Tuesday, January 15, 2013
பிட்யூடரி தரும் ப்ரோலாக்டின் ஹார்மோன்
உடலுள்ள சுரப்பிகளில் தலையானது பிட்யூட்டரி. மூளையில் அடிபாகத்தில் உள்ளது. இது சுரக்கும் ப்ரோலாக்டின் ஹார்மோன், சாதாரணமாக குறைந்த அளவில், பெண்களின் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் கர்ப்பமடைந்தால் இதன் சுரப்பு 10 மடங்கு அதிகரிக்கிறது.
ப்ரோலாக்டின் ஆண், பெண் இரு பாலர்களிடம் காணப்படுகிறது. இதன் முக்கிய பணி கர்ப்பிணி பெண்களின் தாய்ப்பால் உற்பத்தியை தூண்டுவது. கர்ப்பிணிகளின் மார்பகத்தின் பால் சுரக்கும் சுரப்பிகளை ப்ரோலாக்டின் உப்ப வைத்து பெரிதாக்குகிறது.
கர்ப்ப காலத்தின் போது ப்ரோலாக்டின் பிட்யூடரியில் மட்டுமன்றி மார்பக திசுக்களிலும், கர்பப்பை ஈரமான சுவர்களிலும் உண்டாகிறது. குழந்தை பிறந்ததும் மூளை, பிட்யூட்டரியை, ப்ரோலாக்டினை ரிலீஸ் செய்ய ஆணையிடும்.
ப்ரோலாக்டினின் செயல்பாடுகள்
கர்ப்பிணிகளின் தாய்ப்பால் சுரப்பை உண்டாக்குகிறது.
சில மகப்பேறுகளில், பிறந்த குழந்தைகள், ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, ஒரு பால் போன்ற திரவத்தை மார்பகங்களிலிருந்து சுரக்கின்றன. ப்ரோலாக்டின் தாயில் உடலில் சுற்றிக் கொண்டு இருப்பது தான் இதற்கு காரணமாகும்.
ப்ரோலாக்டின், உடலுறவுக்குப் பின் ஏற்படும் திருப்தியை தருவதில் உதவுகிறது. பாலுணர்வை தூண்டும் டோபமைன் அளவை குறைக்கிறது. இந்த செயல்பாடு ப்ரோலாக்டின் சரியான அளவில் இருந்தால் தான் நடக்கும். ப்ரோலாக்டின் அதிகமானால் ஆண்மைக் குறைவு ஏற்படும்.
ப்ரோலாக்டின் பெண்களின் ஹார்மோன் எஸ்ட்ரோஜனையும், ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளையும் குறைக்க வல்லது.
ப்ரோலாக்டினும் இதர ஹார்மோன்களும்
டோபாமின் எனும் நியூரோ டிரான்ஸ்மிட்டர் ப்ரோலாக்டின் சுரப்பதை தடுக்கும்.
செரோடோனின் மற்றும் தைராயிடு ஹார்மோன்கள் ப்ரோலாக்டின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.
கர்ப்ப காலத்தில்
இந்த சமயத்தில் அதிகமாகும் பெண் ஹார்மோன் எஸ்ட்ரோஜன், ப்ரோலாக்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் குழந்தை பிறந்தவுடன் தரவேண்டிய தாய்ப்பால் உற்பத்தியை ப்ரோலாக்டின் தயாராக வைக்க உதவுகிறது.
பிரசவத்திற்கு பின்
பிறந்த குழந்தை தாய்பாலை பருகும் போது, ப்ரோலாக்டின் உற்பத்தி மேலும் தூண்டப்படுகிறது. அடுத்த பால் கொடுக்கும் வேளைக்கு தயாராக பால் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
ப்ரோலாக்டின் குறைபாடு
சில அபுர்வ கோளாறுகளினால், பிட்யூடரியின் இதர ஹார்மோன்களின் குறைபாட்டினால், ப்ரோலாக்டின் சுரப்பு குறையலாம். இதனால் பெண்களில் தாய்ப்பால் சுரப்பு குறையும். ஆண்களுக்கு ப்ரோலாக்டின் குறைபாட்டால் ஆண்களுக்கு அவ்வளவு பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
ப்ரோலாக்டினும், மலட்டுத்தன்மையும்
குழந்தைகளுக்கு பாலூட்டும் காலத்தில், பெண்கள் மறுபடியும் கர்ப்பமுறும் வாய்ப்புகள் குறைவு. இதன் காரணம் ப்ரோலாக்டின் தான். தாய்பால் சுரப்பை மட்டுமில்லாமல், பெண்களின் சினைமுட்டை உற்பத்தி, ளிஸ்uறீணீtவீஷீஸீ மற்றும் மாதவிடாய் சுழற்சியையும் ப்ரோலாக்டின் கன்ட்ரோல் செய்கிறது. ரத்தத்தின் ப்ரோலாக்டின் அளவு அதிகமானால் ஒவியுலேசன் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு குறைகிறது.
ப்ரோலாக்டின் பாதிப்புகள்
அசாதாரண, அபரிமிதமான தாய்ப்பால் உற்பத்தி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகும், பால் உற்பத்தி தொடருவது.
அசாதாரணமாக, மார்பகங்கள் வீங்கி, பெருத்து விடுதல். மார்பகங்கள் நலிந்து விடுதல், வலி ஏற்படுதல்.
ஏறுமாறான மாதவிடாய் சுழற்சி.
மலட்டுத்தன்மை, உடலுறவில் இச்சையின்மை.
கண் பாதிப்புகள்.
ப்ரோலாக்டின் அளவை ரத்தப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தைராய்டு வியாதிகள், பிசிஒஎஸ் எனப்படும் பெண்களின் பாதிப்பு, சில மருந்துகளின் உபயோகம் முதலியன ப்ரோலாக்டின் அளவுகளை அதிகமாக்கலாம்.
பெண்மையைப் போற்றுவோம்
ஆண், பெண் உறவுகள், ஆணாதிக்கம் பெண்ணின் பெருமை, தாய்மையின் சிறப்பு இவற்றை பற்றி எழுதாத விவரங்கள், கருத்துக்கள் இல்லை. பெரும்பாலும் சரித்திரத்தில், இலக்கியங்களில், பெண்கள் மென்மையானவர்கள், இளகிய மனம் உடையவர்கள் என்று கூறப்படுகின்றனர். அதே சமயம் பெண்களின் மனதின் ஆழத்தை அறிய முடியாது. மனவலிமை உடையவர்கள் பெண்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றன.
பெண்களும், ஆண்களும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள் வாழ்க இந்த வித்தியாசம் என்கிறது ஒரு ஃப்ரெஞ்சு பழமொழி. பெண்களை ஆண்கள், மலரே, கொடியே, என்று வர்ணித்தாலும், அடிப்படையில் பாலியல் உணர்வு தான், பெண்களை போக பொருளாக கருதப்பட்டு வந்ததின் காரணம். பெண்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவே பெண்கள் கற்புடன் வாழ வேண்டும் என்று ஆண்கள் வலியுறுத்துகிறார்கள் என்பது தற்போதைய கருத்து. இதற்கு சில இலக்கிய சான்றுகள்.
நல்ல மனைவியின் இலட்சணம் என்று கூறும் நீதி வெண்பாவிலிருந்து
அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப்
பெண்ணின் அழகும் புவிப்பொறையும் – வண்ணமுலை
வேச துயிலும் விறல்மந் திரிமதியும்
பேசில் இவைஉடையாள் பெண்.
ஆராய்ந்து சொன்னால் ஒரு பெண் மனைவி தன் கணவனிடத்தே அன்னை போன்ற கருணை உடையவளாய் இருக்க வேண்டும் வேலைக்காரி போல் பணிந்து சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் ஸ்ரீதேவி போன்ற முகவிலாசம் உள்ளவளாக இருக்க வேண்டும் பூமி தேவியைப் போன்ற பொறுமை உள்ளவளாக இருக்க வேண்டும் கட்டிலில் வேசி போல வசியம் செய்ய வேண்டும் சிறந்த மந்திரி போலத் துன்ப காலங்களில் சிறந்த யோசனைகள் சொல்ல வேண்டும்.
பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா
பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தானதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் விண்மீன்கள்- பெண்மூவர்
பேசில் அலைசுவறும் பேதையே பெண்பலர்தாம்
பேசில்உலகு என்னாமோ பின்
வரையறையின்றி ஒரு பெண் உரத்துப் பேசினால் பெரிய இந்த பூமி அதிரும் இரண்டுபேர் சேர்ந்து அவ்வாறு பேசினால் வானத்து நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும் மூன்று பேர் சேர்ந்து அவ்வாறு பேசினால் கடலலைகள் வற்றிவிடும் பல பெண்கள் சேர்ந்து பேசினால் உலகம் என்னாகுமோ
சமயவாதிகளும் தங்களது சமயப்போதனைகள் மூலம் பெண்களைப் பிற்பட்டவர்களாகவும், வலிவற்றவர்களாகவும் உருவகித்துக் காட்டினர். தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற உளப்பாங்கினைப் பெண்களிடையே தோற்றுவித்தனர். ஆணாதிக்கத்தை நிலை நிறுத்தக் கணவனைத் தலைவன் எனவும் கடவுள் எனவும் மிகைப்படுத்திக் கூறினர்.
கணவனைத் தலைவன் என்று கூறியவர்கள் மனைவியைத் தாதி என்றும், ஊழியக்காரி என்றும் வருணித்து என்றென்றும் தங்களது ஆணாதிக்கம் நிலைபெற வேண்டுமென்ற கருத்தில் தான் என்று பல சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
பெண்களின் உடல் வாகு
பெண்களின் உடல் அவர்களின் பல வேடங்களுக்கேற்ப அமைக்கபட்டது. தாயாக, தாதியாக, சகோதரியாக, மனைவியாக, தந்தை; தாய்க்கு பெண் மகவாக, இல்லத்தரசியாக, வேலை பார்க்கும் சம்பாதிக்கும் பெண்ணாக இருக்க வேண்டியதால் அவர்களின் உடலமைப்பு சிக்கலானது. மாதவிடாய் தோன்றியபோதும், அது மறையும் போதும் ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களும் அவர்களை வெகுவாக பாதிக்கும். இருந்தாலும் “பெண்கள் இயல்பாகவே உடல் திடம் மிக்கவர்கள். சோகை, ஒவ்வாமை, மிகுந்த எடை, மாதவிடாய்த் தொல்லைகள் போன்ற சில நோய்களைத் தவிர்த்துவிட்டால் வேறு எந்த நோயுடன் 40 வயதிற்கு கீழான பெண்ணும் எனது மருத்துவமனைக்கு வருவதில்லை என்கிறார் அனுபவமிக்க மருத்துவர் ஒருவர். அப்படியே நோய்வாய்ப்பட்டாலும் ஆண்களை விட விரைந்து நலமடைந்து விடுகின்றனர். நீரிழிவு ஒன்றைத் தவிர பிற எல்லா நோய்களிலிருந்தும் அவர்கள் எளிதாக நிவாரணம் பெற்றுவிடுகின்றனர்.
காசநோய், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் இதயக் கோளாறு போன்றவற்றால் பெண்களைவிட ஆண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதயக் கோளாறினால் இறப்பவர்களில் 80 விழுக்காட்டினர் ஆண்கள். இதே போல் உயர் இரத்த அழுத்தத்தினாலும் பெண்கள் பெரும் பாதிப்பு அடைவதில்லை.
சின்னச்சின்ன வலிகள், நோய்கள் போன்றவற்றைக்கூட ஆண்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. தாங்க முடியாமல் துடித்துத் துன்புறுவர். ஆனால் பெண்களோ பல நோய்களையும் உடல் உபாதைகளையும் பொறுத்துக் கொள்கின்றனர் அல்லது புறத்தே ஒதுக்கி விடுகின்றனர். இயல்பாகவே ஆண்களைவிடப் பெண்களின் வாழ்நாள் அதிகம். அதிலும் பரபரப்புக்கும் பதட்டத்திற்கும், மன இறுக்கத்திற்கும் ஆட்படும் போது ஆணின் வாழ்நாள் மேலும் குறைந்து போகிறது.
