Monday, December 31, 2012

மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் நவராத்திரி கொலு


நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு வைப்பதற்கு சாமி பொம்மைகள் அவசியம் தேவை. குறிப்பாக பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் பொம்மைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

முழுமுதற் கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெறுவதும் சிறப்பு. அது மட்டுமின்றி பல்வேறு பொம்மைகளையும் கொலுவில் வைத்து அழகுபடுத்தலாம். கடந்த வருடம் வாங்கிய பொம்மைகள் இதற்கு பயன்படுத்தலாம். மேலும் புதிய பொம்மைகளை வாங்கி வைக்கலாம். சிலர் ஆண்டுக்கு ஒரு புது பொம்மையை வாங்கி வைப்பார்கள்.

வீட்டில் வைக்கப்படும் கொலு பல்வேறு அடுக்குகளாக இருக்கும். ஒற்றைப்படை எண்ணில் அந்த கொலு படி அமைக்க வேண்டும். சிலர் ஆண்டுக்கு 2 படி வீதம் கூட்டிக்கொண்டே அமைப்பார்கள். கொலுவில் பல்வேறு அம்சத்தை விளக்கும் வகையில் பொம்மைககள் வைப்பார்கள்.

விவசாயத்தின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம். எனவே சிலர் வயல்வெளிகள் போன்ற பொம்மைகள் அமைத்து விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவார்கள்.

கொலு வைப்பவர்கள், கொலு வைக்கும் அறையை வெள்ளை அடித்து தூய்மையாக்க வேண்டும். நல்ல நேரம் பார்த்து கொலு அமைக்க வேண்டும். காலை அல்லது சூரிய அஸ்தமனம் ஆன பின் இரவில் கொலு வைக்கலாம்.

கொலு வைக்கும் முன்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறப்பு. நவராத்திரி கொண்டாடும் நாட்களில் இரவில் பூஜை நடத்த வேண்டும். அப்போது சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும்.

வசதி படைத்தவர்கள் பரிசு பொருளும் கொடுக்கலாம். பரிசு பொருளில் குங்கும சிமிழ் இடம் பெறுவது நல்லது. கடைசி நாள் ஆயுத பூஜை அன்று பூஜையை சிறப்பாக நடத்தலாம். மறுநாள் விஜயதசமி. கொலு வைப்பவர்கள் அதையும் கொண்டாட வேண்டும். அதன் பின்தான் கொலுவை கலைக்க வேண்டும்.

விஜயதசமி அன்று நாம் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். மேலும் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். புதிய கலை பயில்வோர், இந்த நாளில் தொடங்கலாம்.

வீட்டில் கொலு வைப்பதால் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கும். குறிப்பாக செல்வம், அறிவு, தைரியம் போன்றவை வந்து சேரும். திருமணமான பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குடும்பம் சிறப்படையும்.

திருமணமாகாத பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும். 

என்ன பிரச்சினையாக இருந்தாலும் முத்தாரம்மன் முடித்து வைப்பாள்!


உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு நோய் இருந்து கொண்டே இருக்கும். எந்த டாக்டராலும் குணமாக்க முடியாத படி நோய் நீடித்தப்படி இருக்கும். சிலர் எந்த வியாபாரம் செய்தாலும் நஷ்டம் ஏற்பட்டு தவிப்பார்கள். சிலர் எல்லா வசதியும் பெற்றிருப்பார்கள்.

ஆனால் மனதில் நிம்மதி இருக்காது. வறுமை, கடன்தொல்லை, அண்ணன்-தம்பி தகராறு, சொத்து பிரச்சினை, வேலையில் நிம்மதியின்மை, உரிய வயதில் திருமணம் நடக்காதது, வீண்பழி, கொடுத்த பொருள் திரும்பி வராதது என்று எத்தனையோ பிரச்சினைகள் இருக்கலாம். இந்த பிரச்சினைகளை எதிர் கொள்ள தெரியாமல் சிலர் தற்கொலை செய்து விடலாமா என்று கூட கோழைத்தனமாக நினைப்பதுண்டு.

இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவை அனைத்தையும் குலசை முத்தாரம்மன் முடித்து வைப்பாள். அவள் சன்னதியில் நின்று ஒரு நிமிடம் மனம் உருக, உங்கள் பிரச்சினையை சொல்லி விட்டாலே போதும், மறு வினாடியே உங்கள் மனம் லேசாகி விடும். உங்கள் குறைகளை முத்தாரம்மன் தன்னகத்தே எடுத்துக் கொண்டு உங்களுக்கு நிம்மதி தருவாள்.

மனநலம் பாதிப்பிற்குள்ளானவர்கள் இங்கு வந்து அம்பாள் முன் நின்றாலே, குணமுண்டாகும். மனநலம் பாதித்தவர்களுக்கு இங்கு பிற இடங்களைப் போன்று கயிற்றால் கட்டிப் போடுதல் போன்ற சிகிச்சைகள் எதுவும் கிடையாது. ஆனால், பாதிப்படைந்தோரை இந்த ஆலயத்திற்கு அழைந்து வந்து, அம்பாளை மனமுருகி வேண்டினால், முத்தாரம்மன் அருள் உடனே கிடைக்கும். மனநலம் சரியாகி விடும்.

இது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், மனநோய் கண்டவர்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர். அம்பாளின் அருள் கிடைக்கப்பெற்று நோய் தீர்ந்து திரும்புகின்றனர். அது போல தொழு நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் குலசேகரன்பட்டினம் சென்று முத்தாரம்மனை வழிபட்டால், நோய் குணமாகும்.

அம்பாளின் அருளினால்,மீண்டும் பழைய நிலையை அவர்கள் அடைய முடியும். இது போன்று அம்பாளைத் தொழுது, தொழு நோய் குணமாவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படி அனைத்து பிரச்சனைகளும் நோய்களும் தீர முத்தாரம்மனை நினைத்து, 41 நாட்கள் தொடர்ந்து விரதம் கடைபிடிக்க வேண்டும்.

அப்படி இருந்தால் நீங்கள் நினைத்தப்படி நடக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், குலசை முத்தாரம்மனிடம் உங்களையே ஒப்படைத்து விடுங்கள். தாயே நீயே கதி என்று சரண் அடையுங்கள். அவள் மீது முழுமையான பற்றும், பாசமும், பக்தியும் கொள்ளுங்கள். உங்கள் மனதில் இருக்கும் அத்தனை கவலைகளையும் இறக்கிவைக்க அவள் ஆலயத்தை நோக்கி புறப்படுங்கள்.

உங்களைப் போன்றவர்களின் துக்கங்களை, துயரங்களை, போக்குவதற்காக குலசை முத்தாரம்மன் காத்திருக்கின்றாள். முத்தாரம்மன் உங்கள் மனதை மிகவும் லேசாக்கி அனுப்பி வைக்கும் ஆற்றல் படைத்தவள். அவளின் கருணைப் பார்வையிலேயே உங்கள் கவலைகள் அனைத்தும் கண நேரத்தில் காணாமல் போய் விடும். இந்த யதார்த்த உண்மையை எண்ணற்ற பக்தர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர். 

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்...?


 

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளுக்கும் அடிப்படை இல்வாழ்க்கையாகும். `இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஏதுமில்லை' என்ற வழக்கு குடும்ப வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தைக் கூறுகிறது. திருமணம் என்ற வாயிலின் வழியாக அமையும் குடும்ப வாழ்வென்ற பயணம் தற்காலத்தில் போக்குவரத்துச் சிக்கல் போல் அமைந்துவிட்டது.

அது சந்திக்கும் பலவகை சிக்கல்களில் ஜாதக ரீதியானவை மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அதிலும் செவ்வாய் தோஷம் என்ற சொல் பெற்றோர்களின் காதில், காய்ச்சிய ஈயம் போல் பாய்கிறது. செவ்வாய் தோஷமென்பது பொதுவாக ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், தோஷம் எனப்படுகிறது. அது எவ்வளவு என்பதில் பல வகைக் கணக்கீடுகள் உள்ளன.

அவை யாவும் செவ்வாய் என்ற கிரகத்தின் நிலையை அது கடக்கும் ராசிகளின் சுப-அசுபத் தன்மைகளால் நிர்ணயம் செய்யப்படுகின்றன. லக்னத்திலிருந்து கணக்கீடு செய்வது போல் ராசி எனப்படும் சந்திரா லக்னத்திலிருந்தும், சுக்ரன் இருக்கும் வீட்டிலிருந்தும் செவ்வாயின் நிலையைக் கணக்கீடு செய்வதும் செவ்வாயின் தோஷ அளவுகளைக் காண உதவுகிறது.

செவ்வாயை ஜோதிடம் `மங்கள காரகன்' என்று குறிப்பிடுகிறது. மேலும் நமது மனித உடல் இயக்கத்தில் ரத்த ஓட்டத்தைக் குறிப்பிடும் கிரகம் செவ்வாயாகும். அறிவியல் ரீதியாகப் பார்ப்பதென்றால் செவ்வாய் வேறு கிரகச் சேர்க்கையின்றி லக்னத்திற்கு 2-4-7-8-12 ஆகிய இடங்களில் இருப்பவர்களது ரத்த குரூப் `ஓ' வகையில் அமைவது இயல்பாகும்.

அதிலும் வக்ர கதி பெற்றிருந்தால் அது `ஓ நெகட்டிவ்' ஆக அமைகிறது.ரத்தம் என்ற சொல், சமூக ரீதியாக, உணர்வுகளைக் குறிப்பிடக்கூடியது. இரு மணம் இணையும் திருமணத்திற்கு உணர்வுகளின் ஒருமை நிலை முக்கியமான அம்சமல்லவா? அதிலும் செவ்வாயின் தோஷ நிலைகளை ஆய்வு செய்து மணமக்களை திருமண வாழ்வில் இணைத்து வைப்பதால் பல சிக்கல்களைத் தவிர்த்து விடலாம்.

ராசி மண்டலத்தின் 12 வீடுகளிலும் செவ்வாய் ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் என்ற பல நிலைகளை அடைவதன் மூலம் தோஷத்தை உண்டாக்கினாலும் பிற கிரகங்களின் சேர்க்கை, பார்வை, முதலிய காரணிகளால் தோஷ நிவர்த்தியும் அடைகிறது. ஒருவரது லக்னத்திலிருந்து 2-ம் இடம் குடும்ப ஸ்தானம் ஆகும். மேலும் வாக்கு ஸ்தானமும் ஆகும்.

அந்த முக்கியமான இடத்தில் நெருப்புக் கோளான செவ்வாய் இருப்பது இல்லற வாழ்வில் முரண்பட்ட விளைவுகளை மற்ற காரணிகளின் தாக்கங்களுக்கு ஏற்ப உண்டாக்கும். 4-ம் இட செவ்வாய் உடல் நிலையில் தனது ராசியின் நிலைக்கேற்ப பாதிப்புகளை உண்டாக்கக் கூடியது, அது சுக ஸ்தானம் என்பதால் ஆரோக்கியம் பற்றிய கவலைகளை உண்டாக்கும். 7-ம் இடம் என்பது களத்திர ஸ்தானம்.

கணவரானால் மனைவியையும், மனைவியானால் கணவரையும் குறிப்பிடக்கூடியது. உணர்வுகளைத் தட்டி எழுப்பும் கிரகமான செவ்வாய் அதிலிருப்பது உணர்வுகளின் சமநிலையைப் பாதிக்கக் கூடியதாகும். 8-ம் இடம் ஆயுள் ஸ்தானம். ஒருவரது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விஷயங்களைக் குறிப்பிடுவது.

அதில் செவ்வாய் இருப்பது அறுவை சிகிச்சை, விபத்து முதலிய விஷயங்களைக் குறிப்பிடுவதாகும். 12-ம் இடம் விரய ஸ்தானம் எனப்படும். அதில் செவ்வாயின் நிலை கட்டுப்பாடற்ற செலவினங் களையும், சக்தி நிலைகளில் தவிர்க்க இயலாத விரயங்களையும் குறிப்பிடுவதாகும்.

செவ்வாய் தோஷப்பரிகாரமாக அது நிற்கும் ராசியில் முதல் திரேக்காணத்தில் இருந்தால் தேவி வழிபாட்டாலும், இரண்டாம் திரேக்காணத்திலிருந்தால் சுப்ரமணியர் வழிபாட்டாலும், மூன்றாம் திரேக்காணத்திலிருந்தால் பிரத்யங்கிரா, நரசிம்மர் போன்ற கடவுள் வழிபாடுகளாலும் செவ்வாயின் மங்களகாரக தத்துவத்தை வெளிப்படுத்தி நலம் பல நிரம்பிய வாழ்வுதனைப் பெறலாம். ஸ்ரீ ஜானகி ராமன், சென்னை. 

