Tuesday, February 26, 2013

ரிலாக்ஸ் ப்ளீஸ்

அவசரமான நமது வாழ்க்கை முறையை எவ்வாறு தளர்த்திக் கொள்வது என்பதை பார்ப்போம்.
தியானம் தரும் நிம்மதி
தியானம் செய்கின்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தியானம் நமது அன்றாட அவசரமான வாழ்க்கைக்கிடையில் நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள மிகுந்த பயன் தருகின்ற விசயமாகும். நமது முறுக்கேறிய விசைப் போன்ற நரம்புகளுக்கு தியானம் மிகுந்த தளர்ச்சியை தந்து நம்மை ரிலாக்ஸ் செய்கிறது.
யோகாசனம் செய்யுங்கள்
யோகாசனத்தை போன்ற நம்மை தளர்த்தி விடுகின்ற வேறு கலை இல்லை. யோகாசனம் என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல. அது நமது மனத்தையும் தளர்த்தி நம்மை உற்சாகமூட்டுகிற ஒரு அற்புதமான கலையாகும். மனசுக்கும் உடம்புக்கும் ஒரே நேரத்தில் எது புத்துணர்ச்சியைத் தருகின்றதோ அது தான் நம்மை இந்த அவசரமான வாழ்க்கைச் சூழலிலிருந்து தப்பிக்க வைத்து நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கும்.
மனம் விட்டு பேசுங்கள்
அன்றாடம் உங்கள் மனைவியுடனோ அல்லது நீங்கள் பெரிதும் விரும்பும் நபரிடம் மனம் விட்டு பேசுங்கள். அது உங்களின் மன இறுக்கத்துக்கு வடிகாலாக அமைந்து மனசுக்கும், உடம்பிற்கும் ரிலாக்ஸாக அமையும். அப்படி பேசுகின்ற பொழுது பெரிதும் நடந்த உண்மையை, ஒளிவு மறைவின்றி பேசுவது மாதிரி உங்கள் மனப்பகிர்வு இருக்க வேண்டும்.
விளையாடுதல்
விளையாட்டை விளையாட்டாக இந்த காலத்தில் மேற்கொள்வதில்லை. விளையாட்டு ஒரு சிறந்த உடற்பயிற்சி. அது உடம்பிற்கு சிறந்த ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றது. என்பது மட்டுமே பலருக்கு தெரிந்த விசயம். விளையாட்டு என்பது எந்த விளையாட்டாக வேண்டுமானாலும் இருக்கலாம். நம் மனதிற்கு ஒரு வடிகாலாய் அமைந்து நம்மை ரிலாக்ஸ் படுத்தும் ஆற்றல் விளையாட்டிற்கு உண்டு. மிகப் பெரிய தொழிலதிபர்கள், மிகப்பெரிய பணக்காரர்கள் வாரம் ஒரு நாளாவது விலையுயர்ந்த விளையாட்டான பில்லியர்ட்ஸ், கோல்ப் போன்ற விளையாட்டுகளை மேற்கொள்ளுவதைப் பார்க்கலாம். விளையாட்டில் நீச்சல் பயிற்சி, ஸ்கிப்பிங் மற்றும் தினமும் காலாற அல்லது வேகமாக மேற்கொள்கிற நடைப்பயிற்சியும் அடங்கும்.
டைரி எழுதும் பழக்கம்
தினமும் இரவு நேரத்தில் படுக்க செல்லுகின்ற பொழுது டைரி எழுதி விட்டு செல்லும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். இந்த பழக்கம் மன பாரத்தைக் குறைக்கும்.
இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்
இசை மிக மிக அற்புதமான விசயம். தினமும் உங்களுக்கு பிடித்தமான இசையை ரசிப்பதை ஒரு பெரும் பழக்கமாகவே வைத்துக் கொள்ளுங்கள். இசை நமது உடம்பின் நோயையே குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது என்கின்ற ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் நம்மை வியப்பில் ஆழ்த்தி கொண்டிருக்கின்றன. இசை நமது சோகம், துயரம் அனைத்தையும் மறக்கடிக்கின்ற சர்வ வல்லமை பொருந்தியது என்பதை நாம் அறிவோம். இப்படி சோகத்தைக் கூட கரைந்துருக செய்கின்ற இசையானது நமது அவசரகதியிலான வாழ்க்கைக்கு இடையே புகுந்து நம்மை ரிலாக்ஸாக்குவது இசைக்கு ஒன்றும் கஷ்டமான செயல் அல்ல. அது சினிமா பாட்டாகவும் இருக்கலாம். அல்லது நீங்களே இட்டு கட்டி பாடும் பாட்டாகவும் இருக்கலாம்.
பொழுது போக்கு
உங்களுக்கென்று ஏதாவது ஒரு பொழுது போக்கு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எங்கே சார்…. நேரமே பத்தலை. இதுல பொழுது போக்கவா? என்று கேள்வி கேட்க வேண்டாம். நிஜத்தில் நாம் நிறைய நேரங்களைக் கழிக்கின்றோம் என்பது தான் உண்மை. புத்தகம் படித்தல், பழைய பொருட்களை சேமித்தல், பறவை பார்த்தல், இயற்கையை ரசித்தல் போன்ற ரசனைக்குரிய பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றை மேற்கொள்ளலாம். மனம் ரிலாக்ஸாக இவை உதவும்.