பெண்களின் மனதிடம்
இயல்பாகவே பெண்கள் உறுதியான உளப்பாங்கு உடையவர்களாக உள்ளனர். திருமணம் என்னும் கல்லூரியில் ஆண்கள் தங்கள் இளங்கலைப்பட்டத்தை இழக்கின்றனர். பெண்கள் முதுகலைப் பட்டம் ஏற்கின்றனர் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது முற்றிலும் உண்மை. அச்சமும் நாணமும் நிறைந்த கன்னியாக இருந்த பெண் கல்யாணமான பின்னர் உடற்திடமும் மனத்திடமும் கொண்ட குடும்பத் தலைவியாகிறாள்.
ஒரு பெண் தனது பிறந்த வீட்டில் 20-25 வருடங்கள் வாழ்ந்த பின் மணமானதும் கணவன் வீட்டுக்கு செல்கிறாள். இந்த பெரிய மாற்றத்தை அவள் எப்படி சமாளிக்கிறாள் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையை அவள் ஏற்றுக் கொள்கிறாள். சிறுவயதிலிருந்தே இதற்கு அவள் தயாராக்கப்படுகிறாள். ஒரு குருவி, எப்படி தனக்கென்று ஒரு கூட்டை அமைத்துக் கொள்கிறது யார் சொல்லிக் கொடுத்தார்கள் அதே போல பெண் தனக்கென்று ஓரு தனி இல்லம் குடித்தனம் அமைக்க விழைவது அவள் உள்ளத்தில் ஊறிய, தொடக்க காலத்திலிருந்தே வரும் உணர்வு உந்துதல். தன் தாயைப் போல், மற்றொரு தாயாக விரும்புகிறாள்.
பெண்கள் தங்களின் வயதொத்த ஆண்களை விட, மனதளவிலும், உடலளவிலும் விரைந்து வளர்ச்சியடைகின்றனர். ஆண்களைவிட பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள்.
ஆயுர்வேதமும் பெண்களும்
சரகர் தனது சம்ஹிதையில் ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பெண்களுக்கு தரவில்லையென்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் சரகர் மாதவிடாய், தாய்மை அடைதல், தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம், மாதவிடாய் மறையும் காலம் இவற்றைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். பெண்களின் பிறவி உறுப்புகளின் பாதிப்பைப்பற்றியும் விவரித்துள்ளார். இதனால், அவர் ஒரு வைத்தியராக பெண்கள் மேல் காட்டிய அக்கறை தெரிகிறது.
மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலத்தின் பிரச்சனைகளில், மற்ற வைத்திய முறைகளை விட ஆயுர்வேதம் சிறப்பான சிகிச்சைகளை அளிக்க வல்லது. பாதுகாப்பான மூலிகை வைத்தியம் மட்டுமின்றி ஆயுர்வேதம் யோகாவையும் பயன்படுத்துகிறது. பெண்களை, வாத, கப, பித்த பிரிவுகளாக பிரித்து தகுந்த சிகிச்சையை ஆயுர்வேதம் மேற்கொள்கிறது. பெண்கள் கர்ப்பமடைவதிலிருந்து குழந்தை பிறந்து ஆரோக்கியத்துடன் வளர, ஆயுர்வேதத்தில் உயர்ந்த சிகிச்சை முறைகள், மருந்துகள் உள்ளன.
பெண்களின் தொற்றுநோய்களும், வெள்ளைபடுதலும்
பெண்களுக்கு வரும் தொற்று நோய்கள்
யோனியில் அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் கெட்டியாக, நாற்றமில்லா, தயிர் போன்ற வெண் திரவம் வருதல், அரிப்பு, சிறுநீர் போகையில் எரிச்சல், புண்ணாகுதல், உடலுறவின் போது வலி, இவை அறிகுறிகள் ஆகும். பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் கான்டிடா அல்பிகான்ஸ் எனும் காளானால் அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான்.
பேக்டீரியா வாஜினோஸிஸ்- நாற்றமுடைய, நீர்த்த, மஞ்சள் அல்லது வெள்ளைநிற திரவம் வெளியேறுதல், உடலுறவின் பின் நாற்றம் அதிகரித்து, அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்.
சாலமைடியல் தொற்று – இது சாலமைடியல் என்ற பேக்டீரியாவால் வரும் தொற்றுநோய். இந்த பாக்டீரியா, வைரஸ் போலவே சிறியது. வகையை சேர்ந்தது. இதன் அறிகுறிகள் – மஞ்சள் நிற, சளி போன்ற திரவம் வெளியேறுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கையில் வலி, அசாதாரணமான இரத்தப் போக்கு இவைகளாகும்.
டிரைகோமனியாசிஸ் வாஜினாலின் – அரிப்பு, சிறுநீர் கழிக்கையில் வலி, அதிகமாக பச்சை மஞ்சள் நிற, நுரையுடன் கூடிய, மீன் நாற்றமுடைய திரவப்போக்கு இவை அறிகுறிகள். இந்த நோய்களில் மிகவும் அதிகமாக காணப்படுவது.
வெள்ளைபடுதல்
பெண்களில் இனப் பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்றேயாகும். பெண்கள் இயற்கையான இயல்பான சுரப்பிற்கும் வெள்ளை படுதலுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்வது அவசியம் எவ்வாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் உடலில் வியர்வை உண்டாகின்றதோ அதே போல பெண்களின் பெண் உறுப்பில் சுரப்பு ஏற்படும்.
ஆனால் வெள்ளைபடுதல் என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிக்கும். வெள்ளைபடுதலுடன் பலஹீனம், இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி, மற்றும் உடல் சோர்வு சேர்ந்தே தோன்றும். இவை இருந்தால் மட்டுமே அது வெள்ளைபடுதலாகும்.
பல சமயம் அரிப்புடன் சேர்ந்து இருக்கும். துர்நாற்றம் வீசும் இதனால் திருமணமானவராக இருந்தால் கணவருக்கும் ஆணுறுப்பில் அரிப்பு ஏற்படும். இதற்கு அடிப்படை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் என்ற பூசணம் பெண் உறுப்பில் வளர்வதேயாகும். இந்த பூசனம் தொற்றை உண்டாக்கும். அரிப்பு இல்லாத வெள்ளைபடுதல், கர்பமாக இருக்கும் பொழுதும் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் பொழுதும் நீரிழிவு நோய் உள்ள போதும் கூட ஏற்படும்.
அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல்
பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் கான்டிடா அல்பிகான்ஸ் எனும் காளானின் அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான்.
இது எதனால் ஏற்படுகிறது
குறைந்த நோய் எதிர்ப்பு, சக்தி பலவீனமான உடல் ஆரோக்கியம்.
இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் உண்டாகிறது.
கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது.
நீரிழிவு வியாதி, உடல் பருமன்.
இந்த கான்டிடா அல்பிகான்ஸ் காளான்கள் சாதாரணமாக குடலிலும் தோலிலும் இருக்கும். இங்கிருந்து இவை யோனிக்கு பரவும்.
இறுக்கமான, ஈரத்தை உறிஞ்சாத உள் ஆடைகள் காளானின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
சுகாதார குறைவு, வயிற்றில் பூச்சிகள்.
இந்த நோயின் அறிகுறிகள்
பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல்
யோனிலிருந்து அடர்த்தியான, தயிர்போன்ற வெள்ளை திரவ வெளியீடு
புண்படுவது – தேய்ப்பதினாலும், சொரிவதனாலும் அதிகரிக்கும்
உடலுறவின் போது வலி
சிகிச்சை முறைகள்
தனக்குதவி
நீண்ட விரல் நகங்களால் சொரியவோ அல்லது தேய்க்கவோ செய்யாதீர்கள்.
மிகச் சூடான நீரினால் கழுவ வேண்டாம்.
குளிக்கும் டவலால் கடுமையாக துடைத்து கொள்ளாதீர்கள்.
உடலுறவை சிகிச்சை பெறும் போது தவிர்க்கவும்.
ஆயுர்வேத மருந்துகள்
அசோகரிஷ்டம், திராக்ஷ£தி சூரணம், அசோக்ருதம், அசோகாதிவடி, பிரதராந்தக ரஸ போன்றவை.
இதர குறிப்புகள்
உணவு முறைகள்
வெள்ளைப்படுதல், நோய் மற்றும் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள்.
மன உளைச்சலை குறைக்கவும்.
உடற்பயிற்சி உதவும்.
இந்த வியாதி உடலுறவினால் பரவும் நோயல்ல. இருந்தாலும் உடலுறவை தவிர்க்க முடியாவிட்டால் கணவரிடம் தெரிவிக்கவும் உடலுறவினால் அதிகரிக்கவும். கணவருக்கும் தொற்று பாதிப்பு வரலாம். உடலுறவை தவிர்ப்பது நல்லது.
வீட்டு மருத்துவம்
சிறிது கடுக்காய் நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து ( திரிபலா சூரணம்) அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும்.
மிகவும் குளிர்ந்த நீரில் 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும்.
சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு காலை வெறும் வயிற்றில் தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும்.
லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும்.
ஆயுர்வேத மருத்துவம்
வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும். ஆயுர்வேத முறையில் மட்டுமே வெள்ளைபடுதலை நிரந்தரமாக போக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் பெரும்பாடு
பெண்கள் படும்பாட்டில் தலையானது மாதவிடாய் கோளாறுகள். ஆரோக்கியமான பெண்ணின் அடையாளம் ஒழுங்காக குறிப்பிட்ட நாட்களில் நிகழும் “மூன்று நாட்கள்” மாத விலக்கு சரிவர நிகழ வேண்டும். மருத்துவம் முன்னேறிய இந்த நாட்களிலும் ஒரு தற்காலத்திய நவீன பெண்கள் இந்த மாத சுழற்சி கோளாறுகளுக்கு, பழங்கால கிராமத்துப் பெண்களை விட அதிகம் ஆளாகிறார்கள். அந்த காலத்திய அமைதியான வாழ்க்கையும் இந்த கால பரபரப்பு வாழ்க்கையும் காரணமாகலாம்.
பல விதமாக சொல்லலாம்
மாதச் சுழற்சி சரியான நாள்களில் ஏற்படும். ஆனால் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். இதை மெனோராகியா என்பார்கள். இது சராசரி உதிரப்போக்கை விட அதிகமாக போகிறது என்று எப்படி தெரிந்து கொள்வது நீங்கள் சாணிடரி பேடுகளை நாப்கின் பயன்படுத்துவராக இருந்தால் எவ்வப்போது மாற்றுகீர்கள், அடிக்கடி மாற்றும் படி நேர்கிறதா என்பதை கவனித்தாலே தெரிந்து விடும். இந்த உதிரப்போக்கு ஒரு வாரம் வரை இருந்தாலும் அணிந்த ஒரு மணி நேரத்துக்குள் நேப்கின் முழுவதும் ரத்தக் கசிவு இருந்தால் அபரிமித ரத்தப்போக்கு மெனோராகியா எனலாம்.
டைஸ்மெனோரியா
இது வலி, வேதனையுடன் கூடிய உதிரப்போக்கை குறிக்கும். முதல் கட்டத்தில் அடிவயிற்றில் இனந்தெரியாத வலி. இது மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் தோன்றலாம். இல்லை மாதவிடாயுடன் வரலாம். கூடவே தலைசுற்றல், வாந்தி, தலைவலி, மயக்கம், மலச்சிக்கல் இல்லை எதிர்மாறாக பேதி இவைகள் உண்டாகும். இதன் காரணம் சரியாக தெரியவில்லை. அதிகமான கர்பப்பை சுருங்கி விரிய காரணமான ஹார்மோன் சுரப்பினால் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இரண்டாம் நிலையில் வயதானவர்களை பாதிக்கும். அடிவயிறு இறுக்கம், வலி, இடுப்பு, மூட்டுவலிகள், மாதவிடாய்க்கு 2-3 நாட்கள் முன்பே தோன்றும் 2 வாரங்கள் வரை கூட இந்த வலிகள் இருக்கும். காரணம் – இடுப்பு எலும்புகளின் நோய் என்டோமெட்ரியாசிஸ் கர்பப்பை, ஓவரீஸ் இவற்றின் திசுக்கள் வியாதிப்படுதல், கட்டிகள், கர்பப்பை சிதைவு போன்றவை. மாதவிடாய் கால விளைவுகள் இவைகளும் மாதவிடாய் காலங்களில் வேதனையை உண்டாக்கும்.
