Tuesday, February 26, 2013

முடி வளரும் விதம்

முடி வளர்ச்சிக்கு காரணம் ஆண் ஹார்மோன்களான ஆன்ட்ரோஜென் டெஸ்டோஸ்டெரோன் மற்றும் டைஹைட்ரோடெஸ்டோஸ் ஸ்டெரோன் ஆகும். ஆண் ஹார்மோன்களுக்கும் பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்கலாம். இந்த ஹார்மோன்கள் ஆண்கள், பெண்கள் இருவரிடத்திலும் உள்ளவை. அளவு தான் மாறுபடும்.
முடி வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட மாதிரியாகத் தான் வளரும். முடி உறைகள் வரிசையாக முடியை உண்டாக்கும். வளர்ச்சி ஒரு சுழற்ச்சியாக நடைபெறும்.
மூன்று கட்டங்களாக முடி வளர்ச்சி நடக்கும். இவை முறையே வளர்பருவம் அனாஜென், ஓய்வுப் பருவம் டெலோஜென், முடி இறக்கும் பருவம் கெட்டாஜென், என்று மாறி, மாறி நடந்து வரும்.
முடிவளர் பருவத்தில் தலைமுடி 2 லிருந்து 6 அல்லது 8 வருடங்கள் வளரும். புருவங்களும், கண், இமை முடிகளும் 1 லிருந்து 6 மாதங்களில் வளர்ந்து விடும். ஒரு நாளில் 0.3 முதல் 0.5 மி.மீ. நீளத்திற்கு முடி வளரும் மாதத்தில் 1.25 செ.மீ. முதல் 2.5 செ.மீ. வரை வளரும்.
அடுத்த பருவம் ஓய்வெடுத்து கொள்ளுதல். இதற்கு பிறகு மூன்றாவது கட்டத்தில் முடிகள் உதிர ஆரம்பிக்கும். ஒரு நாளில் 100 தலைமுடிகள் ஓய்வின் முடிவை அடைந்து உதிர்ந்து விடும். உதிர்ந்த மயிர்க்கால்களில் மறுபடியும் முடி தோன்றி வளரும். ஓய்வுப் பருவம் தொடங்கு முன், மயிர்கால்களுக்கு இரத்த ‘சப்ளை’ நின்று விடும். முடி சுருங்கி, 5-6 வாரத்தில் உதிர்ந்து விடும்.
இந்த சுழற்சி இயல்பாக நடப்பது ஹார்மோன்களின் கையில் இருக்கிறது. சரியான அளவில் ஹார்மோன்கள் சுரந்தால், முடி செழித்து, ஆரோக்கியமாக வளரும்.
நம் தலை முடியில் 90 சதவிகிதம் வளர்பருவத்திலும், 10 சதவிகிதம் உதிரும் பருவத்திலும் இருக்கும். எனவே தினசரி 10-20 முடிகள் உதிர்ந்து கொண்டிருக்கும்.
ஆண்களும், பெண்களும் பருவமடையும் காலத்தில், பிறப்புறுப்புக்கள் மற்றும் அக்குளில் கருமையாக முடி வளரும். ஆண்களுக்கு முகத்தில், மார்பில் முடி வளர ஆரம்பிக்கும். ஆண் பெண் இரு பாலருக்கும், பிறப்புறுப்புக்கள் மற்றும் அக்குளில் முடி வளர காரணம் டெஸ்டோஸ்டிரோன். ஆண்களுக்கு முகத்தில், மற்றும் தாடி வளர காரணம் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன்.
தலை முடியைப்பற்றிய சில விவரங்கள்
முடிவளர்ச்சி ஒரு சுழற்சியாக நடக்கிறது. ஒவ்வொரு சுழற்சியிலும் முடியின் உறையில் வளர்ச்சி ஏற்படும் நிலை, வளர்ச்சி நின்று ஒய்வெடுக்கும் நிலை, முடி இறக்கும் நிலை என்று மூன்று நிலைகள் நடந்து கொண்டிருக்கும். வளரும் நிலையின் கால அளவு தான் ஒருவரின் தலைமுடி நீளத்தை நிர்ணயிக்கிறது. முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்காது. 5 முதல் 6 மாதம் ஒய்வில் இருக்கும்.
ஒரு மாதத்தின் தலைமுடி 1.25 – 2.5 செ.மீ. வளரும். தலையில் இருக்கும் முடியின் ஆயுள் காலம் அதிகபட்சமாக 94 வாரங்கள்.
வெயிற்காலத்தில் முடிவளர்ச்சி அதிகமிருக்கும்.
ஆரோக்கிய உணவு, முடிக்கும் ஆரோக்கியத்தை தரும். வயது, ஆரோக்கியம், சூழ்நிலை இவைகள் முடிவளர்ச்சியை பாதிப்பவை.
ஆண்களை விட பெண்களுக்குத்தான் கூந்தல் அதிகம் வளரும். கூந்தலை வெட்டாமலேயே விட்டால் 23 லிருந்து 28 அங்குலம் வளரும்.
பெண்களுக்கு கூந்தல் 16 வயதிலிருந்து 25 வயது வரை மிக வேகமாக வளரும்.

முடியின் அமைப்பு

தலைமுடி டெர்மிஸ் பகுதியின் அடித்தளத்தில் ஃபோலிக்குகளில் இருந்து வளர்கிறது. முடி உறைகள் உடலெங்கும் சருமத்தில் இருப்பவை. விதிவிலக்கு உதடு, உள்ளங்கை, உள்ளங்கால். இந்த இடங்களில் முடி வளராது. நீங்கள் ஒரு முடியை வேருடன் எடுத்துப் பாருங்கள். தலை அல்லது உடல் சருமத்தின் மேலே கண்ணுக்கு தெரியும் பாகத்தை தண்டு என்பார்கள். இறந்த புரதம் – கேராடின் மற்றும் திசுக்களால் ஆனது முடித்தண்டு, இறந்த செல்களால் ஆனதால், முடியை வெட்டும் போது நமக்கு வலிப்பதில்லை. முடி கீழ்க்கண்ட மூன்று அடுக்குகள் உள்ளது.

குயூடிகில் – இதை மைக்ரோஸ் கோப்பில் பார்த்தால். செதில் செதிலாக தெரியும். குயூடிகில் முடியின் வெளிப்புற அடுக்கு. அதாவது முடியை சுற்றிக் கொண்டிருக்கும் முதல் அடுக்கு. இது தான் முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.
கார்டெக்ஸ் மத்திய அடுக்கு- நார்களை பின்னியது போல் இருக்கும். கார்டெக்ஸ் முடிக்கு பலத்தையும், மீள்திறன் சக்தியையும் மற்றும் நிறத்தையும் அளிக்கிறது.
மெடூலா – நடுப்பகுதி (மையப் பகுதி)- இது வெற்றிடமாக இருக்கும்.
மேற்சொன்ன மூன்று பகுதிகளும் நம் கண்ணில் தென்படும், இனி தோல் அடியுள்ள முடியின் பாகங்களை பார்ப்போம்.
முடிஉறை அல்லது பை
இங்கு தான் முடி பிறக்கிறது, வாழ்கிறது பிறகு இறக்கிறது. முடி உறையில் அடிப்பகுதியின் வேரில் பேபில்லாவில் ரத்த நாளங்கள் இருக்கின்றன. அதனால் இங்கிருந்து முடிக்கு, தேவையான ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள் கிடைக்கின்றன. முடியின் வேர் பாதிக்கப்பட்டால் முடிவளர்ச்சி நின்று விடும். மறுபடியும் வளராது. முடி உறையின் இயக்கம், அளவு இவை தான் ஒருவருக்கு முடி எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு நீளம் வளரும் என்பதையெல்லாம் முடிவு செய்கிறது.
ஃபோலிக்கில் செபாசியஸ் சுரப்பி எனப்படும் சுரப்பி, சேபம் என்ற எண்ணையை சுரக்கிறது. இவை முடிக்கு பளபளப்பையும் நெகிழ்வு தன்மையையும் கொடுக்கிறது. பருவ காலத்தில் இந்த சுரப்பியின் இயக்கம், உச்சகட்டமாக இருக்கும். வயதாகும் போது இதன் உற்பத்தி குறையும். சீபம் பாக்டீரியா, ஃபங்கஸ் இவைகளை எதிர்க்கும். இந்த சீபம், சுரப்பியிலிருந்து, ஒரு நாளம் வழியே முடிவேர்க்காலில், ஃபோலிக்கினை சென்று அடைகிறது. நாம் தலை வாரும் போது சீபம் எண்ணை உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. தலைமுடிக்கு எண்ணைப் பசையை கொடுத்து, தலை முழுவதும் பரவுகிறது.
பெரிய, ஆழமான முடி உறைகள், கரடு முரடான முடியை தோற்றுவிக்கின்றன. சிறிய உறைகள் மிருதுவான ரோமத்தையும், ‘வளைந்த’ ஃபோலிக்குகள், சுருட்டை முடியையும் உருவாக்குகின்றன.
உடலில் எண்ணைப்பசை
முன்பு சொன்னபடி, முடிக்கும், உடல் தோலுக்கும் எண்ணையை தக்க வைப்பது செபாசியஸ் எண்ணை சுரப்பிகள் தான். இது தரும் சீபம் எண்ணையால் தான் சருமம் எண்ணை பசையுடன், பளபளவென்று இருக்கிறது. சீபம் இல்லாவிட்டால் தோல் பாளம் பாளமாக வெடித்து விடும். செபாசியஸ் சுரப்பிகளுக்கு, சீபத்தை அனுப்ப நாளங்களோ, குழாய்களோ இல்லை. இந்த சுரப்பியின் நுண்ணிய செல்களே உடைந்து கெட்டியான கொழுப்பாக, முடிவேர்களின் வழியே தோலின் மேற்புறத்தை வந்தடைகின்றன. உடலின் சில பாகங்களில் அதிகமாகவும் சில பாகங்களில் குறைவாகவும் செபாசியஸ் சுரப்பிகள் காணப்படும்.
கூந்தலின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும், இந்த எண்ணை சுரப்பி சரிவர இயங்குவது முக்கியமானது.
தலைமுடியின் உபயோகங்கள்
முடி, அதுவும் தலைமுடி நமது தோற்றத்திற்கு பொலிவு தருவது. கருகருவென மிளிரும் தலைமுடி ஆரோக்கியத்தின் அறிகுறி.
தலைமுடி, வெய்யில், வெப்பம், இவைகள் மூளையை தாக்காமல் காக்கிறது.
சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்தும் உடலை முடி காக்கிறது.
மூக்கிலுள்ள முடிகள் தூசி, கிருமிகளை தடுத்து நிறுத்துகின்றன.
உடலுள்ள முடிகள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
முடி பாலுணர்வையும் தூண்டக்கூடியது. மார்பில் முடி செறிந்த ஆணை, பல பெண்கள் விரும்புகிறார்கள். உடலின் மர்மப் பிரதேசங்களில் வளரும் முடி கூட மனோரீதியாக பாலுணர்வை தூண்டும் என்கின்றனர் தோல் வைத்திய நிபுணர்கள்.
முடியைப் பற்றி சில தகவல்கள்
ஒரு சராசரி மனிதரின் தலையில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் முடிகள் வரை இருக்கும்.
தலைமுடி ஒரு மாதத்திற்கு 11/4 செ.மீ. நீளம் வரை வளரும்.
மொத்தமாக மனிதனின் உடல் முழுவதும் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளன.
ஒரு நாளில் 50-150 முடிகள் உதிர்கின்றன.
ரோமத்தின் உயிரில்லா பாகம். தோலின் மேலும், உயிருள்ள பாகம் தோலின் கீழேயும் காணப்படும்.
கெராடின்
கெராடின் சுறுசுறுப்பு இல்லாத அதிக செயல்பாடுகளில்லாத ஒரு நார் புரதம்.
தலைமுடியில் 97% கெராடின் தான். இது நகத்திலும் காணப்படும்.
கெராடினில் இருப்பது கந்தகம்.
தலைமுடி பிறந்து, வளர்ந்து, மறையும் வரையில் ஏற்படும் மாற்றங்களின் முடிவுப்பொருள்.
முடி உற்பத்தியில் கெராடினின் செயல்பாடு – முடி செல்கள் தங்களின் மைய உட்கருவை இழந்து விடுகின்றன. இழந்த உட்கருவுக்கு பதிலாக, கெராடின் செல்களை ஆகிரமித்து விடும். செல்கள் மேலே வரும் போது இந்த செயல்பாடு நடக்கும். இதை கெராடிஸை சேஸன் என்பார்கள்.
முடியின் வண்ணங்கள்
நமது முடியில் உள்ள கெரோடினுக்கு கறுப்பு நிறத்தை கொடுப்பது மெலானின் என்ற வர்ணம் கொடுக்கும் பொருள். தோலின் டெர்மிஸ் பகுதியில் பிரத்யேக செல்களில் இருக்கும். வெய்யில் தோலில்பட்டால் மெலானின் உற்பத்தி அதிகமாகிறது. இதனால் சருமம் வெய்யிலில் கறுத்து விடும். மெலானின் உள்ள செல்கள் மெலானோசைட்ஸ் எனப்படும். வயதாகும் போது மெலானின் உற்பத்தி குறைந்து கொண்டே போகும். இதனால் முடியில் கறுப்பு நிறம் குறைந்து, முடி நரைத்து வெள்ளையாகிறது.

கூந்தலின் வகைகள்

முகத்தை போலவே கூந்தல்களுக்கும் தனித்தன்மை உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான முடி அமைப்பு இருக்கும். அடிப்படையாக, முடியை மூன்று வகைகளாக சொல்லாம்.

எண்ணைப்பசை மிகுந்த கூந்தல்
வறண்ட கூந்தல்
சாதாரண கூந்தல்
எண்ணைப் பசை உள்ள கூந்தல்
எண்ணை சுரப்பியான செபாசியஸ் சுரப்பி, சேபம் எண்ணையை அதிகம் சுரப்பதால் கூந்தலின் எண்ணை அதிகமாகும். எண்ணைப்பசை அதிகமானால் மயிர்க்கால்கள் அடைத்துக் கொள்ளும். தலையில் அழுக்கு சேரும்.
இந்த வகை பெண்களுக்கு, தலையில் மட்டுமல்ல, முகத்திலும் அதிக எண்ணை இருக்கும். தலைமுடி 1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று சொன்னோம். எண்ணை பசை கூந்தல் உள்ளவர்களுக்கு 1 லட்சத்து நாற்பதாயிரம் எண்ணை சுரப்பிகள் இருக்கும். எண்ணை அதிகம் சுரக்க காரணங்கள், பிறவி உடல் வாகு, ஹார்மோன்கள், சூடு, ஈரப்பதம் ஆகியவை காரணமாகலாம்.
உலர்ந்த முடி
எண்ணை சுரப்பி போதிய அளவு சுரக்காததால், கூந்தல் வறண்டு விடும். எண்ணை போஷாக்கில்லாததால் முடி பலவீனம் அடைந்து, உலர்ந்து உடையும்.
சாதாரண முடி
எண்ணை சுரப்பி சரியான அளவில் சுரந்தால், கூந்தல் ஆரோக்கியமாக வளரும். முடிப்பிரச்சனைகள் தோன்றாது.
ஆயுர்வேதத்தின் படி முடி வகைகள்
ஆயுர்வேதம் தனது அடிப்படை கோட்பாடான வாத, பித்த, கப தோஷங்களால் மனிதர்களை மூன்று பிரக்ருதிகளாக பிரிக்கிறது. அந்தந்த பிரகிருதிகளுக்கு ஏற்ப தலைமுடி இருக்கும்.
வாத பிரகிருதிகளுக்கு
உடல் முடி கறுப்பாக, அடர்த்தியாக, சுருண்டு மென்மையாக இருக்கும். உடல் முடி ஒன்று குறைவாக இருக்கும். இல்லை எதிர்மாறாக அதிகமிருக்கும்.
தலைமுடி கறுப்பாக, கரடு முரடாக, சிடுக்கோடு இருக்கும். முடி வறண்டு இருக்கும்.
பித்த பிரகிருதிகளுக்கு
உடல் முடி இலேசாக, மிருதுவாக அழகாக இருக்கும்.
தலைமுடி எண்ணை பசையுடன் இருக்கும். சீக்கிரமாக நரைத்து விடும்.
வழுக்கை சீக்கிரமாக ஏற்படலாம்.
கபப் பிரகிருதிகளுக்கு
உடல் முடி அளவோடு இருக்கும்.
தலைமுடி, எண்ணைபசை சிறிதளவே இருந்தாலும், பளபளப்பாக அலை அலையாக இருக்கும். அடர்த்தியாக கருமையாக இருக்கும்.
உங்கள் கூந்தல் எந்த டைப் என்று அறிய
ஷாம்பூ போட்டு தலைமுடியை அலசின மறுநாள், ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து தலை நடுவிலும், காதுகளின் பின்புறமும் அழுத்தி எடுக்கவும். டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டாம். அழுத்தி எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில் எண்ணெய் தெரிந்தால் உங்களின் கூந்தல் எண்ணெய்ப்பசை அதிகமுள்ள கூந்தல். தவிர உங்கள் சர்மம் ‘நார்மலாக’ இருந்தால் உங்கள் கூந்தலும் நார்மலாக இருக்கும். சர்மத்தில் குறிப்பாக முகத்தில், எண்ணெய் பசையாக இருப்பவர்களுக்கு, கூந்தலும் எண்ணெய்ப்பசை அதிகமானதாக இருக்கும். உலர்ந்த சருமம் உள்ளவர்களின் கூந்தலும் உலர்ந்திருக்கும்.
மனித இனத்திற்கேற்ப மாறுபடும் முடி
மனிதரின் இனம், வசிக்கும் பிரதேசங்கள் இவைகளால் முடி வகைகள் மாறுபடும். கறுப்பின நீக்ரோக்கள் முடி, கம்பிச்சுருள் போல சுருண்டு, சுருட்டையாக இருக்கும். ஆசிய இனத்தவர்களுக்கு முடி நீளமாக இருக்கும். மங்கோலிய இனத்தவர்க்கு முடி முரட்டுத்தனமாக இருக்கும். ஐரோப்பிய நாட்டவருக்கு முடி மிருதுவாக, பழுப்பு – வெள்ளை நிறமாக இருக்கும். இவர்களுக்கு மெலானின் குறைவாக இருப்பதால், முடி சீக்கிரம் நரைத்து விடும்.
ஆயுர்வேதமும் முடியும்
ஆயுர்வேதத்தின் படி முடி ஒரு எலும்பின் திசு. அஸ்தி – தாதுவின் மலம் கழிவுப் பொருள். எலும்பு கால்சியத்தால் ஆனதால், முடிக்கும் கால்சியம் தேவையென ஆயுர்வேத மருத்துவர்கள் கருதுகின்றனர். கால்சியம் மட்டுமல்ல, இரும்புச்சத்தும் சேர்ந்தால், முடி ஆரோக்கியமாக இருக்கும் என்பது இவர்களின் கருத்தாகும். சரகசம்ஹிதை, எலும்பு திசு குறைவினால், இளநரை, முடி உதிர்தல் இவை ஏற்படுகிறது என்கிறது.
முடி மற்றும் நகங்கள் பஞ்ச பூதங்களில் ஒன்றான ப்ருத்வியால் ஆனவை. ஜல பூதம் இன்மையால் இவை கடினமாகின்றன என்பதும் ஆயுர்வேத கருத்து.
சரகசம்ஹிதை மட்டுமல்ல, சுஸ்ருதரும் 44 வகை ரோகங்களை குறிப்பிடுகிறார். அதில் பொடுகு, முடி உதிர்தல், நரை – இவைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
பல வித முடிப்பிரச்சனைகள் ஆயுர்வேதத்தில் அலசப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேதத்தை அணுகினால், முடி பாதிப்புகளுக்கு பாதுகாப்பான தீர்வுகள் கிடைக்கும்.
உங்கள் கூந்தல் எந்த வகையைச் சேர்ந்தது என்று அறிய ஆயுர்வேத மருத்துவரை அணுகவும். வரும் அத்யாயங்களில் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் விவரிக்கப்படும்.

தோலின் அமைப்பு

முடியைப்பற்றி தெரிந்து கொள்ளும் முன் நாம் நமது தோலைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். விளை நிலமாக தோலையும், அதில் விளையும் பயிராக தலைமுடியையும் உவமை சொல்லாம்.

உடலில் உள்ள அவயங்களில் பெரியது எதுவென்றால் கல்லீரல் என்பீர்கள். இல்லை, ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டால் தோல் தான். தோல் ஒரு கவசமாக போர்வையாக உடலை பாதுகாக்கிறது. உடலில் பல நச்சுப்பொருட்கள் புகாமல், சூரிய ஒளியின் கெடுதலான கதிர்வீச்சுகள் நம்மை தாக்காமல் தடுக்கிறது. மனிதரின் புற அழகுக்கு காரணமாகிறது. சருமம் மூன்று அடுக்குகளால் ஆனது. ஒவ்வொன்றும் ஒரு வேலையை செய்கின்றன. இவை

எபிடெர்மிஸ் – இது வெளிப்புற அடுக்கு. புறத்தோல். இதில் துணை அடுக்குகளும் உள்ளன. வெளியில் காணும், மெல்லிய தோல் பரப்பு ஸ்ட்ரேடம் கார்னியம். இது தண்ணீரால் சேதமடையாத வாட்டர் ப்ரூஃப், அடுக்கு இது தான் முதல் நுழைவாயில் கதவாக, பாக்டீரியா, வைரஸ் இவை உள்ளே நுழையாமல் தடுக்கிறது. எபிடெர்மிஸின் மேல் பரப்பு கடினமான நார்ப் போன்ற கெராடின் எனும் புரதத்தால் ஆனது. இந்த கெராடின் தான் நகத்திலும் முடியிலும் இருப்பது. மேற்சொன்ன ஸ்ட்ரேடம் கார்னியம் – இதன் கீழே உள்ள அடுத்த அடுக்கு ஸ்ட்ரேடம் கிரானுலோசம். இதன் கீழ் ஸ்ட்ரேடம் ஜெர்மினேடிவம் அல்லது மால்பிகியின் அடுக்கு. எபிடெர்மிஸின் உள்பகுதியில், கீழ் பாகத்தில் மெலானோசைட்ஸ் உள்ளன. இவை மெலானின் என்னும் நிறமியை உண்டாக்குகின்றன. இந்த மெலானின் தான் நீங்கள் சிகப்பா, கறுப்பா என்பதை தீர்மானிக்கிறது. மேல்தோலில் உள்ள செல்கள் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படுகின்றன. அதாவது இறந்த செல்கள் – இவை எபிடெர்மிஸில் கீழுள்ள அடுக்குகளிலிருந்து மேல் தள்ளப்பட்டு வெளித்தோலை வந்தடையும்.

