Monday, December 31, 2012

கொலுவுக்கு அழகூட்டும் தங்கக் கலசம்


கொலு வைப்பதில் பலரும் பல வழிமுறை களைக் கடைபிடிக்கின்றனர். மற்றவர்களில் இருந்து தங்களது கொலு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்காக சில டிப்ஸ்:

கொலுவில் முக்கியமானது கலசம். தங்க கலசமாய் வைத்தால் கொலு பார்ப்பதற்கும் அழகாயிருக் கும்! தங்கம் போல மினுக் கும் சம்கி களைக் கொண்டு
செய்யலாம். சிறிய பிளாஸ்டி குடம் வாங்குங்கள் சொம்பு சைசில் கடைகளில் இது கிடைக்கும்.பிளாஸ்டிக் மாவிலை 5 நல்ல பச்சை நிறத்தில் வாங்கிக் கொள்ளுங்கள். தங்க நிற சம்கிகள் சிறு இலை வடிவில் கிடைக்கும் இதை குண்டூசியால் குடம் முழுவதும் நெருக்கமாய் குத்தி விடுங்கள். குடத்தின் வாய்பகுதிக்கு வெள்ளி நிற லேஸ் கிடைக்கும். அதை குடத்தின் வாய் அளவுக்கு கத்திரித்து பெவிகால் தடவி ஒட்டிவிடுங்கள். மாவிலைகளை குடத்தின் மேல் செருகி விட்டு ஒரு தேங்காயை நடுவில் வையுங்கள். தங்கக் கலசம் தயார்.

கொலுவிற்கு வருபவர்களுக்கு கொடுக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ஒரு ரூபாய் நாணயம் போன்றவற்றை சிறு கவரில் போட்டு வைத்து விட்டால் தனித்தனியாய் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

No comments:

Post a Comment