Monday, December 31, 2012

அன்னவாசலில் அன்னாபிஷேகம்



உயிர் வாழ்தலுக்கு ஆதாரமான அன்னம், பிரம்ம-விஷ்ணு-சிவ வடிவம் என்கிறது வேதம். சாம வேதம், ‘அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ’ என்று பாடுகிறது. அதாவது பரம்பொருளே ஜீவன்களுக்கு உயிர்நாடியான உணவாக, அதாவது அன்னமாக விளங்குகிறார் என்று அர்த்தம். அன்னை பார்வதி கூட காசியில் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளிக்கும் அன்னபூரணியாக அருள்கிறாள். அமுது அருளும் ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழாவே அன்னாபிஷேகம். ஐப்பசி மாத பௌர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேக விழா வெகுச்சிறப்பாக நடைபெறும். அன்று சிவனின் திருமேனியில் சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் சிவலிங்கம் என்கிறார்கள். அன்னாபிஷேகமன்று சிவதரிசனம் செய்வது கோடி சிவ
தரிசனம் செய்வதற்கு சமம். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகம் முதன்முதலில் நடைபெற காரணமான ஆலயம், அன்னவாசல்.

திருவாரூர் மாவட்டம், குடவாசலில் இருந்து 3 கி.மீ. தொலைவில், சேங்காலிபுரம் செல்லும் வழியில் இருக்கிறது, இத்தலம். இத்தலத்தில் நித்திய அன்னாபிஷேகம் நடந்ததாக புராணம் சொல்கிறது. இது சத்தியம் என உணர்த்துகிறது, அன்னபூர்ணேஸ்வரர்-அன்னபூர்ணேஸ்வரி என்கிற இத்தல கடவுளரின் திருநாமங்கள். இங்கு 29.10.2012 அன்று அன்னாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு அன்னாபிஷேக அன்ன பிரசாதத்தை உட்கொள்ள குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு அந்த பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment