Tuesday, February 26, 2013

சந்தோஷத்தில் சொர்க்கம் இருக்கு

‘சின்ன சின்ன விஷயங்களும் சந்தோஷம் தரும்; ஆனால் சந்தோஷம் என்பது சின்ன விஷயமல்ல!’ என்று ஒரு ஜப்பானிய பொன்மொழி உண்டு. ஆம்! வாழ்க்கையில் நாம சந்திக்கிற, பெறுகிற சிறுசிறு அனுபவங்கள் ஒவ்வொன்றும் நமக்கு பெரிய பெரிய சந்தோஷத்தினை தர வல்லதாக இருக்கும். வீட்டில் இருக்கும் மனைவிக்கு எல்லா வசதியும் இருக்கும். கூப்பிட்டக் குரலுக்கு ஓடோடி வந்து ஏவல் புரிய வேலைக்காரர்கள் நிறைய இருப்பார்கள். தங்க நகைகளுக்கும் பஞ்சமிருக்காது. ‘வண்ணச் சீறடி மண் மகள் அறிந்திளல்’ என்று சொல்லுமளவுக்கு தரையில் பாதம் பதிக்காமல்… எங்கும் காரில் செல்லும் வசதியிருக்கும். பணம் எங்கும் மிதிபடும். எந்த ஆடையை இன்றைக்கு உடுத்திக் கொள்வது என்று குழம்பும் அளவுக்கு, வீட்டு அலமாரியில் ஆடைகள் அணிவகுப்பு நடத்தும். ‘ஞானஒளி’ திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஒரு பாடலில் சொல்வது போல, ‘ஆயிரம் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைன்ட்’ என்கிற டைப்பில் தான் மனைவியின் முகத்தில் சந்தோஷம் மைனஸ் ஆகியிருக்கும்.
என்ன காரணம் என்று பார்த்தால்… கணவனின் அருகாமை என்பது அபூர்வமாக அமைந்திருக்கும். எப்போது வீட்டுக்கு வருவான் என்றே தெரியாது. அப்படியே வீட்டுக்கு வந்தாலும் அவனுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகளை மனசில் சேமித்து வைத்துக் கொண்டு சஞ்சல முகமூடியுடன் இருப்பான். கலகலப்பு என்பது அவனது முகத்தில் காணாமல் போயிருக்கும். அல்லது கணவன் பணி காரணமாகவோ, தொழில் நிமித்தமோ தூரமான இடத்தில் மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்வான். இன்றைய நாட்களில் பல வீடுகளில் நிலவும் பிரச்சனை இது. மனைவியின் அன்பை, காதலை, உணர்ச்சியை மதிப்பவர்கள் தங்கள் மனைவியை இப்படி ஒரு சிக்கலுக்கு உள்ளாக்க மாட்டார்கள்.
பணம் வாழ்க்கைக்குத் தேவையானது தான். ஆனால், அதற்காக தன்னையே நம்பி வந்த தேவதையின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் பணத்தையே நேசிப்பது தவறல்லவா? அப்படியானவர்கள் பணத்தை தான் கல்யாணம் செய்து கொண்டு இருக்க வேண்டும். ஒரு பெண்ணை அல்ல

No comments:

Post a Comment