உலகெங்கும் உள்ள நோய் ஃப்ளூ காய்ச்சல். எந்த நாட்டையும் ஃப்ளூ ஜுரம் விட்டு வைக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டிலேயே ஐந்து தடவை பெருவாரியாக பரவிய இந்த தொற்று நோய் பலத்த உயிர் சேதத்தை விளைவித்தது. இதன் தீவிரத் தாக்கம் 1918 – 19 ல் தான். உலகம் முழுவதிலும் 15 லிருந்து 20 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர். ஃப்ளூ காய்ச்சல் வைரஸால் உண்டாகிறது. ஜலதோஷமும், ஃப்ளூவுக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது. ஆனால் ஃப்ளூ அபாயகரமானது. மூக்கடைப்பு, தொண்டைப் புண், தும்மல் – இவை ஜலதோஷ அறிகுறிகள். களைப்பு, ஜுரம், தலை வலி, உடலெங்கும் வலி முதலியன ஃப்ளூவின் அறிகுறிகள். ஃப்ளூவில் இருமல் காய்ச்சல் தீவிரமாக இருக்கும்.
ஃப்ளூ சுலபமாக, துரிதமாக பரவும் தொற்று நோய் அதன் வைரஸ் தும்மல் மற்றும் இருமலினால் பரவுகின்றது. ஃப்ளூ வைரஸ் உடலின் ஈரமான மெல்லிய ஜவ்வுப் பகுதியில், குறிப்பாக மூக்கு, தொண்டை, நுரையீரல், குடல் ஆகியவற்றில் குடி புகுந்து வளர்ந்து பெருகும்.
ஆயுர்வேதம், சீசன்கள் மாறும் போது திரிதோஷ பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதனால் மலச்சிக்கல், கபக் கோளாறுகளுடையவர்கள், சுவாசக்கோளாறுகள் உள்ளவர்கள் முதலானோர் ஃப்ளூஜுரத்திற்கு சுலபமாக ஆளாகின்றனர் என்கிறது. திடீரென்று தோன்றும் ஃப்ளூவின் அறிகுறிகள், மூக்கில் எரிச்சல், 103 டிகிரி தி வரை ஜுரம், தலை, உடல் வலி, இருமல், தும்மல், மூக்கில் அழற்சி, தொண்டைப்புண், குரல் வளை அழற்ச்சி, ஃப்ளூ தீவிரமானால் நுரையீரல்களை பாதிக்கும். வயதானவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது அதிகம். ஜுரத்திலிருந்து மீண்டாளும், சிறிது காலம் ஓய்வில் இருப்பதும், போஷாக்கான உணவுகளும் தேவைப்படும்.
வீட்டு வைத்தியம்
பிப்பாலி திப்பிலி ஒரு சிறந்த மருந்து இதன் பொடி 1/2 தேக்கரண்டி எடுத்து, 2 ஸ்பூன் தேன் 1/2 தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து தினம் 3 வேளை குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். தவிர குரல் வளை, பிராங்கியோ குழாய்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.
துளசி இலை 1 கிராம் எடுத்து, சுக்கு சேர்த்து, கஷாயம் தயாரித்து, தேவையானால் சர்க்கரையும் சேர்த்து குடிக்கவும்.
மஞ்சள் ஜுரத்திற்கு நல்லது. ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி கலந்து சூடான பாலை சர்க்கரை சேர்த்து பருகினால் தொண்டைக்கு இதமாக இருக்கும். தினமும் 3 வேளை குடிக்கலாம். கல்லீரல் தூண்டப்படும். ஜுரத்துடன் இருமல் இருந்தால் இந்த மஞ்சள் – பொடி பாலுடன் இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.
ஆயுர்வேத மருந்துகள்
திரிபுவன கீர்த்தி ரஸ
கிராதாரிஷ்டம்
லோஹாசவம்
பஞ்சதிக்காரிஷ்டம்
மஹா சுதர்சன சூர்ணம் முதலியன.
பத்தியம்
ஜுரம் வந்த முதல் நாள் ஜவ்வரிசி கஞ்சி சூப் போன்ற திரவ ஆகாரம் கொடுக்கவும். பிறகு லகுவான உணவு நல்லது. நெய்யில் வறுத்த பூண்டு கொடுக்கலாம். கொய்யா, வாழைப்பழங்களை தவிர்க்கவும். குளிரில் அலைவது, குளிப்பது, உடல் உழைப்பு செய்வது, தூங்காமை தவிர்க்கவும்.
No comments:
Post a Comment