பிரிட்டீசார் இந்தியாவை ஆண்டபோது இந்து மத ஆட்சியாளர்கள் தங்கள் ராணுவ வலிமையை தெரிவிக்க இந்த தசரா விழாவை பயன்படுத்திக்கொண்டனர். விழாவின் போது ஆயுதங்கள் ஏந்திய வீரர்களின் அணிவகுப்பும் பெரிய அளவில் நடத்தப்பட்டு வந்துள்ளது. விஜயதசமி அன்று கல்வி, வியாபாரம், விவசாயம்,
தொழிலை தொடங்கினால் சிறந்து விளங்கும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை அன்று கடைகள், வர்த்தக நிறுவனங்கள், இயந்திரங்கள் சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் தள வாடப்பொருட்கள், கல்வி நிறுவனங்களில் புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றை படைத்து வழிபடுவார்கள். ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். வெள்ளையர் ஆட்சிக்காலத்தின்போதே புரட்சியாளர்கள் தங்கள் தாய்நாட்டை விடுவிக்க தசராவிழாவில் துர்காதேவியை வழிபட்டு குண்டு வழிபாடு நடத்துவதுண்டு. இதனை துர்கா ஆசீர்வாதம் என்று அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment