வேப்ப மரம் தான் இந்தியாவின் முதல் மூலிகை என்றால் ஆச்சரியம் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆராய்ந்த அறிஞர் தீட்சித் அந்தக் காலத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்திய மருந்துப் பொருள்களில் வேப்பிலைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள தாகக் குறிப்பிடுகின்றார். வடஇந்தியாவில் இப்படி மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட வேப்பிலை தென் இந்தியாவிலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டதை தமிழின் முதல் இலக்கண நூலான தொல் காப்பியம்
வேம்பும் கடுவும் போல
என்று குறிப்பிடுகின்றது.
வேம்பு ஒரு இயற்கை கிருமி நாசினி. உடலின் நோய் தடுக்கும் சக்தியை அதிகப்படுத்துகிறது. பல மருத்துவ பயன்களை உடைய வேம்பு எளிதாக, பரவலாக எங்கும் கிடைக்கிறது. பல ஆயுர்வேத மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. அழற்ச்சியை குறைத்து, கிருமிகளை கொல்வதால், முகப்பரு, எக்சிமா, ஸோரியாசிஸ், தோல்அரிப்பு, சருமப்புண்கள் முதலிய சரும நோய்களுக்கு மருந்தாகிறது. பூஞ்சண நோய்களுக்கு வேம்பு நல்ல மருந்து.
வேம்பு பல பயன்களை உடையதாக இருந்தாலும், இங்கு சர்ம பாதிப்புகளுக்கும், பாதுகாப்பதற்கும் மட்டும் அதன் உபயோகங்களை பார்ப்போம்.
நாட்பட்ட முகப்பருக்களுக்கு வேப்பிலையை அரைத்து பருக்களின் மேல் தடவ நிவாரணமளிக்கும். சர்மத்தை உலரவைத்து, மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். தவிர பருவால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
அடிக்கடி வேப்பிலை களிம்பை முகத்தில் தடவி வர, முகம் இளமையாக பொலிவுடன் இருக்கும். தோலின் தன்மையை மேம்படுத்தும்.
ரத்தத்தில் சேரும் நச்சுப்பொருட்களை நீக்கி, ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் சர்மம் பளபளப்பாகும்.
வேப்ப இலைகள் பொடி இவற்றை குளிக்கும் நீரில் இட்டு குளிக்கலாம்.
பொதுவாகவே, வேம்பு எல்லாவித சர்மநோய்களுக்கும் எற்றது.
வேப்ப விதைகளிலிருந்து எடுக்கப்படும் கசப்பான வேப்பஎண்ணை தோல் வியாதிகளை எதிர்க்கும்.
வேப்ப எண்ணையும், இலைச்சாறும் ஸோரியாசிஸ் நோய்க்கு மருந்தாகும். அரிப்பை குறைகிறது, வலியையும் குறைக்கிறது. வேப்ப எண்ணை எக்ஸிமா, படர்தாமரை, சொறி, சிரங்குகளுக்கும் நல்லது.
வேப்பிலையை நீர் விட்டரைத்து களிம்பாக கிண்டி, மேலுக்கு போட வீக்கம், நாட்பட்ட புண், தோலின் புண் நோய்கள் தீரும்.
சொறி, சிரங்கால் அவதிப்படுபவர்கள் தினமும் வேப்பிலைகளை போட்டு காய்ச்சியய நீரால் உடல் முழுவதையும் கழுவ வேண்டும். வேம்பு எண்ணையி£ல் தயாரிக்கப்பட்ட சோப்பை பயன்படுத்த வேண்டும். கொழுத்து இலைகளை மென்று உண்ணலாம்.
No comments:
Post a Comment