு குழப்பம் வரும் 



அரிசியை கழுவி பாணையில் இட்டு வேக வைத்தால் அது சாதம் தான். 

 அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதம் ஆகிவிடுகிறது?

  கடவுளுக்கு மனபூர்வமாக அர்பணிக்கும் போது சாதாரண குழாங்கல் கூட சாளக்கிராம கல்லாகி விடுகிறது அது போல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும் போது பிரசாதமாகி விடுகிறது 

 ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும் தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும்.

மூன்றாவது கண்ணை திறக்கும் சக்கரம் !


உலக அன்னையின் திருவுருவத்தை சனாதனமான இந்து மதத்தின் சாக்த பிரிவு மூன்று நிலையாக வகைப்படுத்துகிறது முதலில் ஸ்தூல வடிவம் இரண்டாவது சூட்சம வடிவம் மூன்றாவது காரண வடிவம் என்பதாகும் ஸ்தூல வடிவம் என்பது பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் அம்பு ஆகியவற்றை கொண்டு இடது பாதத்தை ஊன்றியும் வலது காலை மடித்தும் அமர்ந்திருக்கும் திருக்கோலமாகும் காரண வடிவம் என்பது ஸ்ரீ அன்னையின் மூல மந்திர ஒலிவடிவமாகும் சூட்சம வடிவம் என்பது புகழ் பெற்ற ஸ்ரீ யந்திரம் என்ற ஸ்ரீ சக்ர வடிவாகும்.

மோகினி ஹிருதயம் எனும் நூல் ஸ்ரீ சக்ர வடிவை பற்றி மிக எளிமையாகவும் தெளிவாகவும் பல விவரங்களை நமக்கு தெரிவிக்கிறது இந்த நூலை வாமகேஷ்வர தந்திரம் என்று வேறொரு பெயராலும் அழைக்கிறார்கள் இதில் தந்திர மார்க்கம் சார்ந்த உபாசன முறைகள் விவரிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ சக்ரம் என்பது பிரபஞ்சவெளியில் எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளின் தன்மையை ஒருமை பாட்டை விளக்குவதே ஆகும் இந்த விளக்கத்தை ஒவ்வொரு மனிதனும் நன்கு விளங்கிகொள்ள ஒன்பது நிலைகளை கடந்து செல்ல வேண்டும் அதாவது மனிதனுக்கும் பிரம்மத்திற்கும் இடையில் ஒன்பது மறைப்புகள் உள்ளன இந்த் மறைப்புகளை ஸ்ரீ சக்ர தத்துவம் ஒன்பது ஆவரணங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது
ஸ்ரீ சக்ரம் என்பது எல்லை இல்லாத பிரபஞ்சத்தை குறிப்பதாகும் அண்டவெளிக்கு துவக்கமும் கிடையாது முடிவும் கிடையாது அப்படி பட்ட அண்டத்தின் ரகசியத்தை மனித அறிவால் எக்காலத்திலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது அப்படி முடியாத விஷயத்தை அறிந்து கொள்ள அக்கால ரிஷிகளும் முனிவர்களும் முயற்சித்து கண்டறிந்த மெய்ஞான ரகசிய வடிவமே ஸ்ரீ சக்ரமாகும் இதை ஒரு பிரபஞ்ச கணித கண்டுபிடிப்பு என்றும் சொல்லலாம் 

ஒரு புள்ளிக்கு 360 பாகைகள் உண்டு ஒவ்வொரு தனித்தனி பாகையில் இருந்து புறப்படும் கோடுககள் பிரபஞ்சவெளியில் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே கொண்டே செல்லும் அந்த கோடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் அதாவது புறப்பட்ட இடத்திலேயே வந்து சேர்வதால் வட்டமாகவோ கோளமாகவோ தோற்றம் அளிக்கும் அந்த வடிவத்தை இரண்டு பாகமாக பிளந்தால் 180 பாகைகள் கொண்ட அரைவட்டம் கிடைக்கும் நான்காக பகிர்ந்தால் ஒவ்வொரு பகுதிக்கும் 90 பாகைகள் பிரிந்து நான்கு துண்டுகளாக விரிவடையும் இப்போது அந்த தோற்றத்தை பார்த்தால் ஒரு கூட்டல் குறியை போல நம் கண்ணுக்கு தெரியும் இது தான் சிவ சக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடாக அமையும் அது தான் பிரபஞ்சத்தின் அக்ஷர வடிவாகும் 