டெர்மிஸ் – இந்த அடுத்த அடுக்கு தான் நிஜமான தோல். கொல்லாஜன் மற்றும் ஃபிப்ரிலின் என்ற புரதங்களால் ஆனது. இவை தோலுக்கு மீள்சக்தி, வளையும் தன்மை இவற்றை தருகின்றன. டெர்மிஸில் நரம்பு நுனிகள், சுரப்பிகள், ரத்த நாளங்கள் – முக்கியமாக முடி ஃபோலிக்குகள் உள்ளன. இவற்றை முடிஉறை என்று கூறலாம். டெர்மிஸில் உள்ள வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றி உடல் உஷ்ணத்தை பராமரிக்கின்றன. ரத்த நாளங்கள் தோலுக்கு சத்துணவுகளை கொடுக்கின்றன. டெர்மிஸை கோரியம் என்றும் சொல்வார்கள். டெர்மிஸ் பகுதியில் பாபில்லா மற்றும் வலைப்பின்னல் போன்ற அடுக்குகள் இருக்கும்.

கொழுப்பு அடுக்கு- இதை சப்-கான்டியஸ் அல்லது ஹைபோடெர்மிஸ் என்றும் சொல்வார்கள். இந்த கொழுப்பு அடுக்கு உடலை வெப்பத்திலிருந்தும், குளிரிலிருந்தும் பாதுகாக்கும்.

தோலைப் பற்றிய தகவல்கள்
நமது தோலின் தடிப்பு சராசரி 2 மி.மீ சில இடங்களில் உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற அதிகமாக இருக்கும். எபிடெர்மிஸ் அடுக்கில் லாங்கர்ஹான்ஸ் செல்களும் உள்ளன. இவை நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

கார் கூந்தல் பெண்ணழகு

நீண்ட கருமையான கூந்தல் பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று. முக பொலிவுக்கு அழகை கூட்டுவது கூந்தல். அடர்த்தியான, சுருட்டையான, கூந்தலை அடைவதில் எல்லா பெண்களுக்கும் ஆசை.

கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழியழகு
கார் கூந்தல் பெண்ணழகு

பெண் என்றாலே அழகு என்று தமிழ் இலக்கியங்களிலும், காவியங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இலக்கியவாதிகளானாலும், கவிஞர்கள் ஆனாலும் பெண்ணை வர்ணிக்கும் போது, “நீண்ட நெடிய கருங்கூந்தலை உடைய பெண்ணே! என்று கூறுகிறார்கள். பெண்ணின் கண்களையும், இடையினையும் வர்ணித்து கவிகளும், காவியங்களும் புனையப்பட்டிருந்தாலும் எல்லாவற்றிற்கும் மேலாக பெண்ணின் கூந்தலையே முதன்மையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

காரணம் ஒரு பெண்ணிற்கு அழகு என்பது அவளின் கூந்தலை பொறுத்தே அமைகிறது. ஏனெனில், நீண்ட நெடுங்கரிய நிற கூந்தலைக் கொண்ட பெண்ணே, மற்ற மங்கையர்களிடத்து வேறுபட்டு நிற்கிறாள்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இளநரை, வழுக்கை இவற்றை தவிர்க்கவே விரும்புகிறார்கள். வழுக்கை வயதானதின் அறிகுறி என்று ஆண்கள் கருதுவதால் அதற்கான வழிமுறைகளை தேடுவதில் ஆர்வமாக முனைகிறார்கள். முன்பெல்லாம் தலைக்கு சாயம் அடித்துக் கொள்வதற்கு ஆண், பெண் இருவரும் வெட்கப்படுவார்கள். இப்போது சர்வ சாதரணமாக ஆகிவிட்டது.

ஆனால், நம் பெண்களிடத்தில் எத்தனை பேர்களுக்கு நீண்ட, அழகான, கருமையான கூந்தல் உள்ளது? இல்லை, அது மிக அரிதாகி விட்டது. காரணம் இன்றைய நாகரீக உலகில் கேச பராமரிப்பு பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இல்லாததே ஆகும். அல்லது தவறான கூந்தல் பராமரிப்பு என்பதாகும்.

இயற்கையாகவே பல பெண்கள் நீண்ட அடர்ந்த கருங்கூந்தலை பேணி பாதுகாப்பது என்பது ஒரு அன்றாட பிரச்சனையாகவே விஸ்வரூபம் எடுத்து மனநலத்தையும் உடல் நலத்தையும் பாதிக்கின்றது. கூந்தல் பராமரிப்பிற்கு பாரம்பரிய இயற்கை மூலிகைகளையே பெரிதும் உலகெங்கும் பயன்படுத்துகின்றனர். மூலிகைகளால் பராமரிப்பதுவே சிறந்தது எனவும் பாதுகாப்பானது எனவும் பக்க விளைவுகள் இல்லாதது எனவும் பல நூற்றாண்டுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்காலத்தில் மூலிகைகளே சிறந்தவை என கருதப்படுகிறது. இவற்றை இள வயது பெண்களும் நடுவயது பெண்களும் பாதுகாப்பாக பயன்படுத்தலாம். இவைகளால் தீமையான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. இவற்றை ஒன்றிரண்டு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு பயனளிக்கவில்லை என விட்டுவிடக் கூடாது முழு நம்பிக்கையுடன் இவற்றை தினந்தோறும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் தேவையில்லை.

கார் கூந்தல் பெண்ணழகு

நீண்ட கருமையான கூந்தல் பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று. முக பொலிவுக்கு அழகை கூட்டுவது கூந்தல். அடர்த்தியான, சுருட்டையான, கூந்தலை அடைவதில் எல்லா பெண்களுக்கும் ஆசை.

கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழியழகு
கார் கூந்தல் பெண்ணழகு

பெண் என்றாலே அழகு என்று தமிழ் இலக்கியங்களிலும், காவியங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இலக்கியவாதிகளானாலும், கவிஞர்கள் ஆனாலும் பெண்ணை வர்ணிக்கும் போது, “நீண்ட நெடிய கருங்கூந்தலை உடைய பெண்ணே! என்று கூறுகிறார்கள். பெண்ணின் கண்களையும், இடையினையும் வர்ணித்து கவிகளும், காவியங்களும் புனையப்பட்டிருந்தாலும் எல்லாவற்றிற்கும் மேலாக பெண்ணின் கூந்தலையே முதன்மையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

காரணம் ஒரு பெண்ணிற்கு அழகு என்பது அவளின் கூந்தலை பொறுத்தே அமைகிறது. ஏனெனில், நீண்ட நெடுங்கரிய நிற கூந்தலைக் கொண்ட பெண்ணே, மற்ற மங்கையர்களிடத்து வேறுபட்டு நிற்கிறாள்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இளநரை, வழுக்கை இவற்றை தவிர்க்கவே விரும்புகிறார்கள். வழுக்கை வயதானதின் அறிகுறி என்று ஆண்கள் கருதுவதால் அதற்கான வழிமுறைகளை தேடுவதில் ஆர்வமாக முனைகிறார்கள். முன்பெல்லாம் தலைக்கு சாயம் அடித்துக் கொள்வதற்கு ஆண், பெண் இருவரும் வெட்கப்படுவார்கள். இப்போது சர்வ சாதரணமாக ஆகிவிட்டது.

ஆனால், நம் பெண்களிடத்தில் எத்தனை பேர்களுக்கு நீண்ட, அழகான, கருமையான கூந்தல் உள்ளது? இல்லை, அது மிக அரிதாகி விட்டது. காரணம் இன்றைய நாகரீக உலகில் கேச பராமரிப்பு பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இல்லாததே ஆகும். அல்லது தவறான கூந்தல் பராமரிப்பு என்பதாகும்.

இயற்கையாகவே பல பெண்கள் நீண்ட அடர்ந்த கருங்கூந்தலை பேணி பாதுகாப்பது என்பது ஒரு அன்றாட பிரச்சனையாகவே விஸ்வரூபம் எடுத்து மனநலத்தையும் உடல் நலத்தையும் பாதிக்கின்றது. கூந்தல் பராமரிப்பிற்கு பாரம்பரிய இயற்கை மூலிகைகளையே பெரிதும் உலகெங்கும் பயன்படுத்துகின்றனர். மூலிகைகளால் பராமரிப்பதுவே சிறந்தது எனவும் பாதுகாப்பானது எனவும் பக்க விளைவுகள் இல்லாதது எனவும் பல நூற்றாண்டுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்காலத்தில் மூலிகைகளே சிறந்தவை என கருதப்படுகிறது. இவற்றை இள வயது பெண்களும் நடுவயது பெண்களும் பாதுகாப்பாக பயன்படுத்தலாம். இவைகளால் தீமையான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. இவற்றை ஒன்றிரண்டு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு பயனளிக்கவில்லை என விட்டுவிடக் கூடாது முழு நம்பிக்கையுடன் இவற்றை தினந்தோறும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் தேவையில்லை.

மனிதனுக்கு இது தேவை!

செக்ஸ் என்பதை பல பேர் ஒரு புனிதமாக… அல்லது ஒரு புதிராக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பசியைப் போல செக்ஸம் ஓர் இயல்பான நடவடிக்கை என்று கருதுவது இல்லை. எனவே தான் அப்படி நினைக்கிறார்கள்.
மனிதர்களுக்கு இயற்கையானது பசி, தூக்கம், செக்ஸ் இன்பம் ஆகிய மூன்று அடிப்படையானத் தேவைகளைக் கொடுத்திருக்கிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ பசி, தூக்கம் இரண்டும் அவசியம் தான். இந்த அடிப்படைத் தேவைகளில் செக்ஸ் நடவடிக்கை என்பது அத்தியாவசியமானதா? ஆம்! அத்தியாவசியம் தான். மனித வளம் பெருக வேண்டிய தன் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் இயற்கையானது செக்ஸ் தேவையை கொடுத்துள்ளது. செக்ஸ் உணர்ச்சி இல்லையெனில் படைப்பு எங்ஙனம் நிகழும்? இனப்பெருக்கமும் எவ்வாறு சாத்தியம்? மனித உடம்பில் உறுப்புகள் எல்லாம் 18 முதல் 20 வயதுக்குள் வளர்ச்சி பெற்று விடும்.
ஆண்களுக்கு தங்கள் ஆணுறுப்புப் பற்றிய சந்தேகம் நிறைய உள்ளது. ஆணுறுப்பு விறைப்புத் தன்மை அடைய எந்த அளவு இருக்க வேண்டும்? ஆணுறுப்பின் அளவானது சிறிதாக இருந்தால் செக்ஸில் திருப்தி கிடைக்குமா? ஆணுறுப்பின் அளவானது சிறிதாக இருந்தால் தனது மனைவியை திருப்தி அடைய வைக்க இயலுமா? என்று பெருத்த சந்தேக வலையினை தாங்களாகவே பின்னிக் கொண்டு அதிலேயே சுருண்டு விழுந்து கிடக்கிற ஆண்களும் இருக்கிறார்கள். ஒரு ஆணுக்கு ஆணுறுப்பானது விறைப்புத் தன்மை அடைந்த பிறகு இரண்டு அங்குல நீளம் இருந்தால் போதும். ஒரு ஆண் செக்ஸ் வழியாக ஒரு பெண்ணைத் திருப்திபடுத்த இந்த அளவு போதுமானதாகும்.
சரி, ஆண் உறுப்பு இந்த அளவு இருந்தால் போதும் என்கிறீர்கள். பெண்ணின் உறுப்பு எப்படி இருக்க வேன்டும்? இது ஆண்களின் பலரது கேள்வி. பெண்ணின் பிறப்புறுப்பு சராசரியாக ஆறு அங்குலம் ஆழமுடையதாக இருக்கும். பெண்ணின் உறுப்பு ஆறு அங்குலம் ஆழம் கொண்டதாக இருக்கும் போது, இரண்டு அங்குல நீளமே கொண்ட ஆணுறுப்பை வைத்துக் கொண்டு எப்படி அந்தப் பெண்ணை திருப்திபடுத்த முடியும்? இது ஆண்களின் அடுத்த கேள்வி அஸ்திரம். பெண்ணுறுப்பின் ஆறு அங்குல ஆழத்தில் இரண்டு அங்குல ஆழத்தை ஆண் உறுப்பு தொட்டாலே போதும்… ஆனந்தம் தான்.
ஒரு ஆணுக்கு விறைப்பு தன்மைக் கொண்ட ஆணுறுப்பு இரண்டு அங்குல நீளம் கொண்டிருப்பதுடன், அவனது விந்தில் ஆரோக்கியமான வடிவம் கொண்ட, அசையும் தன்மை கொண்ட உயிரணுக்கள் இருந்தால் தான் அவனுக்கு குழந்தை பிறக்கும். இவற்றில் சிக்கல் இருந்தால் பிரச்சனை தான். சிலருக்கு பிறவியிலேயே ஒரு சில குறைபாடுகள் இருக்கலாம். ஆணுறுப்பில் தொற்றுக்கிருமிகள் இருப்பது போன்றவை இதில் அடங்கும். ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இதனாலும் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படலாம்.

ஆசையே அலைபோல

கண்டதும் காதல் – இதற்கு காரணம் என்ன?

உடலில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் தான்! மூளையில் உள்ள ஒரு சிக்கலான நரம்பு மண்டல நாளங்களின் சிஸ்டத்தை “லிம்பிக் சிஸ்டம்” (Limbic system) என்பார்கள். (ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் “ஸ்ரோதாக்கள்” போல). இந்த சிஸ்டம் பெண்கள் விவேகத்தை விட்டு “விளையாட்டாக” ஸரசமாடுவதை தூண்டும். இந்த காதல் விளையாட்டால் “டோபோமைன்” தூண்டப்படும். இதனால் காதலுக்கு கண்ணில்லாமல் போகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டைரோன் அதிகம் சுரந்தால் கண்டதும் காதல் மட்டுமல்ல கண்டவர்களின் மீது காதல் உண்டாகும். பெண்களை கவர வேண்டுமானால், அவளின் ‘ஆக்ஸிடோசின்’ (Oxy tocin – பிட்யூடரி சுரக்கும் ஹார்மோன்) லெவலை அதிகரிக்க வேண்டும்.

பெண்ணை புகழ்ந்தால், பாராட்டினால் இந்த ஹார்மோன் ஏறி, உங்களிடம் நெருக்கம் உண்டாகும். இந்த ஹார்மோனை தூண்டுவது இனிப்பு. அதுவும் சாக்லேட்டுகள்! பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டால், கார்டிசால் (Cartisol) அளவு குறைந்து, ‘ஆக்ஸிடாக்சின்’ அளவு ஏறும். உடலுறவின் போது மன நெருக்கத்தை அதிகரிக்கும் ஆக்ஸிசின் மட்டுமின்றி ‘வாஸோப்ரெசின்’ ஹார்மோனும் அதிகமாக சுரக்கும். இதனால் உடலுறவுக்கு பின் பெண் தனது ஆடவன் மீது மேலும் நெருக்கமாக உணருகிறாள். ஆணுக்கோ உடலுறவுக்கு பின் டோபோமைன் அளவு கணிசமாக குறைவதால், பாலியல் இச்சை பயங்கரமாக குறைந்து விடும். உச்சக்கட்டத்திற்கு பின் “ரிலீஸ்” ஆகும் ஆக்சிடோக்சின், செரோடோனின், ப்ரோலாக்டின், ஆணுக்கு தூக்கத்தை உண்டாக்கும். எனவே கலவிக்குப்பின் ஆடவன் தூங்கி விடுவது அவர் தப்பல்ல! இதை புரிந்து கொண்டு, உடலுறவுக்கு பின், கொஞ்சம் மெனக்கட்டு, உங்கள் காதலியை, அரவணையுங்கள். இதனால் உங்களின் டோபோமான் லெவல் உடனடி குறைவதை தடுக்கலாம்.
மேலும் சில டிப்ஸ்
• பெண்களுக்கு அதிகமாக கிளர்ச்சியை உண்டாக்கும் செக்ஸ் உணர்ச்சிப் பகுதிகளில் முக்கியமானது பெண்ணுறுப்பில் மேல்பாகத்தில் ஒரு அங்கமாக அமைந்திருக்கும் “மலர்” (Clitoris). இது ஆணுறுப்புக்கு சமமான பெண் உறுப்பு. இதன் அளவு (Size)) என்ன தெரியுமா? ஆறு அங்குலம்! இதன் நுனி மாத்திரம் வெளியே தெரியும். மீதிப்பகுதி இடுப்பு எலும்புக் கூட்டிலிருக்கும். இதை தூண்டுவதற்கு உங்கள் மனைவியின் விருப்பத்தை தெரிந்து கொள்ளவும்.
• உங்கள் மனைவி உச்சக் கட்டத்தை அடைவதற்கு சிறந்த வழி முன் தொடுதல் (Fore play)

செக்சும் சிக்மண்ட் ஃப்ராய்டும்

20 ம் நூற்றாண்டின் சிறந்த மருத்துவ சிந்தனையாளர்களில் ஒருவர் சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud). மூளை, நரம்புக் கோளாறுக்களுக்கான காரணங்களை கண்டுபிடிக்க மனத்தைப் பற்றிய Psycho Analysis எனப்படும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். இவர் வாழ்ந்த வருடங்கள் – 1856 லிருந்து 1939 வரை. பெரிய குடும்பத்தில், ஆஸ்திரியாவில் பிறந்தவர். மருத்துவ படிப்பு படித்தவர். ஒரு மனிதனின் தனிப்பட்ட குணம் (Personality) மற்றும் பாலியல் கோளாறால் ஏற்படும் நரம்பு மண்டல வியாதிகளை பற்றிய ஃப்ராய்டின் வார்த்தைகள் – ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் (Oedipus Complex), பாலியல் வேட்கை / பாலுணர்வு தூண்டுதல் (Libido), அடக்குதல் (உணர்வை), (Repression), மரண ஆசை (Death Wish) – இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

மனோ ரீதியான விஷயங்களில் ஃப்ராய்டின் கருத்துக்களை விவரிக்க தனிப்புத்தகம் தேவை! இங்கு அவருடைய “செக்ஸ்” பற்றிய கருத்துக்களை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.
பாலுணர்வு தான் மிக முக்கியமான “தூண்டுதல்” சக்தி என்கிறார் ஃப்ராய்ட். பருவமடைந்த மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிறந்த குழந்தைக்கு கூட ‘செக்ஸ்’ தான் க்ரியா ஊக்கி. செக்ஸ் என்றால் உடலுறவு, உச்சக்கட்டம் அடைதல் என்பதல்ல. தொடும் உணர்வினால் ஏற்படும் சுகமும் செக்ஸ் தான். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதும், ஒரு செக்ஸ் உணர்வு தான் அதனால் குழந்தை கையில் கிடைப்பதெல்லாம் வாயில் போட்டுக் கொள்ளும். வளரும் குழந்தைகள் தங்கள் பிறவி உறுப்புகளை தொட்டால் பிடித்திருப்பதை அறிவார்கள். சுய இன்பம் அடைவது சகஜம். எல்லாவித நம்பிக்கையான, “பாசிடிவ்” செயல்கள், க்ரியேடிவ் (Creative) செயல்கள் இவையெல்லாமே செக்ஸ் உந்துதல் தான். பல் முளைத்த குழந்தைகள் ‘கடித்து’ விடும் என்பதால் தாய்ப்பால் கொடுப்பது நிறுத்தப்பட்டால், அந்த குழந்தைகள் வளர்ந்த பின்னும், பென்சில், ரப்பர், ஏன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைஸன் போல் எதிராளியுடன் காதையும் கடித்து விடுவார்கள்! இவர்கள் எதற்கெடுத்தாலும் வாதம் செய்வது, சண்டை போடும் முரட்டுத்தனம், கேலி, கிண்டல் இவற்றைப் போன்ற குணமுடையவர்களாக இருப்பார்கள். தாய்மார்கள் குழந்தைகளுக்கு ‘டாய்லெட் ட்ரெயினிங்’ (மல ஜலம் ஒழுங்கான இடத்தில் கழிப்பதற்கு) கொடுக்க. குழந்தைகளை கொஞ்சி கூத்தாடுவார்கள். இந்த குழந்தைகள், முரடாக, ஓழுங்குமுறை இல்லாமல் கவனக்குறைவாக வேலைகளை செய்வார்கள். கொடூரமாக, அழிக்கும் தன்மை உடையவர்களாக மாறலாம். சில பெற்றோர், டாய்லெட் பயிற்சிக்காக குழந்தைகள் அடித்து தண்டிப்பார்கள். மற்றவர் முன்னிலையில் அவமானப்படுத்துவார்கள். இதனால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படும். இவர்கள் வளர்ந்த பின், கருமியாக, ஓவர் சுத்தமாக, பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
செக்ஸ் என்றாலே சிலர் பயப்படுவதின் காரணம் – குழந்தைப் பருவத்தில் தாயால் ஒதுக்கப்பட்டு, வலுவான தந்தையால் கண்டிக்கப்படுவது. இதனால் இந்த மாதிரி வளர்க்கப்பட்ட மனிதர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடும். செக்ஸில் ஈடுபட பயந்து வேறு வேலைகளில் ஈடுபடுவார்கள். பெண் குழந்தைகளும் இதே நிலைக்கு ஆளாகலாம்.
இவை தவிர ஃப்ராய்ட் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ், அதனால் தோன்றும் “என் ஆண் உறுப்பை” இழந்து விடுவேனா என்ற பயம் மற்றும் பெண்களுக்கு ஆணுறுப்பின் மீது பொறாமை போன்ற கருத்துக்களை சொல்லியிருக்கிறார். ஆனால் இவைகளை மனோதத்துவ நிபுணர்களில் பாதிப் பேர்கள் ஒப்புக்கொள்வதில்லை.
ஈடிபஸ் (Oedipus) காம்ப்ளெக்ஸ் (Complex)
கிரேக்க இதிகாசங்களில் ஈடிபஸ் கதையும் ஒன்று லாயிஸ் (Lais) அரசருக்கும் ஜொகாஸ்டா ராணிக்கும் பிறந்தவன் ஈடிபஸ், “அசரீரி” எனும் தேவ வாக்கை (ஜோதிடம்) ராஜாவும் ராணியும் குழந்தை பற்றி ‘குறி’ கேட்க, இந்த குழந்தை தந்தையை கொன்று, தாயை மணப்பான் என்றது அசரீரி. இதனால் அரசன், குழந்தையின் காலை துளைத்து, நிர்க்கதியாக விட்டு சென்று விடுகிறார். குழந்தையை ஆட்டிடையன் ஒருவன் எடுத்து பாலிபஸ் (Polybus) அரசரிடம் சேர்க்க, ஈடிபஸ் அங்கே வளருகிறான். பல வருடங்களுக்கு பிறகு ஈடிபஸ், பாலிபஸ் ராஜாவும், ராணியும் தனது உண்மையான பெற்றோர்களல்ல என்பதையும் தன்னைப் பற்றி ‘அசரீரி’ கூறியதையும் தெரிந்து கொள்கிறான். அசரீரியின் வாக்கை தவிர்க்க, தனது இருப்பிடமான கோரிந்தை (Corinth) விட்டு தெபெஸ் செல்கிறான். வழியில் எதிரில் ஒரு ரதத்தில் வருபவருக்கு ஈடிபஸ்ஸீக்கும், யார் வழி விடுவது என்ற சண்டை உண்டாகி, ரதத்தில் வந்தவரை ஈடிபஸ் கொன்று விடுகிறான். ரதத்தில் வந்தவர் ஈடிபஸ்ஸின் தந்தை லையிஸ் தான். தனது பயணத்தை தொடர்ந்த ஈடிபஸ் வழியில் “ஸ்பிங்ஸ்” (Sphinx) எனும் பெண்முகமும், சிங்க உடலும், இறக்கைகளும் உள்ள கொடிய இராட்சச பிராணியிடம் மாட்டிக் கொள்கிறார். அந்த பிராணி எல்லா வழிப் போக்கர்களிடம் விடுகதை ஒன்று சொல்லும். பதில் தெரியாவிட்டால் அவர்களை கொன்று தின்றுவிடும். அந்த விடுகதை “காலையில் நான்கு கால்களாலும், மத்தியானம் இரண்டு கால்களாலும், இரவில் மூன்று கால்களாலும் நடக்கும் பிராணி எது” என்பது. அதற்கு ஈடிபஸ் பதில் சொல்கிறான். விடை மனிதன் குழந்தையாக நான்கு கால்களால் (கைகளை சேர்த்து) தவழ்கிறான். வாலிபனாக இரண்டு கால்களில் நடப்பான், வயோதிகத்தில் கைத்தடியையும் சேர்த்து 3 கால்களால் நடக்கிறான். இந்த சரியான பதிலால் ஸ்பிங்ஸ் மடிய, தெபெஸ் ஜனங்கள் மகிழ்ந்து ஈடிபஸ்ஸை அரசனாக்கி, ஜகோஸ்டாவை அவனுக்கு ராணியாக திருமணமும் செய்து வைக்கின்றனர். அவர்களுக்கு 4 குழந்தைகளும் பிறக்கின்றன. பல வருடங்கள் கடந்த பின் தெபெஸ் நகரத்தில் ‘ப்ளேக்’ (Plague) நோய் தாக்குகிறது, ஈடிபஸ் அதைப்பற்றி கேட்க அசரீரியை அணுக, அரசர் லையிஸ்ஸை கொன்றவனை கண்டுபிடித்து தண்டித்தால் ‘ப்ளேக்’ நோய் மறையும் என்று தெரிவிக்கிறது. இதற்காக இன்னொரு குருட்டு தீர்க்கதரிசி திரேசியாஸை அணுக அவளால் எல்லா உண்மைகளையும் ஈடிபஸ் தெரிந்து கொள்கிறான். ஜகோஸ்டாவுக்கும் ஈடிபஸ் தனது மகன் என்று தெரிய வர, அவள் தூக்கு போட்டுக் கொள்கிறாள். அவளுடைய உடையிலிருந்து எடுத்த “ப்ரூச்சால்” (Brooch) தன் கண்களை நோண்டி எடுத்து விட்டு ஈடிபஸ் ஊர் ஊராக திரிந்து இறக்கிறான்.
இந்த கதையில் அடிப்படையில் தான் ஃப்ராய்ட், ஒரு மனோவியாதிக்கு ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்று பெயரிட்டார்.
நாம் அனைவருக்கும் முதல் “காதல்” நமது தாயார் மீது தான். அன்னையின் அரவணைப்பு, ஸ்பரிசம் இவற்றை நாம் விரும்புகிறோம். இது ஒரு வகை பாலுணர்வு தான். சிறுவனுக்கு அம்மாவின் பூரண கவனம் கிடைக்க முடியாமல் தடுக்கும் வில்லன் யார்? அப்பா தான். அப்பா தான் எதிரி.
இந்த கருத்தை நாம் நடைமுறையில், பல தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு அப்பாவையும், ஆண் குழந்தைகளுக்கு அம்மாவை பிடித்திருப்பதை கண் கூடாக பார்க்கிறோம் பல விளம்பரங்கள் “செக்ஸ்” ஸை காட்டிதான் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்கின்றன. கவர்ச்சி காட்சிகள் இல்லாத சினிமா அதிக நாள் ஒடுவது கடினம். நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் “செக்ஸ்” கவர்ச்சியை தான் காண்கிறோம். ஃப்ராய்ட் சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது. இதனால் ஆண்களுக்கு விரைகள் எடுக்கப்பட்டு வீரியத்தை இழப்பபோமோ என்ற பயமும், பெண்களுக்கு ஆணுறுப்பு போல் நமக்கு இல்லையே என்ற கவலையும் ஏற்படும் என்கிறார் ஃப்ராய்ட். இதனால் பாலியல் செயல்பாட்டில் குறைகள் ஏற்படுகின்றன. புகைபிடிக்கும் பழக்கம், சூதாடுவது, லாகிரி வஸ்துக்களை உபயோகிப்பது போன்ற பழக்கங்கள், சுய இன்பத்திற்கு (Masturbation) மாற்று தான் என்றார் ஃப்ராய்ட்.
ஃபிராய்டின் கொள்கைகளை உலகின் பாதி மனோதத்துவ நிபுணர்கள், டாக்டர்கள் எதிர்க்கின்றனர். மீதி பாதி, ஃப்ராய்டின் கருத்துக்களை ஆமோதிக்கின்றனர். இப்போது பரவி வரும் பாலியல் குறைபாடுகளின் முக்கிய காரணம் மனோ ரீதியான கோளாறுகள் தான். உடல் ரீதியாக அல்ல. இந்த மன குறைபாடுகளை போக்க சிகிச்சைகள் தேவை. ஓரளவாவது மனோரீதியின் காரணங்களை நீங்கள் தெரிந்து கொண்டால், டாக்டரிடம் சிறு வயதிலிருந்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாலியல் அனுபவங்களை ஒளிக்காமல் கூற இயலும். அந்த நோக்கத்துடன் மேற்கண்ட விஷயங்கள் கூறப்பட்டன.
உங்களுக்கு சிறு வயதில் அசம்பாவிதம் நேர்ந்திருந்தால், அந்த சம்பவம், நீங்கள் அறியாமலேயே, உங்கள் மனதின் மூலையில் அடங்கி இருந்து, தீடிரென்று ஒரு பயமாகவோ வேறு விதமாகவோ வெளிவரும். இதை ஃப்ராய்ட் Repression என்றார்.
செக்ஸ் ஆசைகளை வெளிப்படாமல் அடக்கி வைக்கும் போது அது மன ஆரோக்கியத்தை பாதிக்கும். செக்ஸ் உணர்ச்சி தான் மனித வாழ்வின் ஆதார சுருதி. மனிதனின் செயல்கள் அனைத்திற்கும் பாலியல் உணர்வே காரணம் என்கிறார் ஃபிராய்ட்.

உணவும் உடலுறவும்

ஆண்மை பெருக்கும் பாலியல் உணர்வை தூண்டும் மருந்துகள் மட்டுமன்றி, சில வகை உணவுகளையும் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பாலியல் உணர்வை உண்டாக்கும் உணவுகள் யாவை?

என்பது பற்றிய சர்ச்சைகள் இன்றும் நிலவுகின்றன. பழைய காலத்தில், சோம்புக் செடி, துளசி, கேரட், பிஸ்தா பருப்புகள், டர்னிப், நதி நத்தைகள் போன்றவை காமத்தை தூண்டுவதாக கருதப்பட்டன.
பழங்கால கிரேக்கர்களின் காதல் தெய்வம் ‘ஆஃப்ராடிடி’ (Aphrodite). இந்த தேவதை சிட்டுக் குருவிகளை புனிதமாக கருதினாள். ஏனென்றால் அவற்றுக்கு அதிகமான காதல் உணர்வு இருக்கிறது என்ற கருத்தினால். அதனால் பல ‘காதல் மருந்துகளில்’ சிட்டுக்குருவி சேர்க்கப்பட்டது. நீங்கள் நம்மூர் சிட்டுக்குருவி லேகியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
கோதுமை, அரிசி, உளுத்தம் பருப்பு, இவை ஆயுர்வேதத்தின் படி, சுக்ல தாதுவின் தரத்தை உயர்த்தும். இவற்றால் தயாரிக்கப்படும் இனிப்புகள் பாலுணர்வை ஊக்குவிக்கும்.
பாதாம்:- பாதாம் போன்ற எல்லாவகை கொட்டைகளும், செக்ஸ் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். கிரேக்க இதிகாசத்தின் படி பில்லீஸ் (Phyllis) என்ற அழகான இளவரசி, கல்யாணத்திற்கு சித்தமாக தனது காதலன் ‘டெமோஃபோன்’ (Demophon) வரவுக்காக காத்திருந்தாள். அவன் வராமல் போகவே, அவள் தன்னை மாய்த்துக் கொண்டாள். பரிதாபப்பட்ட தேவர்கள் அவளை பாதாம் மரமாக மாற்றினார்கள். பச்சாத்தாபத்தோடு வந்த டெமோஃபோன் அந்த பாதாம் மரத்தை தழுவ, அது பூப்பூத்து கொட்டியது. அழியாத காதலுக்கு அடையாளமாக பாதாம் மரம் கருதப்படுகிறது. பாதாம் உள்ள விட்டமின் “இ” ஒரு செக்ஸ் விட்டமினாகும். இளமையை காக்கும். பாதாம் தவிர, பிஸ்தா, பாதாம், முந்திரி, வேர்க்கடலை பருப்புகளும் பாலுணர்வை மேம்படுத்தும்.
சாக்லேட்:- ஆண்மை மற்றும் பெண்மை பெருக்கிகளின் இராஜா என்றே சாக்லேட்டை சொல்லலாம். வேட்கையை பெருக்கும் பாலுறவு கிளர்ச்சியூட்டும்.
வாசனை திரவியங்கள்:- ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” (Premature ejaculetion) தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஞாபக மிருக்கட்டும் – இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையை குறைத்து விடும்.
காய்கறிகள்: பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ – (Love apple) என்பார்கள்.
வெங்காயமும் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.
பழங்கள்:- பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.
அஸ்பராகஸ் – (Asparagus) – இது நல்ல சுவையுள்ள தோட்டக் கீரை. 19ம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸ் தேசத்தில் ஒரு பழக்கம் இருந்தது. கல்யாணத்திற்கு முந்திய கடைசி உணவில், மணமகன் இந்த கீரையை சூடாக மூன்று பிரிவு உணவுகளிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால் சார்ந்த உணவுகள்:- பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.
மாமிசங்கள், மீன்:- மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.
வெற்றிலை:- உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.
சில டிப்ஸ்
தினந்தோறும் இரவில் 1 கப் பாலில், சிறுதுண்டுகளாக்கப்பட்ட 4 பேரிச்சம்பழம் போட்டு காய்ச்சவும். குங்குமப்பூ சேர்த்து பருகவும்.
பாதாம் பருப்பு, அக்ரோட் பருப்பு, பிஸ்தா, சாரைப்பருப்பு, பூனைக்காலி விதைப்பருப்பு (Mucuna Pruriens), ஆப்பிள் விதை, ஏலக்காய் கல்கண்டு, அத்திப்பழம் – இவை ஒவ்வொன்றில் 100 கிராம் எடுத்துக் கொள்ளவும். எல்லாவற்றை பொடித்து, அனைத்தையும் பசு நெய், குங்குமப்பூ சேர்த்து பிசையவும். ஒரு வாரம் வைத்திருந்து, பிறகு தினம் 10 கிராம் அளவில் காலையில் சாப்பிட்டு வரவும். பலமும், வீ£யமும் பெருகும்.
சில பாலியல் தகவல்கள்
1. நீரிழிவு, இதய நோய் போன்றவற்றால் ஆண்களை போலவே பெண்களும் பாதிக்கப்படலாம். பெண்ணுறுப்புகளுக்கு ரத்த ஒட்டம் குறைவாக பாய்வதால் (இந்த நோய்களால்) செக்ஸ் ஆசை குறையலாம்.
2. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்றுநோய் வரும் சந்தர்ப்பங்கள் குறைவு. காரணம் தாய்ப்பால் கொடுக்கையில் ளிஜ்ஹ்tஷீநீவீஸீ என்ற ஹார்மோன் சுரக்கும். உடலுறவின் போது பெண்ணின் மார்பகங்கள் ஆணால், கையாளப்படும் போதும் இந்த ஹார்மோன் சுரக்கிறது.
3. பெண்ணால் ஆணை ஆண்மையற்றவனாக்க முடியும். ஆணுறுப்பு விறைக்க உடல் ரீதியாக மட்டுமல்ல, மனோரீதியாகவும் ஊக்குவிக்க வேண்டும். உடலுறவில் நாட்டமில்லாத பெண், கேலி செய்யும் பெண் போன்றவர்களால் மனப்பாதிப்பு ஏற்பட்டு ஆண் தன் ஆண்மையை இழக்கிறான்.
4. கணவன், மனைவியிடம் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பாலியலில், உடலுறவில் ஒருவருக்கொருவர் திருப்திபடுத்த முடிந்து சந்தோஷமான உடலுறவு அடையும் தம்பதிகளுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடுகளாலும் சண்டை வராது.
5. பாலியல் உறவுகள் சிறப்படைய உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். அதே போல் நிறைவு தரும் உடலுறவு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தவறாமல் நடப்பது, உடற்பயிற்சி செய்வது இவை அவசியம்.
6. காதல் செய்ய படுக்கை அறை ஏற்றதாகவும், அது எப்படி அமைய வேண்டும் என்று இந்த நூலில் சொன்னோம். மாறுதலுக்கு வீட்டில் சமையல் மேடை போன்ற இடங்களில் கூட காதல் செய்யலாம்.
7. சிலருக்கு விந்து வெளியாகும் போது விரைகளின் கீழே வலி ஏற்படலாம். இது Prostatis ஆக இருக்கலாம். சுக்கில சுரப்பி (Prostate) வீக்கம் காரணமாகலாம். டாக்டரை அணுகவும்.
8. காதல் செய்யும் போது பலரசாயன மாற்றங்கள் உடலுக்குள் நிகழும். ஏன், தொடுதல், அணைத்தல் போன்றவற்றாலே டோபோமைன் அளவுகள் ஏறும். ஆண் ஹார்மோனும் சுரக்கும். இவை உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.
9. உடலுறவினால் ரத்த சுழற்சி சீராகி, மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.
10. சாக்லேட் பெண்ணின் காதல் ஆசையை தூண்டும் காரணம் ரசாயனம் தான். ‘செரோடோனின்’ லெவல்கள் அதிகரிக்கும் சாக்லேட்டில் Phenylethylamine (Pea) என்ற கவர்ச்சியை தூண்டும் பொருள் இருக்கிறது.
11. கீழ் வயிற்று தசைகளை உறுதியாக்க செய்யும் கெகெல் பயிற்சி (Kegal exercise) செய்தால் ஜனன உறுப்புக்களுக்கு அதிக ரத்தம் பாயும்.
12. ஒரு வாரத்தில் ஒன்று (அ) இரண்டு தடவை உடலுறவினால் உடலின் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும். உடலின் தசை நார்கள் பலமடையும். மனச்சோர்வுக்கு அருமருந்து செக்ஸ! பெண்களுக்கும் இது பொருந்தும்.
13. உடலுறவு ஆஸ்த்மாவை கட்டுப்படுத்தும்.
14. மகிழ்ச்சியான உடலுறவில் திளைக்கும் பெண்களுக்கு அழகு கூடுகிறது.
15. முடி வளர்வது, சந்திர பிம்பம் போல் வதனம், மேனி எழில் கூடும்.
16. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகிறார்கள். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.
17. உடலுறவினால் ரத்த சுழற்சி சீராகி, மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.

மன்மத கலையின் சரித்திரம்

“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள”
பொருள்:- கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி அநுபவிக்கும் ஐம்புல இன்பங்களும் வளையல் அணிந்த இப்பெண்ணின் இடத்தே கொள்ளக் கிடக்கின்றன!

- திருக்குறள்

வையகத்தில் மனிதருக்கு மிகுந்த இன்பத்தை கொடுப்பதில் தலையானது உடலுறவு சுகம். மனிதன் தோன்றியதிலிருந்து இன்று வரை கல்வி சுகத்தை மேலும் மேலும் அனுபவிக்க பாலியல் ஊக்கிகளை தேடிக்கொண்டேயிருக்கிறான். சிருஷ்டியின் லட்சியம் இனப்பெருக்கம். அதனால் தான் இனப்பெருக்கத்திற்கு அத்தியாவசியமான உடலுறவை இவ்வளவு இன்பமானதாக இறைவன் வைத்திருக்கிறார் போதும்!
நமது தேசத்தில், காதல் தெய்வமாக கருதப்படுவது மன்மதன். பழைய கிரேக்க தேசத்தில் அஃப்ராடிடி (Aphrodite) பழங்கால ரோமர்களுக்கு வீனஸ் (Venus).
உலகின் மிக பழமையான ‘செக்ஸ்’ நூலாக, நமது தேசத்தில் கி.பி. 3ம் ஆண்டில் எழுதப்பட்ட வதஸ்யானரின் “காமசூத்ரா” வை சொல்லலாம். ஆயிரம் ஆண்டுகளாக நிலை கொண்டு நிற்கும் “காமசூத்ரா”, பகவத் கீதைக்கு அடுத்தபடியாக, வெளிநாட்டில் அதிகமாக விற்கும் இந்திய நூல் ஆகும். 12ம் நூற்றாண்டில் ‘கொக்கேகர்’ எழுதிய ‘கொக்கேகம்’ வெளிவந்த போது, வத்ஸ்யானரின் காலம் போலில்லாமல், ‘செக்ஸ்’ ஒரு ரகசிய சமாசாரமாக மாறிவிட்டது. எட்டிலிருந்து 14 நூற்றாண்டுக்குள், கல்யாண மாலாவின் ‘ அனங்கா ரங்கா’ வெளிவந்தது, இந்த மன்மதகலைநூல், இதற்கு முன் வந்த ‘காமசூத்ரா’, ரதிரகசியா, ‘ஸ்மரப்ரதீபா’, ‘ரதிமஞ்சரி’ மற்றும் ‘அபிலாஷித சிந்தாமணி’ போன்ற நூல்களை தழுவி எழுதப்பட்டது.
இந்த காலகட்டத்தில் ‘செக்ஸ்’ ஒரு ரகசிய விஷயமாகவும், கல்யாணமாகும் முன் ஆண் – பெண் உறவு மிகக்குறைவாகவும் இருந்து வந்தது. பால்ய விவாஹங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மனைவியை தவிர வேறு பெண்களை அனுபவிக்கும் உரிமை பணம் படைத்தவர்கள், அரசர்கள், விலைமகள்கள் இவர்களுக்கே இருந்தது. 15ம் நூற்றாண்டில் மாண்டுவின் கில்ஜி சுல்தான் தனது அந்தபுரத்திற்கென்றே ஒரு நகரத்தை உருவாக்கி, அதில் தனது சுகத்திற்காக 15,000 பெண்களை வைத்திருந்தாக சொல்லப்படுகிறது.
பாநுதத்தரின் “ரசமஞ்சரி” விரசமில்லாமல் எழுதப்பட்ட நூல், இந்தியாவின் பாலியல் உணர்வுகளை பறைசாற்றும் சிற்பங்களை கஜுராஹோ, கொனராக், இந்த இடங்களில் காணலாம். பலர், காஜுராஹோவில் உள்ள ஆண் பெண் “பொசிஷன்களை” செய்து பார்க்க ஆணுறுப்பு 2 அடி நீளமாவது இருக்க வேண்டும் என்று கிண்டல் செய்தாலும், கஜுராஹோ சிற்பங்கள் பிரமிப்பூட்டும் காதல் சிற்பங்கள்

இச்சையின்மை

பல சமயங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இல்லாமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனும் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால் செக்ஸ் ஆர்வமும் குறையும். இதர காரணங்கள் – வயது, கர்ப்பமாதல், சில மருந்துகள், டிப்ரெஷன் மற்றும் பரபரப்பு (anxiety).