பாவ நிவர்த்தி தரும் நவராத்திரி வழிபாடு


 

பரப்பிரும்மம் ஒன்றே என்றாலும், உலக மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் அம்பிகையானவள் தன் மகிமையை வெளிப்படுத்துகிறார். முதல் மூன்று நாட்கள் துர்கா சக்தி ரூபமாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் லட்சுமி வடிவாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி ரூபமாகவும் அம்பாளைச் சித்தரித்து வழிபடுகிறோம்.

துர்காதேவி துன்பங்களை போக்குபவள். லட்சுமி ரூபமானது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கக்கூடியவள். நல்லறிவு இருந்தால் தான் பூரண ஆனந்தத்தை அடைய முடியும் என்பதால், அந்த அறிவை வேண்டி நவராத்திரி விழாவின் நிறைவாக 3 நாட்கள் சரஸ்வதி தேவியாகப் பாவித்து வழிபடுகிறோம்.

9 நாட்கள் நிறைவடைந்து 10-வது நாளான விஜயதசமி அன்று அம்பிகையானவள், ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதையே இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிக்கிறது. அம்பிகையை விக்கிரக ரூபத்திலோ, படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்யலாம். ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம்.

சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து, அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம். இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.

பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும். பெண்கள், சிறுவர் - சிறுமிகளின் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை நவராத்திரி பண்டிகைக்கே உரிய சிறப்பாகும். இந்த உலகில் அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையிலேயே பராசக்தியை நவராத்திரி நாட்களில் வழிபடுகிறோம்.

தவிர, உலகைக் காத்து இரட்சிக்கும் ஜகன்மாதாவுக்கு பக்தர்கள் செய்யும் பூஜையாகவும் அமைகிறது நவராத்திரி விழா. அன்னையை நவராத்திரி காலத்தில் ஸ்ரீராமன் பூஜை செய்ததாக புராணங்கள் மூலம் தெரிய வருகிறது. நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலுப்படி அமைத்து, தெய்வப் பொம்மைகளை வைத்து மகிழ்வது தொன்று தொட்டு வரும் வழக்கமாக உள்ளது.

இந்த நாட்களில் கொலு வைத்து வழிபடுவதோடு, ஆண்டு முழுவதும் அம்பிகையை நம் இதயங்களில் நிரந்தரமாக வைத்து வழிபடல் வேண்டும். அம்பிகையை - சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். 

தோஷம் போக்கும் பைரவர் வழிபாடு



அஷ்டமி திதி மற்றும் ஆயில்யம், சுவாதி, மிருக சீரிஷம் நட்சத்திர தினங்களில் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் தேடி வரும். தொழிலில் லாபம் கிடைக்கும். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவரை அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து எம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.

தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் உண்டாகும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணைய், விளக்கு எண்ணைய் தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும்.

அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். இழந்த பொருட்களை மீண்டும் பெற திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைபேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப்பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபட்டால் விரைவில் அத்தம்பதியருக்கு குழந்தை செல்வம் கிட்டும். 

வயிறு கோளாறை நீக்கும் சரஸ்வதி


கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் பரவூர் எனும் திருத்தலம் உள்ளது. இங்கே வெண்தாமரை பூத்துக்குலுங்கும் ஒரு சதுரக் குளத்தின் நடுவே அமைந்துள்ளது மூகாம்பிகா எனும் சரஸ்வதி கோவில்.

இவளை தட்சிண மூகாம்பிகா என்றும் கூறுகிறார்கள். குளத்தின் நடுவே உள்ள கோவிலுக்கு செல்ல சிறிய பாலம் உள்ளது. இங்கே தினமும் இரவு நடை சாத்தும் முன்பு மூலிகைகளை கொண்டு தயாரித்த கஷாயத்தை பிரசாதமாக தருகிறார்கள்.

இதை வாங்கி உட்கொண்டால், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். 

பாவம் போக்கும் துளசி மாலை


துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர். இலையின் நுனியில் பிரமன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரசுவதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும்.

துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை வழிபட்டால் ஆயுள் பலம், புகழ், செல்வம், மக்கட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர் 

பாவங்களை போக்கும் துளசி மாலை வழிபாடு


மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுள்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறை வானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம்.

சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன்.பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு தேவனுக்கு மகனாக பிறந்தவர். ஆகாயத்தில் பறந்து பெருங்கடலைத் தாண்டியவர்.

பூமாதேவியின் மகளான சீதாதேவியின் பரிபூரண அருளாசியை பெற்றவர். வாலில் வைக்கப்பட்ட நெருப்பையும் வசமாக்கி இலங்கையை அழித்தவர். இவ்வாறு பஞ்ச பூதங்களையும் வசப்படுத் தியவர். அதேபோல மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம் புலன்களையும் அடக்கியவர். இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணி யில் அனு மன் தீவிரமாக இருந்த போது வந்தார் சனிபகவான்.

``ஆஞ்சநேயா! உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்'' என்றார். ``கடமையை செய்துகொண் டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்துகொள்'' என்றார்.

சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்காமல் சனி பகவான் அலறினார். ``சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்துதான் இறங்க வேண்டும்'' என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். `ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.

இத்தகைய சிறப்புடைய அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம். `ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்' என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம்.

அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர் களுக்கு அன்னதானம் செய்யலாம். ஆன்ம பலம், மனபலம், புத்திபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச்செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன்.

அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும். தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர்.

அப்போது பாற் கட லிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந் திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகா விஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அக்கல சத்தின்றும் பச்சை நிறத்துடன் ஸ்ரீ துளசி மகாதேவி தோன்றினாள். துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர். இலையின் நுனியில் பிரமன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரசுவதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர்.

துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை வழிபட்டால் ஆயுள் பலம், புகழ், செல்வம், மக்கட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர் 

வியாபார தோஷம்


சிலருக்கு என்ன வியாபாரம் செய்தாலும் விருத்தி அடையாதபடி தோஷம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினசரி காலை குளித்து விட்டு மகாலட்சுமி படத்திற்கு முன்பு பால், தேன், ஏலக்காய், கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பருப்பு ஆகிய ஐந்தையும் கலந்து, ஒரு புதிய கிண்ணத்தில் வைத்து காய்ச்சி எடுக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தை படைத்து வழிபட வேண்டும்.

அப்போது ஐந்து முகம் கொண்ட வெள்ளி விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு சிறிது பஞ்சாமிர்தத்தை எடுத்துச்சென்று உங்கள் வியாபார தலத்தில் உள்ள முக்கிய வேலையாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தினசரி செய்து வந்தால் தொழிலில் நஷ்டம் வராது. அப்படி செய்ய இயலாவிட்டால், நவதானியங்களை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் கடைவாசலில் கட்டுங்கள். கல்லாவிலும் போட்டு வையுங்கள். உங்கள் வியாபாரம் பெருகும். பனம்பழத்துக் கடுக்காயில் மஞ்சள் தடவி கல்லாவில் வைத்தாலும் வியாபாரம் பெருகும். 

மறுபிறவி அறுக்கும் துளசி


எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும் தொலையும்.

எவரது இல்லத்தில் துளசிசெடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன ஏற்படாது. துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்துப் பூஜை செய்ய வேண்டும். துளசி தளத்தால் திருமாலை அர்ஜனை செய்து பூசிப்பவருக்கு மறுபிறவி கிடையாது.

துளசியை பூஜை செய்ததின் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று துளசி ராமாயணம் கூறுகிறது. விஷ்ணு பூஜைக்குப் பிறகு சந்தன தீர்த்தத்துடன் துளசி தளத்தைப் பிரசாதமாகப் பெறுவது பக்தர்கட்கு உவப்பானதாகும்.

இதைச் சரணாமிர்தம் தீர்த்த பிரஸாதம் பெருமாள் தீர்த்தம் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவர். இதைப்பற்றி ஆகமநூல், துளசி தளம் கலந்த ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை பருகுபவர்களுக்கு மறு பிறப்பில்லை. அகால மரணம், உடல், உள்ளம் பற்றிய வியாதிகள் எல்லாமே விலகும் என்கிறது. 

பாவங்களை போக்கும் துளசியின் மகிமை


காடுமேடுகளில் எல்லாம் வளரும் தன்மை கொண்டது துளசி. இது ஒரு நல்ல கிருமிநாசினியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் ஆன்மிக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

துளசி தேவியை தினமும் யார் பூஜை செய்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் விரும்பிய சுகங்களை அனுபவித்து முடிவில் மோட்சத்தை அடைகிறார்கள். எந்த இடத்தில் துளசிச் செடி பிடி அளவேனும் இருக்கிறதோ அந்த இடத்தில் நாராயணன் போன்ற தேவர்கள் நித்தியாவாசம் செய்கிறார்கள்.

யாருடைய உடலானது துளசியினால் கொளுத்தப்படுகின்றதோ அவருடைய உடலானது சகல பாவங்களையும் நீக்கிக் கொள்கிறது. துளசி மாலையை அணிந்து கொண்டு யார் பிராணனை விடுகின்றனரோ, அவருடைய உடல் தொடர்பான பல பாவங்களும் போய் விடுகின்றன. அக்னியில் துளசி இலையினால் ஹோமம் செய்கிறவர்களுக்கு அந்த யாகத்தினுடைய முழுமையான பலன் கிடைக்கும். 

பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம்


மனிதர்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று எடுத்து கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உள்ளது. எனவே அது மதிக்கத் தகுந்த ஜீவராசியாக கருதப்படுகிறது.

ஆதலால் அதனைக் கொன்றால் தோஷம் ஏற்படும். அத்தகைய தோஷம் ஏற்பட்டால், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோவில்களில் உள்ள பல்லி உருவத்தை தொட்டு வணங்குவதும் இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது.

பொதுவாக எந்த ஜீவராசிகளையும் கொல்லாது இருப்பது சந்ததிக்கு சிறப்பையும், மேன்மையையும் தரும் 

பிரம்மகத்தி தோஷம்


பிரம்மகத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் பெரிதாகச் சொல்லப்படுகிறது. கொலை செய்தல், மாற்றான் மனைவியை கவர்தல், பண மோசடி செய்தல் போன்ற செயல்களால் பிரம்ம கத்தி தோஷம் ஏற்படும்.

கீழ்க்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை மனமுருக வேண்டிக் கொண்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆலந்துறையார், கீழப்பழுவூர் (அரியலூர்), திருநோக்கிய அழகிய நாதர், திருப்பாச்சேத்தி (சிவகங்கை), பிரம்ம சிரகண்டீஸ்வர், திருக்கண்டியூர் (தஞ்சாவூர்), ஸ்ரீ புவனேஸ்வர், திருப்பைஞ்ஞீலி (திருச்சி), கொழுந்தீஸ்வரர், கோட்டூர் (திருவாரூர்), திருமறைக்காடர், வேதாரண்யம் (நாகப்பட்டினம்).

பிரம்மகத்தி தோஷமுள்ளவர்கள் சிவன், பிரம்மன், விஷ்ணு உள்ள ஆலயங்களான உத்தமர் கோவில் கொடுமுடி தலங்களிலும் திருக்கண்டியூர், ஸ்ரீவாஞ்சியம் தலங்களிலும் சென்று வழிபட வேண்டும் திருப்புல்லானி அருகில் உள்ள தேவிப்பட்டனத்திலும் வழிபடலாம். தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவிடைமருதூர் ஆலயத்தில் உள்ள புஷ்ய தீர்த்தம் மற்றும் காருண்ய மிருத தீர்த்தத்தில் நீராடி சுவாமியையும், அம்பாளையும் முறைப்படி வழிபட்டால் பிரம்மகத்தி தோஷம் நீங்கும்.

ஒவ்வொரு சிவன் கோவிலிலும், வடகிழக்கு பகுதியில் தனிச்சந்நிதியில் கால பைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. கால பைரவர் பாம்பை பூணூலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.

பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. எமபயம் தவிர்க்கப்படும். பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்பு பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். 

மூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க





27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்திலும் பிறந்தவர்களுக்கு இல்லாத வகையில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தோஷங்கள் அதிகம் என்று சொல்வார்கள்.

பொதுவாக மூல நட்சத்திரம் உள்ளவர்களால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் அவ்வளவு சிறப்பு ஏற்படாது. மேலும் மூல நட்சத்திரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய கிழமைகளில் பிறந்தவர்கள் எல்லா வகையிலும் அதிர்ஷ்ட வாய்ப்பை இழப்பார்கள். மூல நட்சத்திரக்காரர்கள் காலை வேளையில் பிறந்தால் அவர்களுடன் பழகுபவர்களுக்கு கஷ்டம் வரலாம். மாலை வேளையில் பிறந்தால் அவரின் தாய் பிறந்த வீட்டிற்கு கஷ்டம் வரும்.

