உடல் அளவில் எந்த விதமான குறைபாடும் இல்லாமல் தம்பதிகள் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுடன் பழகும் தன்மைகள், தொழில் மீதுள்ள ஈடுபாடுகள் போன்ற எதிலும் வித்தியாசம் இருக்காது. கணவன் மனைவி இருவர் இடையேயும் எந்த சங்கடமான விஷயமும் இருக்காது. இருவரிடத்திலும் அன்புக்கும் பஞ்சமிருக்காது. வார்த்தை, பரிவு, அன்பு, நம்பிக்கை பரிமாற்றங்களிலும் எந்த விதமான வேறுபாடுகளும் இருக்காது. விகாரமான நிலைமையையும் பிறர் கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் கூட, இவர்களிடத்தில் யாரும் அறியாத செக்ஸ் பிரச்சினை உள்ளுக்குள் மறைந்து இருக்கும். இது போன்ற மறைமுகமான செக்ஸ் பிரச்சினை பல தம்பதிகளிடத்தில் இருக்கிறது. தம்பதிகளுக்கு இடையேயான செக்ஸ் பிரச்சினைகளுக்கு உடல் ரீதியான அல்லது மன ரீதியான காரணங்கள் இருக்கலாம். அதனை கண்டறிந்து உடன் மருத்துவ ஆலோசனை பெற்று, தங்கள் பிரச்சனையை தீர்த்துக் கொண்டு முழுமையான இல்லற சுகம் காண்பவர்கள் சிலர் தான்.
ஓர் உதாரணம் சொல்கிறேன். கணவன் நன்கு படித்தவன். சொந்தமாக வியாபாரம் ஒன்றினை வெற்றிகரமாக நடத்தி வருபவன். எல்லோரிடமும் வெளிப்படையாக பழகுபவன். அவனுக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. மனைவியும் நன்கு படித்தவள். நல்ல குணவதி. இருவருக்கும் திருமணம் நடந்து சில ஆண்டுகளே ஆகிறது. இருவரும் அன்புடன், பாசத்துடன் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லையென்று தான் அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்குள் பிணக்கு எதுவும் இல்லை. மன ரீதியிலான எந்த வித்தியாசங்களும் இல்லை. வாழ்க்கை சமச்சீராகத்தான் நடந்து கொண்டு இருந்தது.
ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை. பெண்வீட்டார் மகளை ஒரு லேடி டாக்டரிடம் பரிசோதனைக்காக\ அழைத்து சென்றார்கள். அப்போது தான் அவர்களுக்கு, தங்கள் மகள் இன்னும் கன்னி கழியாமல் இருப்பது தெரிய வந்தது. பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். மருத்துவர் அந்த இளம் தம்பதிகளை தீவிரமாக விசாரித்த போது சில நிஜங்கள் தெரிய வந்திருக்கிறது. மற்றவர் பார்வைக்கு மிகவும் அந்நியோன்யமாக இருப்பவர்கள் போல தென்பட்டவர்கள் படுக்கையறையில் பல மனச் சங்கடங்களுடன் உலா வருவது தெரிய வந்திருக்கிறது. இந்த மனக்கசப்பு இருவரிடையே முதலிரவு அன்றே தொடங்கி விட்டிருக்கிறது. இதற்கு அடிப்படை காரணம் என்னவென்று தீவிரமாக ஆய்வு செய்த போது, செக்ஸ் அறியாமை தான் காரணமென்று புரியபட்டிருக்கிறது.
ஆண்களுக்கு ஏற்படும் துரித ஸ்கலிதம் காரணமாகக் கூட, சில கணவன் மனைவிக்கு இடையே படுக்கையறையில் மனக்கசப்பு ஏற்படலாம். ஆண் பதற்றத்தில் இருக்கிற போது அவசரமாக விந்து வெளியாகும் வாய்ப்புகள் உண்டு. புதிய அறிமுகம், பதற்றமான சூழ்நிலை, உடலுறவைப் பற்றிய பயம், போன்ற சமயங்களில் பதற்றத்தில் அவசரமாக விந்து வெளியாகிவிடலாம்.
குடும்பப் பிரச்சினைகளின் காரணமாக, கூட்டுக் குடும்ப சூழ்நிலை போன்றவை படுக்கையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம். பல வீடுகளில் பொருளியல் பிரச்சினைகள் படுக்கையறை குழப்பங்களுக்கு வித்திட்டு விடும். மனதில் ஏற்படும் அச்சம், அழுத்தம், பீதி, சில தகாத எண்ணங்கள் செக்ஸ் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இவற்றை எல்லாம் கணவன் மனைவிகள் தனிப்பட்ட முறையில் பேசியே தீர்வு கண்டு விடலாம்.
No comments:
Post a Comment