இறுக்கமான வாழ்க்கைச் சூழ்நிலையில் நம்மை ரிலாக்ஸ் படுத்துகிற அற்புதமான ஒன்று நம்மிடையே உள்ளது. இதனைத் திருமணமானவர்கள் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும். அது தான் செக்ஸ். செக்ஸ்…. அற்புதமாக, அதிசயமாக மந்திரம் போல மனிதர்களை ரிலாக்ஸ் செய்கின்ற விசயம்.
நாம் எந்த அளவுக்கு நமது அழகிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறோம் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுவது பற்களாகும். பேசும் போதும் சிரிக்கும் போதும் வரிசைக்கிரமமாக இருக்கும் பற்கள் ஒரு தனிக்கவர்ச்சியை பெண்களுக்கும், ஆண்களுக்கும் தருகிறது.
திருமணம் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆண்டவன் தருகிற வரப் பிரசாதமாகும். மனமும் உடலும் ஒன்று சேரும் திருமண வாழ்வில் மனதையும் உடலையும் தூய்மையாக வைக்க வேண்டியது நம் கடமையாகும். உடல் அமைப்பில் பற்களுக்கு மிக முக்கியத்துவம் உண்டு. ஆரோக்கியமான, அழகான பல் வரிசை தான் ஒருவரின் வசீகரத் தோற்றத்திற்கு உதவுகிறது. பற்கள் கோணலாகவும், நீளமாகவும் அமைந்து விட்டால் முக வசீகரமே கெட்டு விடும். அதுவும் பிரச்சனை உரியவருக்கு திருமணம் நடைபெறுவது கூட பெரும் சோதனை தான். அதிலும் பெண்கள் என்றால் இன்னும் சோதனை. திருமணம் தான் முடிந்து விட்டதே என்று அலட்சியமாக இல்லாமல் கணவன் மனைவியின் சந்தோஷமான வாழ்க்கைக்கு பற்களைப் பேணி காப்பது அவசியமாகும்.
உடல் நல பராமரிப்பில் பல் மருத்துவமும் ஒன்றாகும். பற்கள் மிகவும் பேணிக்காக்க வேண்டிய உறுப்பாகும். உலகின் பல்வேறு பாகங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் வாய்த் துர்நாற்றம் ஒரு சமூக பிரச்சனையாகவே கருதப்படுகிறது. திரைப்படங்களில் வரும் விளம்பரங்களில் கணவனை விட்டு மனைவி பிரிவதற்கும், நேர்முக தேர்வில் தோல்வியடைந்தற்கும் காரணம் வாய்த்துர்நாற்றமே என்று காட்டப்படுகிறது. அவை, அளவுக்கும் மீறி சித்தரிக்கப்படுகிறதோ என்று கூட நினைக்கத் தோன்றும். ஆனால் நூற்றுக்கு நூறு உண்மை. இந்தியர்களிடையே அதிகமாக உள்ள நோய் (70%) பல் சொத்தையாகும்.
கணவன், மனைவி உறவில் முத்தம் கொடுப்பது அன்பை வெளிக்காட்டும் செயல். உணர்ச்சிகளின் சங்கமத்தில் முத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் நிலையில் வாய்த்துர்நாற்றம் வீசக் கூடியதாக இருந்தால், அளவுக்கு அதிகமான அன்பே ஒரு வெறுப்பாக மாறி இருவருக்கிடையில் விரிசலை ஏற்படுத்தக் கூடும். இத்தகைய அருவருப்பு ஏற்படும் வாய்த்துர்நாற்றத்திற்கு காரணம் வாய் மற்றும் பல் நோய்களின் அணிவகுப்பே ஆகும்.
காலையில் எழுந்ததும் வாயிலிருந்து ஒரு வித துர்நாற்றம் வீசுவதைக் காணலாம். இதற்கு காரணம், இரவில் வாயில் உமிழ்நீர் உறைவதும், உறைந்து விட்ட படர்திசு வாயில் சுரந்து அகற்றப்படாததுமே ஆகும். பல் சொத்தை, ஈறு நோய்கள், பற்களில் சீழ் கட்டுவது, பற்களுக்கிடையே உணவுப்பொருட்கள் தங்கி அழுகுவது, பற்கள் சரிவர சுத்தம் செய்யாமல், வாய் கொப்பளியாமை போன்றவை காரணமாகும். உடலில் ஏற்படும் பலவேறு வியாதிகளின் காரணமாகவும் வாய்த்துர்நாற்றம் ஏற்படலாம். என்ன காரணம் என்று அறிந்து சிகிச்சை செய்தால் தான் வாய்த்துர்நாற்றம் ஒழியும்.
பெண் என்பவள் கணவரது அன்புக்கும், பரிவுக்கும், பாராட்டுதலுக்கும் ஏங்கும் போது தொடர்ந்து பீடி, சிகரெட் சுருட்டு பிடித்தலால் ஏற்படும் துர்நாற்றமுடன் கணவன் அவளை நெருங்கினால் எப்படி இருக்கும் ?
பல பெண்கள் நகம் கடிப்பதை பேஷனாகவும், விட முடியாத பழக்கமாகவும் கொண்டுள்ளனர். நகத்தினிடையில் சேரும் அழுக்குகள் வயிற்றில் சேரும் என்பது தெரிந்த விசயம். பல்லின் முன் பகுதியும் இதனால் தேயும் என்பது புதிய செய்தி.
பல்லுக்கு சுவர் ஈறுகள். சுவர் இல்லை எனில் சித்திரம் இல்லை. எனவே பல் சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. பல் சுத்தமாக இருந்தாலே கணவன், மனைவி உறவு இனிமையாக இருக்கும்.

No comments:

Post a Comment