இந்த அக்ஷர வடிவம் க என்ற எழுத்தாக அமைந்திருக்கிறது இந்த எழுத்து வடிவம் தான் படைப்பு தத்துவத்தின் வெளிப்புற சின்னமாகும் எல்லையே இல்லாத பிரபஞ்சம் க வடிவ சதுரத்துக்குள் காணப்படுகிறது இந்த சதுரத்தில் அணிமா லகிமா,மகிமா பிரத்தி பிராம வசித்துவம் சத் சித்துவம் என்ற அஷ்டமா சித்துகள் அடங்கியிருந்து ஆட்சி செய்கிறது இந்த சகரத்தில் உள்ள நான்கு புற சதுர ரேகைகளும் அண்ட வெளியை காவல் செய்யும் லோக பாலகர்களாக உருவகப்படுத்தப்பட்டு நிர்மானிக்கப்படுகிறார்கள் இச்சக்கிரத்தின் உள் வரிகளில் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் ஆகிய ஆறு குணங்களை கட்டுப்படுத்தும் பண்பு மற்றும் அறிவு ஆகிய இரண்டு நற்குணங்கள் மறைந்துள்ளன இதை பிரகட யோகினிகள் என்று அழைக்கிறார்கள்

நிலையான பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தால் வட்டத்திற்குள் சதுரம் தோன்றும் ஸ்ரீ சக்ர சதுரத்திற்குள் இதே போன்று தான் வட்டம் தோன்றுகிறது இது நமது கண்களில் உள்ள கருவிழிகள் போல் தெரிவதால் அண்டத்தின் ஒத்தைக் கண் எனவும் சுதர்மம் என்னும் அண்ட கருவாகவும் கருதப்படுகிறது சதுரம் என்பது ஆகாச வெளியினையும் வட்டம் என்பது ஆகாச காலத்தையும் குறித்து நிற்கிறது வெளி என்ற சதுரம் வளர்ந்து கொண்டே செல்கிறது காலம் என்ற வட்டம் சுழன்று கொண்டே செல்கிறது பார்வையை இன்னும் சற்று கூர்மை படுத்தி வட்டத்தை பார்த்தோம் என்றால் வட்டத்திற்குள் வட்ட வட்டமாக மூன்று வட்டங்கள் தோன்றும் இதில் இந்திரன் அக்னி எமதர்மன் நிருதிதேவன் வருணன் வாயு குபேரன் ஈசானன் ஆகிய எட்டு திக்கின் அதிபதிகள் நிற்கிறார்கள் ஒரு சதுரத்தில் அதற்குள் இருக்கும் வட்டத்தை அதாவது சதுரமான அண்டவெளியும் அதற்குள் இருக்கும் பூகோளத்தையும் எட்டு பாகமாக்கி அஷ்டதிக்கிலும் பிரபஞ்சம் பறந்து விரிந்துள்ளதை ஸ்ரீ சக்ர குறியீடுகள் காட்டுகின்றன 

ஸ்ரீ சக்ரத்தின் வட்டத்தில் உள்ள நடுவட்டம் அகமுகமான வழிபாட்டால் பெருகக்கூடிய கொல்லாமை வெகுளாமை புலனடக்கம் பொறுமை தவம் வாய்மை அன்பு ஆகிய நற்குணங்களை வரிசைபடுத்தி காட்டுகிறது அதற்கு அடுத்த வட்டத்திற்குள் மனிதனின் 360 சுவாச கூறுகளான காலம் நிற்கிறது இந்திய நாள்கணக்கு படி ஒரு நாளைக்கு அறுபது நாழிகைகள் உண்டு ஒரு நாழிகையில் அதாவது 24 நிமிடத்தில் ஒரு மனிதன் விடும் சுவாசத்தின் எண்ணிக்கை 360 இந்த 360தை 60 நாழிகையால் பேருக்கும் போது சராசரியாக ஒரு மனிதனின் தினசரி சுவாசம் 21.600 ஆகும் ஒவ்வொரு நாழிகைக்கான 360 சுவாசத்தை பாகங்களாக கொண்டோம் என்றால் அது ஒரு வட்டமாக வரும் இந்த பாகம் காலத்தை குறிப்பதாகும் இந்த காலம் என்னும் உள் வட்டம் கிருதயுகம்(அ) திருதயுகம் (அ) திரேதாயுகம் 2. திரேதாயுகம் 3. துவாபரயுகம் 4. கலியுகம் ஆகிய நான்கு யுகங்களாக சுழன்று வருகிறது இப்படி வட்டமும் சதுரமும் அண்டவெளியாகவும் காலமாகவும் விளங்கி மூலாதாரத்தில் கனலாக வடிவெடுக்கிறது இதை நெருப்புக்குள் நெருப்பு அல்லது சிவத்துக்குள் சக்தி அல்லது சகதிக்குள் சிவம் என்றும் சொல்லாம் இந்த மூன்றாவது வட்டத்தில் பத்து இதழ் கொண்ட தாமரை ஸ்ரீ சக்ரத்தில் மலர்கிறது

பதினாறு இதழ்கள் பிறக்கும் சக்ர பகுதியை சர்வ பரிபுரா சக்ரம் என்ற அழைக்கிறார்கள் இந்த ஒவ்வொரு இதழ்களிலும் அன்னையின் பதினாறு யோகினி சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது இந்த சக்திகள் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தேவதைகள் ஆவார்கள் யோக நெறியில் இந்த பகுதி சுவாதிஷ்டானம் என்று அழைக்கப்படுகிறது இதில் மனம் சித்து சித்தம் அகங்காரம் ஆகிய நான்கு அந்தகரணங்களும் பார்த்தல் கேட்டல் நுகர்தல் சுவைத்தல் உரைத்தல் நினைவு வைத்தல் கனைத்தல் சூட்சமம் சுக்குலம் காரணம் பெயர் வளர்ச்சி ஆகிய பனிரெண்டு தன்மாத்திரைகள் அடங்கியுள்ளன இத்தகைய பதினாறு இயல்புகளும் நிரம்பி இயங்கினால் தான் உலக வாழ்க்கைக்கு தேவையான உடல் நலம் மனநலம் அறிவு நலம் பண்பு நலம் சமூக நலம் பொருள் நலம் ஆகிய பெயர்கள் கிடைக்கும் அதனால் தான் இப்பகுதியை படைத்தல் தத்துவம் என்கிறார்கள் 

அடுத்ததாக பதினாறு இதழ் தாமரைக்குள் எட்டு இதழ் கொண்ட மூன்றாவது ஆபரணம் பிறக்கிறது இது சர்வ சம்மோகன சக்ரம் என்ற பெயர் கொண்டதாகும் எட்டு இதழ் கமலத்தில் எட்டு யோகினிகள் உள்ளதோடு அனங்க மன்மதன என்ற சக்திகளும் அருளாட்சி செய்கின்றன அனங்க என்றால் உருவம் இல்லாதது என்ற பொருள் வரும் அதனால் இந்த பிரபஞ்சமானது உருவம் இல்லாத பரப்ரம்மத்தில் இருந்து உதயமானது என்ற மூல கருத்து வெளிப்படுகிறது மேலும் இந்த எட்டு இதழ்களும் எட்டு பிரம்மாணங்களாகும் மேலும் இந்த சக்ரம் மனித உடலின் சதை பகுதியை குறிக்கிறது



