Tuesday, February 26, 2013

பெண்கள் பாலுறவை தவிர்ப்பதற்கான காரணங்கள்

வயிற்றுக்கு சுகமான, நாக்குக்கு ருசியான சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, மனசெல்லாம் மகிழ்ச்சியுடன் படுக்கையறைக்குள் நுழைந்து… அட்டகாசமான முன் விளையாட்டுக்குப் பிறகு, இனிப்பான அனுபவத்துக்கு தயாராகும் நிலையில்…. கணவனுக்கு மட்டும் உற்சாகத்துடன் விறைப்புத் தன்மை இருந்தால் மட்டும் பத்தாது. மனைவிக்கும் உற்சாகமும், உணர்ச்சியும் அதிக அளவு இருக்க வேண்டும். ஒரு மனைவி கணவனால் தூண்டப்பட்டப் பின்னரும் உணர்ச்சி அடைய முடியவில்லை எனில்… மனைவிக்கு வேறு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

இன்றைய நவீன கம்பியூட்டர் காலத்தில் அதிக உழைப்பு, அலைச்சல், மன அழுத்தம், வருத்தம் பண பிரச்சனைகள் அழற்சி என்று அனேக அன்றாட மன உளைச்சலுக்கு ஆண் அதிகமாக ஆளாக்கப்பட்டாலும் பாலுறவு என்று வரும் பொழுது பெண்களே அதை அதிகம் தவிர்க்கின்றனர். அன்றாட வாழ்வின் மன உளைச்சலுக்கு பாலுறவே ஒரு சிறந்த வடிகால் என்பதனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.
ஆனால், ஆணோ அனைத்து பிரச்சனைகளையும் எதிர் கொண்டு பாலுறவு என்று வரும் பொழுது (பெரும்பாலான ஆண்கள்) அனைத்து மன உளைச்சலையும் ஒதுக்கி தன்னை உறவிற்கு தயார்படுத்தி கொள்கின்றான். பெண்கள் பெரும்பாலும் பாலுறவை தவிர்க்கவே விரும்புகின்றனர். அதிலும் முக்கியமாக நடு வயது பெண்கள் முற்றிலும் பாலுறவை தவிர்ப்பதையே விரும்புகின்றனர். சமீபத்தில் அமெரிக்க ஆராய்ச்சி மையம் நடத்திய ஆராய்ச்சி ஒன்றின் வாயிலாக பெண்கள் பாலுறவை தவிர்ப்பதற்கான தலையாய காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன.
கருத்தடை சாதனங்கள்
பெண்கள் உபயோகிக்கும் கருத்தடை மாத்திரைகள், சாதனங்கள் அவர்களது பாலுறவு விருப்பத்தைக் குறைத்து விடலாம்.
மருத்துவ மருந்துகள்
பலருக்கு அவர்கள் உபயோகிக்கும் பிற பிரச்சனைகளுக்கான மருத்துவமும் மருந்துகளும் பெண்களின் பாலுறவு ஈடுபாட்டை கட்டுப்படுத்தலாம்.
தாய்ப்பால் கொடுப்பது
பல பெண்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் கால கட்டத்தில் பாலுறவு விருப்பம் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் (Prolactin) புரோலாக்டின் எனப்படுகின்ற ஹார்மோன் சுரப்பதே அதற்கு காரணமாகலாம்.
தூக்கமின்மை
அதிகம் திருமணமான பெண்களுக்கு பாலுறவிற்கு முன்பு தூக்கம் முந்திக் கொள்கிறது. இதற்கு போதுமான அளவு தூக்கமின்மையே காரணம்.

மன அழற்சி

அதிக உழைப்பு, அலைச்சல், மன வருத்தம், பண பிரச்சனைகள் குழந்தைகள், அவர்களது படிப்பு போன்ற வாழ்வின் தினசரி பிரச்சனைகள் பாலுறவு சிந்தனையை போக்கி விடுகிறது அனேக பெண்கள் மன அழுத்தத்திற்கும் மன அழற்சிக்கும் ஒரு சிறந்த வடிகால் பாலுறவு தான் என்பதனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.
கருத்து வேறுபாடுகள்
வாழ்க்கையின் உறவுகளில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருப்பது கருத்து வேறுபாடுகளும் மன வேறுபாடுகளுமேயாகும். இதுவே பல தருணங்களில் பாலுறவில் தலை தூக்குகின்றன.
ஹார்மோன் பற்றாக்குறை
பாலுறவிற்கு தேவையான அளவு ஹார்மோன் சுரக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் பற்றாக்குறையான டெஸ்டோஸ்டீரோன் Testo sterone போன்ற ஹார்மோன்கள் சுரப்பதனால் பாலுறவில் விருப்பமின்றி போகிறது. பெண்களிடமும் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் சிறிதளவு இருக்கிறது. இது ஏறுமாறானால் பிரச்சனைகள் வரும்.
நெருக்கத்தில் விருப்பமின்மை
சில பெண்களில் நெருக்கமான உறவுகள் ஒரு வித பயத்தையும் அருவருப்பையும் கொடுக்கும். இதனால் அவர்களது உடலைப் பற்றி முற்றிலும் தெரிந்த விடுமோ என்ற ஒரு வகை ஐயம் பாலுறவில் விருப்பத்தை குறையச் செய்துவிடலாம்.
பெண்ணோ, ஆணோ அவர்களது உடல் வளர்ச்சி, பருவ மாற்றங்கள், மனமுதிர்ச்சி, அனைத்திலும் ஹார்மோன்களின் பங்கு கனிசமானது. இத்தகைய வலிமை வாய்ந்த ஹார்மோன்களின் கலாட்டாவால் கூட பெண்களில் சிலருக்கு எளிதில் காம உணர்ச்சி எழாமல் போகலாம்.
உடல் அமைப்பில் விரக்தி
சில பெண்களுக்கு உடல் அமைப்பில் ஒரு வித வெறுப்பு – தான் பிறரை விடவும் தனது கணவரை விடவும் அழகு குறைவாகவும், உடல் பொலிவு இல்லாது வயது முதிர்ந்து தளர்ந்து இருப்பதாகவும் தாங்களே தங்களுக்குள் எண்ணிக் கொள்ளும் ஒரு வித சுய பச்சாதாபம் பாலுறவில் வெறுப்பை ஏற்படுத்தி விடும். பாலுறவு என்பது ஒரு நாகரீகமற்ற சொல் என்றோ செயல் என்றோ பெண்கள் எண்ணாது பாலுறவு என்பது மன அழற்சிக்கும் மன அழுத்தத்திற்கும் ஓர் ஒப்பற்ற வடிகால் என்றும் இனிய இல்லறம் அமைத்திட ஒர் சிறந்த வழி என்பதனையும் உணர வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பிரச்சனைகள் இருப்பின் அவற்றை நன்கு கற்றுத் தேர்ந்த மருத்துவருடன் ஆலோசித்து சீர் செய்ய முயற்சி செய்திட இனிய இல்லறம் அமைத்திடலாம்..

No comments:

Post a Comment