இதுபோன்ற தோஷங்கள் இருப்பதால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திருமணம் ஒரு தடையாக மாறி விடுகிறது. பரிகாரம் வாயிலாக மேற்கண்ட தோஷத்தைச் சரி செய்யலாம் என்று அகத்தியர் உள்ளிட்ட சித்தர்கள் வழிகாட்டி உள்ளார்கள்.

பரிகாரங்கள் விவரம் வருமாறு:-
1. சிவன் கோவில் தல விருட்சத்தின் வேர்ப்பகுதியில் உள்ள மண் ஒரு கைப்பிடி, 2. யானை மிதித்த இடத்து மண் ஒரு கைப்பிடி, 3. பசுவின் கால் பட்ட இடத்து மண் ஒரு கைப்பிடி, 4. புற்று மண் ஒரு கைப்பிடி, 5. வயல்வெளியில் உள்ள நண்டு வளையின் புற்றுமண் ஒரு கைப்பிடி, 6. கண்மாயில் உள்ள மண் ஒரு கைப்பிடி, 7. கடற்கரை மண் ஒரு கைப்பிடி

மேற்கண்ட ஏழு வகையான மண்ணை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். மூல நட்சத்திரத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மேற்படி மண்ணை உடல் முழுக்கத் தடவி 45 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நிவர்த்தி ஆகி பரிகாரம் செய்த 90 நாட்களுக்குள் திருமணம் சுபமாக நடக்கும். 

5 விதமான தோஷங்கள்


ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதி வைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1. வஞ்சித தோஷம், 2. பந்த தோஷம், 3. கல்பித தோஷம் 4. வந்தூலக தோஷம், 5. ப்ரணகால தோஷம் எனப்படும்.

1. வஞ்சித தோஷம்:

பார்க்கக் கூடாத படங்கள், வெறியாட்டும் காட்சிகள், காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சித தோஷம் எனப் பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.

2. பந்த தோஷம்:

நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழி வாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.

3. கல்பித தோஷம்:

பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.

4. வந்தூலக தோஷம்:

ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணி ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

5. ப்ரணகால தோஷம்:

திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும். 

கடன் தீர்க்கும் தேங்காய் பிள்ளையார்



பொதுவாக பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றிதான் வழிபடுவார்கள. ஆனால் மதுரை மாவட்டத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மடப்பரம் விளக்கில் அமைந்துள்ள விநாயகர் தெற்கு முகமாய் அருள் பாலித்து வருகிறார்.

திசை மாறிய இந்த விசாலாட்சி விநாயகருக்கு பக்தர்கள் சதுர்த்தி நாளில் 7 தேங்காயை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லை தீருவதாக மக்கள் நம்புகிறார்கள்.

இதனால் இத் திருக்கோயிலில் அமைந்துள்ள விநாயகரை பொதுமக்கள் தேங்காய் பிள்ளையார் என்று அழைக்கிறார்கள். 

கலி கால தோஷம் நீங்க


துவாபர யுகம் முடிந்து, கலி யுகம் தொடங்க இருந்த நேரத்தில், பிரம்மாவிடம் சென்றார் நாரதர். `எங்கும் சுற்றி திரிந்து வரும் நான், கலி காலத்தை கடந்து செல்வது எப்படி' என்று பிரம்மனிடம் கேட்டார்.

அதற்கு பிரம்மர், `நாராயணனுடைய நாமத்தை சொன்ன மாத்திரத்தில் கலி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்' என்று கூறினார். அப்படிப்பட்ட மந்திரம் எதுவென்று தனக்கு உபதேசிக்கும்படி கேட்டார் நாரதர்.

ஹரே ராம, ஹரே ராம,
ராம, ராம, ஹரே ஹரே;
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண, கிருஷ்ண, ஹரே ஹரே.

இந்த பதினாறு நாமங்களையும் ஒன்று சேர்த்துச் சொன்னால் கலியின் தோஷம் நாசமாய் போய்விடும் என்று உபதேசம் செய்தார் பிரம்மதேவன். இந்த மந்திரத்திற்கு `மஹா மந்திரம்' என்ற சிறப்பும் உண்டு. 

தாகம் தீர்க்கும் தண்ணீர் தீர்த்தமாவது எப்போது தெரியுமா?


ஜப்பானில் ஒரு விஞ்ஞானி தண்ணீரின் குணத்தினை ஆராய விரும்பினார். ஒரே நீரை பத்து பாத்திரங்களில் ஊற்றினார். கோயில், மருத்துவமனை, குப்பைகள் நிறைந்த இடம், சிறை, மக்கள் வசிக்கும் வீடு என வெவ்வேறு விதமான இடங்களில் வைத்தார். அவருக்கு மிகவும் ஆச்சர்யமான முடிவுகள் கிடைத்தன. கோயில், நன்மக்கள் இருக்கும் இடங்களில் வைக்கப்பட்ட நீர் அப்படியே இருந்தது. எதிர்மறை எண்ணங்கள் உள்ள இடங்களில் வைக்கப்பட்டிருந்த அதே நீரில் புழுக்கள் உண்டாகி நாற்றம் வரத் தொடங்கி இருந்ததாம். நீர் மிகவும் சென்சிடிவ் வான குணமுடையது.

அது இருக்கும் இடத்தில் உள்ள மக்களின் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நீரைக் குடிப்பவர்களுக்கும் அதே போல நல்லதோ, கெட்டதோ ஏற்படுகிறது என்று அறிவித்தார். இதன் காரணமாகத்தான் நமது நாட்டிலும் நீர் புனிதமாகப் போற்றப்படுகிறது. வேத ஆத்மானம் புனிதே என்கிறது தைத்ரிய ஆரண்யகம். கும்பமேளாக்களும் அத்தனை விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. ஒரு பத்துபேரின் காரணமாக நீரின் தன்மை மாறும்போது, பக்திப் பரவசத்தோடு தெய்வ சிந்தனையோடு வரும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு நீராடும்போது அந்த நீர் எத்தனை சக்தி வாய்ந்ததாக மாறும்?

அதிலும் ஏராளமான சந்நியாசிகள், மடாதிபதிகள், புனிதர்கள் வந்து அச்சமயம் நீராடுகிறார்கள். மடாதிபதிகள் தங்கள் தங்கள் தொன்மையான மடத்தின் விக்ரகங்களைக் கொண்டு வந்து நீரினுள் வைத்துப் பூஜிப்பதும் அச்சமயத்தில் நடைபெறுகிறது. இத்தனை மகத்துவமும் ஒரு சேர நடந்து நீரின் தன்மை மிகச் சக்தி வாய்ந்ததாக மாறுவதால்தான் கும்பமேளாக்கள் இத்தனை போற்றப்படுகின்றன. அதற்குச் சிறப்பு சேர்ப்பது போல இயற்கையும் ஒத்துழைக்கின்றது. குறிப்பிட்ட கிரகங்கள் வானில் சேரும்போது அதன் நேர்மறைத் தாக்கமும், கதிர் வீச்சுக்களும் ஓரிடத்தில் கூடுகின்றன. அப்படித்தான் கும்பகோணத்தில், புஷ்கரில், கங்கையில் அந்தந்த இடத்தின் பூகோள அமைப்பிற்கு ஏற்ப கிரகசக்தி இறங்கும்போது கும்பமேளாக்கள் அமைக்கப்பட்டன.

இமயமலையில் குடி கொண்டிருக்கும் மகான்களும், பாபாஜிகளும், ரிஷிகளும் தங்களின் தவவலிமையை, சக்தியை கங்கையின் மூலமாக கீழே நிலத்திற்குக் கருணையோடு அனுப்புகின்றனர். அதனாலேயே கங்கை இத்தனை புனித நதியாகக் கருதப்படுகிறது. இப்போது நம் உடலில் 70 சதவீதம் நீர்தான் இருக்கிறது. நம்முடைய நேர்மறை எண்ணங்களோ, எதிர்மறை எண்ணங்களோ நம்முள் இருக்கும் நீரை எப்படி மாற்றும் என யோசித்துப் பாருங்கள். நம்முள் ஓடும் நீர் கங்கையாகவோ, கழிவு நீராகவோ இருப்பது நம் சிந்தனையில் தான் இருக்கிறது. நல்ல எண்ணங்கள் நல்ல நீராக ஆக்கி, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். நீர் மாறினால் பேரும் மாறி விடுகிறது!

இங்கேயும் ஒரு கங்கை: திரிவேணி சங்கமத்தில் பச்சையாக கங்கையும், கருமையாக யமுனையும் ஓடி வந்து இரண்டும் கலந்து பின்னர் பழுப்பு வண்ணமாக கங்கை எனும் பெயருடனே தொடர்ந்து ஓடுகிறது. அதன் பின்னர் யமுனை எனச் சொல்வதில்லை. இந்த சங்கமத்தில் கங்கை தன் நிறத்தை இழக்கிறாள். யமுனை தன் பெயரை இழக்கிறாள். இதுதான் புனிதர்கள் ஒருவருக்கொருவர் தன்னையே கொடுத்து தியாகம் செய்யும் பண்பு எனலாம். இதையே ஒரு மஹா வாக்கியமாக வடமொழியில் த்யாகே நைகேன அம்ரு தத்வாய மான ஸஹா என்று உரக்கச் சொல்லப்படுகிறது. மேலும் உயர்ந்த ப்ரம்ம தத்துவத்தை ஒரு ஜீவன் அடைய வேண்டுமென்பதைக் குறிக்கும்.

நாம ரூப குண தோஷ வர்ஜிதம்...
ப்ரம்ம தத்வமஸி பாவ ஆத்மனி

என்பதும் ஒரு வேத மஹா வாக்யமாகும். நாம் தினமும் குளிக்கும்பொழுது கூட நாம் வைத்திருக்கும் பாத்திரத்தில் உள்ள நீர் மீது நம்முடைய உள்ளங்கையை வைத்து -

கங்கேச யமுனேசைவ கோதாவரி
சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி
ஜலைஸ்மின் சந்நிதிங்குரு

என்று 11 முறை ஜெபித்து குளித்தோமானால் நம் குழாய்த் தண்ணீர் கூட கங்கையை போல் புனித நீராக மாறி நமக்கு பாஸிடிவ் எனர்ஜியைக் கொடுக்கும்.

அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை


திருத்தணி: திருத்தணி அருகே நாவலூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று மாலை பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. அகத்தீஸ்வர, சாமிநாத குருக்கள் சிவனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். அலங்கரிக்கப்பட்ட சிவன் கோயிலை சுற்றி வலம் வந்தார். கோ பூஜை நடத்தினர்.
பிரதோஷ பூஜையில் திருத்தணி தாசில்தார் வளர்மதி, துணை தாசில்தார்கள் கல்யாணம், முனிசேகரன், செல்வகுமார், கிராம நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், அலுவலக உதவியாளர் வெங்கடேசன், முன்னாள் விஏஓ அரிபிரசாத், கிராம உதவியாளர் மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

திருவாலங்காடு சிவன் கோயிலில் தெப்பத் திருவிழா நடந்தது


திருத்தணி: திருத்தணி அருகே திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோயிலில் நேற்று மாலை தெப்பத் திருவிழா நடந்தது. வண்டார்குழலி அம்மன், காரைக்கால் அம்மையார் மற்றும் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் பல்லக்கில் ஊர்வலம் வந்தனர். தெரு வழியாக சென்றபோது வீட்டில் உள்ளவர்கள் தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர். நேற்று இரவு 7 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள சென்றாடுதீர்த்தக்குளத்தில் தெப்பத் திருவிழா நடத்தினர். வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி சமேதமாக தெப்பத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் போட்டனர். தெப்பத்தில், கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் இன்னிசை கச்சேரி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர்களாக ஒன்றியக்குழு தலைவர் குணாளன், துணைத் தலைவர் நாகம்மாள் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் கோபு, ஊராட்சி தலைவர் அமுதா அனல்சேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி மற்றும் பலர் செய்திருந்தனர். திருத்தணி ஏஎஸ்பி விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திருவேணி அம்மன் கோயிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்


திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் சிவன்வாயல் கசமேடு திருவேணி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் டிச. 5ம் தேதி நடக்கிறது. இன்று காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். நாளை சிவயோகி சுப்பிரமணிய சுவாமிகளின் பிரசங்கம், மாலை சைவ திருமணி ரகுபாய் ஆன்மிக கருத்தரங்கம் நடக்கிறது. ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் அஷ்ட பந்தனம் சாற்றுதல், இரவு சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. 5ம் தேதி காலை 8 மணிக்கு ஞான தபோவனம் திறப்பு விழா, தெய்வீக திருக்குடங்கள் ஞான உலா, காலை 10 மணிக்கு கருவறை விமான கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகள் உடனாக திருவேணி அம்பிகைக்கு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜெயராமன், சண்முகம் சகோதரர்கள், நடராஜ மூர்த்தி, சிட்டிபாபு மற்றும் கிராம மக்கள் செய்து உள்ளனர். 