மாதவிலக்கு நார்மலாக வரும் சமயங்களில் வராமல் வேறு நாட்களில், அடிக்கடி, இடைவெளிகள் சரியாக இல்லாமல் ஏற்படும் உதிரப்போக்கை மெட்ரோராகியா என்பார்கள்.
மாதவிலக்கு 21 நாட்களுக்குள் ஏற்பட்டால் அது பாலி மெனோரியா எனப்படும்.
அசாதரமான, காரணங்களன்றி, உதிரப்போக்கு ஏற்படுவதை டையஸ்ஃபங்சனல் யுட்ரின் பிளிடிங் என்பார்கள். இதில் மேற்கண்ட நான்கு பிரிவுகளும் அடங்கும்.
முதலில் இந்த கோளாறுக்களான காரணங்களை பார்ப்போம்
ஹார்மோன்கள் கோளாறு மாதவிலக்கை கன்ட்ரோல் செய்யும் ஹார்மோன் மாறுபடுதல். பெண் ஹார்மோனான எஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தால் உதிரப்போக்கு ஏற்படலாம். இந்த அதிக அளவான எஸ்ட்ரோஜனை சீர் செய்வது ப்ரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன். இந்த ஹார்மோன் கோளாறுகளால் பெண்ணின் சினை முட்டை வெளிவருவது நின்று விடும். இதனால் கர்பப் பையின் சுவர்கள் தடித்து விடும். கர்பப் பையின் சுவர்கள் என்டோமெட்ரியம் என்பார்கள். இந்த வீக்கத்தை என்டோமெட்ரியல் ஹைபர்பிளாசியா என்பார்கள். கர்பப்பை சுவர்களின் லைனிங் தொடர்ந்து, அடிக்கடி உதிர்ந்து விடும். இதனால் ரத்தப் போக்கு ஏற்படும்.
கர்பப்பையில் ஃபைராய்ட் வீக்கங்கள் இருந்தாலும் அதிக உதிர போக்கு நேரிட்டாலும். இந்த ஃபைராய்டுகள் நார்களினாலும், தசையினாலும் ஆனவை. முக்கால்வாசி உதிரப்போக்கு கோளாறுகளுக்கு பைப்ராய்ட் தான் காரணம். இதில் ஏற்படும் புதிய சதை வளர்ச்சி புற்று நோயில்லாத வீக்கம். இந்த பைப்ராய்ட் கர்பப் பையில் உண்டாகும் காரணங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஈஸ்ட்ரோஜன் இந்த தசை நார்கட்டிகளை ஊக்குவிக்குகிறது. பெண்களின் கர்ப்ப காலத்தில் பெரிதாகி, மெனோபாஸ் வந்தவுடன் சுருங்கி விடும். இலை சின்னதாகவும் இருக்கும், பெரியதாகவும் மாறும். கர்பப்பையில் சுவற்றில் குடியிருக்கும் பைப்ராய்ட் ஒன்றுக்கு மேலும் இருக்கலாம். இவைகளிருந்தால் உதிரப்போக்கை உண்டாக்கும். மலக்குடலை அழுத்தி வேதனையை உண்டாக்கும். பெரிய கட்டிகள், வலி, அழுத்தம் உண்டாகலாம். பைப்ராய்ட்ஸ் மூத்திரப்பையை அழுத்தி, அடிக்கடி சிறுநீர் கழிக்க செய்யும்.
கர்பப்பை கழுத்தில் பாலிப்ஸ் சீதமும் சளியும் உள்ள இடத்திலிருந்து தோன்றும் வளர்ச்சி. இவை சிறியவை – கர்பப்பையின் கழுத்தில் ஏற்படும் இந்த பாலிப்ஸ் ஏன் ஏற்படுகிறது என்ற காரணம் தெரியவில்லை. தொற்றுநோய் கர்பப்பையில் உள்ள ரத்த நாளங்கள் அடைபடுதல், எஸ்ட்ரோஜன் ஹார்மோன் கோளாறு இவை காரணமாக இருக்கலாம். இந்த கட்டினை, எளிமையான அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் நீக்கலாம்.
கர்பப்பை சுவற்றில் பாலிப்ஸ் கர்பப்பையின் சுவற்றில் உள்ள ஈரமான, சளியுள்ள லைனிங். இந்த லைனிங்கிலிருந்து நீட்டிக் கொண்டு வரும் பாலிப்ஸ் உண்டாக ஹார்மோன் கோளாறுகளே காரணமாக சொல்லலாம்.
இடுப்பெலும்பு கட்டில் தோன்றும் தொற்றுநோய்கள் அதிக ரத்தப்போக்கை உண்டாக்கலாம். கர்பப்பையின் கழுத்தையும் பாதிக்கலாம். இந்த இடுப்பு எலும்பு தொற்று, கர்பப்பை கழுத்து, கர்பப்பை, ஃபலோப்பியன் குழாய்கள் இவைகளையும் பாதிக்கும்.
கர்பப்பை கழுத்தில் உண்டாகும் புற்றுநோய், கர்பப்பை அல்லது அதன் சுவர்களில் உண்டாகும் புற்றுநோய்.
குடும்பக் கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படும்.லூப் போன்றவை.
சில ரத்தக் கோளாறுகள் ரத்தப்போக்கை நிறுத்த முடியாமல் போதல்.
ஆயுர்வேத சிகிச்சை
பெண்களின் மாதவிலக்கு சுழற்சி சிக்கலானது. ஆயுர்வேதத்தில் ரத்த பிரதார என்று அதிக உதிரப்போக்கு குறிப்பிடப்படுகிறது. நோயாளியின் ‘ப்ரக்ருதி’ முதலில் கண்டுபிடிக்கப்படும். அவர்களின் தற்போதைய ஆரோக்கிய நிலை பரிசோதிக்கப்படும். பிறகு பஞ்ச கர்மா சிகிச்சை ஆரம்பிக்கப்படும். உடலிலிருக்கும் நச்சுப்பொருட்களை களைந்து எடுக்கப்படும்.
என்டோமெட்ரியாஸிஸ்
பெண்களின் கருப்பை எல்லோருக்கும் ஒரே அளவில் இருப்பதில்லை. பெண்ணிற்கு பெண் சிறிய அளவில், உருவில் மாறுபடும். கருப்பையின் சுவர் கெட்டியானது. கார்பஸ் என்ற உடலையும், செர்விக்ஸ் என்ற குறுகிய கழுத்தும் உடையது. இந்த கார்பஸ், பெண்கள் கர்ப்பமடையும் போது, குழந்தை கருவை ஏற்று கொள்ளும் அளவு பெரிதாக விரியும் தன்மை உடையது.
கருப்பையின் உட்சுவர் மூன்று உட்படைகள் கொண்டது. அவை
பெரிடோனியம் (பெரிமெட்ரியம்)
மையோமெட்ரியம்
என்டோ மெட்ரியம்
என்டோ மெட்ரியம் வெல்வெட் துணி போல் முடிக்கால்கள் உடையது. மாதந்தோறும் கருப்பையின் உட்சுவர் படலங்கள் ரத்தத்தால் கெட்டியாகி, கருதரிக்க தயாரான நிலையில் இருக்கும். கருத்தரிக்காவிட்டால், இந்த ரத்தம் வெளியேறிவிடும். இது தான் பெண்ணின் மாதாந்திர மாதவிடாய்.
கருப்பையின் உட்சுவரில் இருக்க வேண்டிய என்டோமெட்ரியம், அங்கில்லாமல் வேறு இடங்களில் தென்பட்டால், அது வலி நிறைந்த என்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கோளாறு. இது புற்றுநோயில்லாமல் கருப்பையின் என்டோமெட்ரியம் திசு கருப்பையில் இல்லாமல், அதன் வெளியில் ஓவரி கருவகம், கருக்குழாய் ஃபாலோப்பியன் டூயூப், மூத்திரப்பை அல்லது பெருங்குடலின் பகுதி கோலான் ஒட்டிக் கொண்டிருந்தால் பல வேதனைகளை உண்டாக்கும்.
என்டோமெட்ரியாஸின் அறிகுறிகள்
அடிவயிறு, இடுப்பு எலும்புக்கூடு, இவற்றில் வலி.
மாதவிடாயின் போது அதிக உதிரபோக்கு.
மாதவிடாய் முன்பும் பின்பும் வலி.
உடலுறவின் போது வலி.
மலம், சிறுநீர் கழிக்கும் போது வலி.
வயிறு உப்புசம்
என்டோமெட்ரிக் திசு ஓவரியில் ஒட்டிக் கொண்டிருந்தால் ஒரு ரத்தக் கட்டியை உருவாக்கும். இது திடீரென்று உடைந்து வயிற்றில் தீவிர வலியை உண்டாக்கும்.
குழந்தை பிறக்காமல் போதல்.
களைப்பு, மயக்கம், தலைசுற்றல்.
பேதி அல்லது மலச்சிக்கல்.
சில பெண்மணிகளுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. சிலருக்கு இந்த கோளாறு குறைந்த அளவு இருந்தால் கூட தாங்கமுடியாத வலி உண்டாகும். சிலருக்கு மனச்சோர்வு வரும்.
காரணங்கள்
சரியான காரணங்கள் தெரியவில்லை. பரம்பரையாக வரலாம். மாதவிடாயின் போது கருப்பை சுவரின் உட்படை (படலம்) துண்டுகள் உடலிலிருந்து வெளியேறாமல், பின்நோக்கி கருக்குழாய்கள் மூலம் ஓவரிக்கு, சென்று விடலாம். இதன் விளைவாக மாதவிடாய் ரத்தம் வேறு இடங்களுக்கு சென்று அங்கு திசுக்கள் செல்கள் வளரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும் காரணமாகலாம்.
சிகிச்சை
ஹார்மோன் சிகிச்சை பலனளிக்கும். அறுவை சிகிச்சை லாப்ரோஸ் கோப்பி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
என்டோமெட்ரியோசிஸ் திரும்ப, திரும்ப வரும் வியாதி.
ஆயுர்வேதம் சொல்லும் காரணங்கள்
வாத குறைபாடுகள்
உணவு குறைபாடுகள் – போதிய சத்துணவை உட்கொள்ளாததால்
ஜீரணக் கோளாறுகள்
உடல், மன அழுத்தம், சோர்வு
உடலில் நச்சுப் பொருட்கள் தேங்குவது
நரம்பு பாதிப்புகள்
ஆயுர்வேத சிகிச்சை
வலியை குறைக்க பேதி மருந்துகள் – திரிபாலா, விளக்கெண்ணை போன்றவைகள் உபயோகிக்கப்படும். வஸ்தி (எனிமா), பிச்சு தாரணம் போன்றவை வலியை குறைக்கும். பெருங்காயம், இஞ்சி, கற்பூரம், தசமூலம், போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ரஸாயனம், கர்ப்பாசய பால்யா (கருப்பையை பலப்படுத்த) வருஷ்யா (குழந்தை இல்லா குறைபாட்டை போக்க ஆண்மை, பெண்மை பெருக்கும் சிகிச்சை) இவைகள் மேற்கொள்ளப்படும். இந்த சிகிச்சைகளுக்கு முன் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படும் பஞ்சகர்மா சிகிச்சையும் மேற்கொள்ளப்படும்.
சதவாரி, கோக்சூரா, லோத்ரா, அசோக, புனர்நவா, பாலா, அஸ்வகந்தா போன்ற மூலிகைகளும் பயன்படுத்தப்படும். தவிர பிரம்மி, ஜடமான்சி, அதிமதுரம், ஏலக்காய், சீரகம் இவைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
மருந்துகளுடன் பத்திய உணவு, யோகாவும் பரிந்துரைக்கப்படுகிறது. உணவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் இவற்றை சேர்த்துக் கொள்ளவும் உடல் சீராகும் வரை மாமிச உணவுகளை தவிர்க்கவும்.
