Monday, December 31, 2012

குரு உண்மையிலேயே தேவைதானா? சிவனே குருவாகி ஆட்கொள்ளும்போதினிலே!

எல்லோரும் குரு குரு என்று தேடுவதால் குரு கிடைப்பார் அதில் சந்தேகமில்லை. ஆனால் குரு கிடைக்கும் பாக்கியம் பெற்றவர்கலுக்கே குரு கிடைப்பார் என்பது ஐதீகம். அப்படி அந்த பாக்கியம் இல்லாதவர்களுக்கும் இந்த கலியுகத்தில் குரு கிடைக்க வேண்டுமா? இந்த கதைய படியுங்கள். இது வேடவன் கண்ணப்பரின் கதைதான். ஆனால் இதில் உள் நோக்க வேண்டிய தத்துவமே புதைந்துள்ளது. இந்த மாத ஆலயம் புத்தக்கத்தில் இவரின் விளக்க கதை வந்துள்ளது.

சிவனே குருவாகி சிவனே அவரை ஆட்கொண்டு தன்னில் கலந்துகொண்டாரே..அதுதானே கண்ணப்பரின் பெருமை. அது போல் நாமும் கள்ளம் கபடனும் இல்லாமல் தூய பக்தி நெறியில் அவரை வணங்கினால் அவரே குருவாகி நம்மை ஆட்கொள்வார் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை.





தாயானவள் சேய் செய்யும் பிழையினை கணபொழுதில் மறந்து மன்னிக்கும் குணமுடையராக யிருத்தலியல்பு. தாயுமானாவரோ சகலரர்க்கும் மூலமாதலால் தன் பக்தர்கள் அறிந்தோ, அறியாமலோ, ஆணவமருளினாலோ செய்யுந் தவறினைப் பொருத்து, மன்னித்தருளுவதில் நிகரில்லாதவர். அதனாலன்றோ தாயினுஞ் சாலபரிந்தென்று இறைஞ்சுகிறார் மாணிக்கவாசகர்.
சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே.

அசுரர்களும், தேவர்களும் பகைவராயினுங் சிவவழிபாட்டினாலே மங்கா புகழ் எய்துள்ளனர். இதை வலியுறுத்துவனவாகக் கூறப்படும் பக்திநெறிக் கதைகளுளொன்று வேடுவர் கண்ணப்பரின் கதை.

வேட்டையாடிய விலங்கின் புலாலை முதலில் தான் சுவைத்துப் பார்த்து, பின் சுவைமிகு துண்டுகளை மட்டும் படையலாக சிவலிங்க ஆவுடையிற் மீது பரப்பியபிறகு எஞ்சியத் துண்டுகளைக் கொண்டு தன் பசியாற்றுவான் கண்ணப்பன். பசுங் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்குங் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னை யர்பணித்தக் கொண்டவராக திகழ்ந்தார் பூசர்.

சாத்திரங் கற்ற பூசரும், வேடுவரும் அடிப்படையிற் இருவேறு துருவங்களையாயினுங் தத்தம் பக்தியில் மெய்யன்புக் கொண்டவர்கள். மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட பூசருக்கும், செய்வதறியாமற் செய்யுங் கண்ணப்பனுக்கும் இடையே பக்திப் போரே மூண்டது. பக்திப்போர் முடிவுக்கு வர அருளுள்ளங் கொண்ட சிவனார், பூசரின் கனவிற் தோன்றி, இன்றிரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார்.

சிவனார் திருக்கண்ணிற் குருதி தென்பட்டமாத்திரமே, சிவன் கண்ணில் புண், கண்டுங் காணாமற் யிருக்கலாகுமோ யெனக் கூறி, அம்பின் கூர்முனையாற் தன்கண்ணைக் குற்றிப் பெயர்த்தெடுத்து புண்கண்ணில் பொருத்தினான் கண்ணப்பன். உனக்கின்றி எனக்கேன் யிருக்கண் யென்று மொழிந்தான். மறைந்திருந்த பூசரோ கண்டது கனவோ நனவோயென யறியாமற் திகைத்து நின்றார். இடக்கண்ணி்ற் நிற்கவே வலக்கண்ணி்ற் வழியாரம்பித்தது குருதி. சற்றுஞ் சிந்தியாது வலக்காலை புண்கண்ணிற் மிதியவே, அம்பினாற் வலக்கண்ணேப் பெயர்க்க துணியவே, சிவனார் கண்ணப்பனைத் தடுத்தருளினார்.

எச்சிலிட்ட புலால் படைத்தல், செருப்பணிக் காலால் மீதித்தல் முதலியன தீச்செயலையாயினுந் தன்னிரு கண்ணையும் பெயர்த்தெடுத்து உறுப்புதானம் செய்திட்ட, இருப்பதனை யிழக்க முனைந்திட்ட துணிவே மெய்பக்தி யென ஏற்றுக்கொண்டு கண்ணப்பரை ஆட்கொண்டுருளினார் சிவனார்

No comments:

Post a Comment