அடுத்ததாக உள்ள நான்காவது ஆவரணத்தில் கீழே எழும் மேலே ஏழும் ஆக பதினாறு உலகங்கள் அமைந்துள்ளன இதை சர்வ செளபாக்கிய தயகச்சக்கரம் என்று அழைக்கிறார்கள் மேலே உள்ள ஏழு கோணத்தில் பூர் பூவ சுவ ஜன தப சக்திய ஆகிய ஏழு உலகங்களையும் கீழே உள்ள ஏழு கோணங்கள் அதல விதல சுதல நிதல ரசாதல மகாதல பாதாள ஆகிய ஏழு உலகங்களையும் காட்டுகிறது அது மட்டும் அன்றி ஒலித்தத்துவமான சட்ஜமம் சமம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் விவாதம் ஆகிய ஏழு சப்த லயங்களையும் ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் ஆரஞ்சி சிவப்பு ஆகிய நிறதத்துவங்களையும் காட்டுகிறது அதாவது இறை சக்தி ஓசையாகவும் ஒளியாகவும் இருப்பதை இந்த கோணங்கள் விளக்குகின்றன 

ஐந்தாவது ஆவரணமான சர்வார்த்த சாதக சக்கரத்தில் கீழே ஐந்து கோணமும் மேலே ஐந்து கோணமும் உள்ளது இந்த பத்து கோணங்களும் மனித உடலில் உள்ள தச வாயுக்களை குறிக்கிறது ஸ்ரீ அன்னையை வழிப்படும் தசமகாவித்தியா தோற்றங்களை இது காட்டுவதாகவும் அமைந்துள்ளதாக கூறலாம் மேலும் மேலே உள்ள ஐந்து கோணங்கள் சரஸ்வதி லஷ்மி கெளரி மகேஸ்வரி மனோன்மணி என்ற அன்னையின் பஞ்ச வடிவங்களையும் கீழே உள்ள ஐந்து கோணங்கள் தத்புருஷம் சத்யோஜாதம் அகோரம் வாம தேவம் ஈசானம் ஆகிய ஈஸ்வர பஞ்சப்ரம்ம வடிவத்தையும் காட்டுகிறது

தேவியை வழிபடும் சர்வசோமணி சர்வவிக்ஷிரவினி சர்வாஷ்ணி சர்வசந்தசர்வேசினி மாதினி சர்வமகோரங்குசா சர்வகேச சர்வபிகம்ப சர்வயோனி சர்வதிகண்டா ஆகிய பத்து மூர்த்திகளையும் இந்த கோணங்கள் காட்டுகின்றன இதே போல அன்னமய கோசம் ஞானமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞானமய கோசம் ஆனந்தமய கோசம் என்னும் ஐந்து உடல்களையும் அந்த உடல்களை தாக்கும் தோஷங்களான பொய்யாமை கொல்லாமை கள்ளுண்ணாமை திருடாமை காமியாமை ஆகிய ஐந்து நெறிகளை சுட்டிக்காட்டுகிறது இப்பகுதி விந்து அணுக்களையும் கருமுட்டைகளையும் காட்டுவதாக தாந்திரிக தத்துவம் காட்டுகிறது 

ஆறாவது ஆவரணமான சர்வஞசக்கரம் ஆஞ்சாசக்கரம் என்று அழைக்கப்படுகிறது இது உருவவழிபாட்டின் விளக்கமாகும் அன்னையானவள் சர்வத்தையும் அருளும் மூர்த்தியாகவும் திகழ்கிறாள் சர்வத்தையும் அழிக்கும் சக்தியாகவும் திகழ்கிறாள் உடல் இயக்க ரீதியில் இந்த ஆவரணம் எழும்பில் உள்ள மட்சையை குறிக்கும் 

சர்வரோகர சக்கரம் என்ற ஏழாவது ஆவரணம் பிந்துவை குறிப்பதாகும் இதில் எட்டு கோணங்கள் உண்டு இக்கோணங்கள் வசினி காமேஸ்வரி மோதினி விமலா அருணா ஜெயினி சர்வேஸ்வரி கெளலனி ஆகிய வித்தைக்கும் ஞானத்திற்கும் உரிய தேவதைகள் வாசம் செய்கிறார்கள் இந்த அஷ்ட கோணத்தின் அதிதேவதை திரிபுரா ஆவாள் யோகமார்க்கத்தில் கூறப்படும் இயமம் நியமம் ஆசனம் பிரணாயமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி ஆகிய எட்டு நிலைகளும் இதில் அடங்குகிறது

