Tuesday, February 26, 2013

சருமப் பாதுகாப்பு in Skin Diseases Tamil

நமது உடலை மூடியிருக்கும் சருமம் அழகுக்காக மாத்திரம் அல்ல, உடலில் கிருமிகள் தாக்காமலும், உள்ளுறுப்புகளுக்கு அடிபடாமலும், உடல் நீர்ச்சத்தை இழக்காமல் பாதுகாப்பதற்கும் உதவுகிறது. இதை ஆரோக்கியமாக அழகாக வைக்க பல இயற்கை வழி முறைகளை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. எளிமையான இந்த முறைகள் கீழே கொடுக்கப்படுகின்றன.
ஒரு நாளுக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.
வைட்டமின் ஏ, சி அடங்கிய உணவுகளை சேர்த்துக் கொள்ளவும்.
சிலிகான் குறைவால் ஏற்படும் சொறி, சினப்புகளுக்கு உணவில், முளை கட்டிய தானியங்கள், பார்லி, தக்காளி, பசலை கீரை அத்திப் பழம் போன்றவற்றை உபயோகிக்கவும்.
சுருக்கம் விழுந்த தோலுக்கு வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும். இது சோடியம் குறைபாட்டை போக்குவதால், சுருக்கங்கள் மறையும்.
தினமும் 2 முறை குளிக்கவும். வியர்வை, அழுக்கு போகும்.
வியர்க்குரு வந்தால் நுங்கின் சதைப்பகுதியை நன்கு தேய்த்து ஊறிய பின் குளிக்கவும். கற்றாழை சாற்றையும் தேய்க்கலாம்.
செம்பருத்தி இலைகளை நன்கு கசக்கி உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.
வாரம் ஒரு முறை நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.
தேனை தண்ணீருடன் சேர்த்து காலையில் குடித்தால், சருமம் மிருதுவாகி பளபளக்கும்.
சந்தன பொடி, பன்னீர், பால் கலந்து உடல் முகம் உள்பட முழுவதும் பூசி, 10 – 15 நிமிடம் கழித்து குளிக்கவும். ஆலிவ் எண்ணையும் சேர்த்துக் கொள்ளலாம். இதே போல் மஞ்சள், பாலேடு கலந்து உடலில் பூசி குளிக்கலாம். தயிர், கோதுமை மாவு கலவைகளையும் உபயோகிக்கலாம். ரோஜா இதழ்களை அரைத்து பாலேடு கலந்து இதே போல் உபயோகிக்கலாம்.
எப்பொழுதும் தோலுடன் ஒட்டி இருப்பதால் உள்ளாடைகளை சுத்தமாக வைக்கவும். பருத்தி உள்ளாடைகளே சிறந்தவை. இரவில் தளர்வான உடைகளை அணியவும்.
சுருக்கம் விழுந்த தோலுக்கு மேலும் சில டிப்ஸ் – வயது ஏற ஏற சருமத்தில் சுருக்கம் விழுவதை தடுக்க முடியாது. ஆனால் தள்ளிப் போடலாம். ஆலிவ் எண்ணை, பாதாம் எண்ணை இவை சுருக்கத்தை தவிர்க்கும். ரிபோபிலேவின் சத்துள்ள உணவை அதிகம் உட்கொண்டால் தோல் சுருக்கங்கள் விழாமல் தவிர்க்கலாம். தோலும் மிருதுவாக இருக்கும். இந்தச் சத்து பால், வெண்ணை, மீன், முட்டை, லிவர் தானியங்கள் இவற்றில் அதிகம்.
மற்றவர்களின் உடல் துவாலை, சோப்பு வகைகளை நீங்கள் உபயோகிக்காதீர்கள். நீங்கள் உபயோகிப்பதையும் மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். தோல் வியாதிகள் உடனே ஒட்டிக் கொள்ளும் தொற்று வியாதிகள்.
வாரத்தில் 2, 3 முறை கேரட், வெள்ளை முள்ளங்கி இவற்றின் சாற்றை குடித்து வந்தால் மேனி அழகு பெறும்.
தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள் தூளை போட்டு குழைத்து உடலில் தடவி, பயற்ற மாவு தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
உடலில் சில பாகங்கள் சீக்கிரம் கருத்துவிடும். உதாரணம் – கழுத்து, முழங்கை கருத்த இடங்களில் எலுமிச்சை சாறை தடவி 10 நிமிடங்கள் வைத்து கழுவிவிடவும்.
குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.
மன அமைதி, ஒய்வு, ஆழ்ந்த தூக்கம் இவை உடல் புத்துணர்ச்சி பெறச் செய்கின்றன. சருமமும் ஆரோக்கியமாக ஒளிரும்.
வெய்யிலில் அலைய வேண்டாம். வெய்யிலில் போக வேண்டும் என்றால் குடை, தொப்பி இவற்றை பயன்படுத்த வேண்டும்.
வயதாவதினால் வரும் முகப்பாதிப்புகளை குறைக்க
தினமும் தேங்காய் பால், தேன் எண்ணை (அ) ஏதாவதொரு மூலிகை தைலம் இவற்றை உடலில் தடவி வரலாம்.
உடலில் மஹாமாசாதி தைலத்தை தடவி மசாஜ் செய்து கொள்ளவும்.
பிரம்மி மற்றும் நெல்லிக்காய் இவற்றை களிம்பாக செய்து கொண்டு, தேனில் குழைத்து தடவி, 20 (அ) 30 நிமிடம் கழித்து கழுவி விடவும்.
புதினா இலைகளை நீரில் குழைத்து, களிம்பாக்கி முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, தேங்காய் எண்ணையால் வழித்து எடுக்கவும்.
சர்மத்திற்கு தேவையான விட்டமின்கள்
விட்டமின் இ – சர்மத்தை இளமையாக வைக்க உதவுகிறது. இந்த விட்டமின் உள்ள உணவுகள் கொட்டைகள், விதைகள், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் தாவிர எண்ணைகள், முளை கட்டிய தானியங்கள் முக்கியமாக கோதுமை மற்றும் அரிசி
விட்டமின் ஏ – அமெரிக்க பல்கலைக் கழகம் மிச்சிகன் நடத்திய ஆய்வுகளின் படியுடன் சேர்ந்து, சர்மங்களில் சுருக்கம் விழாமல் காக்கிறது. விட்டமின் ஏ உள்ள உணவுகள் பால், முட்டைகள், லிவர், முளைகட்டிய தானியங்கள், முளை, பச்சைக்காய்கறிகள் கேரட், பரங்கி பூசணிக்காய், கீரைகள், பப்பாளி, மாம்பழம் முதலியன.
விட்டமின் சி – இந்த விட்டமின் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. அதனால் சர்ம கோளாறுகளை தடுக்கிறது. விட்டமின் சி உள்ள உணவுகள் நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை முதலியன.
விட்டமின் பி – சருமத்தில் மாசு மருக்கள், களங்கங்கள் வராமல் பாதுகாக்கும். விட்டமின் பி உள்ள உணவுகள் கோதுமை, அரிசி, இதர தானியங்கள் முதலியன.

No comments:

Post a Comment