Tuesday, February 26, 2013

ஒப்பனை

நீராடிய பின் குங்குமப்பூ போன்ற மணம் வீசும் பொருட்களுடன் சேர்த்து அரைத்த சந்தனம் பூசிக் கொள்வதாலும், மலர் மாலை அணிவதாலும், ஆண்மை வளர்கிறது. அதாவது பெண்களிடம் ஆசையைத் தூண்டிவிடுகிறது. மணம் அதிகரிக்கிறது. ஆயுள் வளர்கிறது. அழகான தோற்றம் ஏற்படுகிறது. உடலுக்கு புஷ்டியையும், வளர்ச்சியையும் தருகின்றது. மனம் தெளிவடைகிறது. வறுமை அகலுகிறது”.
- சரகசம்ஹிதை
பழைய பழக்கங்கள் திரும்பவும் வழக்கத்துக்கு வருவதை அழகு சாதனங்களின் தயாரிப்பில் காணலாம். தற்போது இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அழகு சாதனங்கள் பிரபலமாகி வருகின்றன. ‘சிந்தெடிக்’ ரசாயன பொருட்களின் பக்க விளைவுகளால், பலர் இயற்கை மூலிகைகளுக்கு மாறி வருகின்றனர். ஆயுர்வேதம் எப்போதுமே சரும பாதுகாப்பிற்கும், சிகிச்சைகளுக்கும் வெளிப்பூச்சு மருந்துகள் மட்டுமல்லாமல் உள்மருந்துகளின் உபயோகத்தையும் வலியுறுத்தி வந்திருக்கிறது.
கற்காலத்திலிருந்தே அழகு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆதிமனிதன் வேட்டையாட போகும் முன்பு, மற்றவர்களுடன் போடப் போகும் யுத்தங்களுக்கு முன்பு செய்து வந்த சடங்குளில் தன் மீது வர்ணம் பூசிக் கொள்ள ஆரம்பித்த போது, அழகு சாதன உபயோகமும் தொடங்கி விட்டது எனலாம். நைல் நதிப் படுகை நாகரிகத்தின் போது முகத்தையும் உடலையும் ‘அலங்கரிக்க’ வாசனை திரவியங்கள், வண்ணங்கள் உபயோகிக்கப்பட்டன. இது கி.மு. 5000 ஆண்டுகளில்
அழகு சாதனங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் சரித்திரம் ‘கிளியோபத்ராவை’ குறிப்பிடாவிட்டால் முழுமை ஆகாது! கி.மு. 30-68 ல் வாழ்ந்த இந்த எகிப்திய ராணி, அவளது அழகிற்கும், கவர்ச்சிக்கும் புகழ்பெற்றவள். அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிபுணியாக திகழ்ந்த கிளியோபத்ரா அவர் காலத்தை விட முந்திய அழகு சாதனங்களை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. கழுதையின் பால் நிரம்பிய தொட்டியில் தான் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான் நம் ஊரில், காளிதாசர் புகழ் ‘சகுந்தலை’ முகத்திற்கு உபயோகித்த மூலிகை களிம்பின் வாசனையால் தேனீக்கள் கவரப்பட்டு அவள் முகத்தை நாடினவாம்
முகலாய ராணி நூர்ஜஹான் தான் ரோஜாவிலிருந்து அத்தர் எடுக்கும் முறையை கண்டுபிடித்தவர் எனப்படுகிறது. நமது புகழ் பெற்ற அஜந்தா – எல்லோரா குகைச் சிற்பங்களை பார்க்கும் போது, அந்த காலத்தில் ஆண்களும் அலங்காரம் செய்து கொண்டனர் என்பது தெரிகிறது. இந்த குகைச் சிற்பங்களில் பிரசித்தி பெற்ற ஓவியம் – ஒரு பெண்மணி கையில் கண்ணாடி ஒன்றை வைத்துக் கொண்டு அலங்காரம் செய்து கொள்வது தான். அஜந்தா – எல்லோராவின் காலம் 200 கி.மு – 650 கி.பி. என்கிறார்கள். நம் நாட்டின் இதிகாசங்களில் அஞ்சனம் (கண்மை), பொட்டு இவைகளைப் பற்றிய விவரிப்புகளை காணலாம்.
மஞ்சள், குங்குமப்பூ, இலைப்பச்சை, அகில், நீலம், வேப்பிலைப்பச்சை, போன்ற வாசனை அழகு திரவியங்கள் இந்தியர்களுக்கு தொன்று தொட்டே நன்கு தெரிந்திருந்தது. இன்று ஆயுர்வேத அழகு சாதன தயாரிப்புகள் பெரிதும் விரும்பப்படுகின்றன.
அழகுக்கலையும் ஆயுர்வேதமும்
ஆங்கிலப் பழமொழி ஒன்று அழகு சரும ஆழம் மட்டும் தான் என்கிறது. ஆயுர்வேதம் புற அழகு, அக அழகு இரண்டும் நெருங்கிய தொடர்புள்ளவை என்கிறது. ஒருவர் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் போது அவரின் அழகு கூடுகிறது. அழகுக்கு முதல் தேவை உடலிலிருந்து கழிவு நச்சுப் பொருட்களை அகற்றுவது தான் என்கிறது. ஆயுர்வேதம். பிறகு ஜீரண சக்தியை சீராக்க வேண்டும்.