மேலும் நூல்களை கற்றுத்தரும் போத குரு பேதங்களை அறிய செய்யும் வேதகுரு மந்திர சித்தி பெற வழிகாட்டும் மிசிதகுரு செயலுக்கம் தரும் சூட்ச்சக குரு வார்த்தைகளால் ஞானத்தை போதிக்கும் வாசககுரு தான் பெற்ற ஞானத்தை சுயநலம் இல்லாமல் சீடருக்கு தரும் காரககுரு முத்தியடைய வழிகாட்டும் விஷிதககுரு ஆகிய அஷ்டகுருக்களையும் இக்கோணங்கள் உணர்த்துகின்றன 

அன்னை ஆதிபராசக்தியின் நான்கு திருகரங்களும் அந்த கரங்களில் இருக்கும் பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் கணை ஆகிய நான்கு கருவிகளும் இந்த எட்டு கோணத்தின் வடிவங்கள் எனலாம் இதில் பாசம் என்பது ஆசையின் வடிவம் அங்குசம் என்பது கோபத்தின் வடிவம் கருப்பு வில் என்பது மனதின் வடிவம் மலர் கணை என்பது உணர்வுகளின் வடிவம் 

எட்டாவதாக உள்ள ஆவரணம் முக்கோணமாக அமைந்த காயத்திரி பீடமாகும் அன்னை இந்த காயத்திரி பீடத்தில் திரிபுராம்பா என்ற திருநாமத்தோடு அமர்ந்திருக்கிறாள் காமேசி வச்சிரேசி பகமாலினி என்ற மூன்று தேவதைகளையும் முக்கோணத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்தி உள்ளாள் மனிதனை கடைநிலைக்கு தள்ளுகின்ற ஆணவம் கர்மா மாயை என்ற மும்மலங்களும் இச்சக்கரத்தை பூஜிப்பதினால் எரிந்து சாம்பலாகி விடுகிறது

சுழன்றடிக்கும் சூறாவளி என்ற பேராசை அடங்கி விடவும் ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் அனைத்தும் தவிடு பொடி ஆகிவிடவும் வயிரக்கியத்தை பெறவும் சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருக்கும் மனமென்னும் மாய பிசாசை வசக்கி ஒடுக்கி அன்னையின் திருபாதத்தில் பூர்ண சரணாகதி அடைய செய்யவும் இச்சக்கரம் வழிவகுக்கும் 

இறுதியாக சர்வானந்த மயசக்கரம் என்ற ஒன்பதாவது ஆவரணம் ஸ்ரீ சக்ரத்தின் மைய புள்ளியான பிந்து மையமாகும் இது பேரானந்தம் அடையக்கூடிய அம்பிகையின் திருகாட்சியை நேருக்கு நேராக தரிசிக்கும் நிலையை காட்டுகிறது அம்மையும் அப்பனும் இந்த பிந்து பகுதியில் ஒன்றாக இணைந்து நிற்கிறார்கள் இன்பம் துன்பமற்ற ஆழ்ந்த சமாதி நிலை பிந்து பகுதி காட்டும் சின்னமாகும் யோக மார்க்கத்தில் சொல்லப்படும் சமாதி நிலையின் மூன்றவது கண் திறக்கும் அனுபவமே ஸ்ரீ சகரத்தில் உள்ள மூல பிந்தாகும் 

இது வரையில் தாய்தெய்வ வழிபாட்டின் ஆழ்ந்த கருத்துக்களை சுருக்கமாக சிந்தித்தோம் இனி நமது இந்து மதத்தில் உள்ள மற்ற பிரிவுகளையும் சற்று ஆழ்ந்து சிந்திப்போம். 

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!