செக்ஸ் ஆசை மூளையில் உதயமாகிறது. மூளையின் கட்டளைப்படி, ஆண் உறுப்பு இயங்கும். சில மருத்துவ நிபுணர்கள் சொல்வது நைட்ரிக் ஆக்ஸைட் என்பது ஒரு மூளைக்கு செய்தி அனுப்பும் நரம்பு சம்மந்தப்பட்ட ரசாயனம். இதன் குறைபாடு ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைய காரணம்.
அறிகுறிகள்:

• செக்ஸில் ஆர்வம் இல்லாமை
• உடலுறவு சந்தர்ப்பங்களை தவிர்ப்பது.
• இரு உடலுறவுக்கு நடுவே நிறைய நாட்கள் ‘இடைவெளி’ விடுவது.
• பாலுணர்வு கனவுகள் குறைதல்
• சுய இன்பம் பெறுவதிலும் நாட்டம் இல்லாமல் போதல்
இதற்கான ஆயுர்வேத மூலிகைகள், அஸ்வகந்தா, பூனைக்காலி, கோக்சூர் (நெரிஞ்சி) சலேப் (Orchis Latifolia), வெள்ளை முஸ்லி, ஆமணக்கு போன்றவை இவை பயனளிக்கும் மூலிகைகள்.

விந்து முந்துதல்

உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைய ஆணுக்கு குறைந்த நேரம் போதும். பெண்களுக்கு சிறிது அதிக நேரம் தேவை. குறைபாடில்லாத ஆணும், பெண்ணும் சேரும் போது, பழக, பழக அவர்கள் உச்சக்கட்டத்தை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் “அட்ஜஸ்ட்” ஆகிவிடும். ஆனால் குறைபாடு இருந்து மிகக் குறைந்த நேரத்தில், உடனேயே விந்து வெளியேறிவிட்டால் ஏற்படும் பிரச்சனை பலவிளைவுகளை உண்டாக்கும். ஆணுக்கு தாழ்வு மனப்பான்மை, காதல் செய்வதற்கு விருப்பமின்றி போதல், பரபரப்பு (பேராவல் – Anxiety), டிப்ரெஷன் ஏற்படும். பெண்களுக்கும் கணவனின் மீது வெறுப்பும், ஏன், உடலுறவே வேண்டாமென்ற விரக்தி ஏற்பட்டு விடும்.

கலவியின் போது 6.5 நிமிடம் வரை தாக்கு பிடித்தல் சராசரி அளவு – அதுவும் 18 லிருந்து 30 வயது உள்ள ஆண்களுக்கு – என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 2.5 நிமிடத்திற்கு குறைந்தால் ‘விந்து முந்துதல்’ பிரச்சனை என்கின்றனர் இந்த நிபுணர்கள். இது ஆணுக்கு ஆண் வேறுபடும்.
காரணங்கள்
1. மனோரீதியான குறைபாடுகள் – பரபரப்பு, ஸ்ட்ரெஸ், டென்ஷனான வாழ்க்கை முறை, எதிலும் அவசரப்படும் குணம். அளவுக்கதிக காதல் உணர்வு
2. உடல் ரீதியாக, ஆணுறுப்பின் தோல் மிகவும் சென்சிடிவாக (Sensitive) (தொட்டால் சுருங்கி செடி போல், அதிக உணர்வு) இருப்பது. பிறவிக் கோளாறுகள்
3. நமது உடலில் பரவலாக காணப்படும் ‘செரோடோனின்’ (Serotonin), என்ற நரம்புக்கு ‘செய்தி’ அனுப்பும் பொருள் குறைந்தால் விந்து முந்துதல் ஏற்படலாம். சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்கின்றன.
4. அதீத “செக்ஸ்” ஆசை
ஆயுர்வேத தீர்வுகள்
விந்து முந்துதலுக்கு அற்புதமான மருந்துகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. பூனைக்காலி, கைகேசி, எட்டி, வெங்காயம், அதிமதுரம், ஜாதிக்காய், அக்கிரகாரம் (Anacycles Pyrethrum) போன்றவைகள் பொதுவாக நல்ல பலனளிக்கும் மூலிகைகள். ஜாதிக்காயை அரைத்து பாலுடன் கலந்து 3-5 கிராம் தினம் 2 தடவை எடுத்துக் கொள்ளலாம். கோக்சூரா (Tribulus Terrestris – நெருஞ்சி) மூலிகையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மருந்து விந்து முந்துதலை குணப்படுத்துவதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மூலிகை பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. உடலுறவின் போது மூச்சை நன்றாக இழுத்து விடுவது டென்ஷன், பரபரப்பால் ஏற்படும் விந்து முந்துதலை குறைக்கலாம். வேறு விஷயங்களை பற்றி நினைப்பது, எண்களை தலைகீழாக சொல்லிக் கொள்வது, விந்து வெளியேறும் சமயத்திற்கு முன், ஆண் குறியின் அடிபாகத்தை “அமுக்குவது” போன்றவைகளையும் செய்யலாம்.
முழுமையான சிகிச்சைக்கு ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.

ஆயுர்வேத மூலிகைகள்

ஆண்மைக் குறைபாடுகள், பெண்களின் குறைபாடுகள், குழந்தையின்மை இவற்றுக்கான பலனளிக்கும் அற்புத சிகிச்சைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. (பார்க்க – வாஜீகர்ணம்). பக்க விளைவில்லாமல் இயற்கையோடு ஒன்றிய சிகிச்சையை நீங்கள் பெறலாம். ஆயுர்வேதம் பயன்படுத்தும் சில மூலிகைகள்.

1. விந்துவின் எண்ணிக்கையையும், தரத்தையும் உயர்த்த:- இந்தப்பிரிவில் உள்ள மூலிகைகள் விந்தணுக்கள் இறப்பதை குறைத்து, விந்து விருத்தியாக உதவுகின்றன. விந்தணுக்களின் நடமாட்டத்தை அதிகரிக்கின்றன.
உதாரணம்:- வெள்ளை முஸ்லி (White Musli).

2. விறைப்புத்தன்மையை உண்டாக்க:- அஸ்வகந்தா, முஸ்லி போன்றவை

3. விந்து முந்துதல்:- இந்த மூலிகைகள் விந்து சீக்கிரம் வெளியேறுவதை தடுத்து, உடலுறவின் இன்பத்தை நீடிக்கின்றன. ஜாதிக்காய், அக்கிரகாரம் (AnacyclusPyrethrum) போன்ற மூலிகைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

4. அதீத செக்ஸ் ஆசையை கட்டுப்படுத்த:- கர்ப்பூரம், சர்பகந்தா போன்றவை நரம்புகளை சமனப்படுத்தும். ஆசையை குறைக்கும்.

ஆயுர்வேதம் பயன்படுத்தும் மூலிகைகள்:

1. அமுக்கிராக்கிழங்கு எனும் அஸ்வகந்தா:- பழங்காலத்திலிருந்தே அஸ்வகந்தா (Withania Somnifera) செக்ஸ் குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வத்ஸ்யானரின் “காம சூத்திரத்தில்” குறிப்பிட்ட மூலிகை. அஸ்வகந்தா இருவழியில் செயல்படுகிறது. மனதை அமைதியாக, சாந்தமாக வைக்க உதவுகிறது. பாலுணர்வு ஆரோக்கியமாக இருக்க உடலுக்கு வலிமை ஊட்டுகிறது. இதில் உள்ள நைட்ரிக் ஆக்சைட், ரத்த நாளங்களை விரியச் செய்து அதிக ரத்தம் பாய உதவுகிறது. ஆயுர்வேத சிறப்பு சிகிச்சைகளான “ரசாயனம்”, “வாஜீகர்ணம்” இவற்றில், அஸ்வகந்தா உடல், மன ஆரோக்கியத்தை அதிகரிக்க உபயோகமாகிறது. தவிர உடலின் நோய் தடுப்பு சக்தியையும் விருத்தி செய்கிறது. செக்ஸ் குறைபாடுகளுக்கு தரப்படும் ஆயுர்வேத மருந்துகளில் அஸ்வகந்தா ஒரு முக்கிய மூலிகை. ஆண் ஹார்மோனான “டெஸ்டோஸ்டிரோன்”போன்ற செயல்பாடுகளுடையது. சுற்றுப்புற சூழலின் மாசுகளிலிருந்து பாதுகாத்து இளமை தொடர உதவுகிறது. அஸ்வகந்தா, இந்திய “கின்ஸெங்” (Ginseng) எனப்படுகிறது.
“கொஞ்சந் துவர்ப்பான் கொடியகயம் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்ப தப்பு-விஞ்சி
முசுவுறு தோடமும்போ மோகம்அன லுண்டாம்
அசுவகந் திககென் றறி”.

என்கிறது ஒரு சித்தர்பாடல்

அமுக்கிராக் கிழங்குப் பொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்புத் தளர்ச்சி ஆகிய இவைகள் நீங்கும்; உடல் வன்மை பெறும்; அழகு தரும்.

2. பூனைக்காலி – (Mucuna Pruriens-காபிக்காட்சு) விந்துவின் தரம், உடலுறவுக்கான வலிமை, உடலுறவில் இச்சை இவையெல்லாம் அதிகரிக்க செய்யும். நரம்புக்கோளாறுகளை குறைக்கும். ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களின் பாலியல் பிரச்சனைகளையும் தீர்க்கும் மூலிகை. ஆண்களின் விறைப்புத்தன்மை இழப்பை மீட்டுத்தரும்.

3. சதவாரி – தண்ணீர்விட்டான் கிழங்கு (Asparagus Racemosus) வடமொழியில் சதவாரி என்றால் ’100 கணவர்கள் உடையவள்’ என்று பொருள். பெண்களுக்கேற்ற ஸ்பெஷல் ‘டானிக்’ மலட்டுத்தன்மை மட்டுப்படித்தி உடலுறவுக்கேற்ற ஆற்றலை தரும். பெண்களுக்கே உரிய மாதவிடாய் கோளாறுகளுக்கு அருமருந்து. பூப்பெய்திய பருவத்திலிருந்து மெனோபாஸ் வரை உபயோகிக்கலாம். ரத்த விருத்தியை உண்டாக்கும். சாதாரணமாக பூனை காலியுடன் சேர்ந்து கொடுக்க, விந்துவின் தரம் உயரும்.

4. கற்றாழை – (Aloevera) தமிழில் கற்றாழையின் இன்னொரு பெயர் ‘குமரி’. குமரி போன்ற இளமையை கொடுக்கும். தினமும் ஒரு மேஜைக்கரண்டி கற்றாழை சாறு குடித்து வந்தால் இளமையாக இருக்கலாம்.

5. நெருஞ்சில் – (கோக்சுரா – Tribulus Terrestris) இது உடலுறவுக்கு ஆவலை அதிகரிக்கும். ஆண் ஹார்மோனை அதிகரிப்பதால், சீனா, இந்திய வைத்திய முறைகளில் முக்கிய மருந்து. பெண்களில் ப்ரோலாக்டின் (Prolactin) லெவலை குறைக்கிறது. ப்ரோலேக்டின் அளவு அதிகமானால் பெண்களின் உடலுறவு ஆசை குறையும். பெண்களின் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை மருந்து.

6. அதிமதுரம் – (Licorice root) மூலிகை கலவைகளில் சரிசமநிலையை உண்டாக்கும். அதிமதுரம் அட்ரீனலின் சுரப்பியை ஊக்குவிக்கும். பாலியல் செயல்பாடுகளுக்கு அட்ரீனலின் ஒரு முக்கியமான சுரப்பி. நேரடியாக செக்ஸ் உணர்வுகளை ‘கன்ட்ரோல்’ செய்கிறது. அட்ரீனலின் குறைந்தால் ஆசையும் குறையும். சக்தியில்லாமல் போகும். உடலுறவு ஆர்வமும் குறையும்.

7. சிலாஜித் – (Asphalt) இமயமலை, விந்திய மலை, நேபால் இவற்றில் பாறையிலிருந்து வெளிவரும் தார் போன்ற ஒரு பொருள். மண்ணில் மக்கிப்போன தாவரங்களின் மூலம் கூட சிலாஜித் உண்டாகியிருக்கலாம். நாலு வகை சிலாஜித் குறிப்பிடப்படுகிறது. தங்க சிலாஜித் (சிகப்பு நிறம்), வெள்ளி சிலாஜித் (வெள்ளை நிறம்), செம்பு சிலாஜித் (நீல நிறம்), இரும்பு சிலாஜித் (பழுப்பு நிறம்) அதிமாக கிடைப்பது இரும்பு சிலாஜித்தான். மற்றவை அபூர்வம். “குணம் காணும் வியாதிகளில், சிலாஜித் குணப்படுத்த முடியாத வியாதி எதுவுமில்லை” என்கிறார் சரகர். செக்ஸ் குறைபாடுகளில் சிலாஜித், அஸ்வகந்தாவுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது. பெண்களின் மலட்டுத்தன்மைக்கு சிலாஜித் சிறந்த மருந்து.

8. வெள்ளை முஸ்லி – (சஃபேத் முஸ்லி, Chlorophytum Arundinaceum / Borivilianum) – நூற்றுக்கணக்கான ஆயுர்வேத, யுனானி, அலோபதி, ஹோமியோபதி மருந்துகளில் சேர்க்கப்படும் மூலிகை வெள்ளை முஸ்லி. ஆயுர்வேத “ச்யவன பிராசம்” – இளமையை தக்க வைக்கும் மருந்தில் வெண் முஸ்லி ஒரு முக்கிய பகுதிப் பொருள். பிரபலமான “வயாகரா” வுக்கு மாற்று மருந்தாக முஸ்லி சொல்லப்படுகிறது. ஆண்களின் குறைபாடுகளில் முக்கியமான பிறவி உறுப்பு, விறைப்பு இல்லாமல் போவதை குணப்படுத்தும்.

9. சோப்சினி – (Chopachini – Smilax China) – இந்த மூலிகையை சைனா தேசத்தில் அதிகம் பயிரிடுவதால் இந்த பெயர் வந்தது. இது “சுய இன்பம்” காணும் பழக்கத்தை குறைக்க உதவும்.

10. திப்பிலி – (Piper longum) – இது ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை பலப்படுத்தும். சரகர், நீடித்த விறைப்புத் தன்மைக்கு சொல்லும் திப்பிலி மருந்து – 30 திப்பிலியின் உலர்ந்த பழங்களை பொடித்துக் கொள்ளவும். இதை 45 மி.லி. பசு நெய், 45 மி.லி. எள் எண்ணை கலவையில் வறுத்துக் கொள்ளவும். இதை பாத்திரத்திலிருந்து எடுக்க வேண்டாம். அதே பாத்திரத்தில் 45 கிராம் சர்க்கரை, 45 கிராம் தேனும் சேர்க்கவும். இதே பாத்திரத்தில், நேரடியாக, ஒரு ஆரோக்கியமான பசுவிலிருந்து பாலை கறந்து கொள்ளவும். இதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கவும். பிறகு பசிக்கும் போது பிரத்யேக அரிசி, நெய் கலந்த சோறை உட்கொள்ளலாம்.

11. அக்கர காரம் – (Anacyclus Pyrethrum) – நரம்புகளை வலிவுபடுத்துவதால்,நரம்பு பலவீனத்தால் ஏற்படும் ஆண்மைக்குறைவு, தவிர விந்து முந்துதலுக்கு நல்ல மருந்து. இந்த மூலிகை அளவோடு உட்கொள்ள பயன் தரும். அதிகமானால் மரத்துப்போதல், எச்சில் ஒழுகுதல் போன்றவை உண்டாகலாம்.

12. சாலப் மிஸ்ரி – (Orchis Mascula) – இது இழந்த ஆரோக்கியத்தை, வீரியத்தை மீட்டுத் தரும். காதல் உணர்வை தூண்டும் மூலிகை.


13. பெரு நெரிஞ்சி - (Pendalium Murex) – இது ஆண்மைக்குறைவு, இரவில் ஸ்கலிதம் வெளியேறுதல் இவற்றை கட்டுப்படுத்தும். சிறந்த பாலுணர்வு ஊக்கி.

14. சமுத்திரபச்சை - (Argyreia Speciosa) – நரம்புகளின் நோயை குணமாக்கி வலிவூட்டுகிறது.
15. குங்குமப்பூ - (Saffron – Crocus Sativus) நறுமணமான, விலையுயர்ந்த மூலிகை. பாலியல் உணர்வுகளை தூண்டும்.

16. நிலதுத்தி - (Sidacordifolia) இதன் இலைகளை எந்த மாதிரி உட்கொண்டாலும் சரி, உடல் உஷ்ணத்தால் உண்டாகும் வியாதிகளை நிலதுத்தி எதிர்க்கும். இதன் பூக்கள் ஆண்மை சக்தியை அதிகரிக்கும். செடியின் சாறு இரவில் தன்னிச்சையாக வெளியேறும் ஸ்கலிதம் போன்ற குறைகளை குறைக்கும். நிலதுத்தி மனதையும் அமைதிப்படுத்துகிறது.

17. பூரணி - (Bombax Malabarium / Salmalia Malabarica) ஆண்மைக்குறைபாட்டுக்கு கொடுக்கப்படும் மருந்து. இந்த தாவரத்தின் விதைகள் ஆண்மைபெருக்கி. இலைகள் குளிர்ச்சி தரும், மரப்பட்டை நல்ல ‘டானிக்.’ வேர்கள் ஊக்குவிக்கும்.

18. எட்டி - (Strychnos nux vomica விஷம் நீக்கப்பட்டது) ‘செப்டிக்’ ஆவதை எதிர்க்கும். பலவீனத்தை போக்கும் டானிக். ஊக்குவிக்கும். நச்சுப் பொருட்களை முற்றிலும் நீக்கப்பட்டு, மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

19. ஜாதிக்காய், ஜாதிபத்திரி - (Myriastica fragrans) விந்து முந்துவதை தடுக்கும் மருந்தாக ஜாதிக்காய் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. விழுதாக்கி பாலுடன் சேர்த்து குடிக்கப்படுகிறது. ஆனால் ஆயுர்வேத வைத்தியரின் கண்காணிப்பில் ஜாதிக்காயை பயன்படுத்த வேண்டும். அதிக அளவு மயக்கம், வாந்தி, திக்பிரம்மை, முதலியவற்றை உண்டாக்கும்.

20. காட்டுக்கஸ்தூரி - (Hibiscus ablemoschus) காதலுணர்வை தூண்டும். வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது.