உடற்பயிற்சியும் நன்மை பயக்கும்.
கருப்பையின் உட்சுவர் மூன்று உட்படைகள் கொண்டது. அவை
பெரிடோனியம் (பெரிமெட்ரியம்)
மையோமெட்ரியம்
என்டோ மெட்ரியம்
என்டோ மெட்ரியம் வெல்வெட் துணி போல் முடிக்கால்கள் உடையது. மாதந்தோறும் கருப்பையின் உட்சுவர் படலங்கள் ரத்தத்தால் கெட்டியாகி, கருதரிக்க தயாரான நிலையில் இருக்கும். கருத்தரிக்காவிட்டால், இந்த ரத்தம் வெளியேறிவிடும். இது தான் பெண்ணின் மாதாந்திர மாதவிடாய்.
கருப்பையின் உட்சுவரில் இருக்க வேண்டிய என்டோமெட்ரியம், அங்கில்லாமல் வேறு இடங்களில் தென்பட்டால், அது வலி நிறைந்த என்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கோளாறு. இது புற்றுநோயில்லாமல் கருப்பையின் என்டோமெட்ரியம் திசு கருப்பையில் இல்லாமல், அதன் வெளியில் ஓவரி கருவகம், கருக்குழாய் ஃபாலோப்பியன் டூயூப், மூத்திரப்பை அல்லது பெருங்குடலின் பகுதி கோலான் ஒட்டிக் கொண்டிருந்தால் பல வேதனைகளை உண்டாக்கும்.
என்டோமெட்ரியாஸின் அறிகுறிகள்
அடிவயிறு, இடுப்பு எலும்புக்கூடு, இவற்றில் வலி.
மாதவிடாயின் போது அதிக உதிரபோக்கு.
மாதவிடாய் முன்பும் பின்பும் வலி.
உடலுறவின் போது வலி.
மலம், சிறுநீர் கழிக்கும் போது வலி.
வயிறு உப்புசம்
என்டோமெட்ரிக் திசு ஓவரியில் ஒட்டிக் கொண்டிருந்தால் ஒரு ரத்தக் கட்டியை உருவாக்கும். இது திடீரென்று உடைந்து வயிற்றில் தீவிர வலியை உண்டாக்கும்.
குழந்தை பிறக்காமல் போதல்.
களைப்பு, மயக்கம், தலைசுற்றல்.
பேதி அல்லது மலச்சிக்கல்.
சில பெண்மணிகளுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. சிலருக்கு இந்த கோளாறு குறைந்த அளவு இருந்தால் கூட தாங்கமுடியாத வலி உண்டாகும். சிலருக்கு மனச்சோர்வு வரும்.
காரணங்கள்
சரியான காரணங்கள் தெரியவில்லை. பரம்பரையாக வரலாம். மாதவிடாயின் போது கருப்பை சுவரின் உட்படை (படலம்) துண்டுகள் உடலிலிருந்து வெளியேறாமல், பின்நோக்கி கருக்குழாய்கள் மூலம் ஓவரிக்கு, சென்று விடலாம். இதன் விளைவாக மாதவிடாய் ரத்தம் வேறு இடங்களுக்கு சென்று அங்கு திசுக்கள் செல்கள் வளரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும் காரணமாகலாம்.
சிகிச்சை
ஹார்மோன் சிகிச்சை பலனளிக்கும். அறுவை சிகிச்சை லாப்ரோஸ் கோப்பி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
என்டோமெட்ரியோசிஸ் திரும்ப, திரும்ப வரும் வியாதி.
ஆயுர்வேதம் சொல்லும் காரணங்கள்
வாத குறைபாடுகள்
உணவு குறைபாடுகள் – போதிய சத்துணவை உட்கொள்ளாததால்
ஜீரணக் கோளாறுகள்
உடல், மன அழுத்தம், சோர்வு
உடலில் நச்சுப் பொருட்கள் தேங்குவது
நரம்பு பாதிப்புகள்
ஆயுர்வேத சிகிச்சை
வலியை குறைக்க பேதி மருந்துகள் – திரிபாலா, விளக்கெண்ணை போன்றவைகள் உபயோகிக்கப்படும். வஸ்தி (எனிமா), பிச்சு தாரணம் போன்றவை வலியை குறைக்கும். பெருங்காயம், இஞ்சி, கற்பூரம், தசமூலம், போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ரஸாயனம், கர்ப்பாசய பால்யா (கருப்பையை பலப்படுத்த) வருஷ்யா (குழந்தை இல்லா குறைபாட்டை போக்க ஆண்மை, பெண்மை பெருக்கும் சிகிச்சை) இவைகள் மேற்கொள்ளப்படும். இந்த சிகிச்சைகளுக்கு முன் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படும் பஞ்சகர்மா சிகிச்சையும் மேற்கொள்ளப்படும்.
சதவாரி, கோக்சூரா, லோத்ரா, அசோக, புனர்நவா, பாலா, அஸ்வகந்தா போன்ற மூலிகைகளும் பயன்படுத்தப்படும். தவிர பிரம்மி, ஜடமான்சி, அதிமதுரம், ஏலக்காய், சீரகம் இவைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
மருந்துகளுடன் பத்திய உணவு, யோகாவும் பரிந்துரைக்கப்படுகிறது. உணவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் இவற்றை சேர்த்துக் கொள்ளவும் உடல் சீராகும் வரை மாமிச உணவுகளை தவிர்க்கவும்.
உடற்பயிற்சியும் நன்மை பயக்கும்.
உதிரப்போக்கை நிறுத்த
பெண்களுக்கு ஏற்படும் மிகவும் தொல்லைத் தரக்கூடிய நோய்களுள் முதன்மையானது பெரும்பாடு எனும் அதிக இரத்தம் சதா வெளியேறிக் கொண்டேயிருக்கும் நோயாகும். எத்தகைய மருந்துகளை அடிக்கடி சாப்பிட்டாலும் இத்தொல்லை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். இதனால் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்து விடும். உடல் வெளுத்து இரத்த சோகையும் ஏற்படும்.
இத்தகைய பெரும்பாடு நீங்க எளிய முறை வைத்தியங்களைச் செய்து வர இத்தொல்லை நிரந்தரமாக குறைந்திடும். இதற்கு மருந்துகள் சாப்பிடும் பொழுது அதிக காரம், புளிப்பு அடங்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மாதவிடாயின் போது இரத்த போக்கின் அளவு அளவிற்கு அதிகமாக இருந்தால் கரிய பகலித்தைச் சிறிது நீரில் நனைத்து கரைத்து பின்னர் கல் மண் இல்லாது சுத்தப்படுத்தி காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை எடுத்து வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டு வர 6 – 7 நாட்களில் பெரும்பாடு முழுவதுமாக நீங்கும்.
சீரகம், வெங்காயம், கேரட், பச்சைக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து ஒரு எலுமிச்சை அளவு காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வர பெரும்பாடு நீங்கும்.
இரத்தப்போக்கு நிற்க வில்வ இலையுடன் வெங்காயத்தை சேர்த்து இடித்து சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெயில் சேர்த்து லேசாக காய்ச்சி வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வர இரத்தப் போக்கு நிற்கும்.
தரைப்பசலை இலை, வெங்காயம், சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து காலை மாலை சாப்பிட்டு வர பெரும்பாடு நீங்கும். சுத்தமான சந்தன அத்தர் 5 – 6 சொட்டு எடுத்து சூடான பால் விட்டு காலை மாலை குடித்து வரவும். பெரும்பாடு நீங்கும்.
அதிமதுரம் 20 கிராம் எடுத்து, இடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கஷாயம் இறக்கி காலை மாலை தொடர்ந்து உள்ளுக்குச் சாப்பிட்டு வரவும் பெரும்பாடு நீங்கும்.
அத்திப்பட்டை நாவல் பட்டை, கருவேலம் பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணமாக வைத்துக் கொண்டு நாள் ஒன்றிற்கு மூன்று வேளை ஒரு ஸ்பூன் வீதம் உட்கொண்டு வர பெரும்பாடு நீங்கும்.
தொட்டால் சிணுங்கி ஒரு பிடி சீரகம் ஒரு ஸ்பூன், வெங்காயம் ஒன்று மூன்றையும் அரைத்து மோரில் கலந்து 2 வேளை உட்கொண்டு வர பெரும்பாடு நீங்கும்.
பெண்களின் இளமை உணவுகள்
பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, இந்த ஏழு உணவுகளும் பெண்களின் மிகச்சிறந்த சூப்பர் இளமை காக்கும் உணவுகளாகும்.
ஆண்களின் அதிக உன்னத உணவுகளாகவும் இவை உள்ளன. ஆனால் இரு பாலர்களும் இவற்றில் இரண்டைக் கூட தினமும் உணவில் சேர்ப்பதில்லை என்பதே உண்மை.
மேற்கண்ட ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. வைட்டமின் இ யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமின்னும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன. அத்துடன் முதுமைப்படுதலை, உடலில் முதுமைப் பண்பு வளர்ச்சியை தாமதம்படுத்துகிறது. திசுக்களும் கடினமாகி கெட்டியாகிவிடாமலும் பாதுகாக்கின்றன. இத்துடன் இதே செலினியம் உப்பு திசுக்கள் இளமையாகவும் வலுவுடையதாகவும் நெகிழும் தன்மையுடன் இருக்குமாறு பராமரிக்கவும் செய்கிறது.
இந்த செலினியம் உப்பு உடலில் குறைவாக இருந்தால் உடலில் அடிக்கடி வீக்கம், புற்றுநோய், இதயநோய் அபாயம் உச்ச அளவில் இருக்கும் மேலும் ஃப்ரீரேடிக்கல் திரவம் அதிகம் வெளியாகி உயிரணுக்களை சேதப்படுத்திவிடும். இதனால் வயதுக்கு மீறிய முதுமைத் தோற்றமும் கண்ணில் காட்ராக்ட் அபாயமும் ஏற்பட்டு விடும்.
பெண்களுக்கு வரும் எல்லா விதமான புற்று நோய்களையும் செலினியம் குணப்படுத்தி தடுத்தும் விடுகிறது. புற்றுநோய் வளரத் தூண்டுதல் செய்யும் பொருட்களையும் மட்டுப்படுத்தி விடுகிறது. இதயத்தின் தசை நார்களை இனச்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எரிச்சல் படாமல் சரி செய்து விடும் அரிய உப்பு, செலினியம், பொடுகு வராமல் தடுக்கிறது. அப்படி பொடுகு இருந்தால் மேற்கண்ட ஏழு உணவுகளும் குணப்படுத்தி விடுகின்றன. உடலில் உள்ள உலோக நச்சுக் கழிவுகள் வெளியேறவும் இந்த செலினியம் உப்பே உதவுகிறது.
இரத்தத்தில் செலினியம் உப்பு குறைவாக இருந்தால் புற்றுநோயும் இதய நோயும் எளிதாக எட்டிப்பிடிக்கும்.
எனவே, பெண்கள் தங்களின் சிறந்த நண்பர்களாக வைட்டமின் இ யும், செலினியம் உப்பும் உள்ள உணவு வகைகளைத் தேர்வு செய்து சேர்த்து வந்தால் மருத்துவச் செலவின்றி ஆரோக்கியமாக இளமைத் துடிப்புடன் வாழலாம்.
பண்டைய காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்தில் சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. வளர்சிதை மாற்றம் வேகமாக நடக்க உதவுகிறது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறமுள்ள பழங்கள்
அமெரிக்காவில் 1992 ஆம் ஆண்டு முதல் சத்துணவு நிபுணர் டாக்டர் கேப்ரியல் கஸின்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வானவில் உணவு திட்டத்தில் எல்லாவிதமான நிறங்களிலும் உள்ள பழங்களும் காய்கறிகளும் உண்டு. இட்லி, பால், தயிர், வெள்ளை நிறம் என்பதால் இவற்றை இரவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் சக்தியுடன் வாழவும் இந்த உணவுத் திட்டம் உதவும்.
இதன் மூலம் 1000 முதல் 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடுவதால் இளமைத் துடிப்புடன் வாழலாம்.
