Tuesday, February 26, 2013

குளியல்

வெளியேற்றும் ஒரு அவயம் தான். எனவே தினமும் அதை சுத்திகரிக்க வேண்டும். இறந்த செல்கள், வியர்வை கசண்டுகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் துர்நாற்றம் ஏற்படும். கோடையில், இரண்டு முறை குளிக்கவும். எண்ணை குளியல் சருமத்திற்கு செழிப்பையும், எழிலையும் கூட்டுகின்றது. சுஸ்ருதா தோலில் தடவிய எண்ணை உட்செல்ல 25 வினாடிகள் போதும் என்கிறார் எண்ணை மசாஜ் குளியல் உடல் அசதியை போக்கும். இதை ஆயுர்வேதத்தில் அப்யங்கா என்பார்கள். எண்ணை குளியலை வாரம் ஒரு முறையாவது வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் சிறிதளவு எண்ணை தலையில் தடவி குளிக்கவும்.
காலையில் மிதமான சூர்ய வெளிச்சம் உடலின் மீது ஒரு அரைமணி பட்டால், அன்றைய தினத்திற்கு தேவையான விட்டமின் டி உடலுக்கு கிடைத்து விடும்.
ஆயுர்வேதத்தில் மற்றும் காம சூத்திரத்திலும், அலங்கார முறைகள் சுபகங்கரணம் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த முறைகளின் இலக்குகள் -
ஒளிவீசும் பளிச் சென்ற முகம்
இளமைத் தோற்றம்
சர்மம் முதுமையடைவதை தடுப்பது.
ஆயுர்வதே அழகு சாதனங்களின் நன்மை
பாதுகாப்பானவை, இதமானவை, இயற்கையானவை
உபயோகிப்பது எளிது
பக்கவிளைவுகள் இல்லை
விலங்குகளை வைத்து பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
நாம் முன்போ சென்னோம், அழகுக்கு ஆயுர்வேதம் ஆரம்பிக்கும் முதல்
சிகிச்சை, உடலிலிருந்து கழிவுகளை, நச்சுகளை நீக்குவது, ஜீரணத்தை ஊக்குவிப்பது, உடல் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவது. இவற்றின் பிறகு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டியது
பொங்கி வரும் பெருநிலவு போன்ற வதனத்திற்கு ஆயுர்வேதம் சொல்லும் 8 படிகள்
சுத்தீகரிப்பு
எண்ணை பதமிடுதல்
மூலிகை நீராவி நுகருதல்
மாஸ்க்குகள் முக பேக்குகள்
புதிப்பிப்பது முக சர்மத்தை பதப்படுத்துவது
ஈரப்பதத்தை உண்டாக்குவது நீர்சிகிச்சை
தினசரி செய்ய வேண்டியவை
சுத்தீகரிப்பு
முகசருமத்தை பதப்படுத்துவது,
ஈரப்பதத்தை உண்டாக்குதல்
மாதம் ஒரு முறை இரு முறை செய்வது
எண்ணை மசாஜ்
மூலிகை நீர்ஆவி பிடித்தல்
முகத்தேய்ப்பு
இளமை தோற்றத்திற்கு மாஸ்க்குகள் பேக்குகள்
சுத்திகரிப்பு
தோலின் அடிப்பகுதியில் உள்ள சுரப்பி தினம் 20 கிராம் அளவு சீபம் எண்ணெய்யை சுரக்கிறது. இந்த எண்ணெய் தவிர வியர்வை, இறந்த செல்கள் தோலின் மேற்புரத்தில் தேங்கி விடுகின்றன. வெளிப்புற அழுக்கும் தோலில் படியும். அழுக்கு, பிசுபிசுப்பை நீக்கவும், முன்பே முகத்தில் போட்டிருக்கும் மேக் அப்பை நீக்கவும், முகத்தை சுத்தீகரிக்க வேண்டும். இதற்கு உபதான் எனப்படும் மூலிகைப் பொடிகளை ஆயுர்வேதம் விவரிக்கிறது. இந்த பொடிகளை ஆயுர்வேதம் குறிப்பிடும் திரவங்களுடன் கலந்து, களிம்பாக, விழுதாக உபயோகிக்க வேண்டும். ஆயுர்வேத அழகு நிபுணர்கள், குளியலுக்கு, குறிப்பாக முகத்திற்கு, சோப்பை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். மூலிகை சோப்புகளைக் கூட, உடலுக்கு பயன்படுத்தினாலே போதும் என்கின்றனர்.