சரகரும் செக்சும்

சரகர் ஒரு மாபெரும் ஆயுர்வேத ஆசான். அவருடைய நூல் “சரக சம்ஹிதை” தான் ஆயுர்வேதத்தின் வேதம். பாலியல் உணர்வு பற்றிய அவரின் கருத்துக்கள் இன்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை. அவருடைய ஸம்ஹிதையில் இரண்டு அத்யாயங்களில் “ரசாயனா” (மீண்டும் சக்தியளித்து இளமையாக்குதல்) மற்றும் “வாஜீ கர்ணா” (வீரியமூட்டும் முறை) சிகிச்சை முறைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த காலத்திய ஐ.சி.யு. மாதிரி, இந்த சிகிச்சைகளுக்கு, “குடிப்ரவேஸிதா” என்ற முறையில் நோயாளி தனியே வைக்கப்பட்டு, பலவித மூலிகைகள், அயச்சத்து இவற்றால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவார். இன்னொரு முறையில் – “வாதாதபிகா” – திறந்த வெளியில் நோயாளி வைக்கப்பட்டு சிகிச்சை செய்யப்படுவார். கடுக்காய், நெல்லிக்கனி இவை வெகுவாக பயன்படுத்தப்பட்டன. 100 வருடங்கள் வரை மனிதன் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த காலத்திலேயே இத்தகைய சிகிச்சைகள் பிரபலமாக இருந்தன. காரணம் மனிதனின் நீண்ட காலம் வாழ வேண்டுமென்ற அவா தான்! பாலியலை பற்றி சரகர் எழுதும் போது வெளிப்படையாக, மறைவின்றி விவரிக்கிறார்! வாஜீகர்ணத்தைப் பற்றியும் சரகரின் சில கருத்துக்களையும், தனி அத்யாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரது மற்றும் சில கருத்துகள்
• நல்ல ஆகிருதியுடன் உடல் பலமாக காணப்படுகிறவர்கள், பாலியலில் வலிமையாக இருப்பார்கள் என்று கூற முடியாது. ஒல்லியானவர்கள் பாலியலில் வலிமையாக இருப்பதும் சாத்யம்.
• சிலர் சிட்டுக்குருவி போல் அடிக்கடி உறவு கொள்ளுவார்கள். சிலர் யானையை போல் அடிக்கடி இல்லாமல், நீண்ட நாட்களுக்கு ஒரு முறை, நீடித்த உடலுறவு கொள்ளுவார்கள்.
• ஆண்மைபெருக்கி, பாலியலை தூண்டும் மருந்துகள், உணவுகளை உபயோகிப்பது தேவையானது.
• காதல் செய்ய குளிர்காலம் ஏற்றது. வெய்யில் காலமும், மழைக்காலமும் மனிதரில் பலத்தை குறைப்பதால் இருவாரங்களுக்கு ஒரு முறை போதுமானது.
• கீழ்க்கண்டவற்றால் பெண்களின் ஆசையை தூண்டலாம்
ஸ்பரிசம் (தொடுதல்):- இதற்கு எண்ணை குளியல், மசாஜ் இவற்றை (உடலை தொடும்போது குளிர்ச்சியாக இருக்க) செய்து கொள்ளவும். உபயோகிக்க வேண்டிய எண்ணைகள் நல்லெண்ணை, பாதாம் எண்ணை, தேங்காய் எண்ணை, கடுகெண்ணை. தொடு உணர்ச்சியில் வாயு அதிகமாக இருக்கும். தொடு உணர்ச்சிக்கு தோல் இருப்பிடமாகும். உடலுக்கு எண்ணை தேய்த்து குளிப்பதால் தோல் மிருதுவாகிறது.
• பார்வை: அழகான பொருட்கள், இயற்கை அழகு, மலர்கள் இவற்றை காண பாலுணர்ச்சி ஏற்படும்.
• வாசனை:- துர்நாற்றம் உடலுறவுக்கு எதிரி. வாசனை திரவயங்களை பயன்படுத்த வேண்டும்.
• நீராடுவது:- நீராடுவதால் உடல் தூய்மை, ஆண்மை, நீண்ட ஆயுள் இவை ஏற்படுகின்றன. களைப்பு, அழுக்கு, வியர்வை இவை நீங்குகின்றன, உடல் வலிமை, ஓஜஸ் (ஒளி) இவை வளர்கின்றன.
• நறுமணம் வீசும் பொருட்களை அணிவது:- நீராடிய பின் குங்குமப்பூ போன்ற மணம் வீசும் பொருட்களுடன் சேர்த்து அரைத்த சந்தனம் பூசிக் கொள்வதாலும், மலர் மாலை அணிவதாலும், ஆண்மை வளர்கிறது. அதாவது பெண்களிடம் ஆசையைத் தூண்டிவிடுகிறது. ஆயுள் வளர்கிறது. அழகான தோற்றம் ஏற்படுகின்றது. உடலுக்கு புஷ்டியையும், வளர்ச்சியையும் தருகின்றது. மனம் தெளிவடைகிறது. வறுமை அகலுகிறது.
• சுவை:- சில உணவுகள் குறிப்பாக இனிப்புகள் பாலுணர்வை தூண்டும் எந்த உணவு மனைவி அல்லது கணவனுக்கு பிடிக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். சரகர் பாலும், நெய்யும் உண்டு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடும் மனிதர்கள், இனிமையாக வாழ்வார்கள் என்கிறார். (சரகர் காலத்தில் கொலஸ்ட்ராலை பற்றிய கவலைகள் இல்லை!)
• சப்தம்: மென்மையான இசை, மந்திரங்கள், வளையோசை, கொலுசுகளின் நாதம், தென்றல், பறைவைகளின் குரல் இவைகள் இரு பாலருக்கும் உணர்வை தூண்டும்.
• வாஜீகர்ணத்தில் சொல்லியபடி, சிறந்த பாலுணர்வு ஊக்கி, ஆசை நிறைந்த பெண்தான் என்கிறார் சரகர்.

அதிக செக்ஸ் ஆபத்தா

செக்ஸ் எந்த அளவுக்கு வைத்துக் கொள்ளலாம்? அளவுக்கு அதிகமாக செக்ஸ் வைத்துக் கொள்வது ஆரோக்கிய கேடான செயலா? என்கிற மனசில் எழுகிற கேள்விக்கு யாரிடம் விடை கேட்டுப் பெறுவது என்று சிலர் குழம்பிப் போய் கிடக்கலாம். செக்ஸில் எத்தனைத் தடவை ஈடுபடலாம் என்பது அவரவரது உடம்பு மற்றும் மனசு தொடர்பு உடையதாகும்.

சிலர் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை குளிப்பார்கள். சிலர் ஒரு நாளையிலேயே இரண்டு தடவைகள் குளிப்பார்கள். அது போலத் தான் செக்ஸம். எத்தனை தடவைகள் மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதற்கெல்லாம் தீர்க்கமான எந்த வரைமுறைகளும் தேவையில்லை. ஆரோக்கியத்துக்கு எந்த பாதிப்பும் வராத வரையில் எந்த கணக்கும் வேண்டாம்.

உடலுறவும், இருதய நோய்களும்

ரத்தக் குழாய் அடைப்பினால் இருதயம் பாதிக்கப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சையில்லாத “அஞ்சியோ – ப்ளாஸ்டி” செய்து கொண்டவர்கள், உடலுறவு கொள்ளும் முன் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவை

• நீங்கள் களைப்பாக இருக்கும் போதும், அதிக அளவு ‘விருந்து’ சாப்பாட்டிற்கு பிறகும் உடலுறவு வேண்டாம். ‘டென்ஷனாக’ இருக்கும் போதும் வேண்டாம்
• அணைப்பது, முத்தமிடுவது போன்றவைகள் கூட திருப்தியளிக்கும். உச்சக்கட்டத்தை அடைந்தால் தான் இன்பம் என்பதில்லை.
• இரண்டு மாடிப்படிகள் ஏறின பின் உங்களுக்கு ‘பெருமூச்சு’ அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இவை ஏற்படாமலிருந்தால் நீங்கள் உடலுறவு கொள்ளலாம்.
• முன் தொடுதல் (Foreplay) அவசியம். இதனால் உச்சக்கட்டத்திற்கு, இருதயம் மெதுவாக தயாராகும். எனவே முன்தொடுதலில் அதிக நேரம் செலவிடவும்.
• உடலுறவுக்கான சரியான நேரம் நீங்கள் களைப்பில்லாமல், டென்ஷன் இல்லாமல் இருக்கும் போது. விடியற்காலை ஒரு வேளை உங்களுக்கு உறவு கொள்ள சரியான நேரமாக இருக்கலாம்.
• உடலுறவின் நிலைகள் (Positions) – எது உங்களுக்கு, மார்பு அழுத்தப்படாமல், சௌகரியமாக இருக்கிறதோ, அந்த நிலையை மேற்கொள்ளவும்.
• வீரியமுள்ள இளைஞனை போல் செயல்படாதீர்கள். உங்களின் துணைவரை அதிக பங்கு ஏற்க வைத்து, நீங்கள் சாந்தமாக இருக்க வேண்டும்.
• பாலுணர்வு ஊக்கிகளை (வயாகாரா போன்ற மருந்துகள்) எடுத்துக் கொள்ளும் முன்பு கண்டிப்பாக உங்கள் டாக்டரை கேட்க வேண்டும்.
கீழ்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுகவும்
• உடலுறவின் போது அல்லது பிறகு, மார்வலி ஏற்பட்டால்
• உடலுறவுக்கு பின் பெருமூச்சு ஏற்பட்டு, 15 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால்.
• வேகத்தோடு ஏற்படும் இதயத்துடிப்பும் நாடித்துடிப்பும் உண்டானால்,
• உடலுறவுக்கு பின் தூக்கம் வராமல் போனால்
• உடலுறவுக்கு மறுநாள் அதீத களைப்பாக இருந்தால்

மனிதனுக்கு இது தேவை

செக்ஸ் என்பதை பல பேர் ஒரு புனிதமாக… அல்லது ஒரு புதிராக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பசியைப் போல செக்ஸ§ம் ஓர் இயல்பான நடவடிக்கை என்று கருதுவது இல்லை. எனவே தான் அப்படி நினைக்கிறார்கள்.
மனிதர்களுக்கு இயற்கையானது பசி, தூக்கம், செக்ஸ் இன்பம் ஆகிய மூன்று அடிப்படையானத் தேவைகளைக் கொடுத்திருக்கிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ பசி, தூக்கம் இரண்டும் அவசியம் தான். இந்த அடிப்படைத் தேவைகளில் செக்ஸ் நடவடிக்கை என்பது அத்தியாவசியமானதா? ஆம்! அத்தியாவசியம் தான். மனித வளம் பெருக வேண்டிய தன் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் இயற்கையானது செக்ஸ் தேவையை கொடுத்துள்ளது. செக்ஸ் உணர்ச்சி இல்லையெனில் படைப்பு எங்ஙனம் நிகழும்? இனப்பெருக்கமும் எவ்வாறு சாத்தியம்? மனித உடம்பில் உறுப்புகள் எல்லாம் 18 முதல் 20 வயதுக்குள் வளர்ச்சி பெற்று விடும்.
ஆண்களுக்கு தங்கள் ஆணுறுப்புப் பற்றிய சந்தேகம் நிறைய உள்ளது. ஆணுறுப்பு விறைப்புத் தன்மை அடைய எந்த அளவு இருக்க வேண்டும்? ஆணுறுப்பின் அளவானது சிறிதாக இருந்தால் செக்ஸில் திருப்தி கிடைக்குமா? ஆணுறுப்பின் அளவானது சிறிதாக இருந்தால் தனது மனைவியை திருப்தி அடைய வைக்க இயலுமா? என்று பெருத்த சந்தேக வலையினை தாங்களாகவே பின்னிக் கொண்டு அதிலேயே சுருண்டு விழுந்து கிடக்கிற ஆண்களும் இருக்கிறார்கள். ஒரு ஆணுக்கு ஆணுறுப்பானது விறைப்புத் தன்மை அடைந்த பிறகு இரண்டு அங்குல நீளம் இருந்தால் போதும். ஒரு ஆண் செக்ஸ் வழியாக ஒரு பெண்ணைத் திருப்திபடுத்த இந்த அளவு போதுமானதாகும்.
சரி, ஆண் உறுப்பு இந்த அளவு இருந்தால் போதும் என்கிறீர்கள். பெண்ணின் உறுப்பு எப்படி இருக்க வேன்டும்? இது ஆண்களின் பலரது கேள்வி. பெண்ணின் பிறப்புறுப்பு சராசரியாக ஆறு அங்குலம் ஆழமுடையதாக இருக்கும். பெண்ணின் உறுப்பு ஆறு அங்குலம் ஆழம் கொண்டதாக இருக்கும் போது, இரண்டு அங்குல நீளமே கொண்ட ஆணுறுப்பை வைத்துக் கொண்டு எப்படி அந்தப் பெண்ணை திருப்திபடுத்த முடியும்? இது ஆண்களின் அடுத்த கேள்வி அஸ்திரம். பெண்ணுறுப்பின் ஆறு அங்குல ஆழத்தில் இரண்டு அங்குல ஆழத்தை ஆண் உறுப்பு தொட்டாலே போதும்… ஆனந்தம் தான்.
ஒரு ஆணுக்கு விறைப்பு தன்மைக் கொண்ட ஆணுறுப்பு இரண்டு அங்குல நீளம் கொண்டிருப்பதுடன், அவனது விந்தில் ஆரோக்கியமான வடிவம் கொண்ட, அசையும் தன்மை கொண்ட உயிரணுக்கள் இருந்தால் தான் அவனுக்கு குழந்தை பிறக்கும். இவற்றில் சிக்கல் இருந்தால் பிரச்சனை தான். சிலருக்கு பிறவியிலேயே ஒரு சில குறைபாடுகள் இருக்கலாம். ஆணுறுப்பில் தொற்றுக்கிருமிகள் இருப்பது போன்றவை இதில் அடங்கும். ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இதனாலும் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படலாம்.

ஆண்களின் மெனோபாஸ்

அழகாக, கம்பீரமாக மூப்படைவது என்பது சிலருக்கு கிடைக்கும் வரப்பிரசாதம். குழந்தை பருவம், வாலிபப்பருவம், நடுவயது மற்றும் வயோதிக பருவம் என்று படிப்படியாக உடல் நிலை மாறுவது. ஆரோக்கியமாக நிகழ்ந்தால் அது ஒரு பெரும் புண்ணியம் எனலாம்.
வயதாக வயதாக உடலின் செயல்பாடுகள் மந்தமடைந்து கொண்டு போகும். மூப்பு ஆண்களில் பாலியல் உணர்வுகளை மெதுவாக பாதிக்க தொடங்கும். இதை ஆங்கிலத்தில் Andropause என்பார்கள்.
ஆண்களுக்கு ஏற்படும் வயோதிக பாதிப்புகள்
1. சுக்கில வலக வீக்கம், சிறுநீரக செயல்பாடுகள் சுக்கில வலகம்
(Prostategland) என்பது ஆண்களுக்கு உரித்தான ஒரு உபரி பாலியல் அவயம். விந்துவின் பாகமாக ஒரு அல்கலைன் (Alkaline) திரவத்தை சுரக்கும் உறுப்பு. வயதானால் இது வீக்கமடையும் இது சிறுநீர்ப்பை (Bladder)) யின் ‘கழுத்தை’ அழுத்துவதால் சிறுநீர் போவது சிரமமாகும்.
சுக்கில வலகம் வீக்கத்தின் காரணம் வயதானதும் இந்த அவயத்தின் திசுக்கள் நார் தசைகளாக கடினமாகி விடுகின்றன. இந்த நிலை ‘அனுகூலமான சுக்கில வலக வீக்கம்’ (Benign Prostatic hypertrophy) எனப்படும். இது 50 சதவீத, வயதான ஆண்களுக்கு ஏற்படுகிறது. இதனால் சிறுநீர் பிரச்சனைகள் மற்றும் உடலுறவில் விந்து வெளியேறுதல் பாதிப்புகள் ஏற்படும். சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள் உண்டாகும். சிறுநீர்பை முற்றிலும் காலியாகாமல் இருப்பதால், சிறுநீர் திரும்பி சிறுநீரகத்தை சேருவதால், சிறுநீரகம் பாதிப்பையும். சுக்கில வலகமே நோய்களால் தாக்கப்படும். இதை Prostatis என்பார்கள். சுக்கில வலக புற்று நோய் வயதானவர்களை அதிகம் தாக்கும். இந்த வகை புற்றுநோய் அதிகரித்து வருகிறது. தவிர சிறுநீர்பை புற்று நோயும் ஏற்படலாம்.
2. குழந்தை பெறும் திறன்
ஆண்களின் குழந்தை உண்டாக்கும் திறன் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். வயது மட்டும் அதற்கு காரணமாவதில்லை. சுக்கில வலகம் எடுக்கப்பட்டாலும் ஆணின் பாலியல் திறன் பாதிக்கப்படாது. உடலுறவில் வெளியேறும் விந்தின் அளவு வாலிபத்திலும் வயோதிகத்திலும் ஏறத்தாழ ஒரே அளவாக இருக்கும். ஆனால் விந்துவில் உள்ள கருவுண்டாக்கும் ஆண் தாது (Sperm) குறைந்து விடும்.
3. உடலுறவில் நாட்டம்
சில ஆண்களுக்கு வயதானாதும் பாலியல் உந்துதல், உணர்வுகள்
குறையலாம். பாலியல் செயல்பாடுகள் மந்தமடையும். இதன் காரணம் ஆண் ஹார்மோனான “டெஸ்டோஸ்டிரோன்” (Testosterone) குறைந்து விடுதல். இதர காரணங்கள் மனோ ரீதியான வயோதிக பிரச்சனைகள், கவனிப்பார் இல்லாமல் போவது, முதுமையில் தனிமை, நோய் நொடிகள், போன்றவையும் ஆண்மையை வெகுவாக பாதிக்கும் காரணங்கள்.
4. ஆண் பீஜங்கள் பாதிப்பு
ஆண் ஹார்மோன் சிறிதளவு குறையலாம். ஆனால் விரையின் திசுக்களின்
அடர்த்தி குறைந்து மாற்றமடையும். விந்துவை வழிநடத்தும் “பாதைகள்” (Tubes) நீண்டு சுரங்கும் “மீள்சக்தியை” (Elasticity) கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கும். ஆண் பீஜங்கள் விந்துவை உற்பத்தியை தொடர்ந்து செய்தாலும், முன் சொன்னது போல் ஆண் தாதுப் பொருள் குறைந்து போகும். விந்து நாளங்கள் (Epididymis), சுக்கிலவலகம், ஆண் விந்து சிறு பைகள் (Seminal vescicles) இவைகள் “வெளிப்பரப்பு” வயதினால் குறையலாம். ஆனால் விந்து தயாரிப்பு தொடரும்.
5. ஆண் உறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடு
என்ன இருந்தாலும் வாலிபத்திலிருக்கும் பாலியல் செயல்பாடுகள் வயதினால் சிறிதளவாவது குறைவது சகஜம். இயற்கையானது கூட. ஆனால் மருத்துவ நிபுணர்கள் கூறுவது வயது மட்டும் காரணமல்ல. ஆரோக்கிய சீர் குலைவு மற்றும் மனோரீதியான பிரச்சனைகள் முக்கிய காரணங்கள் என்பது. 90 சதவிகித ஆண்மை கோளாறுகள் ஆரோக்கிய குறைவு, உடல் நல பாதிப்பால் உண்டாகின்றன. வயதினால் ஏற்படும் பாதிப்பு ஆணுறுப்புக்கு ரத்தம் பாய்வது குறைந்து விடும்.
இந்த விறைப்பில்லா தன்மை ஏற்பட காரணம், உயர் ரத்த அழுத்தத்திற்காக சாப்பிடும் மருந்துகள் கூட இருக்கலாம். நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களும் ஆண்மைக்குறைவை உண்டாக்கும்.
வாழ்நாள் முழுதும் ஆனந்தமடைய வழிகள்
• வயதாகும் போது செக்ஸ் குறைபாடுகள் தென்பட்டால் குறைகளை போக்கிக் கொள்ள சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
• புகைபிடித்தல், மதுபானம் வேண்டாம்.
• ஞாபகம் இருக்கட்டும், செக்ஸில் ஈடுபடுவதால் உங்கள் அவயங்கள் கெடாது. ஈடுபடாவிட்டால் தான் அவை பழுதடையும்.
• வழக்கமாக தொடர்ந்து செக்ஸில் ஈடுபட்டால் ‘டெஸ்டாஸ்டிரோன்’ உற்பத்தி அதிகரிக்கும்.
• செக்ஸ§ம் ஒரு உடற்பயிற்ச்சி தான். கூடவே நிஜ உடற்பயிற்சியும் செய்தால் இரட்டிப்பு நன்மை கிடைக்கும். எடை குறையும். ஆர்வம் நீடிக்கும். ரத்த ஒட்டம் ஒழுங்காக இருக்கும்.
• வாலிப வயதில் இருப்பது போல் நடுவயது, வயோதிகத்தில் பாலுணர்வு இருக்காது. உங்கள் எதிர்பார்ப்புகளை குறையுங்கள். முன் விளையாடுவதை (Fore play) அதிகரியுங்கள். செயல்பாட்டை விட சந்தோஷத்தில் மனதை செலுத்துங்கள்.
• புதுப்புது வழியில் கலவியில் ஈடுபடுங்கள். காலையில் உங்கள் சக்தி அதிகமாக இருக்கும். அப்போது கலவியில் ஈடுபடுங்கள்.
• உங்கள் உறுப்பு விறைப்படையாவிட்டால் வேறு வழிகளில் துணைவியை திருப்திபடுத்துங்கள்.
• சமச்சீர் உணவை உட்கொள்ளவும்.
• டாக்டரிடம் சொல்ல கூச்சப்படாதீர்கள்.
உடல் ரீதியான குறைபாடுகளின் அறிகுறிகள்
• உங்கள் அவயம் விறைக்கும் போது “பலவீனமாக” இருந்தால், தூங்கும் போது விறைக்காவிட்டால் இல்லை சுய இன்ப பிரயத்தனங்களில் விறைக்காமல் போனால்
• நீங்கள் முயற்சித்தாலும் விறைக்காமல் போனால்.
மனோ ரீதியான குறைபாடுகளின் அறிகுறிகள்
• பல சமயங்களில் காலையில் எழுந்திருக்கும் போது ஆணுறுப்பு விறைத்திருத்தல்
• சுய இன்ப பிரயத்தனங்கள் வெற்றி அடைந்தால்
• தீடிரென்று உங்கள் குறைபாடுகள் தோன்றினால்.

குழந்தையின்மை

புதிதாக மணம் புரிந்த தம்பதிகள், உடலுறவு தொடர்ந்து வைத்துக் கொண்டாலும், ஒருவருடம் கழிந்தும் மனைவி கருத்தரிக்காமல் போனால், அது குழந்தை பெறுவதில் கோளாறு இருப்பதை உணர்த்தும். கோளாறு ஆணினாலும் இருக்கலாம் இல்லை பெண்ணினாலும் இருக்கலாம். குழந்தையின்மை என்பது ஆண்மை / பெண்மை குறைவல்ல. இந்த குறைகள் உடலுறவு முழுமையாக அனுபவிக்க முடியாமல் போவது. குழந்தையின்மை உடலுறவு கொண்டும் குழந்தை பிறக்காமலிருப்பது.

நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மகப்பேறு. மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும். உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ‘வெறி பிடித்தால்’ போல, ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். ‘ஸ்பீட்’ என்ன தெரியுமா? ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அளவே உள்ள) முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!
ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது.
காரணங்கள் – ஆண்
• ஆயுர்வேதத்தின்படி பொதுவான காரணங்கள் – விந்தணுக்களில் குறைபாடு, விந்து செல்லும் குழாய்கள் பாதிக்கப்படுவது, பிறப்புறுப்புகள் அடிபடுவது, பிறப்புறுப்புகளின் பிறவிக்குறைகள் (விரைகள் இறங்காதது மற்றும் உறுப்புகளின் வளர்ச்சியின்மை), வியாதிகள் போன்றவை. விரைகளில் அசாதரணமாக Varicose நரம்புகள் புடைத்திருப்பதும் ஒரு கோளாறு.
• விந்தணுக்கள் குறைந்திருப்பது (Oli gospermia) அல்லது இல்லாமலே போவது (azoospermia). தவிர விந்தணுக்கள் நகரும் சக்தி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் விந்து பெண்ணின் சினைப்பை (Ovaries) யை அடைந்து முட்டைகளுடன் சேரமுடியாது. சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை.
• விந்தணுவின் அடர்த்தி குறைவு. விந்தணுக்கள் நகர முடியாமல் போதல்,
நகரும் தரம் – ஒரு மி.லி. உள்ள விந்துவில் 50 அல்லது 60 சதவிகித விந்தணுக்கள் விரைவாக முன்னோக்கி நகர வேண்டும். 30% விந்தணுக்கள் சரியான உருவத்தை, வடிவத்தை கொண்டிருக்க வேண்டும். தவிர கொள்ளளவு (Volume) 2 மி.லிக்கு மேல் இருக்க வேண்டும். ப்ரூக்டோஸ் (Fructose) சரியான அளவில் இருப்பது அவசியம். Fructose இல்லாவிட்டால் விரைகளில் உள்ள சிறு குழாய்கள் (Seminal Vescicles) பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
• தொடர்ந்து வரும் ஜுரம், அதிக வெய்யிலில் அலைவது இவை விந்தணுக்களின் உற்பத்தி, தரம், நகரும் சக்தி இவற்றை பாதிக்கும். ஏனென்றால் அதிக உஷ்ணம் ஆணுறுப்பை பாதிக்கும். உடல் உஷ்ணத்தை விட, விரைகளின் உஷ்ணம் சாதாரணமாக 2 டிகிரி குறைந்தே இருக்கும்.
• ஹார்மோன் கோளாறுகள் – தைராயிடு, அட்ரீனலின், பிட்யூடரி சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள் விந்து உற்பத்தியை குறைக்கும். சில பிறவிக்கோளாறுகளினால் Sex chromosomes…. விந்து உற்பத்தியை குறைக்கலாம்.
• விரைகளில் வரும் Mumps…. மருந்துகள் (Steroid) போன்றவையும் விந்து உற்பத்திக்கு தடைபோடும்.
• விரைகளில் ஏற்படும் பிறவிக் கோளாறு – விந்து குழாய்கள் அடைத்துக் கொள்வது போன்றவை.
• விந்து ஒரே பாதையில், திசையில் செல்லாமல் வேறுபக்கம் பாய்வது.
• வயது.
• சுக்கிலவக (Prostate) கிருமித் தொற்று.
• லாகிரி வஸ்துகளின் உபயோகம்.
• உடல் பருமன்.
• சைக்கிள் ஓட்டுவது இதனால் பிறப்புறுக்கள் அடிபடுகின்றன.
• சுற்றுப்புற சூழ்நிலையின் மாசு நச்சுப்பொருட்கள் தாக்குதல்.
• எக்ஸ்ரே ஸ்கேன் போன் Radiation சிகிச்சைகள்.
• ஊட்டச்சத்துக் குறைவு.
• ஸ்ட்ரெஸ்.
பரிசோதனைகள்
ஆணின் விந்தணு பரிசோதனை அவசியம். இந்த சோதனையில் விந்தணு கொள்ளளவு, எண்ணிக்கை, நகரும் தன்மை, Morphology போன்றவை கணிக்கப்படும்.
காரணங்கள் – பெண்
பெண்களின் குறைபாடுகளில் பரவலானது, சினைப்பையிலிருந்து (Ovaries) முட்டைகள், மாதம் ஒரு முறை வெளிவராதது. ஒவரிகள் Progesterone என்ற ஹார்மோனை சுரக்காமல் போவது. இந்த ஹார்மோன் கருப்பப்பை சுவர்களை, கருவினை வரவேற்க பலப்படுத்தும். இது பிட்யூட்டரி சுரப்பிகளை ஊக்குவிக்கும் மூளை செயல்படாமல் போவதால் சுரக்காமல் போகும்.
இதர காரணங்கள்
• கர்ப்பப்பையின் பிறவிக் கோளாறுகள். கர்ப்பப்பையின் ‘வாய்’ அடைத்துக் கொள்வது, தொற்று நோய் பாதிப்பு போன்றவை.
• சோகை
• உடல்பருமன்
• தைராயிடு, அட்ரீனலின் சுரப்பி கோளாறுகள்
• நீரிழிவு
• மனக்கோளாறுகள்
• மாதவிடாய் சரிவர ஏற்படாதது.
• Fallopian Tube ல் அடைப்பு.
• கர்ப்பப்பை கட்டிகள்.
• Cervix ல் உண்டாகும் சளி (Mucus)
இது Ovulation சமயங்களில் குறைந்து நீர்த்து விடும். நீர்த்து விடுவதால்
விந்தணு, வழுக்கி, முன்னோக்கி நகர்ந்து, கர்ப்பப்பையை சேருவது சுலபமாகும். இந்த சளி குறைந்து வழி விடாவிட்டால் விந்தணுவின் நகரும் இயக்கம் நின்று விடும். தவிர இந்த சளியில் விந்தணுக்களை கொல்லும் எதிர் அணுக்கள் (Anti – bodies) ஏற்பட்டால் இன்னும் பிரச்சனையாகும். கர்ப்பம் நிகழாது.
• பெண்ணின் வயது (வயது அதிகமாக அதிகமாக முட்டையின் எண்ணிக்கையும் தரமும் குறைந்து கொண்டே வருகின்றது).
• உறவின் எண்ணிக்கை – பொதுவாக அதிக உறவு கொண்டால் கருவுற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிலும் கருவுறும் வாய்ப்பு உள்ள காலங்களில் குறைந்தது வாரம் 3 முறை உறவு கொள்வது அவசியம்.
• குழந்தையின்மையின் காலம் – நீண்ட நாட்கள் குழந்தையே இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு தானாகவே கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
• பெண் கருவுற வாய்ப்புள்ள நாட்களில் குறைந்தது ஒரு வாரத்திற்கு 3 முறை முயற்சித்தும் கருவுற இயலாத தம்பதியினர் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். கருவுறுவதற்கு ஒரு திடமான முறையோ அல்லது உறவு கொள்ளும் விதமோ கிடையாது. சிலருக்கு ஒரு முறை உறவு கொண்டாலே கரு உண்டாகி விடும். சிலருக்கு பல முறை பல வருடங்கள் முயற்சித்தாலும் நடைபெறாமல் போகும். இதற்கென ஒரு முறையோ அல்லது விதமோ கிடையாது. இது அவருடைய அதிர்ஷ்டம் என்று கூட கூறலாம்.
பரிசோதனைகள்
Ovulation சமயத்தில் தான் முட்டை உற்பத்தியாக கருத்தரிக்க ஏதுவாகும். Ovalution period தொடங்கி விட்டதா என்று அறிய பெண்ணின் உடல் உஷ்ணத்தை Thermometer ஆல் தெரிந்து கொண்டால் போதும். சாதாரண சூட்டிலிருந்து 0.9 டிகிரி தி (0.5டிகிரிc) அதிகம் தெரிந்தால் Ovulation தொடங்கிவிட்டது. என அறியலாம். இதை விட வேறு பல புதிய சாதனங்களும், சோதனைகளும் (Ultra Sonography or ovulation predicter kits) வந்து விட்டன. ரத்தத்தில் உள்ள Progesterone ம், உமிழ்நீரும் சோதிக்கப்படும்.
குழந்தையின்மைக்காக ஒரு மருத்துவரை ஆலோசிப்பதற்கு முன்பாக
நீங்களே சரி செய்து கொள்ள வேண்டியவை.
உணவு: நல்ல போஷாக்கான உணவுகளை உட்கொள்வது அவசியம். நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டாலே கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.
உடல் எடை

உடல் எடையை சீராக வைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாகப் பெண்கள் எடை அதிகமாகவும் குறைவாகவும் இருக்கக் கூடாது சரியான எடையிலிருந்தாலே இயல்பாக கருத்தரிக்க முடியும்.
உடற்பயிற்சி

முறையான உடற்பயிற்சி கருத்தரிக்கும் வாய்ப்பினை அதிகரிக்கும். ஆணுக்கும், பெண்ணுக்கும் உடற்பயிற்சி மிக முக்கியம்.
புகைப்பழக்கம்: புகை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்களானாலும் பெண்களானாலும் புகை இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும். ஆண்களில் விந்தணு தரத்தை புகை குறைத்திடும்.
குடிப்பழக்கம்: போதைப் பொருட்களின் உபயோகம் விந்தணுக்களையும் முட்டை உற்பத்தியையும் வெகுவாக பாதிக்கும். குடி/போதை பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல் அவசியம்.
பிற மருந்துகள்: ஆண்களில் பிற மருந்தகளின் உபயோகமும் வெகுவாக விந்தணுவின் தன்மையை பாதிக்கும். அல்சர் (வயிற்றுப் புண்) உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிக்கான பிற மருந்துகளின் உபயோகமும் தவிர்க்கப்பட வேண்டும்.
உறவு: கருவுற வாய்ப்புள்ள காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை உறவு கொண்டால் போதாது குறைந்தது 3 முறையாவது உறவு வைத்துக் கொள்வது அவசியம்.
கருவுறும் காலம்

மிருகங்களுக்கு இயல்பாகவே எப்பொழுது கருவுற வாய்ப்புள்ளதோ அப்பொழுதே உறவு கொள்ள விருப்பம் ஏற்படுகின்றது. மாதவிடாய் போன்ற இரத்தம் போக்கும் ஏற்படுகின்றது. ஆனால், மனிதர்களில் அவ்வாறு அல்ல. எல்லா நாட்களிலும் உறவு கொண்டு முட்டை வெடிக்கும் சமயத்தில் உறவு கொள்ளாது போனால் வீணாகப் போய் விடும். எனவே, முட்டை வெடித்து சிதறும் சமயம் (இரு மாதவிடாய்களுக்கும் சுமாரான நடுப்பகுதி) உறவு கொள்வது அவசியம்.
உறவு முறை: ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு முறையுள்ளது. உதாரணமாக பன்றிகள் விந்தணுக்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டவை. கரடிகள் உறவு கொள்ளும் பொழுது விந்தணுக்கள் சிந்தி விடாமல் இருக்கும் விதத்தில் சிறப்பு அம்சம் கொண்டவை. ஆனால், மனிதனுக்கு அப்படியரு முறை எதுவும் கிடையாது.
எவ்வாறு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். ஆனால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முறை ஆண் மேல் புறமும் பெண் கீழ்ப்புறமும் இருந்தவாறு உறவு கொள்வதேயாகும்.
உறவு முடிந்ததும் உடன் எழுந்து விடக்கூடாது. குறைந்தது 5 நிமிடம் பெண்கள் படுத்திருக்க வேண்டும்.
பிற சாதனங்கள்

எளிதாக உறவு கொள்ள ஜெல் வகையோ அல்லது அதிக விறைப்புத் தன்மை அடைய ஸ்ப்ரேயையோ உபயோகிப்பதை ஆண்கள் தவிர்த்தல் அவசியம். ஏனெனில் இவ்வகை அலோபதி மருந்துகள் விந்தணுக்களை செயல் இழக்கச் செய்து விடும். இயற்கையான முறையில் உறவு கொள்ளுதல் அவசியம். பொதுவாக இக்காலத்தில் கருவுறும் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது இதற்கு பல காரணங்கள் உள்ளன அவை.
• பெண்கள் வயது அதிகமான பின்னரே திருமணம் புரிந்து கொள்வது.
• பாலுறவினால் ஏற்படும் தொற்று நோய்கள்.
• குறைந்து கொண்டே வரும் ஆண்களின் விந்தணுக்களின் தரம்.
இன்றைய வாழ்க்கைச்சூழலில் உணவு முறை அழற்சி, மன அழுத்தம்
போன்ற பல பிரச்சனைகளும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.
குழந்தையின்மைக்கு மருத்துவம் செய்து கொள்ள விரும்புபவர்கள் பொறுமையாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அலோபதி முறையாக இருந்தாலும் ஆயுர்வேத முறையாக இருந்தாலும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலமான 28 நாட்களில் 5 நாட்களே கருவுற வாய்ப்புகள் உள்ள காலமாதலால் குறைந்தது ஒரு வருடமாவது மருத்துவம் செய்து பின்னரே அந்த மருந்துகள் வேலை செய்கின்றதா? இல்லையா? என்ற முடிவிற்கு வர முடியும்.
மீண்டும், மீண்டும் மருத்துவர்களையும் மருத்துவ முறையையும் ஓரிரு மாதங்களில் மாற்றிக் கொண்டே வந்தால் மருந்துகளும் மருத்துவமும் எந்த பயனையும் தராது வயது மட்டுமே ஏறிக்கொண்டே போகும்.
எனவே, மருத்துவம் செய்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது அதே மருந்துகளையும் மருத்துவத்தையும் செய்து கொள்வது அவசியம் அப்பொழுது தான் நற்பலனைப் பெற இயலும். குழந்தையை ஈன்றெடுக்க முடியும்.
ஆயுர்வேத மருத்துவ முறையில் குழந்தையின்மைக்கு மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. அவை, முற்றிலும் மூலிகைகளாலானவை பாதுகாப்பானவை பக்க விளைவுகளற்றவை எனவே, அவற்றை தொடர்ந்து உபயோகித்து
பயனடையலாம்.
ஆயுர்வேதமும் குழந்தையின்மையும்
முதலில் உடற்கோளாறுகளை சரி செய்வது அதன் பிறகு கருத்தரிக்க சிகிச்சைகளை ஆரம்பிப்பது என்பது ஆயுர்வேத சித்தாந்தம், கருத்தரித்தவுடன், கரு சரிவர வளர பிரத்யேகமான கவனம் செலுத்தப்படும்.
ஆயுர்வேத சிகிச்சைகள்
• ஸ்நேகப்னம் – மூலிகைநெய், எண்ணெய் இவை குறைந்த அளவில், அதிகாலையில் கொடுக்கப்படும். மெதுவாக மருந்து அளவுகள் ஏற்றப்படும்.
• வீதனம் – மூலிகை செறிந்த நீராவிகுளியல் செய்விக்கப்படும்.
• விரேசனம் – உடலின் கழிவு, நச்சுப் பொருட்கள் நீங்க மருந்து கொடுக்கப்படும்.
• கஷாய வஸ்த்தி – பிரத்யேக மூலிகை ‘எனிமா’ கொடுக்கப்படும். இதனால் பிறவி உறுப்பு சிறுநீரக பாதை சுத்தமாகும்.
• ஸ்நேக வஸ்தி:- மருந்துள்ள எண்ணையும் மேற்கண்ட பலனுக்காக கொடுக்கப்படும்.
• ஒத்தார வஸ்தி:- கர்ப்பப்பை, யோனி சுத்தமாக ஸ்பெஷல் நெய் கொடுக்கப்படும்.
சிறிது ஒய்வுக்குப் பிறகு ‘வாஜீகரணம்’ ஆரம்பமாகும். இது புத்துயிர்
ஊட்டி, ஆண்மையை பெருக வைக்கும். அபாரமான சிகிச்சை. விந்துவின் விந்தணு எண்ணிக்கை பெருகி, நகரும் சக்தி அதிகரிக்கும். நோயாளியின் வீரியம், பலம் அதிகமாகும்.
ஆயுர்வேதத்தில் குழந்தையின்மை குறைய போக்க உன்னதமான அற்புதமான மூலிகைகள் உள்ளன. ஆண், பெண் இருவருக்கும் சரியான தேவையான சிகிச்சை முறைகள் கிடைக்கும். குழந்தை வேண்டுமென்றால் ஆயுர்வேத மருத்துவரை அணுகினால் போதும்.
ஆயுர்வேத மூலிகைகள் தனியாக விவரிக்கப்பட்டுள்ளது.
சில மருந்துகள்
1. அஸ்வகந்தாரிஷ்டம்
2. மகரத்வஜம்
பெண்களின் மலட்டுத்தன்மை
இதன் காரணங்கள்
1. சினை முட்டையே உற்பத்தியாகமல் இருக்கலாம்
2. கர்பப்பை பின்னோக்கி வளைந்திருக்கலாம் (Retroverted Uterus)
3. ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு
4. கர்பப்பையில் Fibroid கட்டிகள், சிஸ்ட்டுகள் (Cyst)
5. கருப்பையின் கழுத்து வீங்குதல், கருப்பையின் ஜவ்வு போன்ற கோழை விந்துவை ஏற்று கொள்ளாமல் ‘எதிரி’ யாக பாவிப்பது.
ஆயுர்வேத மூலிகைகள், மருந்துகள்
1. ஆலமரப்பட்டை
2. பாலக்ருதம் என்ற தயாரிப்பு
3. வங்க பஸ்பம்
4. சிலாஜித்
5. பலா (Sida rhombifoloa)
6. அஸ்வகந்தா
உணவு நியமம்
வெங்காயசாறு, அதனுடன் தேன்/நெய், நெல்லிப்பொடி, பால், வெண்ணை, புரதம் செறிந்த உணவுகள் (மீன், மாமிசம், முட்டை) இவைகள் வலுவை உண்டாக்கும்.
யோகாசனங்கள் சிறந்த பலனை தரும்.

நீரிழிவும் செக்ஸ் குறைபாடும்

நாள்பட்ட நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியது நரம்புத்தளர்ச்சி. நீரிழிவு உடையவர்கள் அனைவருக்குமே, நரம்புத்தளர்ச்சி தலைதூக்க ஆரம்பிக்கும். நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது நரம்பு மண்டலம். எனவே நீரிழிவு உடையவர்களுக்கு அதுவும் குறிப்பாக நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அதனால் ஆண்மைக்குறைவு ஏற்படும். நீரிழிவு உடையவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுமென்றாலும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாவிட்டால் முழு அளவில் ஆண்மைக்குறைவு ஏற்பட்டு விடும்.

ஆண்மைக்குறைவு
ஆண்களில் பாலுறவின் போது நரம்புகளின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. பாலுறவின்போது நுகர்தல் (வாசனையை உணரும் திறன்) மற்றும் உணர்தல் (தொடுவதை உணரும் திறன்) ஆகிய இரண்டும் தான் பாலுறவின் செயல்பாட்டிற்கு தூண்டுதலாக அமைகின்றன. இதனை சிறப்பாக செய்பவை சிறிய நுண்ணிய நரம்புகள் தான். பெண்கள் மாதவிலக்கின் போது பாலுறவில் அதிக நாட்டம் கொள்வதும் இந்த நுகரும் திறன் அதிகரிப்பதும் தான் காரணம் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
பார்வை நரம்புகளும் பெரிய அளவில் பாலுணர்ச்சியை தூண்டக்கூடியவை. பார்வை நரம்புகள் செயல்பாட்டால் தான் எதிர் பாலினரைக் கண்டவுடன் பாலுணர்வு அதிகமாகின்றது. இரவு தூங்கும் பொழுது கனவில் பாலுறவு கொள்வது போலக் கனவு வருவதும் இந்த பார்வை நரம்புகளின் செயல்பாட்டால் தான்.
தொடு உணர்வு தான் ஆணுறுப்பிற்கு விரைப்பைத் தருகிறது. ஆணுறுப்பின் முன்புறமுள்ள டார்சஸ் நரம்புகள் அதிக தொடு உணர்வு கொண்டவை. எனவே தான் ஆணுறுப்பைப் பிறர் தொட்டவுடன் விரைப்பு ஏற்படுகின்றது.
ஆணுறுப்புக்கு விரைப்புத் தன்மை ஏற்படுவதற்கு அதிக இரத்த ஒட்டம் தேவைப்படுகிறது. விரைப்பு ஏற்படும் பொழுது இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இயல்பாக இருக்கும் பொழுது சிறியதாக இயல்பாக இருக்கின்றன. நீரிழிவு நோய் ஏற்படும் பொழுது இந்த இரத்த நாளங்கள் செயல்பாட்டை இழக்கின்றன. இதனால் சரியாக இரத்த நாளங்கள் உறுப்பினுள் இரத்தத்தை தேக்கிட சிரமப்படுகின்றன. மொத்த உடலின் இரத்த ஒட்டமும் சீராக இயங்கிட முடியாததால் தண்டுவடம் பாதிப்படைகிறது. இதனால் ஆண் உறுப்பு விரைப்படைவது தடைபடுகிறது.
மன இறுக்கம் தோன்றி பாலுறவு வேட்கையைத் தடை செய்து விடுகிறது. இவ்வாறு பல விஷயங்கள் நீரிழிவு நோயாளியின் ஆணுறுப்பு விரைப்படைவதைத் தடை செய்கின்றன.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மற்ற சில விஷயங்கள் விரைப்படைவது தடைபடுகின்றது. அவை நோய்க்கிருமிகள், அதிக கொழுப்புச் சத்து (கொலஸ்ட்ரால்) உயர் இரத்த அழுத்தம், பிற மருந்து மாத்திரைகள் ஒவ்வாமை அல்லது அழற்சி, தைராய்டு, டென்ஷன், மனஅழுத்தம், சுரப்பிக் கோளாறுகள், வயது, எடை, உடல் பருமன், உடல் உழைப்பின்மை. இவை அனைத்துடனும் சர்க்கரை நோய் அல்லது சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ஆண்மைக்குறைவு ஏற்படுகின்றது.
பெண்மைக்குறைவு
பெண்களில் தசைகளை இயக்கும் நரம்புகள் அனைத்தும் பெண்ணின் சிறுநீரகம், கீழ்முதுகு, இடுப்புப்பகுதி, கருவுறுப்பு மற்றும் சிறுநீர்ப்பை ஆகியவற்றில் உள்ளன. பெண்களில் கீழ்முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள நரம்புகள் பெண் உறுப்பிற்கு இரத்தம் செலுத்துகின்றன. இவை மிகவும் நுண்ணிய நரம்புகள் ஆகும். இவை எளிதில் சேதமடையக் கூடியவை. இந்த நரம்புகள் அனைத்தும் நுண்ணிய கிளை நரம்புகளாகும். இவை தான் பெண்ணுறுப்பின் செயல்பாட்டை – அதாவது சுருங்குவது விரிவது போன்ற செயல்பாடுகளை செய்கின்றன. இத்தகைய நரம்புகள் நுண்ணிய நரம்புகளாகவும், ஒப்பற்ற செயல்திறன் கொண்டவையாகவும் இருப்பதனால் எளிதாக பாதிக்கப்பட்டு செயல்பாடுகளில் சிக்கல் ஏற்படுகின்றது.
சர்க்கரை நோயின் போது நரம்புகளால் பெரிதும் பாதிக்கப்படுவதால் தொடு உணர்வு மற்றும் நரம்புகளின் செயல்பாட்டுக் கட்டளைகள் தடைபடுகின்றன. இதனால் உணர்ச்சி ஊட்டப்படுவதும், கருவுறுப்புகளில் செயல்பாடும் தடைபடுகிறது. இத்தகைய பெண்ணுறுப்பு விரிவடையாத நிலையில் உடல் உறவு கொள்வது வலியையும், வேதனையும் கொடுக்கும்.
ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் சர்க்கரை வியாதியால் ஏற்படும் பிரச்சனைகள் பெரிதும் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. ஆண்களில் ஆண்மைக்குறைவு ஏற்படுவது சர்க்கரை வியாதி உடையவர்களுக்கு அதிகமாக ஏற்படுகின்றது. சாதாரண ஆணை விட பத்து பதினைந்து ஆண்டுகள் முன்னதாகவே நீரிழிவு உடையவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகின்றது.
ஆண்மைக்குறைவு ஏற்படாமல் தவிர்க்கவும், குறைபாடு இருப்பின் அவை அதிகரிக்காமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை அவசியம். தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம். மாற்றத்தை ஏற்படுத்தி இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம்.
கட்டுப்பாடான வாழ்க்கை, போஷாக்கான அதே சமயம் சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவு முறை, உடற்பயிற்சி, தக்க இடைவெளியில் பரிசோதித்துக் கொள்வது, தகுந்த மருத்துவ ஆலோசனை, மருத்துவம், இரத்த அழுத்தம் இருப்பின் அதனையும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது போன்றவை அத்தியாவசியத் தேவை.
ஆண்மைக்குறைவு ஏற்பட்டாலும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் இல்லாது போனாலும் தக்க மருத்துவரை நாடி தகுந்த மருத்துவம் செய்து கொண்டால் நீரிழிவுடன் வாழலாம்.
இயற்கை முறையிலும் மூலிகை முறை மருத்துவத்திலும் இவற்றிற்கு இன்றியமையாத எண்ணற்ற வழி முறைகளும் மூலிகைகளும் உள்ளன. அவற்றை காலம் தாழ்த்தாமல் தக்க சமயத்தில் கலந்து ஆலோசித்து உபயோகித்து நீரிழிவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