காலையில் சாப்பிடப்படும் ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ள பழங்கள், முன் தினம் இரவில் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் இந்தக் காலைப் பலகாரம் அதை நீக்கும். மலச்சிக்கல் இருந்தால் தக்காளிச் சாறு (இது சிகப்பு நிறம்) அருந்தவும். குடலை அபாரமாகச் சுத்தப்படுத்திவிடும் சிவப்பான பழங்கள், காய்கறிகள், இதற்கு சிவப்பு உணவு என்று பெயர்.
காலை உணவு சிவப்பு
காலையில் ஒரு கப் ஆரஞ்சு அல்லது தக்காளிச்சாறு. இத்துடன் மூன்று ரொட்டித் துண்டுகள் ஒரு கப் தயிர். (அல்லது) வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், பீச், பிளம்ஸ், அன்னாசித் துண்டுகள் இவற்றில் ஏதேனும் ஒன்று, ஒன்றிரண்டு பழங்கள் சாப்பிடலாம். அன்னாசிப் பழம் என்றால் ஒரு கிளாஸ் சாறு, இத்துடன் வறுத்த ரொட்டித் துண்டு ஒன்று.
மதிய உணவு பச்சை
மதியம பச்சை உணவு பச்சை நிறமுள்ள கீரைகள், காய்கறிகள், பச்சை நிறத் திராட்சை முதலியவைகளில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற மினரல்கள் உள்ளன. இதயத்தையும் எலும்புகளையும் இந்த தாது உப்புக்கள் பலப்படுத்துகின்றன. இதயம் சிறப்பாக இயங்கவும் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.
எனவே மதிய உணவில் ஒரு சப்பாத்தியுடன் லெட்டூஸ், வெங்காயம், மிளகாய், சீஸ், வெள்ளரிக்காய், முதலியவற்றை காய்கறி சாலட்டாக ஒரு கிண்ணம் சாப்பிடவும். இத்துடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சாப்பிடவும். 50 கிராம் ஏதாவது ஒரு கீரையை அவியலாகச் சாப்பிடவும் அல்லது காய்கறி சூப்புடன் ஒரு ஸ்லைஸ் ரொட்டித் துண்டு + பச்சை நிற திராட்சை.
காய்கறி சூப்பில் லெட்டூஸ், முட்டைக்கோஸ், பசலைக்கீரை, பச்சை ஆப்பிள் முதலியன சேர்ந்திருக்க வேண்டும். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் தனியாக சாப்பிடவும்.
இரவு நீல உணவு
நீலம், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் உள்ள பழங்கள் காய்கறிகளில் உள்ள தாவரச் சத்துக்கள் உணர்ச்சிகளை மெல்ல அமைதிப்படுத்தி தூங்க வைக்கும். அன்றைய தினம் எப்படியிருந்தாலும் பின்பற்றத் தக்க குறிக்கோளிலிருந்து விலகி விடாமல் தடுத்து தன்னம்பிக்கையுடன் தூங்க வைக்கும்.
எனவே, இரவு உணவில் நீலம், ஊதா, தங்க நிறம், வெள்ளை ஆகியவற்றில் உள்ள பழங்கள், காய்கறிகளைச் சேருங்கள்.
ஒரு கிண்ணம் சாதம், ஒரு கிண்ணம் தயிர், பீட்ரூட், கத்தரிக்காய் லேசாக அவிய வைத்து ஒரு கிண்ணம், ஒரு ஸ்லைஸ் ரொட்டி என்று சாப்பிடலாம். (அல்லது) பீட்ரூட் சாறு ஒரு கிளாஸ், ஒரு கிண்ணம் தயிர் சாதம், ஒரு ஸ்லைஸ் ரொட்டி, கத்தரிக்காய் அவியல் அரை கிண்ணம் என்று சாப்பிடலாம்.
மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் 5 பவுண்டு வீதம் குறைந்து அழகாக மாறிவிடுவீர்கள்.
முதல் ஒரு மாதத்திலேயே இளமையான தோற்றம் கிடைக்கும். அதிகம் உண்ண விரும்புவது, மருந்து மாத்திரைகள் குறிப்பிட்ட நோய்களுக்காக சாப்பிடுவதும் குறைந்தும் போய் விடும். இதனால் சுறுசுறுப்பையும் சக்தியுள்ளதையும் உணர்ந்து உற்சாகமாக வாழ்வீர்கள்.
எனவே, குண்டான ஆண், பெண்கள் இந்த உணவு முறையை இன்றே தொடங்குங்கள், ஒரே மாதத்தில் கண்டிப்பாக பத்து கிலோ எடை குறைவது உறுதி. இதனால் ஆரோக்கியமும் உறுதிப்படுத்தப்படுகிறது.
உடம்பில் உஷ்ணம்
சோறு வடித்தக் கஞ்சியில் வெந்தயம் சேர்த்துக் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும். வெள்ளரிக்காய், காரட் ஜூஸ், இளநீர் போன்றவை உடம்பில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும் உடற்சூடு தணியும்.
பொன்னாங்கண்ணிக் கீரை குளிர்ச்சியைத் தரும். கசகசா விதையைப் பாலில் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் சூடு மறையும். நெல்லிக்காய் தைலம் மற்றும் சந்தனத் தைலத்தை தேய்த்துக் குளித்தாலும் சூடு குறையும்.
பெண்களின் பிரச்சனை நீர்க்கட்டிகள்
இந்த யுகத்து யுவதிகளின் தலையாய பிரச்சனை கருப்பையில் தோன்றும் நீர்க்கட்டிகள். இதை பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் பாலிசிஸ்டிக் ஓவரி என்பார்கள்.
பிசிஓஎஸ் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மாதவிடாய் சுழற்சி, குழந்தை பெறும் திறன், ஹார்மோன்கள், இன்சுலின் உற்பத்தி, இதயம், ரத்த நாளங்கள், உடல் தோற்றம் முதலியவற்றை பிசிஓஎஸ் பாதிக்கும். பிசிஓஎஸ் உள்ள பெண்களின் குணாதிசயங்கள்.
பெண்களின் உடலில் சிறிதளவே உள்ள ஆண் ஹார்மோன் அதிகமாகி பெண்களுக்கு ஆண்மை தன்மை ஏற்படும்.
மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும் இல்லை நின்று விடும்.
கருப்பை வீக்கமடையும்.
தாய்மை அடையும் வயதில் உள்ள பெண்களில் 5 லிருந்து 10 சதவிதம்
வரை பிசிஓஎஸ் தாக்குகிறது. இதனால் பெண்களுக்கு மலட்டுத் தன்மை உண்டாகலாம்.
சினை பைகள், கருப்பையின் இரு பக்கங்களில் உள்ள சிறு அவயங்கள். இவற்றில் ஃபாலிக்கில்ஸ் எனப்படும் நீர் நிறைந்த சிறு உறைகளில் சினை முட்டைகள் இருக்கும். மாதா மாதம் கிட்டத்தட்ட 20 சினை முட்டைகள் தோன்றுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று தான் பலவானாக, வலிமை மிக்கதாக இருக்கும். முட்டை முதிர்ச்சி அடைந்ததும் சினைப்பை வெடித்து முட்டையை வெளியே விடுகிறது. முட்டை கருக்குழாய்கள் மூலம் வெளிச் சென்று ஆண் விந்துவுடன் இணைந்து, கரு உருவாகிறது.
பிசிஓஎஸ் உள்ள பெண்களில், சினை முட்டைகன் முதிர்ச்சி அடைய தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை. சினை முட்டைகள் முழு வளர்ச்சி அடையாமல், சிறிதளவு வளர்ந்து நீர் நிறைந்த சிஸ்ட்டுகளாக கட்டிகளாக நின்று விடுகின்றன. முட்டைகள் முதிர்ச்சி அடையாததால் ஒவியுலேசன் நடப்பதில்லை. இந்த ஹார்மோன் இல்லாமல் போனால், பெண்ணின் மாத சுழற்சியும் நின்று விடும். போதாக்குறைக்கு, நீர்க் கட்டிகள் ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இதனால் ஒவியுலேசன் தடைப்படும்.
பிசிஓஎஸ்ன் அறிகுறிகள்
மாதவிடாய் சுழற்சி பாதிப்பு, மாதவிடாயே வராமல் போதல், ஏறுமாறான உதிரப்போக்கு.
மலட்டுத்தன்மை.
பெண்களின் முகம், மார்பகம், வயிறு, முதுகு, கட்டைவிரல் முதலிய இடங்களில் அசாதாரணமாக முடி வளர்தல்.
இடுப்பு வலி.
உடல் எடை கூடுதல்.
டைப் 2 நீரிழிவு.
அதிக அளவு கொலஸ்ட்ரால்.
உயர் இரத்த அழுத்தம்.
ஆண்களைப் போல், வழுக்கை ஏற்படுதல்.
கழுத்து, கைகள், மார்பகங்களில் கருநிற திட்டுக்கள் தோன்றுதல்.
தூங்கும் போது குறட்டை விடுதல்.
மூச்சு விடுதலில் சிரமம்.
காரணங்கள்
சரியான காரணங்கள் தெரியவில்லை. பரம்பரை காரணமாகலாம் தாயிடமிருந்து மகளுக்கு வரும்.
அதிஸ்தூலம் – அதிக உடல் எடை.
கருத்தரிப்பு விஷயங்களை ஊக்குவிப்பது பிட்யூடரி சுரக்கும். அப்படியே நீர்கட்டிகளாக தங்கி விடுகின்றன.
அட்ரீனலின் சுரப்பிகள் கூட அதிக ஆன்ட்ரோஜன்களை (ஆண் ஹார்மோன்) சுரக்கும். இதனாலும் பிசிஓஎஸ் ஏற்படும்.
ரத்தத்தில் அதிக அளவு இன்சுலின் இருந்தால்.
பரிசோதனை
பிசிஓஎஸ் இருப்பதை கண்டறிய சிறந்த பரிசோதனை அல்டரா சவுண்ட். ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் மற்றும் உடலில் உள்ள ஹார்மோன் அளவுகள் பரிசீலிக்கப்படும். ஆண்கள் ஹார்மோன்களின் அளவு அதிகமாக தெரிந்தால், பிசிஓஎஸ் இருப்பது உறுதியாகும். உடலில் ஏற்படும் அசாதாரணமான முடிவளர்ச்சிகளும் கவனிக்கப்படும். அல்ட்ரா – சவுண்ட் முறையினால் இடுப்பு பாகங்கள் சோதிக்கப்படும். சினைப்பைகளின் வீக்கம், சிறிய நீர்க்கட்டிகள் முதலியன தென்படும். வஜீனல் அல்ட்ரா – சவுண்டாலும், எண்டோமெட்ரியம் மற்றும் சினைப்பைகள் பார்க்கப்படும்.
சிகிச்சை
பிசிஓஎஸ் முற்றிலும் குணப்படுத்த முடியாத பிரச்சனை. அதனால் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட்டால் மட்டுமே சிகிச்சைகள் தேவைப்படும்.
குடும்ப தடை மாத்திரைகள் பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரிப்படுத்தும். ஆண் ஹார்மோன் சுரப்பை குறைக்கும். முகப் பருக்களைக் கூட குறைக்கும். ஆனால் நீர்க்கட்டிகளை குணமாக்க (அகற்ற) முடியாது. இந்த மாத்திரைகளை நிறுத்தினால், மாதவிடாய் சுழற்சி மறுபடியும் பாதிக்கப்படும்.
டைப் – 2 நீரிழிவுக்காக கொடுக்கப்படும் மெட்பார்மின் மாத்திரைகள் நீர்க்கட்டிகைள கட்டுப்படுத்தும். அசாதாரணமான முடி வளர்ச்சிகளை கட்டுப்படுத்தும். சில மாதங்களில், ஒவியுலேசன் ஏற்படவும் உதவும்.
மலட்டுத்தன்மையை போக்கி, கருத்தரிக்க உதவும் மருந்துகளும் பிசிஓஎஸ்ஐ கட்டுப்படுத்தும்.