பிரணாயாமம் என்ற மூச்சு பயிற்சி ஆரோக்கியமான வாழ்கைக்கு சிறந்தது என்று கேள்விப்படுகிறோம்

 அதை செய்யும் முறையை குரு மூலம் தான் அறிய வேண்டும் என்பதும் நமக்கு தெரியும் 

அந்த பயிற்சியை செய்ய துவங்கும் முன் அதை எப்போது செய்ய வேண்டும் அதற்கான உணவு கட்டுப்பாடு ஏதேனும் உண்டா என்பதை அறிந்து கொண்டால் நம்மால் ஆகுமா ஆகாதா என்று முடிவு செய்யலாம் என சிலர் நினைக்கிறார்கள்

மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் ஒரு முயற்சி மட்டுமல்ல வாழும் காலம் எவ்வளவு ஆனாலும் அதில் ஆரோக்கியமாக இருக்கும் வழியேயாகும்.

  முறைப்படி மூச்சு பயிற்சியை காலை மாலை இரு வேளைகளில் தான் செய்ய வேண்டுமென யோக நூல்கள் சொல்லுகின்றன

  சூரிய உதய நேரத்திலும் மறையும் வேளையிலும் தரையில் பத்மாசனம் இட்டு அமர்ந்து முதுகு தண்டுவடம் நேராக நிற்பது போல் நிமிர்ந்து அமர வேண்டும். 

  புலித்தோல், மான்தோல் போன்ற விரிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

  பருத்தி மற்றும் கம்பளி துணிகளையும் பயன்படுத்தலாம். 

 தர்ப்பையால் ஆன பாய் சிறந்தது ஆகும். 

 நாம் மூச்சு பயிற்சி செய்கின்ற அறையில் நமக்கு பிடித்தமான கடவுள் படங்களை வைத்து கொள்ளலாம். 
 கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இயற்கை காட்சி படங்களை வைக்கலாம். இந்த பயிற்சி கடவுள் நம்பிக்கை இல்லாதவனை கூட கடவுளிடம் அழைத்து செல்லும்

 மிக முக்கியமாக அந்த அறை காற்றோட்ட வசதி உள்ளதாகவும், வெளிச்சம் வர கூடியதாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.



  ஊதுபத்தியோ அல்லது மற்ற வாசனை பொருட்களோ உபயோகப்படுத்த கூடாது.

 அந்த நேரத்தில் மனிதர்களின் நடமாட்டமும் செல்லப் பிராணிகளின் அருகாமையோ கூடாது.

 அதிகமா ஒளியும் அங்கு வர கூடாது.

  மனதை கூடியமானவரை அலைய விடாமல், கண்களை மென்மையாக மூடி நிதானமாக அவசரமே இல்லாமல் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

  இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது நேற்று ஒரு நேரம் இன்று ஒரு நேரம் என நமது விருப்பப்படி பிராணாயாமம் செய்யும் நேரத்தை வைத்துக் கொள்ள கூடாது.

  தினசரி மிக கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

  சத்தமாக பேசுதல் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துதல் கூடாது. 

 கூடியமான வரை மனதை காம வசப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். 

 பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதத்துடன் சிறிது நெய், பருப்பு கலந்த உணவை அரை வயிற்றுக்கு எடுத்து கொள்ள வேண்டும். 

 கால் வயிற்றுக்கு நீரும், மீதம் வயிறு காற்றாலும் நிரம்பியிருக்க வேண்டும்.  

உணவு சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து வாழை பழம் மாம்பழம், ஆரஞ்சு பழம், சீத்தா பழம் ஆகிய பழங்களில் எதாவது ஒன்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

  வயிறு நிறைவாக இருக்கும் போதோ, பசியோடு இருக்கும் போதோ மூச்சு பயிற்சி செய்யக் கூடாது.

  மல ஜலம் கழித்த பிறகு குளித்து முடித்தே இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 

 இப்படி செய்பவர்கள் இடத்தில் பெரிய நோய்கள் எதுவும் வராது. 

Friday, November 25, 2011

ஜாதகப்படி நோய் தீருமா...?