செக்ஸை வெறுக்கும் பெண்

சில பெண்கள் கணவனுடன் கூடுவதையே மிகப் பெரிய கடினமான காரியமாக கருதி உடலுறவையே வெறுக்கலாம். இரவு என்பதே இல்லாது ஒழிந்தால் கூட நல்லா இருக்கும் என்று இத்தகைய பெண்கள் நினைப்பார்கள். ஒரு பெண்ணுக்கு செக்ஸில் விருப்பமில்லாமல் போவதற்கு சில பயம் கொள்ள வைக்கும் காரணங்கள் பின்னணியாக இருக்கலாம். சினிமாவில் வருகிற கற்பழிப்புக் காட்சிகளைப் பார்த்து இத்தகைய பயம் ஏற்பட்டிருக்கலாம். இவர்கள் கேள்விபட்ட சில வகையான பாலியல் கொடுமைகள், முதன்முறையாக உடல் உறவில் ஈடுபட்டபோது ஏற்பட்ட தாங்க முடியாத வலி, அக்கம்பக்கத்து பெண்கள் உடலுறவைப் பற்றி சொன்ன வேதனைக் கதைகள், போன்றவை காரணமாக பயம் கொண்டிருக்கலாம். இந்த குறைபாடுள்ள பெண் கணவனுடன் செக்ஸில் ஈடுபடும்போது எல்லா முன் விளையாட்டுகளிலும் (ஃபோர் ப்ளே) கணவனுடன் ஒத்துழைப்பாள். ஆனால், உடல் உறவை மட்டும் வெறுப்பாள். இத்தகைய குறைபாடு உள்ள பெண் மனைவியாக அமைந்துவிட்டால், கணவன் பொறுமையை கடைபிடித்து நிதானமாக ‘மனைவி ஏன் இப்படி விலகிப் போகிறாள்… அதை எப்படி சரி செய்யலாம்’ என்று யோசிக்க வேண்டும். இந்த பாதிப்பை மருத்துவ அறிவுரையின் மூலம் நிவர்த்தி செய்துவிடலாம்!
பெண்களின் பாலியல் குறைபாடுகள்
1. உடலுறவின் போது வலி (Dyspareunia)
2. பிறப்புறுப்பு தானாகவே சுருங்குவதால் உடலுறவு முடியாமல் போதல். அடிப்படை பயத்தால், பெண்ணின் பிறப்புறுப்பு “மூடியது” போல் சுருங்கி விடும். (Vaginismus)
3. பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல் (Vulvodynia)
4. உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல்.
பெண் குறைபாடுகளுக்கு மனோ ரீதியான காரணங்கள்
1. அறியாமை, உடலுறவு என்றாலே ஒரு ‘கெட்ட’ விஷயம் என்ற கருத்து மனதில் ஆழமாக பதிந்திருத்தல்
2. பரபரப்பு, மனச்சோர்வு
3. கணவரை பிடிக்காமல் போதல், சண்டை, சச்சரவு
4. குழந்தை உண்டாகி விடுமோ என்ற பயம்
5. யௌவன பருவத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள். உறவினர்கள் / தெரியாதவர்கள் உறவினர்களால் தெரியாதவர்களால் கற்பழிக்கப்படுவது

கேகல் பயிற்சிகள் (Kegal Exercise)
இந்த பயிற்சி இடுப்பு தசைகளை, குறிப்பாக ஜனன உறுப்பு, சிறுநீர் தாரை (Urethra) மற்றும் மலக்குடல் (Rectum), தசைகளை பலப்படுத்துகிறது. இந்த பயிற்சியை முறையாக செய்தால் பாலியல் செயல்பாடுகள் மேம்படும். தவிர ‘கண்ட்ரோல்’ இல்லாமல் சிறுநீர் போதல் போன்றவைகளும் குறையும்.
சிறுநீர் கழிக்கும் போது, பெண் சிறுநீரை கட்டுப்படுத்தும் தசையை 10 வினாடி அழுத்த வேண்டும். பிறகு 10 வினாடி சிறுநீர் போக விடவும். இதை திருப்பித் திருப்பி 10, 20 தடவைகள், ஒரு நாளில் மூன்று முறை செய்யவும். 2-3 மாதங்களில் பலன் தெரியும். இந்த பயிற்சியை எங்கு வேண்டுமானாலும், நின்று கொண்டோ (அ) உட்கார்ந்து (அ) படுத்துக் கொண்டும் செய்யலாம்.
சிறுநீரை கண்ட்ரோல் செய்யும் தசையை கண்டுபிடிப்பது எப்படி? வஜீனாவில் கைவிரலை விட்டு, எந்த சதையை அழுத்தினால் சிறுநீர் நிற்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். சிறிது முயன்றால் பழக்கத்தில் கொண்டு வரலாம்.

• காதல் செய்யும் போது பல ரசாயன மாற்றங்கள் உடலுக்குள் நிகழும். ஏன், தொடுதல், அணைத்தல் போன்றவற்றாலே டோபோமைன் அளவுகள் ஏறும். ஆண் ஹார்மோனும் சுரக்கும். இவை உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.
• சாக்லேட் பெண்ணின் காதல் ஆசையை தூண்டும் காரணம் ரசாயனம் தான். ‘செரோடோனின்’ லெவல்கள் அதிகரிக்கும் சாக்லேட்டில் Phenylethylamine (PEA) என்ற கவர்ச்சியை தூண்டும் பொருள் இருக்கிறது.
• கீழ் வயிற்று தசைகளை உறுதியாக்க செய்யும் கெகெல் பயிற்சி (Kegel exercise) செய்தால் ஜனை உறுப்புக்களுக்கு அதிக ரத்தம் பாயும்.
• ஒரு வாரத்தில் ஒன்று (அ) இரண்டு தடவை உடலுறவினால் உடலின் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும். உடலின் தசை நார்கள் பலமடையும். மனச்சோர்வுக்கு அருமருந்து செக்ஸ்! பெண்களுக்கும் இது பொருந்தும்.
• உடலுறவு ஆஸ்த்மாவை கட்டுப்படுத்தும்.
• மகிழ்ச்சியான உடலுறவில் திளைக்கும் பெண்களுக்கு அழகு கூடுகிறது.
• முடி வளர்வது, சந்திர பிம்பம் போல் வதனம், மேனி எழில் கூடும்.
• ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகிறார்கள். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.
• உடலுறவினால் ரத்த சுழற்சி சீராகி, மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.

ஆணின் பிரச்சனைகள்

ஆண்களில் பாலுறவு பிரச்சனைகள் என்பன உறவு கொள்வதில் ஏற்படும் சிக்கல்களையும், இயலாமையையும் குறிக்கும். ஆண்மைக் குறைவு என அழைக்கப்படும் ஆண்களின் பாலுறவும் பிரச்சனைகள் பலவகைப்படும். இவை உடல் ரீதியானவையும் மனரீதியானவையுமாகும்.

இது உறவு கொள்வதில் விருப்பமின்மை, விறைப்புத்தன்மை அடைவதில் சிக்கல் அல்லது குறைபாடு, விந்தணுக்கள் வெளிப்படுவதில் கோளாறு, விந்தணுக்களின் தரம் மற்றும் அளவு குறைவு, உச்சக்கட்டத்தை அடைவதில் சிக்கல் அல்லது உச்சநிலை அடையாமை ஆகிய அனைத்தையும் குறிக்கும்.
அனைத்து ஆண்மைக்குறைவும் உடல்ரீதியானது மட்டுமல்ல மனரீதியானதும் கூட. பெரும்பாலானவை இரண்டின் கலவையே ஆகும். உடல்ரீதியாகக் தோன்றக் கூடியவை மனரீதியானவையாகவும் மாறலாம். இவை பயம், மனஅழற்சி, அழுத்தம் ஆகியவற்றையும் குறிக்கும். இவை சிறிய பிரச்சனையைக் கூட பூதாகரமாக மாற்றிடக்கூடும்.
பல சமயங்களில் ஆண்களைப் பெண்கள் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள அழைப்பதால் ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்த கட்டாயப்படுத்தப்பட்டு உறவு கொள்ளச் செய்யும் நிலையால் மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் ஆணின் ஒரு சிறிய பிரச்சனை கூட பெரிய பிரச்சனையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. ஆண்களின் இயல்பான பாலுறவு நிலையில் சம அளவு பங்கு மனதிற்கும் உடலுக்கும் உள்ளது. மனத்தளவில் ஆரம்பமாகும் ஆசை, உடலில் பரவி நரம்புகள் வலுப்பெற்று இரத்த ஓட்டம் அதிகமாகி முடிவாக சில சுரப்புகளை சுரக்கின்றது. எனவே தான், மனமும் உடலும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. பல தருணங்களில் மனமும், உடலும் சேர்ந்தே உறவைக் கட்டுக்குள் வைத்து தேவையான தருணத்தில் ஆரம்பமாகி தேவையான சமயத்தில் உச்ச நிலையை அடைய வைக்கின்றது. பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு என்பது கீழ்க்கண்ட ஐந்து வகைகளிலேயே ஏற்படுகின்றது.
1. விருப்பமின்மை
உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதையே இது
குறிக்கும். பொதுவாக எண்ணங்கள், தொடு உணர்வு, நறுமணம், வார்த்தைகள், ஆசை வார்த்தைகள் போன்றவையால் இந்த விருப்பம் தூண்டப்பட வேண்டும். இது இயல்பாக நடைபெறவில்லையெனில் அது ஆண்மைக்குறைவை குறிக்கும். இத்தகைய உணர்வு ஒரு வித உணர்ச்சியை ஏற்படுத்தி உறுப்புகளுக்கு அதிக இரத்தத்தைச் செலுத்தி உறுப்பை விறைப்படையச் செய்திடும். அப்பொழுது நரம்புகள் முறுக்கேறும், தசைகள் வலுப்பெறும். உடலின் அனைத்து தசைகளும் ஒரு வித உணர்ச்சியை உணர்கின்றன.
இதனையே PLATEAU STAGE என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இவ்வாறு ஆரம்பமாவதற்கு எண்ணங்களே ஆரம்பகட்டமாகத் திகழ்கின்றன. அத்தகைய எண்ணங்கள் அனைத்து நரம்புகளையும் முறுக்கேற்றி முடிவில் உச்சநிலையை அடைந்து விந்தணுக்களை வெளிப்படச் செய்த பின்னர் நரம்புகள் முறுக்கு குறைந்து பின்னர் இயல்பு நிலையை அடைகின்றன.
உச்சக்கட்டத்திற்கும் விந்தணுக்கள் வெளிப்படுவதற்கும் எந்த வித சம்பந்தமில்லை. விந்தணுக்கள் வெளிப்படாமல் உச்சநிலையை அடையலாம். உச்சநிலையை அடைந்த பின்னரும் விந்தணுக்கள் வெளிப்படாமல் இருக்கலாம். பொதுவாக ஆண்களுக்கு விந்தணுக்கள் உச்சநிலைகள் அடையும் பொழுது வெளிப்படும். ஒரு முறை விந்தணுக்கள் வெளிப்பட்டால் ஆணுக்கு உடனடியாக விரைப்புத்தன்மை குறைந்திடும். குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் கழித்துத்தான் அடுத்து விரைப்புத்தன்மை அடைய முடியும். இதில் சில விதி விலக்குகளும் உண்டு. பொதுவாக வயதிற்கு ஏற்ப 20 நிமிடங்களிலிருந்து 30 நாட்கள் வரை அடுத்து விரைப்புத் தன்மை அடைய தேவைப்படலாம்.
2. செயல் திறன் குறைபாடு
ஆண்களிடையே செயல் திறன் அளவு பெரிதும் வேறுபடுகின்றது.
சிலருக்கு மிகவும் குறைந்த வேகமும் செயல் திறனும் போதுமானதாகும். வேறு சிலருக்கு அதிக வேகமும் செயல்திறனும் தேவைப்படுகின்றது. செயல்திறனில் குறைபாடு மன அழுத்தத்தாலும் உடல் அசதியானலும் வேறுபட வாய்ப்புள்ளது. வயது அதிகரிக்க அதிகரிக்க வேகமும் செயல்பாடு குறைந்து கொண்டே செல்வது இயற்கையானதே. மாறாக சிலருக்கு எப்பொழுதுமே வேகமும் செயல்பாடும் குறைந்தே காணப்படுவது தம்பதியினரிடையே பல குழப்பங்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
சிலருக்கு எப்பொழுதுமே குறைவான வேகமும் செயல்திறனும் இருக்கலாம். சிலருக்கு மன அழுத்தம், வெறுமை, சோர்வு, தளர்ச்சி, அசதி போன்றவற்றாலும் இது நிரந்தரமாக ஏற்படலாம். சிலருக்கு பிற மருந்துகளால் கூட இவ்வாறு ஏற்படலாம். (உயர் இரத்த அழுத்தம், மனஅழுத்தம், சோர்வு) சிலருக்கு தம்பதியினரிடையே ஏற்படும் மனவேற்றுமை காரணமாகக் கூட இவ்வாறு குறைந்த வேகமும், செயல் திறனும் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறைவான வேகமும், செயல்திறனும் கொண்டவர்களை உறவைப் பற்றி சிந்திப்பதையே குறைத்துக் கொள்கின்றனர். அவர்கள் உறவு கொள்வதையே விரும்புவதில்லை. அவர்களுக்கு தொடுவது, ஆசைவார்த்தைகள், காட்சிகள் கூட செயல் திறனை தோற்றுவிப்பதில்லை. அவர்களால் விறைப்புத்தன்மை அடைய முடிவதில்லை. இவ்வாறு பல சிக்கல்கள் ஏற்படுவதால் அத்தகைய ஆண்கள் தன் துணையை விட்டு விலகி இருப்பதையே விரும்புகின்றனர். வேறு சிலர் தன் மனைவியின் தேவைக்கேற்ப மட்டும் நடந்துக் கொண்டு அவளின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கின்றனர்.
இப்பிரச்சனை உடையவர்கள் மருத்துவரை அணுகி கலந்தாலோசித்து தங்கள் பிரச்சனையை எடுத்துக் கூறினால் நிச்சயமாக நல்ல தீர்வு காண முடியும். ஒரு இரத்தப் பரிசோதனை செய்து ஆண் ஹார்மோன் (டெஸ்டோஸ்டீரோன்) அளவை பரிசோதித்து தேவை ஏற்பட்டால் வெளியிலிருந்து உட்செலுத்தி சீரமைக்கலாம். அல்லது மனரீதியான பிரச்சனையாக இருந்தால் அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி தேவையான மருந்துகளைக் கொடுத்து அவர்களின் பிரச்சனைகளை விட்டு வெளிவர வழி வகுத்திடலாம்.
3. விரைப்பின்மை
விரைப்பின்மை என்பது ஆண்களின இனப்பெருக்க உறுப்பு உறவு
கொள்ள ஏதுவாக பெரிதாக ஆக முடியாமல் விரைப்பில்லாமல் இருப்பதையே குறிக்கும். எல்லா ஆணும் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் இத்தகைய பிரச்சனையை அனுபவிக்க நேரிடுகின்றது. ஆனால் அந்த விரைப்பின்மையே தொடர்ச்சியாக அடிக்கடி ஏற்படும் பொழுது தான் இத்தகைய பிரச்சனை பற்றி கவலைப்பட வைக்கின்றது. எப்பொழுதோ ஏற்பட்டு மறைந்தால் அது ஒரு பிரச்சனை அல்ல. தொடர்ச்சியாக ஏற்பட்டால் தான் பிரச்சனை.
விரைப்பின்மை பல விதமாக அமைகின்றது. விரைப்புத் தன்மை முற்றிலுமாக ஏற்படாதது முதல் போதுமான அளவு விறைப்புத்தன்மை அடைய முடியாமை வரை உள்ளது.
விரைப்புத்தன்மை ஏற்பட ஆண் உறுப்பு பெரிதாக ஆக வேண்டும். அதிக இரத்தம் உள்ளே செல்ல வேண்டும். குறைவான இரத்தமே வெளியே செல்ல வேண்டும். அப்பொழுது தான் விரைப்புத் தன்மை கிடைக்கும். ஒரு பெண்ணின் உறுப்பினுள் நுழைவதற்கு ஆணின் உறுப்பு இவற்றினாலேயே அதிக நீண்ட நேரம் இருக்க வேண்டியுள்ளது. இது முடியாமல் போகும் பொழுது விரைப்பான தன்மை ஏற்பட்டாலும் அது தேவையான போதுமான அளவாக அமைவதில்லை.
இதற்குக் காரணங்கள்
இரத்த நாளங்களில் குறைபாடு, நரம்புகளில் குறைபாடு, ஆண் சுரப்பியின் பற்றாக்குறை, அறுவை சிகிச்சை ஏற்படுத்திய குறைபாடு, சத்தும் குறைபாடு என பல ஆகும். இவை அனைத்திற்கும் தகுந்த மருந்துகள் உள்ளன. தகுந்த மருத்துவரை அணுகி இருக்கும் பிரச்சனையை ஒளிவு மறைவில்லாமல் எடுத்துக் கூறி மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று வாழ்க்கையை சந்தோஷமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ளலாம்.
4. விந்து முந்துதல்
விந்து முந்துதல் என்பது ஒரு ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்பினுள்
நுழைந்தவுடன் ஏற்படுவது, உச்சநிலையை அடையாமல், விந்து வெளிப்படுவது, போதுமான நேரம் உறவு கொண்டு பின்பு விந்து வராமல் முன்பே வருவது. பெண்ணின் தேவைக்கேற்ப செயல்பட முடியாமல் விந்து வெளிப்பட்டு விரைப்புத் தன்மையை இழப்பது போன்ற பல தரப்பட்ட பிரச்சனைகளையும் குறிக்கும்.
அனேக இளவயது ஆண்கள் இத்தகைய பிரச்சனையே அனுபவிக்கின்றனர். தாங்கள் விரும்புவதை விட தங்கள் துணைவியர் விரும்புவதை விட வெகு விரைவாகவே விந்து வெளிப்பட்டு விரைப்பு குறைந்து விடும். இது பெண் உறுப்பினுள் சென்ற ஒரிரு நிமிடங்களில் ஏற்பட்டு விடுகின்றது.
விந்து முந்துதல் ஒரு நோய் அல்ல. சில ஆங்கில மருத்துவர்கள் இதனை மனரீதியானது எனவும், வேறு சில ஆங்கில மருத்துவர்கள் இது ஆண் உறுப்பு மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியதாக மென்மையாக இருப்பதனால் ஏற்படுகின்றது. என கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆயுர்வேத மருத்துவம் இதனை உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் ஏற்படுகின்றது எனவும், இதற்கு உடலின் ஜீரண சக்தி இரத்த ஒட்டம் உஷ்ண நிலையில் உயர்வு போன்ற பல காரணமாகின்றன எனவும், இவை அனைத்தையும் சீரமைத்தால் சரியாகி விடும் என நம்பிக்கை அளிக்கின்றது. இதற்கு உயர்வான அதி உன்னத மூலிகை கலவைகள் அடங்கிய மூலிகை மருந்துகள் நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை முற்றிலும் மூலிகைகளால் ஆனவை. பக்க விளைவுகளற்றவை, பாதுகாப்பானவை, நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக உபயோகப்படுத்தக் கூடியவை. உடல் உஷ்ணத்தைப் பற்றி தனியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
5. விந்து வெளிப்படாமை
இயல்பான நிலையில் ஆண் உச்சநிலையை அடையும் பொழுது
சிறுநீர்ப்பை மூடிக்கொள்ளும். விந்தணு மட்டும் விந்தணுப்பையிலிருந்து ஆணுறுப்பு வழியாக வெளியேறும். ஆனால் சில சமயங்களில் இது நடைபெறும் பொழுது சிறுநீர்ப்பை மூடாமல் திறந்த படியே இருக்கும். இதனால் உறவு இயல்பாக நடைபெறும். உச்ச நிலை ஏற்படும். விந்தணு வெளியேறும். ஆனால் அது ஆண் உறுப்பு வழியாக வெளியேறாமல் அது சிறுநீர்ப்பையினுள் விழுந்து விடும். இது பல ஆண்களுக்கு சர்க்கரை வியாதியால் ஏற்படலாம். சில சமயங்களில் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் அடியால் ஏற்படலாம் அல்லது தவறான அறுவை சிகிச்சையால் கூட ஏற்படலாம். இதனால் எந்த ஒரு பாதிப்போ பிரச்சனையோ ஏற்படாது. ஆனால் கர்ப்பம் உண்டாக்க மட்டும் வாய்ப்பில்லாமல் போய்விடுகின்றது. குழந்தை வேண்டுபவர்கள் இப்பிரச்சனையை சரி செய்துக் கொள்ளலாம்.
ஆயுர்வேத மருத்துவம்
பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதனை முதலில் முழுவதுமாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். அதனை மருத்துவரிடம் (தகுந்த மருத்துவரிடம்) எடுத்துக் சொல்லி, அவரது அறிவுரையையும் மருத்துவத்தையும் பெற வேண்டும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடிய மருந்துகள் உள்ளன. அவற்றை தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படி சரியாக உபயோகித்து வந்தால் வாழ்நாள் முழுவதும் இப்பிரச்சனைகள் ஏழாது. அதி உன்னத மூலிகைக் கலவை மருந்துகள் உள்ளன.
அவற்றை சரியான அளவுகளில் சரியான ஆலோசனையின் பெயரில் தொடர்ச்சியாக உபயோகித்து வர எத்தகைய ஆண்மைக்குறைவாக இருந்தால் சரி செய்திடலாம்.
எல்லா மருத்துவ முறைகளிலும் இப்பிரச்சனைகளுக்கு மருந்துகள் இருக்கின்றன.
ஆனால் ஆயுர்வேத மருத்துவ முறையில் தான் பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறை உள்ளது. ஏனெனில் ஆயுர்வேத மருந்துகள் மூலிகைகள் மட்டுமே அடங்கியவை. இன்னும் என்ன யோசனை?
தகுந்த மருத்துவரை நாடுங்கள். வாழ்வை வளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்!

