Tuesday, February 26, 2013

மாஸ்க்குகள் முக பேக்குகள்

மாஸ்க்குகள் சர்மத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்கை நீக்குகிறது. பரு, கரும்புள்ளிகள் வராமல் தடுக்கின்றன. தாதுப்பொருட்கள், விட்டமின்கள் இவற்றை கொடுத்து சர்மத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. புது செல்கள் உருவாக உதவுகின்றன. முகத்தின் தழும்புகள் வடுக்கள் இவற்றை போக்குகின்றன. மாஸ்க்குகள் குறிப்பாக அதிக எண்ணைப்பசை சர்மத்திற்கு ஏற்றது. மாஸ்க்குகளை தடவிய பின் உரித்து எடுக்க வேண்டும். பொதுவாக 20 வயது மேற்பட்டவர்களுக்கு ஒரு டைப் மாஸ்க்கும் கடலை மாவு முல்தானி மட்டியும் 20 வயதிற்கு கீழே இருப்பவர்கள் வேறு டைப்பும் கற்றாழை போடப்படும். ஃபேஸ் பேக்கிற்கும், மாஸ்க்கிற்கும் உள்ள வித்தியாசம் – பேக் பொடிகளால் ஆனது, இளவயதினருக்கு ஏற்றது.
இளமைத் தோற்றத்திற்கான மூலிகை மாஸ்க்குகள்
முகம் இளமை மாறாமல் இருக்க ஃபேஸ் மாஸ்க்குகளை உங்கள் சர்மத்திற்க்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுக்கவும். பொதுவான குறிப்புகள் -
மாஸ்க்குகளை உபயோகிக்கும் முன் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும்.
மாஸ்க்கை முகத்தில் சரியாக ஒரே மாதிரி தடவி கொள்ள வேண்டும். உதடுகள், கண்கள் இவற்றை விட்டு விட வேண்டும்.
மாஸ்க்கை குறைந்த பட்சம் அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும். மாஸ்க்கை எடுக்க நிறைய தண்ணீரை உபயோகிக்கவும். கடைகளில் கிடைக்கும் மாஸ்க்குகள் உரித்து எடுக்கும் வகையை சேர்ந்தவை.
களிமண் ஒரு சிறந்த மாஸ்க் ஆகும். ஏனென்றால் அது சருமத்தின் உள் இருக்கும் அழுக்கையும், மாசுகளையும் உறிஞ்சி விடும். தவிர களிமண்ணில் சருமத்திற்கு தேவையான தாது பொருட்கள் உள்ளன.
தவிர மாஸ்க்குகள் சர்மத்திலிருந்து அழுக்குகளை நீக்குகின்றன.
மாஸ்க்குகள் உபயோகிக்கும் முன் நீராவியால் முகத்தை சுத்தம் செய்து கொள்வது நல்லது. இதனால் சரும துவாரங்கள் விரிந்து அழுக்குகள் வெளியேறும். நீராவிக்கு வெறும் தண்ணீர் மட்டும் உபயோகிக்காமல் மூலிகை கஷாயங்களை சேர்த்து கொண்டால் இன்னும் நல்லது.
மாஸ்க் போட்டவர்கள் பேசக் கூடாது.
சரும நோய் உள்ளவர்கள் மாஸ்க் உபயோகிக்க கூடாது.
நார்மல் உலர்ந்த சர்மத்திற்கு மாஸ்க் – 6 பாகம் முல்தானி மட்டி + 2 பாகம் கற்றாழை ஜுஸ் + 2 பாகம் தண்ணீர் + 1 பாகம் தேன்.
எண்ணெய் செறிந்த சர்மத்திற்கு – 5 பாகம் முல்தானி மட்டி + 1 பாகம் தேன் + 1 பாகம் கற்றாழை சாறு + 1 பாகம் எலுமிச்சை சாறு.
முதிர்ந்த சர்மத்திற்கு – 6 பாகம் முல்தானி மட்டி + 3 பாகம் தேன் + விட்டமின் இ, ஏ + தண்ணீர் அல்லது கற்றாழை சாறு.