பொதுவாக ஜோதிடத்தின் நம்பிக்கை இல்லாதவர்கள் எங்கோ வெகுதொலைவில் இருக்கின்ற கிரகங்கள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கும் எதற்காக அது ஒருவனுக்கு நன்மையையும் இன்னொறுவனுக்கு தீமையும் செய்யவேண்டும் என்று கேட்பார்கள் அந்த கேள்வி சரியானதாகவும் நமக்கு தோன்றும் 

ஆனால் ஒருவிஷயத்தை மிக சுலபமாக நாம் மறந்துவிடுகிறோம் பூமி மேல்பரப்பின் மீது உயிர்கள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும் அயன வெளியில் கிரகங்கள் ஒழுங்கு முறையில் சுற்றுவதற்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு வித ஈர்ப்பு சக்தி காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானம் சொல்வதை நாம் அறிவோம் 

பூமியில் உள்ள தாவரங்கள் ஒளி சேற்கையினால் தங்களது உணவை தாங்களே சமைத்து கொள்வதை விஞ்ஞானம் ஆதார பூர்வமாக நிறுபித்து காட்டுகிறது சூரிய ஒளியை சின்னஞ்சிறிய செடிகள் எப்படி ஈர்த்து கொள்கிறதோ அதற்கு எந்தவிதமான சக்தி தாவரங்களுக்குள் மறைந்திருந்து செயலாற்றுகிறதோ அதே போன்ற சக்தி அல்லது அதை விட சற்று மேம்பட்ட சக்தி மனித சரீரத்துக்குள்ளும் மறைவாக இருந்து செயலாற்றுகிறது 

அப்படி பட்ட மறைபொருளான ஈர்ப்பு சக்தி கிரகங்களின் சுபம் மற்றும் அசுப தன்மைகளை மனிதனுக்குள் கொண்டு வந்து பல காரியங்களை செய்கிறது செய்விக்கிறது சரி அப்படி செய்வதாக இருக்கட்டும் எதனால் இந்த கிரகங்கள் மனிதனுக்கு நல்லதையும் கெட்டதையும் செய்ய வேண்டும் அதன் மூல காரணம் என்ன என்ற அடுத்த கேள்வி நம் மனதிற்குள் எழும்பும் 

இந்த இடத்தில் நமது விஞ்ஞான புத்தியை சற்று தூரவைத்து விட்டு மெய்ஞானத்தை நாட வேண்டும் உலகில் வேறு எந்த மதமும் சொல்லாத அல்லது அறியாத கர்ம கொள்கையை நமது இந்து மதம் சொல்கிறது இந்த கர்ம கொள்கைக்கு எளிமையான விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு செயலுக்கான பலனை பெறுவது என்று சொல்லலாம் அதாவது நன்மை செய்தால் நன்மையான பலனும் தீமை செய்வதினால் தீமையான பலனும் அடைவது இதன் அடிப்படையாகும் 

மனிதன் தனது வாழ்நாளிலும் வாழ்வுக்கு முந்தைய நாளிலும் நல்லதும் கெட்டதுமாக பல செயல்களை செய்கிறான் அதனுடைய விளைவுகளையும் வாழ்நாளை தாண்டியும் அனுபவிக்கிறான் அப்படி என்றால் நன்மை செய்தவனுக்கு நன்மையையும் தீமை செய்தவனுக்கு தீமையும் வகையறிந்து வழங்க சக்தி மிக்க நீதிபதி வேண்டும் அந்த நீதிபதியை தான் ஆத்திகன் கடவுள் என்கிறான் நாத்திகன் இயற்க்கை என்கிறான் 

நீதிபதியின் தீர்ப்பை செயல்வடிவம் படுத்த சில புறக்கருவிகள் வேண்டும் அதே போலவே கடவுளின் தீர்ப்பையும் மனிதனுக்கு கொண்டுவந்து சேர்க்க சில புறக்கருவிகள் தேவைபடுகிறது இந்த் இடத்தில் தான் ஜோதிட சாஸ்திரம் நுழைகிறது கடவுளின் தீர்ப்பை செயல்படுத்தும் கருவிகளே கிரகங்கள் என்கிறது அதாவது கர்மாவின் பயனை மனிதனுக்கு நேரடியாக கொடுப்பது கிரகங்கள் தான் 