மனித உரிமை காக்கும் மார்க்கம்..!


 

மனித உரிமைகள் பற்றி அதிகமாகப் பேசப்படும் காலம் இது. மாக்ன கார்ட்டா என்று புகழப்படும் மனித உரிமை அறிக்கை 1212ல்தான் உருவாக்கப் பட்டது. மனித உரிமைகளுக்கான பிரெஞ்சு சட்டம் 1789லும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க மசோதா, அதே 1789லும் ஜெனீவா ஒப்பந்தம் 1864 லும்தான் நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரகடனம் 1948ம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள்தான் அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு உலகெங்கும் மனித உரிமை அமைப்புகளும் இயக்கங்களும் ஏராளமாகத் தோன்றி மூலைக்கு மூலை இன்று மனித உரிமை பற்றிப் பேசப்படுகிறது.

ஆனால் 1400 ஆண்டு களுக்கு முன்பு நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அதுவும் எந்த நாகரிக வளர்ச்சி யும் இல்லாத அரபுப் பாலைவனத்தில், ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த நாடோடிக் கூட்டத்திடம் மனித உரிமைகள் மருந்துக்கும் இருந்ததில் லை.
குலங்களாகவும் கோத்திரங்களாகவும் சாதிகளாகவும் பிரிந்துகிடந்த அந்த மக்கள் கூட்டத்திடம் உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. போர் வெறியும் மூர்க்க குணமும் கொண்ட அவர்கள் தலைமுறை தலைமுறையாகப் பகை வளர்த்து, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள். பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவார்கள். அடிமைகளான ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சளைக்காமல் கொடுமைகள் புரிவர்.

வீரம், விருந்தோம்பல், நினைவாற்றல் போன்ற சில குணங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அன்றைய அரபு மக்கள் கிட்டத்தட்ட விலங்காண்டிகளாய்த் தான் வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட மக்களுக்கிடையில்தான் இறைவனின் தூதராக நபிகள் நாயகம்(ஸல்) வருகை தந்தார். எண்ணி இருபத்து மூன்றே ஆண்டுகளில் அந்த விலங்காண்டி சமுதாயத்தை உலகமே வியக்கும் வண்ணம் மாற்றிக் காட்டினார். ஒரு காலத்தில் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்த சமு தாயம் இன்று பிறரின் உரிமையைக் காக்க தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தது.

உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு, மனித கண்ணியப் பாதுகாப்பு, தனிமனித சுதந்திரம், கொடுங்கோன்மைக்கு எதிரான பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம், பெண்ணுக்குச் சொத்துரிமை, பெண்ணுக்கு மறுமணம் புரியும் உரிமை, சமய உணர்வுகளுக்குப் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான உரிமை கள், வாழ்வாதார அடிப்படைகளுக்கான உரிமைகள் என்று எல்லாத் தரப்பினருக்கும் எல்லாத் துறைகளுக்கும் உரிய உரிமைகளை இஸ்லாமியத் திரு நெறி வகுத்தளித்தது.

அநியாயமாக ஓர் உயிரைக் கொல்வது மனித இனம் முழுவதையுமே கொல்வதற்குச் சமம் என்றும் ஓர் உயிரைப் பாதுகாப்பது மனித இனம் முழுவ தையும் பாதுகாத்ததற்குச் சமம் என்றும் குர்ஆன் உரிமை முழக்கம் செய்தது. ‘‘எவன் ஒருவன் நியாயமின்றி மற்றவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன்போல் ஆவான். எவன் ஒருவன் பிறிதொரு மனிதனுக்கு வாழ்வு அளிக்கிறானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன்போல் ஆவான்.’’ (குர்ஆன் 5:32)

இறைவன் வழங்கிய இந்த மனித உரிமைகள் இஸ்லாமிய நம்பிக்கையின் பிரிக்க முடியாத கூறுகளாகும். எந்த சர்வாதிகாரிக்கும் எந்த மன்னருக்கும் எந்த ஆட்சியாளருக்கும் அவற்றை மாற்ற உரிமையில்லை. தொழுகை, நோன்பு போல மனித உரிமைகளும் மார்க்கத்தின் ஒரு பகுதியாகவே அமைந்து மனித குலத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

குலசேகரன்பட்டினத்தில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கானோர் தரிசனம்


உடன்குடி: குலசேகரன்பட்டினத்தில் இன்று அதிகாலை சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தசராவின் முக்கிய நாளான நேற்று காலை 6 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு 11 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளினார். நள்ளிரவு 12.30 மணியளவில் மகிஷாசூரன் சம்ஹாரம் நடந்தது. முதலில் மகிஷாசூரன் தலையை வதம் செய்தார்.

அடுத்து சிம்ம தலையும், எருமை தலையும் வதம் செய்யப்பட்டது. அப்போது கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், ‘ஜெய்காளி’, ‘ஓம் காளி’ என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். சூரசம்ஹாரம் முடிந்த தும் அம்மன் கடற்கரை மேடைக்கு வந்தார். அங்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இன்று மாலை அம்மன் கோயிலை வந்தடைந்ததும் கொடியிறக்கம் நடக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் பல்வேறு வேடம் அணிந்த பக்தர்கள் கடலில் நீராடி வேடத்தை கலைத்தனர். காணிக்கையாக வசூலித்த பணத்தை கோயிலில் செலுத்தினர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குலசேகரன்பட்டணம் தசரா விழா : இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்



உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரி தசரா விழா ஒவ்வொரு ஆண்டும்
பெருந்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று (24ம்தேதி) காலை 6மணி முதல் 10.30மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. கடந்த 9 நாட்களாக காளி, குறவன், குறத்தி, ராஜா, ராணி, போலீஸ், பெண், அனுமார், பாதிரியார் என பல்வேறு வேடங்களை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் நேற்று நள்ளிரவு முதலே கோயிலில் குவியத் தொடங்கினர்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்தும் வாகனங்களில் வந்து குவிந்து வருகின்றனர்.

இரவு 11 மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12மணி அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிசாசுரசம்காரம் செய்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (25ம்தேதி) அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு எழுந்தருளி அபிஷேகமும், காலை 6மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்படுதலும், பகல் 12மணிக்கு அன்னதானமும், மாலை 5.30மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்து சேர்தலும், மாலை 6 மணிக்கு காப்பு களை தலும், நள்ளிரவு 12மணிக்கு சேர்க்கை அபிஷேகமும் நடக்கிறது.

நவராத்திரி பண்டிகையில் நவ கன்னிகை வழிபாடு


நவராத்திரி நாட்களில் அம்மனை நவ கன்னிகையாகவும், நவ துர்க்கையாகவும் வணங்குகின்றனர். 10 வயது நிரம்பாத கன்னிகையாக தினமும் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவகன்னிகை வழிபாடு. அதுபோல, பார்வதி தேவியின் பல்வேறு அவதாரங்களை துர்கையாக வழிபடுவது நவதுர்க்கை வழிபாடு.

முதல் நாள் - 2 வயது குழந்தை குமாரி
2ம் நாள் - 3 வயது குழந்தை திரிமூர்த்தி
3ம் நாள் 4 வயது குழந்தை கல்யாணி
4ம் நாள் 5 வயது குழந்தை ரோகிணி
5ம் நாள் 6 வயது குழந்தை காளிகா
6ம் நாள் 7 வயது குழந்தை சண்டிகா
7ம் நாள் 8 வயது குழந்தை சாம்பவி
8ம் நாள் 9 வயது குழந்தை துர்க்கா
9ம் நாள் 10 வயது குழந்தை சுபத்ரா

இவ்வாறு 9 நாட்களிலும் அம்மனை வணங்குகின்றோம்.

ஒட்டக்கூத்தரை வரகவியாக்கிய கூத்தனூர் மகாசரஸ்வதி அம்மன்


 

திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் பூந்தோட்டம் பேருந்து நிலையத்தின் அருகே அரை கி.மீ தொலைவில் கூத்தனூர் உள்ளது. வேறெங்கிலும் இல்லாது தமிழகத்தில் மட்டுமே சரஸ்வதிக்கென தனிக்கோயில் அமைந்திருப்பது இவ்வூரில்தான். மேலும், இங்கு சிவன் கோயிலில் துர்க்கையும், பெருமாள் கோயிலில் மகாலட்சுமியும், தனக்கென தனிக்கோயில் கொண்டு மகாசரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. அம்பிகையின் கோயிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை. கருவறையின் மேலே ஐந்து கலசங்களுடன் ஞானத்தின் இருப்பிடத்தை உலகுவோர்க்கு உணர்த்துவதாய் அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்திற்குள் அம்பிகை ஞானதவம் இயற்ற அர்த்த மண்டபத்துள் உற்சவ விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கோயிலுக்கென சிறப்பு வரலாறு உண்டு. அந்த வரலாறு வருமாறு: கவிச்சக்கரவர்த்தி எனப்பெயர் பெற்றவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளை பூசித்தார். கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் ஒன்று அமைத்தும் தக்சின வாகினியாய் ஓடும் ஹரிசொல் மாநதியின் நீரினால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிப்பட்டு வரலானார். கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவியாக்கினாள் என்பர். மூன்று சோழ அரசர்களின் புலவராக விளங்கி கவிச்சக்கரவர்த்தி என்ற பெரும் புகழையும் அடைவதற்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய என்று தக்கையாக பரணி பாடியுள்ளார் கூத்தர்.

சங்கமர்கள் ஒட்டக்கூத்தரை கொலை செய்ய முயன்றபோது கூத்தனூர் காளி கோயிலினுள் நுழைந்தார். பரணி நூல் ஒன்று பாடினால் அவரை விட்டு விடுவதாக கூறினார் சங்கமர்கள். அதை கேட்டு கூத்தர் பரணி நூல் ஒன்று பாடியதாகவும் அவதூறு பாடுவதற்கு நாவிலிருந்து துணை புரிந்த நாமகளை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய என்று பாடினார் எனவும் வரலாறு உண்டு. கூத்தர் மறைந்துகொண்ட ஊர் வீரர்வாடி என பெயர் பெறும் எனவும் ஆய்வாளர் கூறுகின்றனர்.

வீரர்வாடி கூத்தனூரிலிருந்து அரை கி.மீ தொலைவில் ஆற்றின் அக்கரையில் உள்ளது. ஒட்டக்கூத்தர் என பெயர் பெறுவதற்கு காரணமான நிகழ்ச்சியும் இவ்வூரில் நடந்திருக்கலாம் என கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் என்ற நூல் கூறுகிறது. செங்குந்தர்களின் தலைகள் ஆயிரத்தை வெட்டி அவற்றை கலைவாணியின் அருளால் ஒட்ட வைத்தார் கூத்தர். அதனாலேயே அவர் ஒட்டக்கூத்தர் என அழைக்கப்பட்டார். இவ்வாறு ஒட்டும் பொருட்டு அவர் பாடிய பாடல்கள் எழுப்பெழுவது எனப்படும்.

ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை பூஜிப்போம்


நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை பூஜை செய்து வணங்குவது மிகச் சிறந்தது. இது சரஸ்வதி தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை, சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி. தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் சமுதாயம் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டாவது தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைபூஜிப்பது சரஸ்வதி பூஜையாகும். நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

நன்மைகள் அளிக்கும் நவராத்திரி திருவிழா


இந்தியாவில் விழாக்களுக்கு பஞ்சமே இல்லை. இந்துக்களின் பண்டி கையில் நவராத்திரிக்கு தனி இடமுண்டு. 10 நாட்கள் கொண்டா டப்படும் இந்த விழா தீமையை அழித்து நன்மைகளை கொண்டு வருவது என்று அனைத்து சமூகத் தினரும் நம்புகிறார்கள். விஜய என்றால் வெற்றி, தசமி என்றால் வடமொழியில் 10 என்று பொருள். வடமாநிலங்களில் துர்கா பூஜை என்று அழைக்கப்படும் இந்த விழா செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. முதல் 9 நாட்கள் நவராத்திரி என்றழைக்கப்படும் விழா 10 வது நாள் விஜயதசமியையும் சேர்த்து தசரா என்று அழைக்கப்படுகிறது. சமத்துவம், அன்பு, தெய்வீக தன்மையை வெளிப்படுத்தும் சமூக விழாவாக இந்த விழாவை கொண்டாடுகிறார்கள்.