அதீத உடல் பருமன் பிசிஓஎஸ் வர காரணங்களில் ஒன்று. அதனால் உடல் எடையை சரியான அளவில் வைப்பது அவசியம்.
ஆயுர்வேதம்
எல்லாவித கர்ப்பாசய கோளாறுகள், பெண்களின் பெரும்பாடுகள் முதலியவற்றுக்கு ஆயுர்வேதத்தில் நல்ல மருந்துகள், மெட்பார்மின் மருந்துக்கு இணையான ஆயுர்வேத மருந்துகள் உள்ளன. ஆயுர்வேத மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படாது. அசோகாரிஷ்டம், லோத்ராவை அடிப்படையாக கொண்ட மருந்துகள், போன்ற பல மருந்துகள் கிடைக்கின்றன. பிசிஓஎஸ் உண்டாக்கும் முகப்பரு, தகாத இடங்களில் முடி வளர்தல், இன்சுலின் எதிர்ப்பு, வழுக்கை, அபரிமித ஆண் ஹார்மோன் சுரப்பு இவற்றையெல்லாம் குணமாக்கவும் ஆயுர்வேதத்தில் சிறப்பான மருந்துகள் கிடைக்கின்றன.
ஒல்லியாக இருப்பது நல்லதா கெட்டதா
உடல் குண்டாக அதிஸ்தூலமாக இருந்தாலும் பிரச்சனை, உடல் மெலிந்து ஒல்லியாக இருப்பதும் ஒரு பிரச்சனை தான். நடைமுறையில் பார்த்தோமானால் உடல் பருமனை குறைப்பதைப் பற்றி தான் கவலைப் படுகிறோமோ தவிர ஒல்லிக்குச்சி யாக இருப்பவர்களை அதிகம் நாம் கவனிப்பதில்லை.
உடலின் எடையை கூட்டுவது என்ன கஷ்டம், நன்றாக பிடித்தவற்றை பத்தியமில்லாமல் இஷ்டத்திற்கு சாப்பிட வேண்டியதானே என்கிறீர்களா நீங்கள் நினைக்கும் பொழுது எடை கூடுவது அதுவும் ஆரோக்கியமாக, அவ்வளவு சுலபமல்ல. முதலில் உயரத்திற்கேற்ப உடல் எடை இருக்க வேண்டும். உங்கள் உடல் வாகு பொருத்து என்ன எடை இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும்.
ஒல்லியாக இருப்பதே அழகு என்று பெருமைப்படும் காலமிது. நவ நாகரிக ஃபேஷன் ஷோக்களில் வரும் பெண்களை பாருங்கள், கிள்ள சதை கிடைக்காது
குண்டாவதை விட ஒல்லியாயிருப்பது ஒரு வகையில் நல்லது தான் ஆனால் ஒல்லி உடம்பானவர்களின் நோய் தடுப்பு சக்தி குறைவாக இருக்கும். அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படலாம்.
ஒவர் ஒல்லியை ஆயுர்வேதம் கர்ஷயா என்கிறது. இந்த எடை குறைவானவர்களுக்கு உடலின் பாகங்கள் மார்பு, கைகால், பின்புறம் சரியாக வளர்ச்சி அடைந்திருக்காது. குழிவிழுந்த முகம், எலும்பும் தோலுமாக, தசை அடர்த்தியின்றி, எடை குறைந்து காட்சியளிப்பார்கள்.
உடல் எந்த காலகட்டத்தில் பெரும் வளர்ச்சியடையும் என்றால், அது 13 லிருந்து 19 வயது வரை, பருவமடையும் காலத்தில் தான். பருவம் தோன்றும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஹார்மோன்களால் ஏற்படும். தசை வளர்ச்சி அதிகமாகும். உயரம், ஏடை வேகமாக ஏறும். உயரம் 25 செ.மீ. அளவு பருவகாலத்தில் (ஜிமீமீஸீ ணீரீமீ) கூடும். இந்த மாற்றங்கள் சிலருக்கு 8 வயதிலேயே தோன்றலாம். இல்லை தாமதமாக 14 (அ) 15 வயதில் கூட ஏற்படலாம்.
இந்த இளம் பருவ காலத்தில் உடலுக்கு அதிக சக்தி – கலோரிகளும், புரதமும் தேவைப்படுகிறது. வழக்கமாக சாப்பிடுவதை விட அதிக உணவு தேவைப்படும். அதிக உணவு கிடைக்காவிட்டால், நடு நடுவில் “நொறுக்குத்தீனி”. சாப்பிடத் தோன்றும். இந்த பழக்கம் காரணமாக உடலுக்கு சக்தி குறைந்து நார்மல் வளர்ச்சி தடைபடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். உடல் எடை வெகுவாக கூடாமல் போகும்.
குழந்தைப்பருவத்திலும், இளம் வயதிலும் போஷாக்கு குறைவான உணவாலும் உடல் மெலிவுக்கு காரணமாகும். கர்ப்ப சமயங்களில் தாய்க்கு ஊட்டச்சத்து குறைந்தாலும், பிறக்கும் குழந்தையின் கொழுப்புச் செல்கள் குறைந்து விடும். பாரம்பரியமும் ஒரு காரணம்.
தைராய்டு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள், நோய்கள், காஃபின், புகை பிடித்தல் இவைகளும் காரணம். மற்றொரு முக்கிய காரணம், மன அழுத்தம்.
அறிகுறிகள்
உடல் எடை இருக்க வேண்டிய அளவை விட குறைவாக இருத்தல்
அடிக்கடி உடல் நலக்குறைவு, அதிலிருந்து மீள மற்றவர்களை விட அதிகமாக நாட்கள் ஆதால்
உடல் இளைத்து எலும்பு (விலாவில்) தெரிதல்
பலவீனம்
சதையை, கிள்ளினால், மெல்லிய, சிறிதளவு தோல் தான் விரல்களில் அகப்படும்.
எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
உட்கொள்ளும் கலோரிகளை விட 500 கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக நீங்கள் தற்போது 1300 கலோரி உணவை உட்கொண்டு வந்தால் அதை 1800 ஆக அதிகரிக்க வேண்டும். அப்போது தான் ஒரு மாதத்தில் 1 கிலோ எடை ஏறும். உடனே ஏன் 1000 கலோரிகள் எக்ஸ்ட்ராவாக எடுத்துக் கொண்டால் 2 கிலோ ஏறுமே என்று கணக்கு போடாதீர்கள். எடை ஏறுவது நிதானமாக இருக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ ஏறுவது சரியானது, போதுமானது. இந்த 500 கலோரிகளை அடைய, ஆரஞ்சு ஜுஸீக்கு பதிலாக திராட்சை சாறு, (அ) நான்கு வாழைப்பழங்கள், (அ) ஒரு கரண்டி சாதம் எக்ஸ்ட்ராவாக, (அ) 100 கிராம் வேர்க்கடலை – சேர்த்துக் கொள்ளலாம்.
புரதம் செறிந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். பால், இறைச்சி, மீன், கோழி இறைச்சி, முட்டை, பருப்பு வகைகள், வேர்கடலை முதலியன புரதம் உள்ளவை.
கொட்டைகள், உலர்ந்த பழங்கள் வெல்லம், கிரீம், பால் வெண்ணை, உளுந்து, நெய், எண்ணைகள், தயிர் இவைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அளவுகள் மாறும்.
ஸ்டார்ச் நிறைந்த உருளைக்கிழங்கு, கேரட், சேனைக்கிழங்கு இவற்றை அதிகம் உண்ணவும். கோதுமையை விட அரிசி எடை கூட உதவும். கீரைகளை குறைக்கவும்.
தினம் இரண்டு வேளை நல்ல பெரிய உணவாக உட்கொள்ளுங்கள். இரவு உணவு கூட கனமாக இருக்கட்டும். உணவுக்கு பின் படுக்கு முன் ஒரு டம்ளர் பால் குடிக்கவும். படுக்கு முன் ஸ்நாக்ஸ் சிற்றுண்டிகளை (பிஸ்கட் போன்றவை) சாப்பிடலாம். இரண்டு பெரிய உணவுகளுக்கு நடுவில் வேண்டிய சிற்றுண்டிகளை சாப்பிடலாம். இரவில் எடுத்துக் கொள்ளும் சிற்றுண்டிகள் தூக்கத்தை கெடுக்காதவையாக இருக்க வேண்டும்.
சாப்பிடும் முன்பும், சாப்பிடும் போதும் தண்ணீர் குடிக்க வேண்டாம்.
எடை கூடுவதற்கு உதவும் மாமிச உணவு ஆட்டு மாமிசம் தான் என்கிறது ஆயுர்வேதம். உடலின் திசுக்களுக்கு ஏற்றது. முதலில் நோயாளியின் ஜீரணசக்தி சரியானவுடன், ஆட்டிறைச்சியை சாப்பிட தொடங்கலாம். இறைச்சியுடன் சில மூலிகைகளையும் கலந்து உண்ணலாம். இதற்கு ஆயுர்வேத வைத்தியரை அணுகவும்.
பகலில், நன்றாக தூங்கலாம். இரவிலும் நன்றாக தூங்க வேண்டும்.
லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இரவு உணவுக்கு பின் நடப்பது கூட வேண்டாம்.
ஸ்ட்ரெஸ்ஐ குறைக்க வேண்டும். மனதை அலட்டிக் கொள்ளாமல், கவலைகளை கைவிட்டு விடுங்கள். இதற்கு தேவையானால் யோகா, தியானம், இவற்றை செய்யவும்.
அநோரெக்ஷியா, அநோரெக்ஷியா நர்வோஸா
அநோரெக்ஷியா என்றால் பசியின்மை. இது ஜீரண கோளாறுகளால் ஏற்படும். ஜீரண மண்டல பாதைகளில் ஏற்படும் அழற்ச்சி கேஸ்ட்ரைடீஸ், கேஸ்ட்ரோ என்டரைட்டீஸ்), தொற்று நோய்களின் தாக்குதல் இவற்றால் பசி மந்தமடையும். இந்த ஜீரண பாதைகளால் தடை ஏற்பட்டாலும், பசியில்லாமல் போகும்.
அநோரெக்ஷியா நர்வோஸா, அநோரெக்ஷியாவின் மனோரீதியான பாதிப்பு. ஆண்களை விட பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள், அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
அறிகுறிகள்
குண்டாகிவிடுவோமா என்ற தீவிரமான பயம்.
மனக்கோளாறுகளால் தூண்டப்படும் பட்டினி. இருப்பதில் ஆர்வம்.
நார்மல் எடையை அடையாமல் மறுப்பது. இதற்காக சாப்பிட்டதை வாந்தி எடுப்பது. வேதி மருந்துகளை உட்கொள்வது.
உடல் மெலிவு
மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது.
ஆயுர்வேத மருந்துகள்
அரவிந்தசவா, திராக்ஷரிஷ்டா, முஸ்தாரிஷ்டம், அஷ்டசூரணம், அக்னிமுக சூரணம், எலாச்சி சூரணம், காந்தருவ அஸ்டாரி க்வாத சூரணம், சம்பிராதி பானம், ஜீரகாதி ரசாயனம், சஞ்சீவினி வடீ, ஆதித்யா ரசா முதலியன.
மூலிகைகள்
கீழாநெல்லி – மஞ்சள் காமாலைக்கு பிரசித்த பெற்ற அருமருந்து. இதன் வேர் கல்லீரல் இயக்கத்தை தூண்டுகிறது. இதனால் அதிக பித்த நீர் சுரக்கும்.
பிருங்கராஜ், கைகேசி – பித்த நீர் நாளங்களின் அடைப்பை எடுக்கும்.
நெரிஞ்சி – சிறுநீர் பெருக்கி. அதிக பித்த நீரை ரத்தத்திலிருந்து வெளியேற்றுகிறது.
கற்றாழை – வயிற்றுக்கோளாறுகளை போக்கும் மூலிகை ஜீரணத்தை ஊக்குவிக்கும். அனோரெக்சியா நர்வோசாவினால் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும்.
நெல்லி – பசியை தூண்டும். விட்டமின் சி நிறைந்தது.
நாவல்- பசியை தூண்டும்.