குறைபாடுள்ள சர்மத்திற்கு - 6 பாகம் முல்தானி மட்டி + 1 பாகம் தயிர் + 2 பாகம் ஹோஹோபா எண்ணெய்.
எல்லா வகை சருமத்திற்கு ஏற்ற மாஸ்க்குகள்
பாதாம் பருப்பு பொடி, முட்டையின் வெள்ளையுடன் கலந்த சந்தன பொடி, தேன், தயிர் இவையெல்லாம் கலந்த கலவை எல்லா வகை சருமத்திற்கும் ஏற்ற மாஸ்க். இதை முகப்பரு உள்ளவர்கள் உபயோகிக்க கூடாது.
பழம், காய்கறிகளால் ஆன மாஸ்க்குகள்
சாதாரண சருமத்திற்க்கு – வாழைப்பழம், திராட்சை
உலர்ந்த சருமத்திற்க்கு – ஆப்பிள், வாழைப்பழம், கேரட், முலாம்பழம்
எண்ணெய் சருமத்திற்க்கு – எலுமிச்சை, வெள்ளரிக்காய், தக்காளி
முதிர்ந்த சருமத்திற்க்கு – எலுமிச்சை, ஆப்பிள், முட்டைகோஸ், தக்காளி,
திராட்சை.
நீருடன் தயாரிக்கப்படும் மாஸ்க்குகள்
தேன் – 1 டேபிள் ஸ்பூன் + ஆரஞ்சு ஜூஸ் – 1 தேக்கரண்டி + முல்தாணி மட்டி பொடி – 1 டீஸ் பூன் + ரோஜா பன்னீர் – 2 தேக்கரண்டி. முல்தாணி மட்டியை ரோஜா பன்னீரில் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மற்ற பொருட்களை கலந்து களிம்பாக ஆக்கிக் கொள்ளவும். முகத்தில் இதை தடவி நன்கு உலர்ந்த பின் கழுவி விடவும். இந்த கலவையின் ஆரஞ்சு சாறுக்கு பதிலாக எலுமிச்சை சாறை பயன்படுத்தலாம்.
முகபேக்குகள்
மூலிகை முக பேக்குகள் எல்லா சர்மத்திற்கும் ஏற்றவை. பாக்டீரியாவை எதிர்க்கும். முக சுருக்கங்கள், கோடுகள், கரிய கண் வளையங்கள் இவற்றை போக்கும். இவற்றை உபயோகிப்பதால் மேனியின் எண்ணெய்ப் பசை, ஈரப்பசை சீராக இருக்கும். மாஸ்க்குகளை விட மிருதுவானவை. சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுபவை.
பழங்களாலும், காய்கறிகளாலும் செய்யப்படும் பேக்குகள் சர்மத்திற்கு சத்துணவை அளிக்கின்றனர். உபயோகிக்கும் பழம், காய்கறிகளை சாறாக பிழிந்து, அதனுடன் கடற்பாசி மற்றும் முல்தானி மட்டி (அ) ஓட்ஸ் மாவு விழுதாக களிம்பாக செய்து கொள்ள வேண்டும் உபயோகிக்க வேண்டிய பழங்கள் காய்கறிகள்.
நார்மல் தோலுக்கு-திராட்சை, வாழைப்பழம்
உலர்ந்த தோலுக்கு-ஆப்பிள், வாழைப்பழம், கேரட், முலாம், தர்பூசணி பழங்கள்
எண்ணெய் நிறைந்த தோலுக்கு-வெள்ளரி, முட்டைக்கோஸ், எலுமிச்சை, தக்காளி
முதிர்ந்த தோலுக்கு-ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை
குறையுள்ள சர்மத்திற்கு-ஆப்பிள், முட்டைக்கோஸ், திராட்சை, தக்காளி.
மேலும் சில பேக்குகள்
சாதாரண சர்மத்திற்கு
பால், பாலேடு கலந்த பேக்கை போடலாம்.
எலுமிச்சை சாறு + வெள்ளரிச்சாறு கலந்து போடலாம். அரைமணி வைத்து கழுவ வேண்டும்.