இந்தியா தவிர ஜவா, சுமத்ரா, ஜப்பான் போன்ற கிழக்கு நாடுகளிலும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேபாளத்தின் தேசிய திருவிழா தசரா ஆகும். மராட்டிய மன்னன் சிவாஜி எப்போதும் தனது இஷ்டதெய்வம் பவா வடிவில் துர்காவை வணங்கிவிட்டுத்தான் காரியங்களை தொடங்குவார். சீக்கியகுரு கோவிந் தசிங்கும் துர்காவை வழிபட்டுள்ளார். பழங்குடி மக்கள் துர்கா வழிபாட்டை சிறப்பாக நடத்துகிறார்கள். வடஇந்தியாவில் அறுவடை காலங்களில் இந்த விழா தொடங்குவதால் புதிய அறுவடை சீசன் மற்றும் தானிய உற்பத்தி சிறப்பாக நடைபெற இந்த நவராத்திரி வழிபாட்டை நடத்துகின்றனர்.

களிமண்ணால் செய்யப்பட்ட துர்கா சிலைகளை நதிகளில் கரைக்கும்போது பூஜை மஞ்சள் மற்றும் சக்திவாய்ந்த கிருமிநாசினிகள் நதிநீரில் கலந்து விடும். இந்த நீரை பயிர்களுக்கு பயன்படுத்தும்போது நல்ல விளைச்சல் தரும் என்பது நம்பிக்கை. ராமாயணத்திலும் ராவணனை கொல்ல ராமன் சாண்டி பூஜை நடத்தி
உள்ளார். அப்போது ராவணனை கொல்வதற்கான ரகசியத்தை துர்கா, ராமனிடம் தெரிவித்தார். அதன்பின்னர் ராவணனை ராமன் வதம் செய்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பியதாக புராண கதை தெரிவிக்கிறது. இது ராம்லீலா என்ற பெயரில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் விமரிசையாக நடத்தப்படுகிறது. 

துர்காதேவி துதி



“ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே”
“ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
ஸர்வாபாதா விநிர்முக்தோ தனதான்ய ஸுதான்விதஹ
மனுஷ்யோ மத்ப்ரஸாதேன பவிஷ்யதி நஸம்சயஹ”

நவராத்திரி தோன்றிய கதை


ஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தேவர்களும் முடிவு செய்தனர். மூன்று கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண் தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர்.

துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமி.

நலங்கள் அள்ளி தரும் நவராத்திரி


சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவர் தம் தேவியர்க்கு உகந் தது நவராத்திரி. ‘நவம்’ என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்’ என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் கூறுவார்கள். நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாக கூறுவார்கள். அந்த வகையில், நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை சிறப்பானதாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.

நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை ‘விஜயதசமி’ என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம். பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கிறோம். அந்த திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவன் அம்சம் உளளது என்பதை உணர வைப்பதற்காகவும், நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

நவராத்திரியில் வரும் தசமி நாள் விஜயதசமி என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தொடங்கப்படுகின்ற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் வந்து சேரும். இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபடுவது மிகவும் உகந்ததாகும். நவராத்திரி என்பது நமது பண்பாடு, கலை, கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விழாவாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. இது முக்கியமாக பெண்களை முன்நிறுத்தி கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே இதன் சிறப்பு. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (இச்சை என்றால் விருப்பம், ஞானம் என்றால் அறிவு, கிரியா என்றால் செய்தல்) என்ற முப்பெரும் தேவிகளை வணங்குவதே நவராத்திரியின் சிறப்பாகும். இதற்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர் உண்டு. குமரி பூஜை நவராத்திரியில் மிக முக்கியமான ஒன்றாகும். 2 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பல்வேறு விதமான வேடங்கள் அணிவித்து, அந்த அம்பாளாகவே பாவித்து பூஜிக்க வேண்டும். பல்வேறு சக்தி அம்சங்கள் இருந்தாலும், மிக முக்கிய அம்சங்களான குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி, மகேஸ்வரி, கவுமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி சாமுண்டி என்று இந்த நாமாக்களை சொல்லி ஒவ்வொரு இரவும் பூஜிக்க வேண்டும்.

அவரவர் வசதிக்கேற்ப குடும்ப வழக்கப்படி 1, 3, 5, 7, 9, 11 என்ற கணக்கில் கொலு படிகள் அமைத்து அதில் கடவுள் அவதார சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவை, மிருகங்கள், காய்கறி, பழவகைகள் போன்ற பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடலாம். மேல் படியின் நடுவில் ஒரு கும்பம் வைத்து அதில் அரிசி, பருப்பு போட்டு மாவிலை சொருகி, அதன் மீது தேங்காய் வைக்கலாம். அதன் முன்பு முப்பெருந்தேவியரான சக்தி, லட்சுமி, சரஸ்வதி பொம்மைகளை வைக்க வேண்டும். அடுத்தடுத்த படிகளில் சாமி சிலைகள், இறைவனின் மற்ற அவதாரங்கள், தட்சிணாமூர்த்தி போன்றவற்றையும், பின்னர் சாய்பாபா, ஆதிசங்கரர் போன்ற மகான்களின் சிலைகள், பிறகு மனிதர்கள், அதன் கீழே விலங்குகள், பூச்சிகள், அதற்கும் கீழே காய்கறி, பழ வகைகள், பாத்திரங்கள் போன்ற பொம்மைகளை வைக்கலாம். உயிரற்ற பொருட்களும் குறைந்த அறிவுள்ள பொருட்களும் கீழ் நிலையில் இருக்கின்றன. படிப்படியாக ஞானம் பெற்றால் உயர்நிலையை அடையலாம் என்பது இதன் தாத்பர்யம்.

மாலையில் கொலு படி அருகில் கோலம் போட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். அவரவர் வசதிப்படி பொங்கல், சுண்டல் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம். இசை என்பது பக்தியின் ஒரு வடிவம். கல் நெஞ்சையும் உருக வைக்கும் மகத்துவம் இசைக்கு உண்டு. பாடத் தெரிந்தவர்கள், இசைக் கருவிகள் இசைக்க தெரிந்தவர்கள் தினமும் மாலை நேரத்தில் பக்திப் பாடல்கள் பாடுவது சிறப்பு. ஸ்லோகங்கள் சொல்லலாம். தினமும் நடுவாசலிலும் கோலம் போட்டு, அக்கம்பக்கம் உள்ளவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களை கொலுவுக்கு அழைத்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்ளலாம். நிவேதனம் செய்த பொங்கல், சுண்டல் போன்றவற்றுடன் ஜாக்கெட் பிட், பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், தேங்காய், பரிசு பொருட்கள் கொடுத்து உபசரித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவதே இந்த வழிபாட்டின் தத்துவம்.

ஆடம்பரமாகத்தான் கொலு வைக்க வேண்டும் என்றில்லை. அவரவர் வசதிப்படி ஒரு படி வைத்து நாலைந்து பொம்மைகளை வைத்தால்கூட அது கொலுதான். முப்பெருந்தேவியரை நம் வீட்டில் எழுந்தருளச் செய்து 9 நாட்களும் வழிபட வேண்டும் என்பதே முக்கியம். ஒரேயடியாக எல்லா பொம்மைகளையும் வாங்குவது என்பது பலருக்கு சிரமமாக தெரியும். ஒவ்வொரு ஆண்டும் சில பொம்மைகள் வாங்கி கொலு வைக்க தொடங்கி, ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைவது போல நம் வாழ்க்கையிலும் வளம் பெருகும். 

எடுத்த காரியத்தை ஜெயமாக்கும் பராசக்தி


இந்துக்களின் வழிபாடுகளில் முக்கிய இடம் நட்சத்திரங்களுக்கும், திதிகளுக்கும் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள், திதிகளுக்கு ஏற்ப விரதங்கள், பண்டிகைகள் வருகின்றன. சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி, ஆவணி மாதம் ஆவணி அவிட்டம். தை மாதம் தை அமாவாசை என்று கொண்டாடுகிறோம். அந்த வரிசையில் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே ‘நவராத்திரி’ விழாவாகும். இந்த நோன்பு விழா ஸ்ரீசக்கர நாயகியான அம்பாளுக்காக எடுக்கப்படும் விழா. நவமி முடிந்த அடுத்த நாள் தசமியாகும். நவராத்திரி நவமி முடிந்தவுடன் வரும் தசமி ‘விஜயதசமி’ என்று சிறப்பிக்கப்படுகிறது.

நவராத்திரியில் துர்கா தேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் புரிந்து ஒன்பதாம் நாள் போரில் வென்று வெற்றிக் கொடி நாட்டினாள். இது நவமி திதியில் நிகழ்ந்தது. இது முடிந்த மறுநாள் தேவர்கள் இந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால் விஜயதசமி என்று வழங்கலாயிற்று. ‘விஜயீ’ என்றால் வெற்றி என்று பொருள். ‘விஜயீ பவ’ என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் வாழ்த்துவது இந்த நோக்கத்தில்தான். 9 நாள் நவராத்திரி விழா, விஜயதசமியுடன் சேர்த்து தசரா என்று அழைப்பார்கள். தசம் என்றால் பத்து. பத்து நாட்கள் நடக்கும் விழா என்பதால் தசரா என்று அழைத்தனர். இந்த பத்து நாட்களில் கடைசி மூன்று நாட்கள் மிகவும் விசேஷம்.

அதாவது அஷ்டமி, நவமி, தசமி ஆகிய இந்த மூன்று திதி களும் மிக முக்கிய மாக கருதி பூஜை செய்யப் படு கிறது. சாதாரண மாக நம் இல்லங் களில் எந்த நல்ல காரியங்கள், விசேஷங்கள், முக்கிய பேச்சு வார்த்தைகளைகூட இந்த இரண்டு திதிகளில் செய்ய மாட்டோம். ஆனாலும் இறைவன் எல்லா திதிகளிலும்
உறைகின்றான் என்பதை உணர்த்தவே இந்த நவராத்திரியில் இந்த திதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் நடக்கும் சுபகாரியங்கள்,
முக்கிய விசேஷங்களில் நாம் அஷ்டமி, நவமி திதிகளை விலக்கி வைக்கின்றோம். இந்த முறை காலம் காலமாக நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு அப்படியே வழிவழியாக வருகிறது. ஆனால் அஷ்டமி, நவமி திதிகளில் ஆலய வழிபாடுகள் அதிகம். பைரவர், சரபேஸ்வரர், வராஹி போன்ற தெய்வங்களுக்கு அஷ்டமி திதியில் முக்கிய பூஜைகள், ஹோமங்கள் செய்யப்படுகின்றன.

காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்களுக்கும் இந்த இரண்டு திதிகளில் முக்கிய பூஜைகள் நடைபெறும். பொதுவாக பிறந்த நாள் கொண்டாடும்போது நட்சத்திரத்தை வைத்து ஜெயந்தி என்று கொண்டாடுவார்கள். ஆனால் ராமர் பிறந்த தினத்தை அவர் பிறந்த திதியின் பெயரால் ராம நவமி என்றும், கிருஷ்ணர் பிறந்த தினத்தை அவர் பிறந்த திதியின் பெயரால் ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம். இதன்மூலம் இந்த திதிகளும் சிறப்பு
பெறுகிறது. ஆதி சக்தியாம் அம்பாளை வணங்குவதற்கு ஒன்பது இரவுகளை முன்னோர்கள், மூத்தோர்கள் தேர்வு செய்தனர். இதற்காக புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் ஒன்பது நாட்களை கணக்கிட்டனர்.

காரணம் இரவுக்கு அதிபதி சந்திரன், மேலும் அமாவாசையில் இருந்து சந்திரன் வளர்பிறையில் இருப்பதாகவும், அம்பாளின் அம்சமாக சந்திரன் திகழ்வதாலும் இந்த வழிபாட்டை மேற்கொண்டனர். இந்த காலகட்டத்தில் அம்பாளை வணங்குவதால் நம் அறியாமை எனும் இருள் நீங்கி பக்தியும், புத்தியும், ஞானமும், செல்வமும் ஒருங்கே வந்து சேரும். நவராத்திரி ஒன்பது நாட்களும் வீட்டில் மட்டுமின்றி எல்லா கோயில்களிலும் சிறப்பான அபிஷேக ஆராதனைகளும், சுவாமி புறப்பாடும் இருக்கும். அம்மன், அம்பாள் ஸ்தலங்கள், நவதிருப்பதிகள், திவ்ய தேசங்கள் போன்றவற்றில் உற்சவங்களும், பிரம்மோற்சவங்களும் நடைபெறும்.

அம்பாள் தினமும் ஒரு வாகனத்தில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்சத்தில் அலங்கார ரூபிணியாக அருள்பாலிப்பாள். கவுரி அம்மனாகவும், சரஸ்வதியாகவும், பத்மாசினியாகவும், மகேஸ்வரியாகவும், ராஜராஜேஸ்வரியாகவும், மீனாட்சியாகவும், காமாட்சியாகவும், அன்னபூரணியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் வலம் வருவாள். நவராத்திரியில் வரும் நவமி மகா நவமி என்றும் ஆயுத பூஜை என்றும், சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சிறிய கடை முதல் பெரிய தொழிற்சாலைகள், கல்வி கூடங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்படும். புத்தகங்கள், நோட்டு பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து மாணவர்கள் வணங்குவார்கள்.

