Tuesday, February 26, 2013

வாசனை சிகிச்சை

அரோமா – தெரபி தற்போது பிரபலமாகி வரும் ஒரு சிகிச்சை முறை. இதில் பயன்படுத்தப்படும் அடிப்படை எண்ணை எனப்படுகிறது. தாவரங்களின் வேர், இலை, பூ, பழங்களின் இருந்து எடுக்கப்படும் அடிப்படை எண்ணை தான் ஆதார, அடிப்படி எண்ணை அடிப்படை எண்ணை வீரியமிக்கது. அதை தனியாக பயன்படுத்தக் கூடாது. நல்லெண்ணை, தேங்காய் எண்ணை, பாதாம் எண்ணை, ஆலிவ் எண்ணை போன்ற துணை எண்ணைகளுடன் கலந்து தான், அடிப்படை எண்ணையை உபயோகிக்க வேண்டும். துணை எண்ணைகளின் அளவில் கால் பாகம் தான் அடிப்படை எண்ணைகள் சேர்க்க வேண்டும்.
அடிப்படை எண்ணைகளின் பாதுகாப்பு
எஸன்சியல் எண்ணைகள் சீக்கிரம் ஆவியாகக் கூடியவை. எனவே அவற்றை நெருப்புக்கருகே, சூடான இடங்களில் வைக்க வேண்டாம்.
அவற்றை காற்று புகாத பாட்டில்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
உபயோகித்த பின் பாட்டில்களை நன்றாக மூடி வைக்கவும்.
பாட்டில்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது நல்லது.
பரிசோதிக்கும் முறை
எஸன்சியல் எண்ணை தண்ணீரில் கரையாது.
தாவிர எண்ணை, ஆல்கஹால், கொழுப்பு இவற்றில் கரையும்.
சில எஸன்சியல் எண்ணைகள்
ரோஜா எண்ணை – எல்லா சர்மத்திற்கும் ஏற்றது.
சந்தன எண்ணை – முக மசாஜ்ஜுக்கு ஏற்றது.
மல்லிகை எண்ணை – இரத்த ஒட்டத்தை அதிகரிக்கும்.
ஹோஹோபா எண்ணை – சூர்ய வெப்பத்தால் ஏற்படும் கருமையை போக்கும்.
லாவண்டர் எண்ணை – பூச்சி கொல்லி, ஆன்டி – செப்டிக் – பல நோய்களுக்கு மருந்து. சிறு காயங்களுக்கு, பருக்களுக்கு நல்லது. தூக்கத்தை உண்டாக்கும்.
ஜுனிபர் எண்ணை – ஆன்டி செப்டிக், உடல் கொழுப்பை குறைக்கும் பருக்களுக்கு உபயோகிக்கலாம்.
சைப்ரஸ் எண்ணை – சருமத்திற்கு இதமளிக்கும்.
பெர்காமெட் – ஆன்டி பையாடிக் வியர்வை நாற்றத்தை குறைக்கும்.
டி ட் ரி எண்ணை – ஆன்டி செப்டிக். பூஞ்சன தொற்றுக்களை போக்கும்.
அஸ்வகந்தா எண்ணை – சருமத்திற்கு உறுதி அளித்து, பாதுகாக்கும்.
நீம் எண்ணை – சர்ம கிருமிகள், பருக்கள் போகும்.
கேலண்டூலர் எண்ணை – ஃபங்கள்தொற்று, வெடிப்பு, தீப்புண்கள் இவற்றுக்கு மருந்து.
எஸன்சியல் எண்ணைகளை தவிர்க்க வேண்டியவர்கள்
கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அரோமா எண்ணைகளை உபயோகிக்கக் கூடாது.
ஹோஹோபா எண்ணை
அரோமா தெராபி எனும் நறுமண சிகிச்சையில் இடம் பெரும் எசன்சியல் தைலங்களில் ஹோஹோபாவும் ஒன்று. இந்த தைலம் ஹோஹோபா செடியின் விதைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. ஹோஹோபா புதர் செடி அமெரிக்காவின் அரிசோனா, கலிஃபோர்னியா மற்றும் மெக்சிகோவின் பாலைவன பிரதேசங்களில் விளைகிறது. ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் தலை பாகம் அடர்த்தியாக, புதர் போலிருக்கும். இலைகள், 2 லிருந்து 4 செ.மீ. நீளமும் 1.5 லிருந்து 3 செ.மீ. அகலமும் இருக்கும். இலைகளின் நிறம் சாம்பல் – பச்சை. பச்சை – மஞ்சள் நிறமுள்ள பூக்கள் சிறியவை. இதன் பழங்கள் 1 லிருந்து 2 செ.மீ. நீளமாக இருக்கும். இந்த பழ விதைகளிலிருந்து யோயோபா எண்ணை எடுக்கப்படுகிறது. விதைகளில் எடையில், கிட்டத்தட்ட பாதிக்கு பாதி எண்ணை கிடைக்கும்.
இந்த விதைகளை அணில், முயல், பறவைகள் முதலியன உணவாக உட்கொள்கின்றன. இலைகள் மான், ஆடு மாடுகளுக்கு உணவாகிறது. அதிகம் உட்கொண்டால் விதைகள் நஞ்சாகும்.
இது சீனாவில் தோன்றியதாக, விளைவதாக காண்பிக்கும். ஆனால் சீனாவுக்கும் இந்த செடிக்கும் சம்மந்தமில்லை. தாவரவியல் நிபுணரான யோஹான் லிங்க் செய்த தவறு இது.
ஹோஹோபா எண்ணை மெழுகு போன்ற கொழுப்பு அமிலங்களின் கலவை. இதில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
ஹோஹோபா தைலத்தின் பயன்கள்
மற்ற தாவிர தைலங்களுக்கும், ஹோஹோபா எண்ணைக்கும் உள்ள வித்யாசம் ஹோஹோபா எண்ணை, சருமத்தின் சுரப்பிகள் சுரக்கும் சீபத்தை போலவே ரசாயன குணங்கள் உள்ளது. இவை சரும பாதுகாப்பு மற்றும் அழகு சாதனங்களில் வெகுவாக பயனாகிறது.
கெடுதி விளைவிக்கும் பூஞ்சனங்களை அழிக்கும்
முடிகளுக்கு சிறந்த ஈர மூட்டி முகத்தை மிருதுவாக்குகிறது
பருக்களை போக்குகிறது.

No comments:

Post a Comment