உலர்ந்த சருமத்திற்கு
சூடான ஆலிவ் எண்ணை (அ) தேங்காய் எண்ணெய்யில் இரண்டு வைட்டமின் ஈ மாத்திரைகள், ஒரு விட்டமின் ஏ மாத்திரை, ஒரு விட்டமின் ‘டி’ சேர்த்து கரைத்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து, துவாலையால் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, பஞ்சினால் துடைத்தெடுக்க வேண்டும். இந்த பேக் உலர்ந்த சர்மத்திற்கு மிகவும் நல்லது.
எண்ணெய்ப்பசை நிறைந்த சர்மத்திற்கு
ஆரஞ்சுப் பழச்சாறு, தேன், பன்னீர், முல்தானிமட்டி ஒவ்வொன்றிலும் 1 ஸ்பூன் எடுத்து பேக் போடவும். நன்கு காய்ந்த பின் கழுவி விடவும்.
தக்காளி சாறு + எலுமிச்சை சாறு பேக்கையும் போடலாம்.
நன்கு மசித்த பப்பாளி பழத்தையும் முகத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவி விடலாம்.
மூலிகை முக பேக்குகள்
சந்தன பவுடர், மஞ்சள் பொடி, பால் – இவற்றை கலந்து முகத்தில் தடவிக் கொள்ளவும்.
கடலை மாவு + மஞ்சள் பொடி + சந்தனப் பொடி + கிரீம். இவற்றை கலந்து தடவிக் கொள்ளலாம். அரைமணி கழித்து குளிக்கவும்.
முகம் பளபளக்க
வெந்தயத்தை பாலில் அரைத்து, விழுதாக முகத்தில் தடவி, காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.
இளநீர், செஞ்சந்தன பொடியையும் கலந்து பேக் போடலாம்.
தக்காளி சாறு 1/2 கப் + எலுமிச்சை சாறு 30 தேக்கரண்டி இவற்றை கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவிக் கொள்ளவும்.
வெந்தயத்தை பாலில் அரைத்து அந்த களிம்பை முகத்தில் தடவிக் கொள்ளவும். உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.
சிவப்பு சந்தன பொடி, தேங்காய்பால் இவற்றை கலந்து களிம்பாக்கி முகத்தில் தடவிக் கொள்ளலாம்.
சந்தனப் பொடி + மஞ்சள் பொடி + பால் இவற்றை கலந்து களிம்பாக்கி முகத்தில் தடவிக் கொள்ளலாம். பாலுக்கு பதில் கடலைமாவு, பாலாடை இவற்றை உபயோகிக்கலாம்.
தண்ணீரை அடிப்படை பொருளாக உபயோகித்து தயாரிக்கும் முக பேக்குகள்
இந்த வகை பேஸ் பேக்குகள் முக சருமத்தை உறுதிப்படுத்தும். முக சுருக்கங்களை போக்கும்.
ஆரஞ்ச் முக பேக் – தேன் 1 மேஜைக்கரண்டி, ஆரஞ்சு ஜுஸ் 1 தேக்கரண்டி, முல்தானி மட்டி பொடி 1 தேக்கரண்டி, ரோஜா பன்னீர் 2 தேக்கரண்டி. முல்தானி மட்டியை பன்னீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு இதர பொருள்களை கலந்து களிம்பாக்கி கொள்ளவும். முகத்தில் தடவி உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கலந்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.
தேன் பேக் – தேன் 1/2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி, முல்தானி மட்டி பொடி 2 தேக்கரண்டி, தண்ணீர் 2 தேக்கரண்டி. முல்தானி மட்டியை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இத்துடன் தேனையும் எலுமிச்சையும் சேர்த்து முகத்தில் தடவிக் கொள்ளலாம். கால் மணி நேரம் கழித்து கழுவி விடவும்.
ஆலிவ் ஆயில் பேக் – பாதாம் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி, தண்ணீர் 2 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளேக்ஸ் 1 மேஜைக்கரண்டி. இரண்டு எண்ணெய்களையும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தனியாக கார்ன்ஃபிளேக்ஸ்ஸை கலந்து கொள்ள வேண்டும். இதில் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் கலவை சேர்க்கவும். நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவிக் கொண்டு உலர்ந்த பின் கழுவி விடவும்.

No comments:

Post a Comment