அந்தந்த டைப் சருமத்திற்கேற்ற சுத்தீகரிக்கும் முறைகள் கீழே தரப்பட்டுள்ளன. மூலிகைப் பொடிகளை தினமும் உபயோகிக்க முடியாவிட்டால், வாரம் ஒன்று (அ) இருமுறை செய்யவும்.
மேலே குளியலில் குறிப்பிட்டபடி இயற்கை சோப்பை குளிப்பதற்கு பயன்படுத்துவது. இது தினசரி குளியலுக்கு. வாரம் 2 (அ) 3 முறை – ஒரு அடிப்படை மூலிகைப் பொடி + ஒரு திரவத்துடன் கலந்து உபயோகிப்பது. இதன் விவரங்கள்.
சாதாரண சர்மம்
உபயோகிக்க வேண்டிய மூலிகை பொடிகள் – கற்றாழை பொடி, தனியா, சீரகம், எலுமிச்சை தோல், அதிமதுரம், சந்தனம், ஜாதிக்காய், வெட்டி வேர், பயத்தம் பருப்பு பொடி.
இந்த பொடிகளை கலக்க வேண்டிய திரவம் – சுத்தமான நீர் (அ) பாதாம் எண்ணெய்.
எண்ணை சேர்ந்த சுத்திகரிப்பு தைலம்
நல்லெண்ணை (அ) பாதாம் எண்ணை அடிப்படை தைலம் இத்துடன் கீழ்கண்ட கலவைகளில் ஏதேனும் ஒன்று
5 பாகம் அடிப்படை தைலம் + 4 பாகம் கற்றாழை சாறு + ஒரு பாகம் ஹோஹோபா + விட்டமின் ‘இ’ எண்ணை
துளசி + எலுமிச்சை எண்ணை.
வறண்ட சர்மத்திற்கு
உபயோகிக்க வேண்டிய மூலிகை பொடிகள்
அஸ்வகந்தா, உலர்ந்த ஆரஞ்சு தோல் பொடி, கடுக்காய் பொடி, வெந்தயப்பொடி, சதவாரி, துளசி, இத்யாதி.
இந்த பொடிகளை கலக்க வேண்டிய திரவம்
பால், கற்றாழை சாறு, பாலேடு
எண்ணெய் சேர்ந்த சுத்தீகரிப்பு தைலம் – நல்லெண்ணை அடிப்படை தைலம். இத்துடன் கீழ்க்கண்ட கலவைகளில் ஏதேனும் ஒன்று
ரோஜா + சந்தன தைலம் + மல்லிகை
செடார் + சந்தன தைலம் + ரோஜா
சந்தனம் + ரோஜா
எண்ணை செறிந்த சர்மத்திற்கு
மூலிகைப் பொடிகள் நெல்லிப்பொடி, பிரம்மி, வெந்தயம், தாமனாவிதை, மஞ்சிட்டி வேம்பு, வெண் சந்தன மரம்.
இந்த பொடிகள் சேர்க்க வேண்டிய திரவம்
எலுமிச்சை சாறு, தயிர்.
எண்ணெய் சேர்ந்த சுத்தீகரிப்பு தைலம்
ஹோஹோபா எண்ணை அடிப்படை தைலம். இத்துடன் கீழ்கண்ட ஏதேனும் கலவைகளில் ஏதேனும் ஒன்று.
