Tuesday, February 26, 2013

மகிழ்ச்சிக்கு தாழ் போடாதீங்க

மெனோபாஸ் வந்து மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு செக்ஸ் உணர்வு மிக குறைவாகி விடும் என்று சமுதாயத்தில் நிறைய பேர்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் ஓரளவுக்கு தான் உண்மையிருக்கிறது. மெனோபாஸ் வந்து மாதவிடாய் நின்று போன எல்லா பெண்களுக்கும் இப்படி நிகழ்வது கிடையாது. மாதவிடாய் சுழற்சியானது நின்று போன பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் ஆனது சுரப்பது குறைந்து விடும். இதனால், மாதவிடாய் சுழற்சியானது நின்று போன பெண்களுக்கு உணர்ச்சி குறைந்து போனது போன்ற தோற்றம் காட்டும். பெரும்பாலும் இந்த நிலைமை நிரந்தரமானது அல்ல. எனவே இந்த பெண்களுக்கு செக்ஸ் தூண்டல் அதிகம் தேவைப்படும். இது இத்தகைய பெண்கள் எல்லோருக்கும் பொதுவானது என்பது தான் உண்மை. மாதவிடாய் சுழற்சியானது நின்று போன பெண்கள், தங்களுக்கு வயது அதிகமாகி விட்டது… தங்கள் உடலுறவில் முன்பு போல் அதிவேகத்துடன் ஈடுபட இயலாது என்று நினைத்து உடலுறவை வெறுத்து ஒதுக்கி விடக்கூடாது. இதனால் மன சஞ்சலமும் கொள்ளக் கூடாது. தங்கள் உடம்பில் இயற்கையாக ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டு விட வேண்டும். எனவே இவர்கள் எந்த கலக்கமும் கொள்ளாமல் தொடர்ந்து உடல் உறவில் ஈடுபட வேண்டும். அது தான் இனிமையான இல்லற வாழ்க்கைக்கு அழகு.
படுக்கையறையில் நிகழ்வுறும் நடவடிக்கைகளை 3 நிலைகளாக பிரித்துக் கொண்டு, அப்படியே ஈடுபடுவது மேலும் மேலும் மகிழ்ச்சியை தரும். என்ன அந்த 3 நிலைகள்
உடலுறவுக்கு முந்தைய நிலை, உடலுறவு, உடலுறவுக்குப் பிந்தைய நிலை போன்றவை தான் அந்த மூன்று முக்கியமான நிலைகள்.

No comments:

Post a Comment