மூலவர்
ராமநாதீஸ்வரர்
உற்சவர்
அம்மன்
சிவகாமசுந்தரி
நடைதிறப்பு
இடம்
போரூர்
முகவரி
போரூர் சந்திப்பிற்கு அருகில் குன்றத்தூர் மின்வாரிய அலுவலகத்தைக் கடந்து இடதுபுறம் சென்றால் இத்தலத்தை அடையலாம்.
திருவள்ளூர் மாவட்டம்
தகவல்
நவகிரகங்களில், குரு தனிச்சிறப்பு மிக்கவர். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்று அழைப்பர். குரு என்கிற சொல்லுக்கே இருட்டை நீக்குபவர் என்று பொருள். அதனாலேயே ஆதி குருவான தட்சிணாமூர்த்தியே அதிபதியாக விளங்குகிறார். கல்வி, கலை, ஆராய்ச்சி, திருமணம், ஆன்மிகம், மரபு சார்ந்த விஷயங்கள், அமைதி, கௌரவப் பதவி, ஒழுக்கம் போன்ற விஷயங்களை குருபகவான்தான் அருளுகிறார். குரு ஜாதகத்தில் சரியான நிலையில் இல்லாதோர், போரூர் ராமநாதீஸ்வரர் தலத்திற்கு வந்தால், நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்வர். ராமேஸ்வரத்தில் ராமநாதரை தரிசிப்பதற்கு முன்பே, ஈசனை ராமர், ராமநாதர் எனும் திருப்பெயரிலேயே தரிசித்திருக்கிறார். அப்படி அவர் தரிசித்த தலம்தான் போரூர். ராமபிரான் இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால் இத்தலம் போரூர் என வழங்கப்படுகிறது. ராமபிரானுக்கு குருவாக போரூர் ஈசன் விளங்கியதால், இத்தலம் குரு தலமாக போற்றப்படுகிறது. குரு பகவானுக்கு உரிய பூஜைமுறைகள்யாவும் இந்த ராமநாதருக்கு செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் தலத்தைப் போலவே இத்தலத்திலும் விபூதியுடன் பச்சைக்கற்பூரம், ஏலக்காய் மணக்கும் தீர்த்தமும் பிரசாதமாகக் கிடைக்கிறது; அதோடு, பக்தர்களின் தலையில் சடாரி சார்த்தும் முறையும் உள்ளது, குறிப்பிடத்தக்கது. இத்தலம் உத்தர ராமேஸ்வரம் என போற்றப்படுகிறது. ராமேஸ்வரத்திற்கு பிரார்த்தனை செய்து அங்கு சென்று பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனையை செலுத்துகின்றனர். ஆலயத்துள் நுழைந்ததும் அம்பிகை சிவகாமசுந்தரி தனிக்கோயில் கொண்டுள்ளாள். ஆலய ஈசன் கருவறை முன் உள்ள மகாமண்டபம் நான்கு புறமும் யாளிகள் தாங்க, 20 தூண்களுடன் திகழ்கிறது. ராமபிரானின் திருவடிகளை இத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தல திருக்கல்யாண சேவையை தரிசிப்பவர்களுக்கு ஈசன் அருளால் திருமண பாக்யம் உடனே கிட்டுகிறது. பிரிந்திருந்த தம்பதியர் இத்தல ஈசனை தரிசிக்க அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். குரு பகவான் தலமாக விளங்குவதால் குரு தசை, குரு புக்தி, ஜாதகத்தில் லக்னத்தில் குரு, குரு தோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 11 வாரங்கள் இத்தல ஈசனுக்கு நெய்விளக்கேற்றி 11ம் வாரம் கடலை சுண்டல், தயிர் சாதம் நிவேதித்தால் பிரச்னைகள் ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிறது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இத்திருத்தலத்தில் சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது ராஜகோபுரம் கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது கிடைத்த கல்வெட்டு மூலம் இத்தலம் ராஜேந்திரசோழன் காலத்தில் திருப்பெருங்கோயில் என வழங்கப்பட்டதாகவும், சோழமன்னர்கள் இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்துள்ளதும் தெரியவந்தது.
திருவிழா
பௌர்ணமி, பிரதோஷம், குரு பெயர்ச்சி சிவராத்திரி
போக்குவரத்து
சென்னையிருந்து கிண்டி மார்கமாக 15 KM.

No comments:
Post a Comment