சிகிச்சை
முதலில் உடல் எடையை கூட்டும் முயற்சிகள் செய்யப்படும். தேவைப்பட்டால் ஆஸ்பத்திரியில் வைத்து வைத்தியம் செய்வது நல்லது. பசியின்மைக்கு மருந்துகள் தரப்படும். இரண்டாவது கட்டமாக மனவியாதி சிகிச்சை, மருந்துகளால் சிகிச்சை தொடங்கும்.
ஆயுர்வேத சிகிச்சை முறை
ஆயுர்வேதத்திலும் முதலில் உடல் எடையை அதிகரிக்கும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் தரப்படும். இதற்கு ஆம்ரபல்லாவதி லேஹியம் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேத வைத்தியரின் கண்காணிப்பில் நோயாளி வைக்கப்படுவார். நோயாளிகள் ஆரோக்கியம் சிறிது நன்றானதும், நெடு நாள் சிகிச்சை ஆரம்பமாகும். நோயாளிக்கு அஸ்வகந்தா லேஹியம் அல்லது கூஷ்மாண்ட ரசாயனம் கொடுக்கப்படும். அனுபவமுள்ள, நன்கு தேர்ச்சி பெற்ற ஆயுர்வேத வைத்தியரால் தான், மேற்சொன்ன இரண்டு மருந்துகளில் எதை நோயாளிக்கு கொடுப்பது என்பதை தீர்மானிக்க முடியும் சில சமயங்களில் இந்த இரண்டு மருந்துகளும் ஒன்றின் பின்னால் ஒன்றாக தரப்படும். மிகவும் ஒல்லியாக, வெறும் எலும்பாக இருக்கும் நோயாளிகளும் அஸ்வகந்தா லேஹியம் (அ) அஸ்வகந்தாரிஷ்டம், கூஷ்மாண்ட லேஹியத்துடன் தரப்படும்.
ஆயுர்வேதம் அடிக்கடி எண்ணை தேய்த்து குளிப்பதை வலியுறுத்துகிறது. தினமுமே எண்ணைக் குளியல் செய்யுங்களேன் என்கிறது ஆயுர்வேதம். தலைக்கு தடவ “திரிபாலாதி தைலம்” (அ) பிருங்காமல தைலம் ஏற்றவை. உடலுக்கு தடவ பிண்ட தைலம் (அ) ஆமவாதாந்த தைலத்தை பயன்படுத்தலாம். தன்வந்திரி தைலத்தையும் பயன்படுத்தலாம்.
நழுவும் கருப்பை
உடலின் அவயங்கள் இருக்கவேண்டிய இடங்களில் இருக்க வேண்டும். அவை இடப்பெயர்ச்சி செய்தால் ஏற்படும் தொல்லைகள் பல. இந்திய பெண்களுக்கு கருப்பை கீழ் நோக்கி நகருவது மேலை நாட்டுபெண்களை விட அதிகம் ஏற்படுகிறது.
கருப்பை தசை நாண்களால் ஒரே இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதை தாங்கும் தசைகளும், தசை நாணிகளும் தொய்வுறும் போது, கருப்பை கீழே விழ நகர ஆரம்பிக்கிறது. இதை கருப்பை பிதுக்கம் என்று கூறலாம்.
கருப்பை நிலைகுலைந்து கீழ் நோக்கி நகர்ந்து பெண்ணின் பிறப்புருப்பின் முழுவதிலுமே இறங்கி, ஆக்ரமித்துவிடும். இது தான் கர்ப்ப பிதுக்கம்.
அறிகுறிகள்
இடுப்பு எலும்புக்கூட்டில் கனமானது போல் அழுத்தம் வலி.
முதுகுவலி
நடக்கும் போது அடிவயிற்றில் வலி. ஏதோ வெளிவந்து பிதுங்குவது போன்ற உணர்வு
மலச்சிக்கல் – சிறுநீர், மலக் கழிப்பதில் கஷ்டம். சில சமயம் அதிக சிறுநீர் போகும்.
கர்ப்பையின் கழுத்தில் புண்கள் தோன்றி இரத்தம் கசியும்.
சிறுநீர் கழிப்பதை அடக்க முடியாமல் போவது.
பிரட்டல்
உடலுறவில் தடை
காரணங்கள்
இடுப்பு, வயிறு எலும்புக்கட்டுக்கள் பலவீனமாதல். குழந்தை பேற்றின் போது இடுப்புக் கூட்டின் தசைகள் இழுக்கப்பட்டு காயப்படுதல். குழந்தைப்பேற்றின் போது தவறான முறைகள், குழந்தை பேற்றிற்குப்பின் ஒய்வு எடுக்காமல் போதல், கருப்பையில் கட்டிகள் இவற்றாலும் கருப்பைப் பிதுக்கம் ஏற்படலாம். குழந்தை பேற்றின் போது கருப்பையைத் தாங்கும், தசைகள் தொய்வு அடைந்து விடுதல் ஒரு முக்கியகாரணம்.
அடிவயிற்றில் அதிக அழுத்தம். இது குண்டானவர்களுக்கு, அதிக உடல்பருமனால் ஏற்படும்.
வயிற்றில் வாய்வு நிறைந்திருத்தல். இதனால் கருப்பை கீழ் நோக்கி தள்ளப்படும் மலசிக்கலினால் பெருங்குடல் பகுதி நிறைந்து கருப்பையை முன்னோக்கித் தள்ளும். நாட்பட்ட மலச்சிக்கலும் ஒரு காரணம்.
அடிக்கடி குழந்தைப்பேறு
இறுக்கமான உடைகள் அணிவது.
மாதவிடாய் நின்றபின் ஏற்படும் எஸ்ட்ரோஜன் (பெண் ஹார்மோன்) குறைபாடு.
சிகிச்சை முறைகள்
அறுவை சிகிச்சை சிறந்தது
நல்ல உணவு – பழங்கள் மிகுந்த அல்லது முதல் 5 நாட்களுக்கு வெறும் பழஆகாரம் – கொடுக்க வேண்டும். தினமும் எனிமாவால் மலக்குடல் சுத்தப்படுத்த வேண்டும். பிறகு படிப்படியாக திட உணவுக்கு வர வேண்டும்.
நன்கு அரைத்து கூழாக்கப்பட்ட பச்சை காரட்டை மெல்லிய துணியில் வைத்து புணர் புசையில் செலுத்தி சுமார் 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். 12 மணிக்கு ஒரு தடவை புதிய காரட் கொண்டு செய்யப்பட வேண்டும் இதனால் கருப்பை, அதை சார்ந்த தசைகள் வலுப்பெறும்.
கேகல் எனப்படும் பயிற்சி பயன்தரும். இந்த பயிற்சி, யோனி, சிறுநீர் அகற்றும் குழாய் மற்றும் மலக்குடல் இவற்றின் தசைகளை பலப்படுத்தும். இந்த தசைகளை 10 விநாடிகளுக்கு இழுத்து, இறுக்கிக் கொள்ள வேண்டும். இதை 10-20 தடவை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு நாளில் பல தடவை செய்யலாம். உட்கார்ந்த வாக்கில், நின்றபடி அல்லது படுத்துக்கொண்டும் பெண்கள் இந்தப் பயிற்சியை செய்யலாம். ஆரம்பநிலை கருப்பை பிதுக்கத்திற்கு இந்த பயிற்சி சிறந்த பலன் அளிக்கும். பொதுவாகவே இந்த பயிற்சியை செய்து வந்தால், கருப்பை பிதுக்கம் ஏற்படுவதையே தடுக்கும். கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் பிரிவதை நிறுத்தும்.
மலச்சிக்கலை போக்க வேண்டும்.
ஹார்மோன்கள் பெண்களில் கருப்பை உறுப்புகளை பலப்படுத்துகின்றன.
சேனைக்கிழங்கு அல்லது கருணைக்கிழங்கில் பெண்களின் ஹார்மோனான ப்ரோஜெஸ்ட்ரோன் உள்ளது. இதை உண்ணுதல் நல்லது. சோயாவும் இயற்கை ஹார்மோன்களை தருவதால் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிமதுரம் – அட்ரீனல் ஹார்மோன் உற்பத்தியை தூண்டுகிறது. ஒட்ஸ் கஞ்சியும் ஹார்மோன் சுரப்பை சீராக்கும். இதர இயற்கை பெண் ஹார்மோன் எஸ்ட்ரோஜன் உள்ள உணவுகள் சோம்பு, ஆப்பிள், பார்லி, பீட்ரூட், கேரட், வெள்ளரிக்காய், பால் சார்ந்த உணவுகள் பேரீச்சை, முட்டை, ஒமம், பூண்டு, ஆலிவ் எண்ணெய், பப்பாளி, பட்டாணி மாதுளம், கோதுமை, உருளைகிழங்கு, பரங்கிக்காய், அரிசி, தக்காளி போன்றவை.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும். அதிக காய்கறி, பழங்கள், கைக்குத்தல் பழுப்பு நிற அரிசி, கம்பு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
உடற்பயிற்சி – கால்கள் இரண்டையும் உயர்த்தி வைத்தபடி 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை படுத்திருக்கலாம். கால்களை நீட்டியபடி தரையில் படுத்துப் பின்னர் கால்களை இயன்றவரை உயர்த்தி ஒரிரு நிமிடங்கள் அதே நிலையில் வைத்திருப்பது கால்களை இறக்கும் பயிற்சியை 10 முறை செய்யலாம். பத்மாசனத்தில் அமர்ந்தபடி மல்லாந்து படுத்து கால்கள் இரண்டையும் மேல் நோக்கி உயர்த்தும் பயிற்சியும் நல்ல பலனைத் தரும்.
மாதவிடாய் மறையும் காலம்
மங்கையராக பிறப்பதற்கே, நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் பாரதியார்.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை, அறிவறிந்த மக்கட் பேறு அல்ல பிற என்றார் திருவள்ளுவர்.
இல்வாழ்வான் பெறும் பேறுகளில் அறிய வேண்டுவற்றை அறியவல்ல நன்மக்களை பெறுவது அல்லாமல் வேறு எந்த பேற்றினையும் யாம் மதித்துப் போற்றுவதில்லை என்பது இந்த குறளின் உரை.
பெண்களின் பெரும் பொறுப்பு குழந்தைப் பேறு, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெண்கள் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இது தான். இதனால், பெண்கள் ஆண்களைவிட அதிக காலம் வாழ்ந்தாலும், பல பிரச்சனைகள், வேதனை, சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது. இதனால் தான் மென்மையான பெண்களுக்கு மன உறுதியையும், பொறுமையையும், தாங்கும் சக்தியையும் இறைவன் அளித்திருக்கிறார் போலும்.
பூப்பு
பூப்பு என்பது சிறுமிகள் பெண்களாகும் காலகட்டம். இது பொதுவாக 10-16 வயதுக்குள் ஏற்படும். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பெண்ணுக்கு பெண் மாறுபடும். எனவே, பூப்பு காலம் தொடங்கும் வயதைப் பற்றி கவலை வேண்டாம். பெண்ணின் உடல் வாகு, ஆரோக்கியம் இதை முடிவு செய்யும்.
பூப்பு காலத்தின் உடல்நிலை மாற்றங்கள்
பூப்பு ஏற்படுவது பிட்யூடரி சுரப்பி, சுரக்கும் இரண்டு ஹார்மோன்களால் தான். ஹார்மோன் சினை முட்டை உற்பத்தியை ஊக்குவிக்கும் ஹார்மோன் மற்றொன்று ஃபாலிக்கில் சிட்டிஇம்யூலேடிங் ஹார்மோன் ஓவரியின் ஃபாலிக்கில் களை ஊக்குவிக்கும் ஹார்மோன்கள் இவற்றால் மார்பகம், ஓவரியில், யோனி, கர்பப்பை இவைகள் பெரிதாகி வளர்ச்சி அடைகின்றன. முதலில் மார்பக வளர்ச்சி ஆரம்பமாகும். மார்பக வளர்ச்சிக்கும், மாதவிடாய் ஏற்படும் காலத்துக்கும் நடுவில் சாதாரணமாக 21/2 வருடங்கள் ஆகலாம். பெண்கள் உடல் எடை கூடும்.