இதன் அடிப்படையில் பார்க்கும் போது மனிதன் அனுபவிக்கும் எல்லாவிதமான அனுபவங்களுக்கும் கிரகங்கள் என்பது கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் காரணமாக இருக்கிறது அதாவது மனிதனுக்கு நோய் வருவதற்கும் விலகுவதற்கும் கூட கிரகங்கள் காரணமாக இருப்பதை அனுபவ பூர்வமாக உணரலாம் 

சின்னஞ்சிறிய குழந்தை என்ன பாவம் செய்தது அதற்கு ஏன் இத்தகைய பிணிகள் வந்து துயரத்தை கொடுக்க வேண்டும் என்று நமது இளகிய பணம் சிந்திக்கும் இப்போது கண்ணெதிரே குழந்தையாக இருக்கும் இந்த சிறிய குழந்தை நேற்று அதாவது முற்பிறப்பில் பெரியவனாக இருந்துதான் மாண்டிருக்க வேண்டும் அந்த காலகட்டத்தில் செய்த வினைகளுக்கான பலனை இப்போது அனுபவிக்க வேண்டிய சூழல் இருக்கலாம் அதன் விளைவுதான் பல குழந்தைகள் நோய்களாலும் வறுமையாலும் துன்பப்படுவது 

திருமதி மைதிலி சுப்ரமணியன் குழந்தை அனுபவீக்க்ம் வேதனைக்கும் இது தான் காரணம் என்று ஜாதகம் சொல்கிறது குழந்தையின் ஜனன ஜாதகத்தின் சந்திரன் வலுவிழந்து மாந்தியால் பார்க்க படுகிறான் இதனால் தான் சீதள சம்பந்தமான நோய் அந்த குழந்தையை வாட்டி வதைக்கிறது மேலும் அதன் ஜாதகப்படி வரப்போகும் குரு பெயர்ச்சி நல்ல பலனை கொடுக்க இருப்பதினால் கர்மாவினால் ஏற்பட்டிருக்கும் இந்த நோய் இன்னும் மூன்று மாதத்திலிருந்து படிப்படியாக குறையத்துவங்கி விடும் 

]இருந்தாலும் குழந்தை தற்போது அனுபவிக்கும் வேதனையிலிருந்து விடுபட ஒரு எளிய வழிமுறை இருக்கிறது அந்த வழிமுறை நமது சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்டதாகும் அதை பின்பற்றினால் குழந்தையின் கஷ்டம் ஓரளவு குறைய ஆரம்பிக்கும் 

அதாவது நூறு கிராம் ஓமத்தை லேசாக இடித்து அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சவும் அது நூறு மில்லி அளவு வற்றியவுடன் வடி கட்டி அரைலிட்டர் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி பதம் வந்ததும் இறக்கி வைத்து ஐம்பது கிராம் கற்பூரத்தை பொடிசெய்து கலக்கி வைத்து கொள்ள வேண்டும் 



குழந்தைக்கு மூச்சிறைப்பு மற்றும் சளி தொல்லை ஏற்படும் போது மேலே நான் சொன்ன எண்ணெயை மார்பிலும் முதுகிலும் போட்டு நன்றாக அழுத்தாமல் அனல் பறக்க தேய்த்துவிட வேண்டும் இது உடனடியாக நல்ல பலனை தரும் மேலும் இந்த எண்ணெய் ஆஸ்துமா நெஞ்சுவலி முதுகுவலி போன்றவைகளுக்கு நல்ல நிவாரணத்தை தரக்கூடியது 

சித்தர்கள் குறிப்பிட்ட இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி பாருங்கள் இப்போது கிரகங்கள் நல்ல நிலையில் வர ஆரம்பித்து இருப்பதினாலும் இந்த மருந்தின் வேகத்தாலும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.