முதல் கட்ட செயல்கள்
சிறுநீர், மலவிஸர்ஜனம், கண்ணீர், தூக்கம், பசி போன்ற இயற்கை உணர்வுகளை கட்டுப்படுத்தாதீர்கள்.
மலச்சிக்கல் தோலின் பளபளப்பை குறைக்கும். மலச்சிக்கலை தவிர்க்கவும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.
நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவை. சீக்கிரம் உறங்கி, சீக்கரம் எழுவது உங்களை அழகாக்கும்.
அடிக்கடி எண்ணை மசாஜ் ஒரு அவசிய தேவை. எண்ணை பதமிடுவதால் தோல் வண்ணம் பிரகாசிக்கும். தோல் மிருதுவாகி மிளிரும். வாரம் ஒரு முறையாவது தலையில் எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.
ஆயுர்வேத ஆசான் சுஸ்ருதர் உங்களின் உடைகள், அழகுசாதனப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்கிறார். இதனால் சரும நோய்கள் உண்டாகலாம்.
உணவில் பழங்கள், காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த பொறித்த உணவுகளை தவிர்க்கவும்.
உங்கள் சருமம் எந்த டைப் என்று கண்டுபிடிக்க சில வழிகள்
காலையில் எழுந்தவுடன் டிஸ்யூ பேப்பரை எடுத்து உங்கள் கன்னங்கள், நெற்றி, மூக்கு, தாடை இவற்றின் மீது இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்து பார்க்கவும். டிஸ்யூ பேப்பரை முகத்தில் தேய்க்க வேண்டாம். டிஸ்யூ பேப்பரில் எண்ணெய் தெரிந்தால் உங்கள் சருமம் எண்ணைப் பசை செறிந்தது. டிஸ்யூ பேப்பரில் எண்ணெய் தெரியவில்லையென்றால் உங்கள் சருமம் உலர்ந்தது அல்லது நார்மல். டி-சோன் என்பது மூக்கு, தாடை, நெற்றி இவற்றை குறிக்கும். இதில் எண்ணெய் பசை இருந்தால், அதாவது டிஸ்யூ பேப்பரில் தெரிந்தால் உங்கள் சருமம் கூட்டு சருமம் உங்கள் முகத்தில் கடலை மாவை தண்ணீரில் குழைத்து தடவவும். 10 நிமிடம் கழித்து கழுவி விடவும். இப்போது முகம் உலர்ந்து போய் இறுக்கமாக காணப்பட்டால் உங்கள் சருமம் உலர்ந்த சருமம். எலாஸ்டிக் போல மிருதுவாக இருந்தால் உங்கள் சருமம் நார்மல் டைப்.
ஆழ்ந்த தூக்கத்திற்கு
பகலில் உடற்பயிற்சி செய்தால், அட்ரீனனில் கட்டுப்பட்டு, மன அழுத்தம் குறையும். இதனால் இரவில் உறக்கம் எளிதில் வரும்.
படுக்கப் போகும் முன் வாயை நன்கு கொப்பளிக்கும்.
உறங்கும் முன், கால் பாதங்களில் சிறிது நல்லெண்ணை அல்லது விளக்கெண்ணையும் தடவிக் கொள்ளவும். தடவும் எண்ணை சிறிது சூடாக இருக்கலாம். பிரம்மி தைலத்தையும் உபயோகிக்கலாம்.
இரவில் பால் குடிக்கும் பழக்கம் இருந்தால் பால் குடித்த பின், சிறிது நடக்கவும். பாலில் சில வாசனை சரக்குகளை சேர்த்தால் இன்னும் நல்லது. அரைத்த ஜாதிக்காய் பொடியை (1/2 தேக்கரண்டி) 1/2 கப் பாலுடன் சேர்த்துப் பருகலாம். சோயாபாலில் இலவங்கப்பட்டைதூள், தேன் சேர்த்து குடிக்கலாம்.
மிதமான உடற்பயிற்சிகளை (படுக்கும் முன்) செய்யலாம்.
வெது, வெதுப்பான நீரில் குளிக்கலாம். குளிக்கும் நீரில் மூலிகை தைலங்கள் – லாவண்டர், மரு, சந்தனம், ரோஜா – இவைகளை சேர்த்தால் நல்லது. உங்கள் ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.
மூலிகை – டீ க்களை குடிப்பதால் தூக்கம் வரும். கசகசா, ஜடமான்சி, பிருங்கராஜ், பெருஞ்சீரகம். சோம்பு இவைகளின் கஷாயத்தை பயன்படுத்தலாம்.
தினமும் ஒரே நேரத்தில் படுக்கச்சென்று, காலையில் ஒரே நேரத்தில் எழுந்திருப்பது முக்கியம்.

No comments:

Post a Comment