மனோரீதியான பாலியல் குறைபாடுகள்

பாலியல் குறைபாடுகள் உடல் கோளாறுகளால் மட்டுமல்ல, உள்ளக் கோளாறுகளாலும் உருவாகும் என்பது தற்போது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை.

உடல் உறவின் அவசியம்
இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல்களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும்.
உடல் உறவு என்பது அற்ப நேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீப கால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுப்படுத்தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும். பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன. உடலுறவு கொள்வதால் மனஇறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது.

பாலியல் குறைபாடுகள் – ஆண்கள் (முன்பே சொன்னபடி)
1. உடலுறவின் ஆசையின்மை
2. குறைந்த வீரியம்
3. விறைப்பின்மை
4. விந்து விரைவாக வெளியேறுதல்
5. பின்னோக்கி விந்து வெளியேறுதல்
ஆண்கள் பெண்களின் பாலியல் குறைபாடுகளுக்கு உடல்ரீதியாக
பலகாரணங்கள் உள்ளன. ஆனால் நாம் இங்கு பார்க்கப் போவது மனோரீதியான காரணங்களே.
குழந்தைப்பருவம், யௌவன பருவம்
ஒரு குழந்தை தனது செயல்களுக்கு, தந்தை – தாயையே ஆதாரமாக கொள்கிறது. அவர்கள் சொல்வதையும், செய்வதையும் தான் குழந்தை திருப்பி செய்கிறது. ஆண்குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அதற்கு விறைப்புத்தன்மை உண்டாகிறது – அதுவும் தொப்பூழ் கொடியை அறுக்கும் முன்பே, பிறந்தவுடன் பெண்குழந்தைகளுக்கு ஒரு வித ஈரம் பிறப்பிறுப்பில் ஏற்படுகிறது.
இதனால் பிறக்கும் போதே பாலியல் உணர்வுடன் குழந்தைகள் பிறக்கின்றன என்பது தெரிகிறது. இரண்டிலிருந்து ஐந்து வயதுக்குள் தங்கள் பிறப்புறுப்புகளை தொடுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குழந்தைகள் புரிந்து கொள்கின்றன. அதே சமயம் குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் தான் பிறப்புறுப்புகளை தொடுவதை விரும்பவில்லை என்றும் தெரிந்து கொள்கின்றனர். இந்த கட்டுபாடு தீவிரமாக பெற்றோர்களால் கடைபிடிக்கப்பட்டால், பிற்காலத்தில் பாலியல் ஒரு அருவருப்பான செயல் என்ற மனப்பான்மை ஏற்பட்டு விடும்.
ஆறு, ஏழு வயது குழந்தைகள் ஆண், பெண் பேதங்களை நன்றாக புரிந்து கொண்டு விடும். பாலியல் பற்றியும் ‘இலை மறைவு – காய் மறைவாக’ புரிந்து கொள்ளும். இந்த குழந்தை பருவங்களில், பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில், பெற்றோர்களின் கண்டிப்பே பிற்காலத்தில் அந்த குழந்தையின் பாலியல் கோளாறுகளை மனோரீதியாக உருவாக்கலாம். பருவமடைந்த காலத்தில் (12 லிருந்து 17 வயது வரை) சிறுவர்கள், சிறுமிகளும் ‘பெரிய’ மனிதர்களாகின்றனர்! இந்த காலத்தில் இவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது பெற்றோர்களுக்கு ஒரு நீங்காத தலைவலி!
சுய இன்பம் அதுவும் யௌவன பருவ வாலிப பருவ ஆண்களுக்கு அறிமுகமாகிறது. பாலியல் கற்பனைகள், கனவுகள் ஏற்படுகின்றன. இந்த பருவகாலத்தின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் (வாலிப குழந்தைகள்) கவனமாக கண்காணித்து ஆக்க பூர்வமான சிந்தனைகளால் பாலுணர்வுகளிலிருந்து திசை திருப்ப முயன்றால் நல்லது. அனுபவங்கள் தான், பிற்கால மண வாழ்க்கையை நிர்ணயிக்கும். பெண்களிலும் சுய இன்பம் காண்பவர்கள் இருக்கிறார்கள். மேலை நாடுகளில் தாய்மார்கள் தங்களின் யௌவன மங்கையர்களுக்கு தினசரி கொடுக்கும் விட்டமின் மாத்திரையுடன் கருத்தடை மாத்திரையும் சேர்த்து கொடுப்பது வழக்கமாம். நமது தேசத்தில் அந்த நிலைமை இன்னும் வரவில்லை. ஏனென்றால் இந்தியாவில் பெற்றோர்கள் செக்ஸ் விஷயங்களை குழந்தைகளுடன் பேசுவதில்லை. ஏன், கணவனும், மனைவியுமே பாலுணர்வை பற்றி பேசுவதே அபூர்வம்!
சுய இன்பம் (Masturbation)
பருவ காலத்தில் செய்யும் இந்த செய்கையில் தவறில்லை. ஆனால் இதனால் ஏற்படும் பின் விளைவுகள், மனோ ரீதியாக பாதிக்கும். நமது பெரியோர்களும், மருத்துவர்களும், இலக்கியங்களும் இது ஒரு கெட்ட பழக்கம், “விந்து விட்டவன் நொந்து கெடுவான்” என்று பயமுறுத்தி வந்திருப்பதால், இதை செய்து விட்டு வருந்துவது பாதிப்பை உண்டாக்கும்.
ஆண் குறைபாடுகளுக்கு மனோ ரீதியான காரணங்கள்
1. படபடப்பான பேராவல், மன விசாரம், ஆபத்து வருமோ, முடியாமல் போய்விடுமோ என்ற பயம் (Anxiety), மனச்சோர்வு (Depression).
2. அறியாமை பாலியல் பற்றிய தவறான கருத்துக்கள்
3. பிடிக்காத மனைவி, ஒத்துழைக்க மறுக்கும் மனைவி
4. முன்பே சொன்னபடி வளரும் பருவத்தில் மன பாதிப்புகள், பயம், தன்னம்பிக்கை இல்லாதது.
சிகிச்சை முறைகள்
அலோபதி மருத்துவத்தில் மருத்துவம், மனோதத்துவ சிகிச்சைகளும் சேர்ந்து உபயோகிக்கப்படுகின்றன. ஸில்டெனாபில் (வயாகரா) போன்ற மருந்துகள் நல்ல பலனை அளிக்கின்றன. ஆனால் இவைகளை டாக்டரின் கண்காணிப்பில் உபயோகிக்க வேண்டும். மனோதத்துவ முறையில் Sensate Focussing எனப்படும் சிகிச்சை தரப்படும்.
ஆயுர்வேத மருந்துகள்
ஆயுர்வேத சிகிச்சைகள், பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கும், குறிப்பாக மனக்கோளாறுகளுக்கும் முழுமையான பயனை அளிக்கும். பஞ்சகர்மா, ரசாயனம், வாஜீகர்ணம் முதலிய சிகிச்சைகள் அளிக்கப்படும். பிறகு திரிதோஷக் கோளாறுகள் சீராக்கப்படும். இதில் சத்துணவு, யோகா, மூலிகைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் அடங்கும். இவ்வாறு வியாதியின் அடிப்படை காரணம் களையப்படும். சதவாரி, சங்கு புஷ்பம், அஸ்வகந்தா, குடூச்சி, ஜடமான்சி போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத வைத்தியரை அணுகி, பயனடையவும்.

செக்ஸ் சிகிச்சை
உணர்வுகளை ஒருமயப்படுத்துதல் (Sensate Focus Technique)
தாம்பத்திய உறவு குறைபாடுகள் மனோரீதியாக ஏற்பட்டிருந்தால் இந்த முறை பயனளிக்கும். இந்த சிகிச்சையின் நோக்கம் – உடலுறவு செயல்பாட்டை பற்றிய டென்ஷனை, பதட்டத்தை தவிர்ப்பது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் எந்த செயல்பாடுகள் தங்களுக்கு கிளர்ச்சியூட்டும் என்பதை கண்டறிவது. குறைந்த இச்சை, உடலுறவில் நாட்டமின்மை, உச்சக்கட்டத்தை அடைய முடியாமை மற்றும் ஆணுறுப்பின் விறைப்பின்மை, இவற்றுக்கு (மனோ ரீதியாக) இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சிகிச்சை மூன்று நிலைகளில் செய்யப்படும். தம்பதிகள் ஒரு நிலையில் திருப்தி அடைந்த பின் அடுத்த நிலைக்கு செல்லலாம்.
முதல் நிலையில் தொடுதல் மூலமாக ஒருவருக்கொருவர் பரிச்சயமாதல். செக்ஸ் உணர்வு மற்றும் உடலுறவு நோக்கங்களை தவிர்த்து விட்டு, பிறப்புறுப்புகள், மார்பகம் தவிர, வேறு இடங்களில் மனைவி மாற்றி கணவன் என்று மாறி மாறி தொட்டுக் கொள்ள வேண்டும். இந்த தொடுதலால் ஏற்படும் சுகத்தை, எங்கு எப்படி தொடுவது என்பதையும் அறிய வேண்டும்.
இரண்டாம் நிலையில் தம்பதிகள், ஒருவர் மற்றவரின் உடலில் எல்லா பாகங்களையும் தொடுவது. (மார்பக, பிறப்புறுப்பு உட்பட). மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இந்த நிலையிலும் நோக்கம் தொடுதல் உணர்வை குவியச் செய்வது தான். உடலுறவுக்கு அனுமதியில்லை. மூன்றாம் கட்டத்தில் தொடுதலை அதிகரித்து உடலுறவு கொள்வது. உச்சக்கட்டம் அடைவது முக்கியமல்ல. தொடுதலால் ஏற்படும் சுகம் உணரப்படுதல் முக்கியம்.

ஆண்மைக் குறைவில் பெண்ணின் நிலை

பொதுவாகவே பெண்கள் அனைத்து பிரச்சனைகளையுமே தன்னுள் போட்டு புதைத்து வைத்து கொள்ளும் தன்மையை உடையவள். தன்னையே குறை கூறிக் கொள்ளும் சுபாவம் உடைவள். இதன் காரணமாக அவள் தன் கணவரின் ஆண்மைக் குறைவுக்கு தான் தான் காரணம் என்றும், தான் இளமையில் முன்பு இருந்ததைப் போல இப்போது அழகாக இல்லை என்றும், தன்னிடம் இளமைக் கவர்ச்சி மிகவும் குறைந்து விட்டது என்றும் எண்ணி வருத்தப்படுவாள். ஆண்மைக் குறைவு என்பது ஆணின் பல வகையான பிரச்சனைகளை உள்ளடக்கியதாகும். அவற்றில் கணவனின் விறைப்பு தன்மை இல்லாமை (Erectile Dysfunction) என்பது ஒரு மனைவியை மிகவும் மனரீதியிலான பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடியதாகும். விறைப்பு இல்லாமை என்பது… ஒரு ஆணின் முழுமையான உடலுறவுக்கு தேவையான விறைப்பு இல்லாததையும், போதுமான நேரம் விறைப்புத் தன்மை நீடிக்காமல் இருப்பதையும் உள்ளடக்கியதாகும். விறைப்பு இல்லாமை எல்லா ஆண்களுக்கும், அவர்களது வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் கட்டாயம் ஏற்படும் ஒரு நிலைமை. மன அழுத்தத்துக்கு உள்ளாவது, மனச் சோர்வு நிலை, பயம் கொள்வது, கவலைப்படுவது… போன்றவற்றால் ஏற்படலாம். இந்த நிலைமை சில ஆண்களுக்கு ஒரு சில நாட்கள் மட்டும் இருந்து தானாகவே மறைந்து, சகஜ நிலைமையினை அடைந்து விடலாம். சில ஆண்களுக்கு அதுவே முற்றிய நிலையை அடைந்து, முழுவதுமாக விறைப்பு இல்லாமல் போய் விடுவது உண்டு.
பெண் தனது கணவனின் விறைப்பு இல்லா நிலைமைக்கு தான் தான் காரணமோ என்று எண்ணுவது போல, சில ஆண்கள் விறைப்பு இல்லாமைக்கு, தனக்கு இளமை குறைந்து விட்டது என்றோ, தனக்கு வயது அதிகமாகி விட்டது என்றோ தான் எண்ணுகிறார்களே தவிர… இப்படி ஏற்படக் காரணமான பிற உடல் நலக் குறைகளைப் பற்றி கவனத்தில் கொள்ள தவறி விடுகின்றனர். இது போன்ற குறைபாடு தோன்ற சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் அழுத்த பிரச்சனை, உடம்பில் அதிகரித்துவிட்ட கொலஸ்ட்ரால் அளவு, இதய நோய்கள் போன்றவையும் காரணமாக இருக்கலாம் என்பதை அறிய மறந்து விடுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் போன்ற குறைபாடுகளுக்காக சாப்பிடுகிற மருந்துகளின் பக்க விளைவாகக் கூட இருக்கலாம் என்பதும் பல ஆண்களுக்கு தெரிவதில்லை.
ஒரு கணவனுக்கு முதல் முறையாக விறைப்புத் தன்மையில் பிரச்சனை ஏற்படுகிற போது… ஏன் இப்படி ஏற்படுகின்றது, என்று பலமான கவலை மனைவியை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறது. இதனால் அவள் பலவாறாக சிந்திக்கிறாள். நாம் முன்பை விட இப்போது அழகாக இல்லையோ? இவருக்கு தன்னை பிடிக்கவில்லையோ? வேறு எந்த பெண்ணுடனாவது இவர் தொடர்பு கொண்டுள்ளாரோ? இதனால் ஏற்பட்ட வெறுப்பு தான் காரணமோ? என்றெல்லாம் கூட பல கோணங்களில் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறாள்.
இப்படி எழுகிற சந்தேகங்களை எல்லாம் மனச் சிறையிலேயே போட்டு புதைத்து வைத்துக் கொண்டு தனக்குள்ளேயே புழுங்கிக் கொள்கிற பெண்களும் இருக்கிறார்கள். இன்னும் சில பெண்கள் வெளிப்படையாக தனது சந்தேகத்தினை கணவனிடம் கொட்டித் தீர்ப்பவர்களும் இருக்கிறார்கள். இதன் விளைவாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு, கோபம், சண்டைச் சச்சரவு என ஆரம்பிக்கலாம். பெண்கள் ஆணின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் தேவையற்ற கோணங்களில் சிந்தித்து… பிரச்சனை பலூனை ஊதி ஊதி பெரிதாக்கி விடுவார்கள். இதன் காரணமாக இருவரும் இணைந்து குடும்பத்தில் பொதுவான விஷயங்களைக் கூட மனம் விட்டு பேசிக் கொள்வது அரிதாகி விடலாம். இத்தகைய தவறான எண்ணங்களை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல், கணவன் மனைவி இரண்டு பேரும் மனம் விட்டு… கலந்து பேசி ஆலோசனை செய்ய வேண்டும். ஏன் இப்படி ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து, அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளை பெறுவது, தேவைப்பட்டால் மருந்துகளை உட்கொள்வது போன்றவற்றினை மேற் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல், கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டால் பிரச்சனை மோசமாகி விடும்.
ஆயுர்வேத மருத்துவ முறையில் ஆணின் செக்ஸ் உணர்வையும், பெண்ணின் செக்ஸ் உணர்வையும் அதிகரிக்க நிறைய மருந்துகள் உள்ளன. ஆண் முழுமையான விறைப்பைப் பெற்று அதிக நேரம் உடலுறவு கொள்வதற்கும் நல்ல, பக்கவிளைவுகளற்ற மருந்துகள் உள்ளன. ஆணின் விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் அற்புதமான ‘பூனைக்காளி’ என்ற மருந்து உள்ளது. ஆணின் நரம்புகளை முருக்கேற்றும் செக்ஸ் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் அமுக்கிரா கிழங்கு உள்ளது. அதிக நேரம் விறைப்பு நீடிக்க கோரைக் கிழங்கு, முருங்கை விதை, முருங்கைப் பிசின் போன்றவையும் உள்ளன. பாலியல் உணர்வை அதிகப்படுத்தும் அக்கிரகாரம் போன்ற மருந்தும் உள்ளது.
இவைத் தவிர உணவில் எள்ளு, பால், தேன், பிஸ்தா, பாதாம், குங்குமப்பூ, சிறிய வெங்காயம், முருங்கைக் காய் போன்ற பொருட்களை அதிகம் சேர்த்து வந்தாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும்.
ஆணின் உடல் ஆரோக்கியமும், செக்ஸ் செயல்பாடும் ஆணிடம் மட்டுமல்ல; பெண்ணின் கையிலும், மனசிலும் உள்ளது என்பதனை பெண் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
இந்த விஷயங்கள் தனியே தரப்பட்டுள்ளன.
அண்மைக் காலமாக மணவாழ்கைக் கொண்டிருக்கும் தம்பதியர் களிடையே, மறைமுகமான ஒரு மனக்குறைபாடு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. தம்பதியர்களுக்கு இடையே இருக்கின்ற பாலியல் ஓத்தியல்பு (Sexual Compatibility) என்பது இயற்கையில், தன்னிச்சையாக ஏற்படுவது என்று தான் பெரும்பான்மையானவர்கள் நம்புகின்றனர். உண்மையில் அது போன்று எதுவும் இல்லை. பாலியல் ஓத்தியல்பு கொண்ட தம்பதிகளாக மற்றவர்களுக்கு தோற்றம் அளிக்கின்ற பல பேர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரணையாக நடந்து கொள்பவர்கள் தான். அதாவது, தங்களின் தேவைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொண்டவர்கள். சிலருக்கு இது எளிதாக, இயல்பாகக் கைக்கூடி வந்திருக்கும். இன்னும் சிலர் பல முயற்சிகளுக்குப் பின்னர் இந்நிலையை அடைந்திருப்பார்கள். இல்லற வாழ்வின் இனிமையான ரகசிய வித்தையினை உணராத பல தம்பதியர் எங்களது மணவாழ்க்கை ஒத்தியல்பு கொண்டதல்ல (We are incompatible) என்று கூறி, பாலுறவில் பற்றற்று வாழ்கின்றனர்.
பாலுறவுக்கு எந்தவிதமான அளவுகோலும் இல்லை. காலத்துக்கு காலம் இது மாறக் கூடியதாகும். வெற்றிகரமான மணவாழ்க்கையை நீண்டநாள் வாழ்பவர்கள் கூட சில நேரங்களில் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போகத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். ஒத்தியல்பு இல்லாதவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு இல்லற வாழ்க்கையில் இனிமை காண வேண்டும்.