இல்லற சுகத்தை முழுமையாக அடைய கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பிடித்த மாதிரி உடலை சுத்தமாக்கிக் கொண்டு உடலுறவில் ஈடுபட வேண்டும். உடல் ரீதியான ஒரு முக்கிய விஷயம், ஸ்பரிசம் – தொடுதல் என்று எல்லாம் சொன்னோம். இந்த தொடுதல் இனிமையாக தொடர, கணவன் – மனைவி உடல் குளுமையாக இருக்க வேண்டும். மனைவி கணவனை ஆசையாக தொடும் போது கணவனின் மேனி, டைபாய்டு ஜுரம் வந்தது போல் ‘சுட்டால்’, சூடான வாணலியில் தண்ணீர் தெளித்தாற் போல் மனைவியின் ஆசை நிராசையாகி விடும். குளிர்காலத்தில் இதமாக சூடாகவும், வெய்யில் காலத்தில் குளிர்ச்சியாகவும் உள்ள மனைவியை எந்த கணவனுக்குத் தான் பிடிக்காது?
மனிதனால் தனது உடல் உஷ்ண நிலையை, வெளிப்புற வெய்யிலுக்கேற்ப, ஓரளவு மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் அதை உடனே மின்சார ஸ்விட்சை தட்டி கரண்டை “ஆஃப்” செய்வது போல் செய்ய முடியாது. உடல் உஷ்ணம் அதிகமாக முக்கிய காரணம் ஜீரண மண்டல கோளாறுகள்.
உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாக்கும். செக்ஸை பொருத்த வரை உடல் உஷ்ணம் விந்து முந்துதலுக்கு ஒரு முக்கிய காரணம். ஏன், சூட்டுடம்பு உடையவனுக்கு எல்லாமே சீக்கிரம் முடிந்து விடும். பலருக்கு தெரியாத ஒரு விஷயம் – மனிதனின் விதைப்பை, அவன் உடலின் உஷ்ணத்தை விட குறைவான உஷ்ண நிலை உள்ளவை. மனிதனின் உடல் 98.4 டிகிரி f உஷ்ணம் இருக்கும் போது அவனின் விதைப்பைகள் 96.4 டிகிரி தான் இருக்கும். நீங்கள் கவனித்திருக்கலாம் – வெய்யில் காலத்தில் விதைப்பைகள் விரிவடைகின்றன, குளிர்காலத்தில் சிறுத்து விடுகின்றன. விதைப்பை உஷ்ணமானால் விந்து முந்துவது மட்டுமல்ல, தரமில்லாததாக இருக்கும். உடலுறவின் போது சூடான உடல் குளிர்ச்சியான உடலை சேரும் போது உஷ்ண நிலை மாற்றத்தால் விந்து துரிதமாக முந்தி விடுகிறது.
No comments:
Post a Comment