எல்லா துறைகளில் இருப்பவர்களும் அவரவர்கள் உபயோகிக்கும் பொருட்களை வைத்து வணங்குவார்கள். இயந்திரங்களுக்கு மாலை அணிவித்து பொட்டு வைத்து தமக்கு வாழ்வளிப்பதற்காக அதற்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள். லாரி, பஸ், கார், பைக், சைக்கிள் முதற்கொண்டு எல்லா வாகனங்களுக்கும் மஞ்சள், குங்குமம் இட்டு திருஷ்டி கழித்து, எலுமிச்சம்பழத்தில் ஏற்றி வாகன ஓட்டத்தை தொடங்குவார்கள். இதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகும். இன்றைய தினம் புதிதாக குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள், புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். ஏதாவது புதிய பொருள் வாங்குவார்கள். ஒப்பந்தங்கள் போடுவார்கள்.

இயல், இசை, நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வணங்குவார்கள். அவரவர்கள் சார்ந்துள்ள தொழில்களில் இன்றைய தினம் புதிதாக ஆரம்பம் செய்வார்கள். இதற்கு காரணம் இது வெற்றியை குறிக்கும் தினம். ஆகையால் எல்லா செயல்களும் வெற்றி பெற வேண்டும் என்று பூஜை செய்து வேண்டிக் கொள்வார்கள். நவராத்திரியின் தத்துவமே ஆதிசக்தியான அன்னை எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறாள் என்பதே. எல்லா உருவங்களிலும் அவளின் சக்தி வெளிப்படுகிறது என்பதை உணர்த்தவே பல்வேறு விதமான பொம்மைகளை வைத்து வணங்கும் கலாசாரம் ஏற்பட்டது.

இந்த ஒன்பது இரவுகளிலும் தனி சக்தியாக விளங்கும் ஜெகன்மாதா பத்தாம் நாள் விஜயதசமியன்று ஈஸ்வரனை வணங்கி சிவசக்தி சொரூபமாக, ஐக்கிய
ரூபிணியாக, அர்த்த நாரீஸ்வரராக உருவெடுக்கிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு. நவராத்திரியிலும் ஆயுத பூஜையன்றும் விஜயதசமியன்றும் அன்னை பராசக்தியை வணங்குவோம். அவள் அருள் பெறுவோம்.

நலம் தரும் நவ கன்னிகை வழிபாடு


நவராத்திரி நாட்களில் அம்மனை நவ கன்னிகையாகவும், நவ துர்க்கையாகவும் வணங்கினால் நலம் பெருகும்.

10 வயது நிரம்பாத கன்னியையாக தினமும் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவகன்னிகை வழிபாடு. அதுபோல பார்வதி தேவியின் பல்வேறு அவதாரங்களை துர்கையாக வழிபடுவது நவதுர்க்கை வழிபாடு.

1ம் நாள் - 2 வயது குழந்தை குமாரி
2ம் நாள் - 3 வயது குழந்தை திரிமூர்த்தி
3ம் நாள் - 4 வயது குழந்தை கல்யாணி
4ம் நாள் - 5 வயது குழந்தை ரோகிணி
5ம் நாள் - 6 வயது குழந்தை காளிகா
6ம் நாள் - 7 வயது குழந்தை சண்டிகா
7ம் நாள் - 8 வயது குழந்தை சாம்பவி
8ம் நாள் - 9 வயது குழந்தை துர்க்கா
9ம் நாள் - 10 வயது குழந்தை சுபத்ரா

நவராத்திரி பிரசாத பலன்கள்



நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும். நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது.

முதல் நாள்: வெண்பொங் கலை பிரசாதமாகக் கொடு ப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும்.

இரண்டாம் நாள்: புளியோதரையை பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன்மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.

மூன்றாம் நாள்: சர்க்கரைப் பொங்கல். இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

நான்காம் நாள்: பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதத்தை பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.

ஐந்தாம் நாள்: தயிர் சாதத்தை பிரசாதமாக கொடுக்கலாம். இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம்.

ஆறாம் நாள்: தேங்காய் சாதத்தை பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி தனம் பெருகும். எதிர்ப்புகள் விலகும்.

ஏழாம் நாள்: எலுமிச்சை சாதத்தை பிரசாத மாக அளிக்கிறோம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும்.

எட்டாம் நாள்: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பருப்பு பாயசத்தை, வடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும். கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம்
பெறலாம்.

ஒன்பதாம் நாள்: சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசலை நிவேதனம் செய்யலாம். இதனால் குழந்தை வரம் பெறலாம்.


கொலுவுக்கு ரெடியாயிட்டீங்களா?


மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக படிப்படியாக உயர்த்திக் கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனித பிறப்பின் அடிப்படை தத்துவம் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் நவராத்திரி விழாவில் கொலு வைக்கப்படுகிறது. இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகளில் வைக்கப்பட வேண்டிய பொம்மைகள்...

1ம் படி: ஓரறிவு உயிர் பொருட்களான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்

2ம் படி: இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்

3ம் படி: மூன்றறிவு உயிர்களான எறும்பு, ஊறும் உயிரின பொம்மைகள்

4ம் படி: நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.

5ம் படி: ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவை பொம்மைகள்.

6ம் படி: ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள்.

7ம் படி: மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள்.

8ம் படி: தேவர்கள், நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூதங்கள், அஷ்டதி பாலகர் பொம்மைகள்.

9ம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி பொம்மைகள் (ஆதிபராசக்தி நடுவில்) இருத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டிலும் உண்டு தசரா விழா


மைசூர் தசரா விழாவுக்கு அடுத்த படியாக தென்மாநிலங்களில் தசராவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில்தான். பாண்டிய மன்னர்கள் இந்த அம்மனுக்கு முத்துக்களால் மாலை அணிவித்ததால் முத்தாரம்மன் என்ற பெயர் பெற்றதாகக் கூறுவர். இக்கோயில் கருவறையில் ஞானமூர்த்தீஸ்வரர் இடதுகாலை மடித்து, வலதுகாலை தொங்கவிட்டு, வலக்கையில் செங்கோலையும், இடக்கையில் திருநீற்றுப் பாத்திரத்தையும் ஏந்தியுள்ளார். சுவாமிக்கு இடப்புறம், முத்தாரம்மன் நான்கு திருக்கரங்களுடன், வலதுகாலை மடித்து, இடதுகாலை தொங்கவிட்டு அருள்பாலிக்கிறார்.

வலப்புறம் மேற்கையில் உடுக்கை, இடப்புறம் நாகபாசம், வலதுகீழ் திருக்கையில் திரிசூலம், கீழ இடக்கையில் குங்கும பாத்திரம் ஏந்தி அருள்கிறார். இந்த ஆண்டு வருகிற 15ம்தேதி அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் தசரா விழா கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் நாளில் துர்க்கை, இரண்டாவது நாள் தேவி விஸ்வகர்மேஸ்வரர், மூன்றாவது நாள் பார்வதி, நான்காவது நாள் பாலசுப்பிரமணியர், ஐந் தாவது நாள் நவநீத கிருஷ்ணர், ஆறாவது நாள் அம்பாள் மகிஷாசுர மர்த்தினி, ஏழாம் நாளில் ஆனந்த நடராஜர், எட்டாவது நாளில் மகாலட்சுமி, ஒன்பதாவது நாள் தேவி சரசுவதி தோற்றத்தில் காட்சியளிக்கிறாள்.

அன்று அன்னையை தரிசித்தால் கல்விச் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கை. தசராவிழாவில் பக்தர்கள் விரதமிருந்து விநாயகர், சிவபெருமான், கிருஷ்ணன், முருகன், காளி, அனுமார், சிங்கம், குரங்கு, போலீஸ்காரர், ராணுவவீரர், அனுமார் போன்ற பல்வேறு வேடங்களைத் தாங்கி வலம் வருவது கண் கொள்ளா காட்சி யாக இருக்கும். தினமும் அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று காணிக்கை பெற்று மகிஷாசுர வதம் நடக்கும் 10வது நாளில் அம்மனுக்கு செலுத்துவார்கள்.

பத்தாம் நாள் நள் ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றபின், கடற்கரை சம்ஹார திடலில் மகிஷாசுர வதம் நடைபெறுகிறது. பின்னர் மேடையில் அம்பாள் எழுந்தருள, வாணவேடிக்கைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். நினைத்த காரியம் நிறைவேறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கல்வி வரம் அருளும் கூத்தனூர் சரஸ்வதி


உலகத்து உயிர்களை தன் அருள் விளையாட்டால் ஆட்கொண்டு அருள்பாலிக்கும் அன்னை சரஸ்வதி அறிவுக்கு கடவுளாக விளங்குகிறாள். காளிதாசனுக்கு
சம்பூர்ண ராமாயணம் பாட அருள் செய்தவள். கம்பனுக்காக கிழங்கு விற்றவள். தமயந்தி நளனை தேர்ந்தெடுக்க உதவியவள். ஆதிசங்கரரின் பெருமைகளை வெளிப்படுத்த சரசவாணியாய் அவதரித்த நாமகள். இப்போதும் ஒரு பக்தனை ஆட் கொள்ள விரும்பினாள். கவிச்சக்கரவர்த்தி எனப்பெயர் பெற்றவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலை மகளை பூசித் தார். கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் ஒன்று அமைத்தும் தக சின வாகினி யாய் ஓடும் ஹரி சொல் மாநதி யின் நீரினால் அபிஷே கம் செய்து நாள் தோறும் அம்பிகை யை வழி பட்டு வந்தார்.

கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவியாக்கினாள் என்பர். செங்குந்தர்களின் தலைகள் ஆயிரத்தை வெட்டி
அவற்றை கலைவாணியின் அருளால் ஒட்ட வைத்தார் கூத்தர், அதனாலேயே ஒட்டக்கூத்தர் என அழைக்கப்பட்டார். சரஸ்வதிக்கென தனிக்கோவில் அமைந்திருப்பது நாகை மாவட்டம் கூத்தனூரில்தான். இங்கு சிவன் கோவிலில் துர்க்கையும், பெருமாள் கோயிலில் மகாலட்சுமியும், தனக்கென தனிக்கோவில் கொண்டு மகாசரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவகிரகங்கள் இல்லை. அம்பிகையின் கோயிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை.

கருவறை யின் மேலே ஐந்து கலசங்களுடன் ஞானத் தின் இருப்பிடத்தை உலகோருக்கு உணர்த்துவதாய் அமைந்துள் ளது. இங்குள்ள நடராசர் சிலை அழகானதும் அற்புதமானதும் ஆகும். முயலவன் பக்கவாட்டில் இல்லாமல் நேர்முகமாக காணப்படுகிறான். அவன் முதுகின்மீது பெருமாள் தாண்டவமாடுகிறார். அடுத்து மகாமண்டபத்தின் இடப்பக்கம் வேதம் ஓதும் நான்கு திருமுகங்களுடன் கைகூப்பிய வண்ணம் பிரம்மா நிற்கும் கோலம் காண்பதற்கு உரியது. திருவாரூர்-மயிலாடு துறை சாலையில் பூந்தோட்டம் பேருந்து நிலையத்தின் அருகே அரை கிலோ மீட்டர் தொலைவில் கூத்தனூர் உள்ளது. 

நவராத்திரி தாம்பூலம்


 

பூஜை முடிந்த பிறகு, தினமும் ஒரு தம்பதிக்கு விருந்து படைக்கலாம். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், ஒன்பது நாட்களில் ஏதாவது ஒரு நாள் விருந்து உபசாரம் செய்யலாம். இது செய்ய இயலாதவர்கள், சுமங்கலிக்கு ஒரு நாள் கண்டிப்பாக விருந்து உபசாரம் செய்வது அவசியம். அதே போல், ருது அடையாத கன்யா பெண்களையும் உபசரித்து, உணவளித்து, தாம்பூலம் கொடுக்க வேண்டும். வசதி குறைந்தவர்கள், குத்து விளக்கையே தேவியாக நினைத்து பூஜை செய்து, முடிந்ததை நிவேதனம் செய்து, யாராவது ஒருவருக்கு, மனதார தாம்பூலம் கொடுத்தாலே, பூஜையின் முழுப் பலனும் கிடைக்கும்.

