Tuesday, February 26, 2013

சருமத்தை காக்கும் கார்போக அரிசி

இதன் பெயரை கேட்டவுடன் ஏதோ ஒரு வகை அரிசி என்று நினைக்காதீர்கள்! இது ஒரு மூலிகை. நேராக நிமிர்ந்து வளரும் செடி. பல கிளைகளுடன், வட்டமான இலைகளுடன் கூடியது. பூக்கள் சிறிய நீல – ஊதா வண்ணங்களுடயவை. பழங்கள் கரியநிறமுடயவை.
இந்த செடி இந்தியா முழுவதும் காணப்படுகிறது. சில இடங்களில் பயிரிடப்படுகிறது.
பயன்படும் பாகங்கள் – விதைகள்
ரசாயனம்
விதைகளில் எளிதில் ஆவியாகும் எண்ணையும், ஸோராலென், கோரிலெஃபோலின், பிசின், ஐஸோ-ஸோராலென் போன்றவை உள்ளன.
பயன்கள்
கார்போக அரிசியின் முக்கியமான பயன் லூகோடெர்மா விட்டிலிகோ போன்ற சர்ம வியாதிகளை எதிர்ப்பது. தொன்று தொற்று கார்போக அரிசி வெண்குஷ்டம் எனும் லூகோடெர்மாவிற்கு மருந்தாக உபயோகபடுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகையில் உள்ள ஸோராலென்னும் ஐஸோஸோராலினும், வெண்குஷ்டத்தை குணப்படுத்தும் குணமுடையவை. தோலுக்கு வண்ணமூட்டும் பழுப்புப் பொருளை அதிகப்படுத்துகிறது. இந்த செயல்பாடுகள் லக்னோவில் உள்ள அரசாங்க ஆராய்ச்சி நிலையத்தில் ஆராயப்பட்டன. குஷ்ட நோய்களை எதிர்க்கும் திறன் உடையது கார்போக அரிசி. எனவே தோல் வியாதிகளுக்கு, குறிப்பாக விட்டிலிகோவிற்கு மருந்தாக பரவலாக உபயோகமாகிறது. விதைகளுடன் பசும்பால் விட்டு அரைத்து தேய்த்துக் குளித்தால் சர்மத்திற்கு நல்லது. சொறி, சிரங்கு விலகும்.
நரம்புகளுக்கு வலுவூட்டும் டானிக். இருமலை குறைக்கும். ஜீரணத்திற்கு உதவும். மலச்சிக்கல், மூல வியாதிகளுக்கும் மருந்தாகும்.
ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.
இதைப் பற்றிய சித்தர் பாடல்
கார்ப்போக மாமரிசி கண்டாற் கரப்பான்புண்
பீர்சகுவ நஞ்சிவைபோம் பித்தமுண்டாம்-பார்மீதில்
வாத கபநமைச்சல் வன்சொறிசி ரங்குமறுஞ்
சீத மலர்க்குழலாய் செப்பு

No comments:

Post a Comment