எலுமிச்சை எண்ணை + சைப்ரஸ்
பெர்காமென்ட் + சைப்ரஸ் + ஜுனிபெர்
வயதான, முதிர்ந்த சர்மத்திற்கு
மூலிகை பொடிகள்
உலர்ந்த கற்றாழை, அஸ்வகந்தா, ஆரஞ்சுத்தோல், கடுக்காய், வேம்பு, ரோஜா
கலக்க வேண்டிய திரவம்
பால் அல்லது சுத்தமான நீர்
எண்ணெய் சேர்ந்த சுத்தீகரிப்பு தைலம் - நல்லெண்ணை (அ)
ஹோஹே பா. இத்துடன் கீழ்க்கண்ட கலவைகளில் ஏதேனும் ஒன்று
லாவண்டர் + டீட்ரீ ஆயில் எலுமிச்சை எண்ணை + பெர்காமெட்
மேற்கண்டவற்றை உபயோகிக்க டிப்ஸ்
மூலிகைப் பொடிகளையும், திரவத்தையும் களிம்பு போல் கலந்து, சர்மத்தின் மீது க்ரிம் போல் தடவவும். 20 நிமிடம் வரை விடவும்.
முகத்தில் சோப்பை உபயோகிக்க வேண்டாம்.
எண்ணெய் சேர்ந்த சுத்தீகரிப்பு தைலத்தில் குறிப்பிட்டுள்ள அடிப்படை எண்ணையையும், இதர கலவை எண்ணைகளையும் கலக்க வேண்டிய அளவு 60 மி.லி. அடிப்படை எண்ணைக்கு 20 சொட்டு இதர (அரோமா) எண்ணைகளை சேர்க்கவும்.
எண்ணெய் பதமிடுதல் முக மசாஜ்
மசாஜ் செய்வதால் ரத்த ஒட்டம் பெருகும். முக மசாஜ் ஒரு கலை. அதை வீட்டில் செய்வதற்கு பயிற்சியும் பழக்கமும் தேவை.
மசாஜ் செய்ய தைலங்கள் (பொதுவாக)
அடிப்படை எண்ணை – நல்லெண்ணை (அ) பாதாம் எண்ணை (அ) கோதுமை வித்து எண்ணை + 2 கேப்சூல் விட்டமின் ‘இ’ எண்ணை – இவற்றுடன் எஸன்சியல் எண்ணைகளான, ஹோஹோபா, லாவண்டர், மல்லிகை, ரோஜா எண்ணைகள் முதலியன.
அளவு – 10 பாகம் அடிப்படை எண்ணை + 1 பாகம் கோதுமை வித்து எண்ணை, விட்டமின் இ 400 ஐ.யு. (2 கேப்சூல்), எஸன்சியல் எண்ணை 20 துளிகள். (2 அவுன்ஸ் அடிப்படை எண்ணெய்க்கு).
மூலிகை நீராவி நுகர்தல்
இதனால் முகக் களைப்பு மறையும். உடல் புத்துணர்ச்சி பெரும். நீராவி நுகர்தலை அடிக்கடி செய்தால் முகம் வறண்டு விடும். உங்கள் சர்மத்தை பொறுத்து, 2 வாரத்திற்கு ஓரு முறை செய்யலாம். ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து, அதில் முடிந்தால் சில துளி எசன்சியல் எண்ணை சேர்க்கவும். முகத்தை 12 லிருந்து 18 அங்குலங்கள் தூரத்தில் வைத்துக் கொண்டு, பாத்திரத்தையும், முகத்தையும், துவாலையால் கூடாரம் போல் மூடிக் கொண்டு நீராவியை நுகரவும். 5 (அ) 10 நிமிடம் நீராவியை இழுப்பது போதுமானது.
உங்கள் சர்மத்திற்கேற்ப சில மூலிகைகளையும் கொதிக்கும் நீரில் சேர்த்து நுகர்வது சிறந்த பயன் தரும். குறிப்பாக எண்ணெய் பசை நிறைந்த சர்மம் உள்ளவர்களுக்கு வாரம் ஒரு முறை இந்த மாதிரி நீராவி பிடித்தல் நல்லது.
இதமான முக தேய்ப்புகள்
முக தேய்ப்புகளினால் ஏற்படும் நன்மைகள்.
இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன
முக சர்மத்திற்கு ரத்தம் சீரக பாய உதவுகிறது
பொலிவில்லாத சர்மத்தை உயிர்ப்பிக்கும்
முகத் தேய்ப்புகளை விரல் நுனிகளால் முகத்தில் தடவவும்.