மனித நிலையை உணர்த்தும் கொலு


நவராத்திரியின் சிறப்பு அம்சமே கொலு. பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதாகும். இதில் கொலு
மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

முதலாம் படி: புல், செடி, கொடி போன்ற ஓரறிவு தாவர வர்க்கங்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு பொம்மைகள் வைக்க வேண்டும்.

மூன்றாம் படி: மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

நான்காம் படி: நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

ஐந்தாம் படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஆறாம் படி: ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஏழாம் படி: மனித நிலையில் இருந்து உயர் நிலையடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் போன்றோரின் பொம்மைகள் வைத்திட வேண்டும்.

எட்டாம் படி: தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஒன்பதாம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காக இப்படி கொலு அமைத்திடுவது வழக்கம்.

சரத் கால பூஜை


 

அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாதான். அவற்றில்
புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர்.
இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரியாக சிறப்பாக கொண்டாடுவார்கள். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா. நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்களுக்கு செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நவராத்திரியை வழிபடுவார்கள். 

சரஸ்வதி 20-20


மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள கூத்தனூரில் தனிக்கோயில் கொண்டருளும் சரஸ்வதி, பிறவியிலேயே பேச்சிழந்த, புருஷோத்தமன் எனும் பக்தரைப் பேச வைத்து கவிஞனாக்கியவள்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிருங்கேரியில் சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி வடிவில் ஜபமாலை ஏந்தி சாரதாதேவியாக அருட்கோலம் காட்டுகிறாள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலய தூண் ஒன்றில் இடக்காலை ஊன்றி வலக்காலை முன்வைத்த நிலையில் வீணை வாசிக்கும் தோன்றத்தில் தோளில் கிளியுடன் தரிசனம் அளிக்கிறாள், சரஸ்வதி.

கம்பர் வழிபட்ட சரஸ்வதி தேவி பத்மநாபபுரம் கோட்டையினுள் தரிசனம் தருகிறாள். நவராத்திரியின் போது இவள் திருவனந்தபுரம் எழுந்தருளி விழாக்கண்டு பின் திரும்புவது நடைமுறையில் உள்ளது.

திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் கலைகளின் வடிவாய் எழுந்தருளி வேத சரஸ்வதி எனும் பெயரில் வீணை இல்லாமல் தரிசனமளிக்கிறாள்.

சப்தஸ்தானங்களில் ஒன்றான திருநெய்த்தானத்தில் உள்ள இருதயபுரீஸ்வரரை சரஸ்வதி தேவி பூஜித்து பேறு பெற்றிருக்கிறாள். இங்குள்ள தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம் எனப் போற்றப்படுகிறது.

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தென்புற வாயிலில் மேற்கு திசை நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்த தவக்கோல சரஸ்வதியை தரிசிக்கலாம். தேவியின் பின்னால், தோழிகள் வெண்சாமரம் வீசி பணிவிடை புரிகிறார்கள்.

கங்கை கொண்ட சோழபுரம், வடக்குக் கோயிலின் மாடத்தில் மேற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் அருளும் ஞான சரஸ்வதியின் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.

வேலூர், தோட்டபாளையம் தாரகேசுவரர் ஆலயத்தில் கோஷ்ட தெய்வமான பிரம்மாவிற்கு நேர் எதிரில் சரஸ்வதி தேவி திருவருள் புரிகிறாள்.

தஞ்சை, திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் கருவறை கோஷ்ட தேவதையாய் ஊரு முத்திரையுடன் சரஸ்வதி அருள்கிறாள்.

திருநெல்வேலி கீழமாடவீதியில், கோமதி அம்மன் சந்நதிக்கு எதிரே சரஸ்வதிக்கென தனிக் கோயில் உள்ளது. புதன்கிழமைகளில் இவளை அர்ச்சனை செய்து
வணங்க கல்விவளம் பெருகும்.

ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயத்தில் பத்ரபீடத்தில் அமர்ந்த அலங்கார ரூபிணியாக கலைவாணியை தரிசிக்கலாம்.

காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில் ச்யாமளாதேவி எனும் பெயரில் சரஸ்வதியை தரிசிக்கலாம். கார்த்திகை ஞாயிறன்று நடைபெறும் நிகழ்ச்சி மண்டைவிளக்கு விழா எனப்படுகிறது.

நாகை, கடலங்குடி கிராமத்தில் உள்ள திருமேனியார் ஆலயத்தில் காண்போர் கண்களைக் கவரும் எழிலார்ந்த சரஸ்வதியின் திருவுருவை தரிசிக்கலாம்.

உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கஜலட்சுமி தோற்றத்தில் கையில் கலசம், அக்கமாலை, புத்தகம், அபயஹஸ்தம் தாங்கிய சரஸ்வதி வீற்றருள்கிறாள்.

திருவையாறு-தஞ்சாவூர் பாதையில், அட்டவீரட்டத்தலங்களுள் ஒன்றான திருக்கண்டியூரில் தன் நாயகன் பிரம்மனுடன் சரஸ்வதி தேவி அருள்புரிகிறாள்.

ஹைதராபாத், மகபூப் மாவட்டம், அலம்பூர் கோட்டைக்குள் பால, குமார, அர்க்க, வீர, விஸ்வ, தாரகா, கருட, சுவர்க்க, பத்ம எனும் ஒன்பது பிரம்மாக்களுடன் சரஸ்வதி தேவி சந்நதி கொண்டருள்கிறாள்.

ஆந்திரம், அடில்லாபாத்£வட்டத்தில் உள்ள மதோலே தாலுக்காவில் பாஸ்ரா எனும் இடத்தில் சரஸ்வதி தனிக்கோயில் கொண்டு வரப்ரசாதியாய் அருள்கிறாள்.

கேரளா மாநிலம் கோட்டயத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள பனச்சிக்காட்டில் சுயம்பு சரஸ்வதி தேவியை தரிசிக்கலாம். கல்வி வரம் தருவதில் நிகரற்ற
இந்த அன்னையை விஜயதசமி அன்று தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மைசூர் நாகமங்கலம் தாலுக்காவில் பஸ்ராலு எனும் இடத்தில் உள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயத்தின் அழகே உருவாய் ஞான சரஸ்வதியை தரிசிக்கலாம்.

சரஸ்வதி 20-20


மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள கூத்தனூரில் தனிக்கோயில் கொண்டருளும் சரஸ்வதி, பிறவியிலேயே பேச்சிழந்த, புருஷோத்தமன் எனும் பக்தரைப் பேச வைத்து கவிஞனாக்கியவள்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிருங்கேரியில் சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி வடிவில் ஜபமாலை ஏந்தி சாரதாதேவியாக அருட்கோலம் காட்டுகிறாள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலய தூண் ஒன்றில் இடக்காலை ஊன்றி வலக்காலை முன்வைத்த நிலையில் வீணை வாசிக்கும் தோன்றத்தில் தோளில் கிளியுடன் தரிசனம் அளிக்கிறாள், சரஸ்வதி.

கம்பர் வழிபட்ட சரஸ்வதி தேவி பத்மநாபபுரம் கோட்டையினுள் தரிசனம் தருகிறாள். நவராத்திரியின் போது இவள் திருவனந்தபுரம் எழுந்தருளி விழாக்கண்டு பின் திரும்புவது நடைமுறையில் உள்ளது.

திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் கலைகளின் வடிவாய் எழுந்தருளி வேத சரஸ்வதி எனும் பெயரில் வீணை இல்லாமல் தரிசனமளிக்கிறாள்.

சப்தஸ்தானங்களில் ஒன்றான திருநெய்த்தானத்தில் உள்ள இருதயபுரீஸ்வரரை சரஸ்வதி தேவி பூஜித்து பேறு பெற்றிருக்கிறாள். இங்குள்ள தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம் எனப் போற்றப்படுகிறது.

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தென்புற வாயிலில் மேற்கு திசை நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்த தவக்கோல சரஸ்வதியை தரிசிக்கலாம். தேவியின் பின்னால், தோழிகள் வெண்சாமரம் வீசி பணிவிடை புரிகிறார்கள்.

கங்கை கொண்ட சோழபுரம், வடக்குக் கோயிலின் மாடத்தில் மேற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் அருளும் ஞான சரஸ்வதியின் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.

வேலூர், தோட்டபாளையம் தாரகேசுவரர் ஆலயத்தில் கோஷ்ட தெய்வமான பிரம்மாவிற்கு நேர் எதிரில் சரஸ்வதி தேவி திருவருள் புரிகிறாள்.

தஞ்சை, திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் கருவறை கோஷ்ட தேவதையாய் ஊரு முத்திரையுடன் சரஸ்வதி அருள்கிறாள்.

திருநெல்வேலி கீழமாடவீதியில், கோமதி அம்மன் சந்நதிக்கு எதிரே சரஸ்வதிக்கென தனிக் கோயில் உள்ளது. புதன்கிழமைகளில் இவளை அர்ச்சனை செய்து
வணங்க கல்விவளம் பெருகும்.

ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயத்தில் பத்ரபீடத்தில் அமர்ந்த அலங்கார ரூபிணியாக கலைவாணியை தரிசிக்கலாம்.

காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில் ச்யாமளாதேவி எனும் பெயரில் சரஸ்வதியை தரிசிக்கலாம். கார்த்திகை ஞாயிறன்று நடைபெறும் நிகழ்ச்சி மண்டைவிளக்கு விழா எனப்படுகிறது.

நாகை, கடலங்குடி கிராமத்தில் உள்ள திருமேனியார் ஆலயத்தில் காண்போர் கண்களைக் கவரும் எழிலார்ந்த சரஸ்வதியின் திருவுருவை தரிசிக்கலாம்.

உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கஜலட்சுமி தோற்றத்தில் கையில் கலசம், அக்கமாலை, புத்தகம், அபயஹஸ்தம் தாங்கிய சரஸ்வதி வீற்றருள்கிறாள்.

திருவையாறு-தஞ்சாவூர் பாதையில், அட்டவீரட்டத்தலங்களுள் ஒன்றான திருக்கண்டியூரில் தன் நாயகன் பிரம்மனுடன் சரஸ்வதி தேவி அருள்புரிகிறாள்.

ஹைதராபாத், மகபூப் மாவட்டம், அலம்பூர் கோட்டைக்குள் பால, குமார, அர்க்க, வீர, விஸ்வ, தாரகா, கருட, சுவர்க்க, பத்ம எனும் ஒன்பது பிரம்மாக்களுடன் சரஸ்வதி தேவி சந்நதி கொண்டருள்கிறாள்.

ஆந்திரம், அடில்லாபாத்£வட்டத்தில் உள்ள மதோலே தாலுக்காவில் பாஸ்ரா எனும் இடத்தில் சரஸ்வதி தனிக்கோயில் கொண்டு வரப்ரசாதியாய் அருள்கிறாள்.

கேரளா மாநிலம் கோட்டயத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள பனச்சிக்காட்டில் சுயம்பு சரஸ்வதி தேவியை தரிசிக்கலாம். கல்வி வரம் தருவதில் நிகரற்ற
இந்த அன்னையை விஜயதசமி அன்று தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மைசூர் நாகமங்கலம் தாலுக்காவில் பஸ்ராலு எனும் இடத்தில் உள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயத்தின் அழகே உருவாய் ஞான சரஸ்வதியை தரிசிக்கலாம்.

வீட்டில் கொண்டாடும் பிரமோற்சவம்


சக்தி வழிபாட்டுக்குரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பவுர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. நவராத்திரி என்பது விரதம் இருந்து கொண்டாடப் படுகிறது. வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப் படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு பிரமோற்சவம் என்று கூட சொல்லலாம்.

அம்பிகை தரிசனம்



சகல புவனங்களையும் நடத்தும் புவனேஸ்வரி தசமகா வித்யாவில் நான்காம் வடிவம் கொண்ட தேவதை. பரம்பொருளின் ஞான சக்தியாக திகழ்கிறாள். உதய சூரியனைப்போல் பிரகாசிப்பவள். சந்திரப்பிறை ஒளிரும் கிரீடமணிந்தவள். பாசம் ஏந்திய கரத்துடன் விளங்குகிறாள். பயம் வந்தால் போக்க அபய முத்திரையில் அறிவிக்கிறாள். எல்லா தேவர்களுக்கும் வரம் கொடுக்கும் சக்தியளித்தவள் புவனேஸ்வரி.

பாலா திரிபுர சுந்தரி

லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் பாலா திரிபுரசுந்தரி என்றழைக்கப்பட்டார். சகல நலன்களையும் தருபவள். எல்லாம் வல்ல இறைவியான பாலாவின் தாள் பணிந்து தடைகளைத் தகர்த்து வாழ்வில் வளம் பெறுவோம்.

