தம்பதிக்கு செக்ஸ் உறவில் முழு திருப்தி என்பது எப்போது, எப்படி கிடைக்கும்? அந்த தம்பதி இரண்டு பேரும் நன்றாக புரிந்து கொண்டு, மனம் விட்டு பேச வேண்டும். ஒருவரோடு ஒருவர் இணைந்து மன மகிழ்ச்சியோடு செக்ஸில் ஈடுபட்டால் தான் கிடைக்கப் பெறும். இத்தகைய இனிய அனுபவமும், வாய்ப்பும் எல்லா மனிதருக்குமே எளிதாகக் கிடைத்து விடுமா என்றால் உதட்டை பிதுக்கத்தான் வேண்டும். பல தம்பதிகள் அன்புமயமானவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களின் இரவு வாழ்க்கை என்பது ஏதோ கடமைக்கு செக்ஸில் ஈடுபடுவது போலத்தான் இருக்கும். பல தம்பதிகள் ஆயுளின் அந்தி வரைக்கும் இந்த மாதிரி தான் காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். நமது முன்னோர்கள் ‘சம்போகம்’ என்கிற ஒன்றை சொல்லிச் சென்றுள்ளார்கள். தம்பதிகள் கூடி, குலாவி, கொஞ்சி மகிழ்ந்து… ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி இறுக்கமான நெருக்கத்துடன் உடலுறவில் ஈடுபடுகிற போது செக்ஸ் உறவில் அவர்கள் உச்சஸ்தாயி நிலையை அடைவார்கள். மன பொருத்தமும், உடல் பொருத்தமும் ஒரு சேர இணைய பெற்றவர்கள் தான் இந்த உச்சநிலை பரவசத்தை அடைய இயலும். இதனை மெய்ப்பிப்பது மாதிரி ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!’ என்கிற பாடலில் ‘பொருத்தம் உடலிலும் வேண்டும்/ கொண்டவன் துணையாக வேண்டும்’ என்று பாடுகிறார் கவியரசர் கண்ணதாசன்.
இப்படி ஓர் அருமையான சம்போக வாய்ப்பினை இயற்கை வரமாக மனிதர்களுக்கு வழங்கியிருப்பதே பலருக்கு தெரியாது என்பது தான் நிஜம். இந்த பல தம்பதிகளுக்கு அனுபவ பூர்வமாக, சாத்தியப்படாமல் போவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய வேண்டும். ஆணுக்கு கிளர்ச்சி ஸ்தானமானது சீக்கிரத்தில் எழுச்சி அடையும் நிலையிலும், பெண்ணுக்கு பொறுமையாகவும், மெதுவாகவும் கிளர்ச்சி அடையுமாறும் அவரவர்களின் உடல் நிலையை இயற்கையானது வடிவமைத்துள்ளது. எனவே சீக்கிரத்தில் கிளர்ச்சி அடைகிற கணவன் (ஆண்) விறுவிறுவென்று மனை(பெண்ணோடு)வியுடன் கூடி முயங்க ஆரம்பித்து விட்டால்… அந்த கணவனுக்கு வேண்டுமானால் திருப்தி கிடைக்கலாம். அதே சமயம் மனைவி திருப்தியுறாத நிலையில் தான் இருப்பாள். ஆகவே எளிதில் கிளர்ச்சி அடைகிற கணவன், தனது மெதுவாக கிளர்ச்சி அடைகிற மனைவிக்காக பொறுமை காத்து, அவளை தனது முன் விளையாட்டினால் கிளர்ச்சி அடைய வைத்து பின்பு தான் உறவில் ஈடுபட வேண்டும். அப்போது தான் சம்போகம் என்பது சாத்தியமாகும். கணவன் மனைவி இருவருக்கும் முழுமையான திருப்தி கிடைக்கும். உணர்ச்சி நிலையிலும் இருவரும் உச்சத்தை எட்டலாம். இதனை தான் ஆங்கிலத்தில் ஆர்கஸம் என்பார்கள். சில வேளைகளில் கணவன் கிளர்ச்சி அடையும் வரைக்கும் மனைவி காத்திருக்க வேண்டியிருக்கலாம். உண்மையாக ஒருவரையருவர் புரிந்து கொண்ட தம்பதிகளுக்கு இடையே தான் இது போன்ற கலவி நிலை நிலவும்.
சில ஆண்களுக்கு இயல்பாகவே செயல்பாடுகளில் வீரியம் கொஞ்சம் குறைவாக இருக்கலாம். இதன் காரணமாக அந்த ஆணால் சுலபமாக உடல் உறவில் ஈடுபட முடியாமல் போகலாம். இத்தகைய ஆண்களை கணவனாகப் பெற்ற மனைவி அன்புடன், அரவணைப்புடன், பொறுமையாக இருந்து தனது கணவனின் செயல்பாட்டுக்கு உதவி புரிய வேண்டும். இதனால் கணவனுக்கு ஏற்படுகிற தாழ்வு மனப்பான்மையை மனைவி எளிதில் அகற்றி விடலாம். மேலும் இத்தைகைய ஆண் என் மனைவியை என்னால் திருப்தி அடைய வைக்க முடியும் என்கிற தைரியத்தையும் பெற வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் உயிர் அணுக்களைக் கொண்டவர்களும், வீரியக் குறைவு நிலையை கொண்டவர்களும் அடிக்கடி உடலுறவு கொள்ள வேண்டும். மன உலைச்சல், மன அழுத்தம் போன்றவற்றுடன் படுக்கைக்கு போகக் கூடாது.
No comments:
Post a Comment