நார்மல் சர்மத்திற்கு – ஓட்ஸ் மாவு + கொஞ்சம் துளசி + சந்தனப் பொடி
பொடித்த ரோஜா இதழ்கள் – இவற்றை பால் அல்லது சுத்தமான தண்ணீரில் கலந்து களிம்பாக்கி தடவிக் கொள்ளவும்.
உலர்ந்த சர்மத்திற்கு – பயத்த மாவு + கோதுமை தவிடு + பொடித்த பாதாம் + மஞ்சள் + வெந்தயம் + துளசி + ரோஜா இதழ்கள் – இவற்றை கற்றாழை சாறு அல்லது பாலில் கலந்து களிம்பாக்கி தடவிக் கொள்ளவும்.
எண்ணெய் செறிந்த சர்மத்திற்கு – பார்லி மாவு + அரிசி தவிடு + நெல்லி முள்ளி + தனியா + மஞ்ஜிஸ்டா + வேம்பு + சந்தனம் – இவற்றின் பொடியை எலுமிச்சை சாறு அல்லது கற்றாழை சாறு கலந்து உபயோகிக்கவும்.
முதிர்ந்த சர்மத்திற்கு – பார்லி அல்லது அரிசி மாவு + மஞ்சள் + அஸ்வகந்தா + அதிமதுரம் + துளசி – இவற்றை சிறிதளவு தேனுடன் பால் அல்லது கற்றாழை சாற்றில் கலந்து உபயோகிக்கவும்.
குற்றம் குறையுள்ள சர்மத்திற்கு – ஓட்ஸ் மாவு + முல்தானி மட்டி + அஸ்வகந்தா + தனியா + ஜீரகம் + வெந்தயம் + இஞ்சி + வேம்பு + மஞ்ஜிஸ்டா + மஞ்சள் பொடி – இவற்றை தயிரில் கலந்து உபயோகிக்கவும்.
மேலும் சில எளிய டிப்ஸ்
சிறந்த முகத் தேய்ப்புகள்
உலர்ந்த எலுமிச்சை தோல் அல்லது ஆரஞ்சுத் தோலை பொடி செய்து கொள்ளவும். பால், தேன் அல்லது எலுமிச்சை சாறுடன் கலந்து சர்மத்தில் தேய்த்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் விட்டு கழுவி விடவும். இதை வாரத்திற்கு இரு முறை செய்யலாம்.
பார்லி மாவும் பால் இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கெட்டியாக களிம்பு தயார் செய்து கொள்ளவும். இதை நேரடியாக முகம், கழுத்து, கைகளில் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் வைத்திருந்து கழுவி விடலாம். அழகான சர்மத்திற்கு இது ஒரு நல்ல முறை.
வேப்ப இலைகளை நீரில் போட்டு கொதிக்க விடவும். முகம், கழுத்து, கைகள் இவற்றை கழுவ இந்த நீரை உபயோகிக்கவும்.
கொதிக்க வைத்த பாலுடன் பொடித்த வெந்தய களிம்பு சேர்த்து முகத்திலும், கைகளிலும் தடவிக் கொள்ளவும் இதனால் சர்மம் மிருதுவாகும்.
ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி, பாலேடு, சந்தன பொடி, கடலை மாவு இவற்றை கலந்து களிம்பாக செய்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி அரை மணி வைத்து பிறகு குளிக்கவும்.
தாமரை, அல்லி மற்றும் நாகப்பூ இவற்றை நிழலில் காய வைக்கவும். உலர்ந்த பின் பொடி செய்து கொள்ளவும். இந்த கலவையுடன் தேனையும், நெய்யும் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை சர்மத்தில் தேய்த்து கொண்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் வைத்து இருந்தால் சருமம் மிளிரும்.
சிவப்பு சந்தன மரம், மஞ்சிட்டி லோத்ரா மரப்பட்டை, கோஷ்டம், ஆலமரப்பட்டை, இவற்றை எல்லாம் தண்ணீரில் கலந்து களிம்பாக செய்து கொண்டு உபயோகிக்கவும். இதுவும் சர்மத்தை மிளிர வைக்கும்.
கடலை மாவு 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி 1 டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவிக் கொள்ளவும். இரவில் படுக்கும் முன் கழுவி விடவும்.

No comments:

Post a Comment