தூமா தேவி

தசமஹாவத்யைகளில் ஏழாவது வித்யையாக பிரகாசிப்பவள் தூமாதேவி. கருத்த நிறம் கொண்டவள். மயானத்தில் வாசம் செய்வதில் பிரியமுள்ளவள். விதவைக் கோலத்தில் காணப்படுகிறாள். காமம், குரோதம், அகங்காரத்தை போக்கி மகிழ்ச்சியை தந்து அருள்கிறாள். வயோதிகத்திலும் பேரருளும், பேரின்பமும் உண்டு என்பதை உணர்த்துகிறாள்.

பகளாமூகி

லலிதா பரமேஸ்வரியான சேனாதிபதியான இவளுக்கு தண்ட நாதா, தண்டினி என்ற பெயர்கள் உண்டு. திருவானைக்காலில் அகிலாண்டேஸ்வரியாக அருள்பவள். ஒரு கையால் எதிரியின் நாக்கைப் பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் கதாயுதமும் தரித்தவள். அசுரர்களைஅழிக்க முருகனுக்கு, பரமன் ‘ப்ரஹ்மாஸ்த்திரம்‘ என வழங்கப்படும் பகளா முகீ மந்திரத்தை அருளினார்.

திரிபுரபைரவி

தஸமகாவித்யையின் ஐந்தாம் வடிவம் திரிபுரதேவி. இவள் அருள் பெற்றால் எல்லாம் கிடைக்கும். மண்டை ஓட்டு மாலையை தரித்துள்ளதால் பக்தர்களின் மரண பயம் நீங்கும். ஜாத வேதஸே எனும் வேத மந்திரத்தினால் இவளைத் துதிக்க நிவாரணமும், தனலாபமும் கிட்டும்.

சின்ன மஸ்தா

தசமஹா வித்யைகளில் ஆறாவது தேவியாக அருட்பாலிக்கிறாள் சின்ன மஸ்தா. சூர்ய மண்டலத்தின் ஒளியைப் பழிக்கும் தேக காந்தியையுடையவள். ஆறாவதாக அருள்வதால் ஷஷ்டி தேவி எனவும் வழிபடுவர். இத்தேவி ஒரு கையில் வெட்டப்பட்ட தன் தலையையே தாங்கிய கோலத்துடன் உள்ளாள்.

தாராதேவி

பத்தாக பிரகாசிக்கும் தேவியரில் இரண்டாவதாக பொலிபவள் தாராதேவி. பக்தர்களை சம்சாரம் எனும் கடலில் மூழ்காமல் காத்து முக்தியை அருள்வாள். நரக
சதுர்த்தசி அன்று காளி, தாரா வழிபாட்டால் பல மடங்கு பலன் கிடைக்கும். வாக்கு வல்லமை, அளவற்ற செல்வம், தந்து, ஞானமும், முக்தியும் கிட்டச் செய்யும் தேவி இவள்.

கமலாத்மிகா

அகில அண்டங்களை படைத்தவள் பராசக்தி. அவளை தசமஹாவித்யாவில் கமலாத்மிகா வித்யையாக பத்தாவது வடிவில் வழிபடுகின்றனர். மண்ணிலிருந்து சீதையாகவும், தீயிலிருந்து தடாகையாகவும், தாமரையிலிருந்து பார்கவியாகவும் அவதரித்த தேவி பாற்கடலைக் கடைந்தபோது திருமகளாய் நின்றாள். லக்ஷ்மி, ஸ்ரீ கமலா, கமலாலயா, பத்மா, ரமா, நளினீ, யுக்மகரா எனும் நாமங்களால் துதிக்கப்படுகிறார்.

திதி நித்யா தேவிகள்

பராசக்தியின் லீலைகளை ஆயிரம் திருநாமங்கள் கொண்டு அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள். பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை‘ எனப் போற்றப்படுகிறது. அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர்.

நவராத்திரி தாம்பூலம்


பூஜை முடிந்த பிறகு, தினமும் ஒரு தம்பதிக்கு விருந்து படைக்கலாம். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், ஒன்பது நாட்களில் ஏதாவது ஒரு நாள் விருந்து உபசாரம் செய்யலாம். இது செய்ய இயலாதவர்கள், சுமங்கலிக்கு ஒரு நாள் கண்டிப்பாக விருந்து உபசாரம் செய்வது அவசியம். அதே போல், ருது அடையாத கன்யா பெண்களையும் உபசரித்து, உணவளித்து, தாம்பூலம் கொடுக்க வேண்டும். வசதி குறைந்தவர்கள், குத்து விளக்கையே தேவியாக நினைத்து பூஜை செய்து, முடிந்ததை நிவேதனம் செய்து, யாராவது ஒருவருக்கு, மனதார தாம்பூலம் கொடுத்தாலே, பூஜையின் முழுப் பலனும் கிடைக்கும்.

அம்பிகை தரிசனம்



சகல புவனங்களையும் நடத்தும் புவனேஸ்வரி தசமகா வித்யாவில் நான்காம் வடிவம் கொண்ட தேவதை. பரம்பொருளின் ஞான சக்தியாக திகழ்கிறாள். உதய சூரியனைப்போல் பிரகாசிப்பவள். சந்திரப்பிறை ஒளிரும் கிரீடமணிந்தவள். பாசம் ஏந்திய கரத்துடன் விளங்குகிறாள். பயம் வந்தால் போக்க அபய முத்திரையில் அறிவிக்கிறாள். எல்லா தேவர்களுக்கும் வரம் கொடுக்கும் சக்தியளித்தவள் புவனேஸ்வரி.

பாலா திரிபுர சுந்தரி

லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் பாலா திரிபுரசுந்தரி என்றழைக்கப்பட்டார். சகல நலன்களையும் தருபவள். எல்லாம் வல்ல இறைவியான பாலாவின் தாள் பணிந்து தடைகளைத் தகர்த்து வாழ்வில் வளம் பெறுவோம்.

தூமா தேவி

தசமஹாவத்யைகளில் ஏழாவது வித்யையாக பிரகாசிப்பவள் தூமாதேவி. கருத்த நிறம் கொண்டவள். மயானத்தில் வாசம் செய்வதில் பிரியமுள்ளவள். விதவைக் கோலத்தில் காணப்படுகிறாள். காமம், குரோதம், அகங்காரத்தை போக்கி மகிழ்ச்சியை தந்து அருள்கிறாள். வயோதிகத்திலும் பேரருளும், பேரின்பமும் உண்டு என்பதை உணர்த்துகிறாள்.

பகளாமூகி

லலிதா பரமேஸ்வரியான சேனாதிபதியான இவளுக்கு தண்ட நாதா, தண்டினி என்ற பெயர்கள் உண்டு. திருவானைக்காலில் அகிலாண்டேஸ்வரியாக அருள்பவள். ஒரு கையால் எதிரியின் நாக்கைப் பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் கதாயுதமும் தரித்தவள். அசுரர்களைஅழிக்க முருகனுக்கு, பரமன் ‘ப்ரஹ்மாஸ்த்திரம்‘ என வழங்கப்படும் பகளா முகீ மந்திரத்தை அருளினார்.

திரிபுரபைரவி

தஸமகாவித்யையின் ஐந்தாம் வடிவம் திரிபுரதேவி. இவள் அருள் பெற்றால் எல்லாம் கிடைக்கும். மண்டை ஓட்டு மாலையை தரித்துள்ளதால் பக்தர்களின் மரண பயம் நீங்கும். ஜாத வேதஸே எனும் வேத மந்திரத்தினால் இவளைத் துதிக்க நிவாரணமும், தனலாபமும் கிட்டும்.

சின்ன மஸ்தா

தசமஹா வித்யைகளில் ஆறாவது தேவியாக அருட்பாலிக்கிறாள் சின்ன மஸ்தா. சூர்ய மண்டலத்தின் ஒளியைப் பழிக்கும் தேக காந்தியையுடையவள். ஆறாவதாக அருள்வதால் ஷஷ்டி தேவி எனவும் வழிபடுவர். இத்தேவி ஒரு கையில் வெட்டப்பட்ட தன் தலையையே தாங்கிய கோலத்துடன் உள்ளாள்.

தாராதேவி

பத்தாக பிரகாசிக்கும் தேவியரில் இரண்டாவதாக பொலிபவள் தாராதேவி. பக்தர்களை சம்சாரம் எனும் கடலில் மூழ்காமல் காத்து முக்தியை அருள்வாள். நரக
சதுர்த்தசி அன்று காளி, தாரா வழிபாட்டால் பல மடங்கு பலன் கிடைக்கும். வாக்கு வல்லமை, அளவற்ற செல்வம், தந்து, ஞானமும், முக்தியும் கிட்டச் செய்யும் தேவி இவள்.

கமலாத்மிகா

அகில அண்டங்களை படைத்தவள் பராசக்தி. அவளை தசமஹாவித்யாவில் கமலாத்மிகா வித்யையாக பத்தாவது வடிவில் வழிபடுகின்றனர். மண்ணிலிருந்து சீதையாகவும், தீயிலிருந்து தடாகையாகவும், தாமரையிலிருந்து பார்கவியாகவும் அவதரித்த தேவி பாற்கடலைக் கடைந்தபோது திருமகளாய் நின்றாள். லக்ஷ்மி, ஸ்ரீ கமலா, கமலாலயா, பத்மா, ரமா, நளினீ, யுக்மகரா எனும் நாமங்களால் துதிக்கப்படுகிறார்.

திதி நித்யா தேவிகள்

பராசக்தியின் லீலைகளை ஆயிரம் திருநாமங்கள் கொண்டு அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள். பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை‘ எனப் போற்றப்படுகிறது. அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர்.

வீட்டில் கொண்டாடும் பிரமோற்சவம்


சக்தி வழிபாட்டுக்குரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பவுர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. நவராத்திரி என்பது விரதம் இருந்து கொண்டாடப் படுகிறது. வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப் படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு பிரமோற்சவம் என்று கூட சொல்லலாம்.

ஜப்பானில் சரஸ்வதி கோயில்


ஜப்பான் நாட்டிலும் பொம்மைக்கொலு ஹினாமட்சூரி எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. ஐந்து அல்லது ஏழு படிகளில் சிவப்பு நிற துணிவிரித்து ஹினா எனப்படும் பொம்மைகள் அதில் அழகாக அடுக்கப்படுகின்றன.

ஜப்பான் நாட்டில் சரஸ்வதிக்கு பென்டன் என்று பெயர். திபெத்தில் யங்சன்ம என சரஸ்வதியை வழிபடுகின்றனர். பாலித்தீவு பகுதிகளில் இசைக்கருவிகள், புத்தகங்களை வைத்து பூஜை செய்கிறார்கள். அங்கு சரஸ்வதிக்கு கலுங்கன் என பெயர்.

ஜப்பானில் சரஸ்வதி கோயில்


   
ஜப்பான் நாட்டிலும் பொம்மைக்கொலு ஹினாமட்சூரி எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. ஐந்து அல்லது ஏழு படிகளில் சிவப்பு நிற துணிவிரித்து ஹினா எனப்படும் பொம்மைகள் அதில் அழகாக அடுக்கப்படுகின்றன.

ஜப்பான் நாட்டில் சரஸ்வதிக்கு பென்டன் என்று பெயர். திபெத்தில் யங்சன்ம என சரஸ்வதியை வழிபடுகின்றனர். பாலித்தீவு பகுதிகளில் இசைக்கருவிகள், புத்தகங்களை வைத்து பூஜை செய்கிறார்கள். அங்கு சரஸ்வதிக்கு கலுங்கன் என பெயர்.

சரஸ்வதி கோயில்




சரஸ்வதி பூஜை மாநவமி என வழங்கப்படுகிறது. குருபகவான் கல்விக்கு உரியவர். அவருக்கு உரிய தானியம் கடலை. எனவேதான் சரஸ்வதி பூஜையன்று
கடலை சுண்டல் நிவேதிக்கப்படுகிறது.

மைசூரில் பெரும்பாலானோர் மண்பொம்மைகளால் ஆன கொலு வைப்பதில்லை. வித விதமான அலங்காரங்களில் மரப்பாச்சி பொம்மைகளையே கொலுவில் வைக்கின்றனர்.

சரஸ்வதி தேவிக்கு சாக்த தந்திரங்கள் மகா சரஸ்வதி, லலிதோபாக்யானம் சியாமா, சியாமளா, மந்திரநாயிகா, சுகப்ரியா, சசிவேசானி, பிரதாநேசி, வீணாவதி, வைணிகி, முத்ரிணி, ப்ரியகப்ரியா, நீபப்ரியா, கதம்பேசி, கதம்பவனவாசினி, சதாமதா, சங்கீத யோகினி என பல பெயர்கள் உண்டு.

ஜைன மதத்தில் சரஸ்வதி வஜ்ர சார்தா, சுருதிதேவி, ஜீன சரஸ்வதி, ஜீனவாணி என்ற பெயர்களில் வழிபடப்படுகிறாள்.