மாதவிடாய்
மாதவிடாய் என்பது உடலானது கொஞ்சம் திரவத்தை ரத்தம் உட்பட யோனியின் மூலம் வெளியேற்றுவது. ஒவ்வொரு மாதமும் ஒரு மென்மையான படலம் பெண்ணின் கருப்பைக்குள் தடிமனாகும். கர்ப்பமடைந்தால் வளரும் கருப்பைக்கு ஊட்டமளித்து பாதுகாக்க இது தேவைப்படும். கர்ப்பமடையாவிட்டால் தேவையில்லை. எல்லாம் யோனி வழியாக வெளியேறிவிடும்.
இது தான் மாதவிடாய் என்பது. இது குறைவில்லாத, ஆரோக்கியமான உடலுக்கு அடையாளம். மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒன்று. அதில் கவலைப்படவோ இல்லை கூச்சப்படவோ ஒன்றுமில்லை.
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்
முதல் மாதவிடாய் எல்லா பெண்களுக்கு 10 லிருந்து 16 வயதுக்குள் வரும். இந்த வயதில் தான் வரவேண்டும் என்று எந்த நியதியும் கிடையாது. உடல் எப்போது தயாராகிறதோ அப்போது தான் வரும்.
பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வரும்.
சராசரி 28 நாட்களுக்கு ஒரு முறை – இது சிலருக்கு கூடவோ, குறையவோ செய்யலாம். எப்படியிருந்தாலும் 20-30 நாட்கள் சாதாரணம்.
பொதுவாக உதிரப்போக்கு 3 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். நீங்கள் கர்ப்பமடைந்தால் மட்டுமே இந்த சுழற்சி மாறும். இல்லையெனில் மாதவிடாய் வற்றும் வரை ஒவ்வொரு மாதமும் இது நடைபெறும்.
மாதவிடாயின் சுழற்சி, பிட்யூடரி சுரப்பி சுரக்கும் இரு ஹார்மோன்களாலும், ஓவரி சுரக்கும் பெண் பாலுணர்வு ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் இவைகளால் நடத்தப்படுகிறது.
உடல் மாற்றங்கள்
தசை பிடிப்பு, ஒப்புசம், மிருதுவான மார்புகள், தலைவலி, முதுகுவலி, தலைமரத்துப் போதல் போன்றவை.
மனோரீதியான பாதிப்புகள்
படபடப்பு, மனநிலையில் மாற்றங்கள் மனச்சோர்வு இவைகள் ஏற்படலாம். இந்த மாதவிடாய் கால விளைவுகள் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களாலும் உண்டாகும். தவிர கொழுப்பு சத்து உணவுகள், சர்க்கரை இவைகளாலும் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினசரி 6-8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். உடற்பயிற்சி இந்த சமயத்தில் செய்யக்கூடாது என்று நினைக்கலாம். ஆனால் உடற்பயிற்சி தேவை. உடற்பயிற்சி ஆக்ஸிஜன், ரத்த ஓட்டங்களுக்கு உதவும். இதனால் தசைபிடிப்பு குறையும்.
பெண்களுக்கே உரிய பிரச்சனைகள்
அமினோரோஹியா
இந்த நோய், மாதவிடாயே வராமல் போவது, பெண்கள் பூப்படையாமல் இருப்பது அப்படி வந்தாலும் சரிவர உதிரப்போக்கு இல்லாதது இவற்றை குறிக்கும்.
காரணங்கள்
பிறவிக்கோளாறு – கர்பப்பை, ஃபாலோபியன் டியூப் எனப்படும் உறுப்புகளின் வளர்ச்சியின்மை, குரோமோசான் குறைபாடுகள்.
சோகை
ஷயரோகம், நாட்பட்ட மலேரியா போன்ற ஜுரங்கள்.
மூளையின் ஒரு பாகமான ஹைபோதாலமஸ் குறைபாடுகள்.
பிட்யூடரி, தைராய்டு, ஓவரியன் ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்காதது.
மனநோய்கள், மனச்சோர்வு
ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்கள் ஆரோக்கியம், உடல் சக்தி, குறைபாடுகள் அனோரெக்ஷியா நர்வோசா பசியின்மை – ஒரு வித மனக்கோளாறால் உணவு உண்ணாமை, குறைவாக உண்ணுதல்.
அதிக ஸ்ட்ரெஸ், அதிகமான, தவறான உடற்பயிற்சிகள்.
இந்த வியாதியின் முதல் கட்டம், பூப்படைவது தடைப்பட்டு,
மாதவிடாய் தோன்றாது. இரண்டாம் கட்டத்தில், மாதவிடாய் தொடங்கி உடனே நின்றுவிடுவது.
பெண் நோய்களுக்கு வீட்டு வைத்தியம்
இஞ்சித் துண்டை பொடித்து, தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து தினமும் உணவுக்கு பின் 3 வேளை குடித்து வரவும்.
வாழைப் பூ- தொன்று தொட்டு, வாழைப் பூ அதிக உதிரப்போக்கு கட்டுப்படுத்த பயன்படுத்தி வரப்பட்டிருக்கிறது. வாழைப்பூவை சமைத்து, தயிருடன் சாப்பிட புரோஜெஸ்டிரோன் அதிகரித்து ரத்தப்போக்கை குறைக்கும்.
எள் விதைகளை அரை டீஸ்பூன் அளவு எடுத்து, வெந்நீருடன் தினம் 2 வேளை குடித்தால் அடிவயிறு வலி குறையும். சுடு தண்ணீரில் எள்ளை சேர்த்து, அதில் இடுப்பு வரை உட்கார்ந்து இந்த எள் தண்ணீரை குடித்தால் நல்லது.
கொத்தமல்லி விதைகளும் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஏற்றவை. 6 கிராம் கொத்தமல்லி விதைகளை அரைலிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பாதி தண்ணீர் ஆவியானதும், கற்கண்டு கலந்து, சூடாக குடிக்கவும். இதனால் அதிக உதிரப்போக்கு கட்டுப்படும்.
இளசான மாதுளம் இலைகள் 7 இலைகள் எடுத்து, ஏழு அரிசியுடன் தானியத்துடன் சேர்த்து அரைத்து, தினமும் 2 வேளை ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு ஏறுமாறான மாதவிடாய் இவற்றுக்கு நல்லது.
பூப்படைதல் – வீட்டு வைத்தியம்
மெல்லிய, இளைத்த பலவீனமான பெண்களுக்கு, வெல்லம் கலந்து செய்யப்பட்ட எள் உருண்டைகள் தினமும் மதிய உணவுடன் கொடுக்கவும். இது பூப்படைவதை உண்டாக்கும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். எள் டிகாக்ஷன் குடிப்பதும் பூப்படைய உதவும். இந்த எள்ளுருண்டைகள் இளம் பெண்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கவே கூடாது.
ஒரு மேஜைக்கரண்டி பாலில் குங்குமப்பூ கரைத்து குடித்து வருவது பலவீனமான, வளர்ச்சியில்லா பெண்களுக்கு உதவும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, வெந்தய இலைகள் இவற்றால் செய்த ‘சட்னி’ சாப்பிட, இளம்பெண்கள் முழு வளர்ச்சியடைய உதவும். புதினா கர்பப்பைக்கு ஒரு டானிக். கீரைகள் சோகைக்கும் நல்லது.
வலியுடன் கூடிய மாதப்போக்கு
வெண்டைக்காய் 100 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் 20 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டி வைக்கவும். இதில் சர்க்கரை சேர்த்து 60-90 மி.லி. அடிக்கடி குடித்து வருவது நல்லது.
யோனியை சுத்தப்படுத்தும் முறையில், வெந்தயம், கொய்யா இலைகள் இவற்றை கலந்து உபயோகித்தால் வெள்ளை போதலை குறைக்கும். சுடு தண்ணீரால் சுத்திகரித்தாலே நல்லது.
இந்த முறையை மருத்துவரின் அறிவுரைப்படி செய்யவேண்டும்.
சில ஆயுர்வேத மூலிகைகள்
அசோகம், லோத்ரா, நிலத்துத்தி, நெரிஞ்சி, சீமை சடவாரி, கொட்பிணி, முகராட்டை கீரை, விபூர்ணம் நெல்லி, ஆடுதின்னாபாலை, கற்றாழை, கருஞ்சீரகம், பிரண்டை, எள், கருவேலம், ஹரீத்ரா, ஆமணக்கு, நன்னாரி.
சில குறிப்புகள்
பிஎம்எஸ் எனும் மாதவிடாய் கால விளைவுகளால், பாதிக்கப்படும் பெண்களுக்கு, அவர்களுக்கு உள்ள இதர வியாதிகளின் தாக்கம் அதிகமாகும்.
பிஎம்எஸ் உள்ள இளவயது பெண்களுக்கு, வலியுடன் கூடிய மாதப்போக்கு ஏற்படும்.
கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ள உணவுகள் பிஎம்எஸ் பிரச்சனையை கட்டுப்படுத்தும். கால்சியம் நிறைந்த உணவு – பால், சீஸ் – கால்சியத்தை உடல் கிரகிக்க, கூட விட்டமின் டி யும் தேவை. மெக்னீசியம் கீரைகளில் கிடைக்கும்.
பிஎம்எஸ் கிசிச்சையாக அதிக அளவு விட்டமின் பி 6 எடுத்துக் கொண்டால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்.
பெண்களில் பருவமடையும் முன் ஏற்படும் உதிரப்போக்கு மற்றும் மெனோபாஸீக்கு பிறகு ஏற்படும் உதிரப்போக்கு அபாயமானது. உடனே டாக்டரிடம் செல்லவும்.
ஹார்மோன் கோளாறுகள் பெண்களின் அதிக உதிரப்போக்குக்கு காரணம்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் அதிகமாக தேவைப்படும்.
பிரசவத்திற்கு பின் ஒரு பெண்மணி 1/2 லிட்டர் ரத்தத்தை இழக்கிறாள்.
வயிற்றையும் வாட்டும் நீரிழிவு வியாதி
நீரிழிவு நோய் உடலின் எந்த அவயத்தை வேண்டுமானாலும் தாக்கும். ரத்தத்தில் சர்க்கரை தேங்கி, ரத்த ஓட்டத்தை பாதித்து, நரம்புகளையும் வாடச் செய்யும். ஏனென்றால் சர்க்கரை வியாதியினால் உடல் அவயங்களுக்கு சக்தி கிடைக்காது.
நீரிழிவு உண்டாக்கும் அழிவுகளில் ஒன்று இரப்பை பாதிப்பு. இதை வயிற்றில் தாமதிக்கப்பட்ட கழிவுப்பொருட்கள் நீக்கம் (Delayed gastric emptying) என்பார்கள். இதன் காரணங்கள் வயிற்றின் வெளியேறும் பாதை அடைப்பு (Gastric outlet obstruction) மற்றும் கேஸ்ட்ரோபரேசிஸ் (Gastro paresis). இவை இரண்டும் உருவாக முக்கிய காரணம் டயாபடிஸ்.
இரைப்பை அடைப்பு (Gastric outlet obstruction)
வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு செல்லும் குறுகிய பாதை வழியாகத்தான் உணவு செல்லும். இந்த பகுதி பைலோரஸ் (Pylorus) எனப்படும். இந்த பாதையில் அடைப்பு ஏற்பட்டால், உணவு சிறுகுடலின் முதல் பகுதியான டியோடினத்தை நிதானமாக சென்று அடையும். இல்லை அடைத்துக் கொண்டு கொஞ்சமும் போகாமல் தேங்கிவிடும். அல்சர், பைலோரஸிஸ் தொற்றுநோய், கான்சர் இவை இந்த அடைப்பை உண்டாக்கலாம்.
கேஸ்ட்ரோ பரேஸிஸ்
வயிறு தன் உள்ளிருக்கும் பதார்த்தங்களை காலி செய்ய வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சாதாரணமாக வயிறு தனது தசை அசைவுகளால் உணவை ஜீரணமாவதற்காக சிறுகுடலுக்கு செலுத்தும். இதை ‘கன்ட்ரோல்’ செய்வது வேகஸ் (Vagus) நரம்பாகும். மூளையிலிருந்து வரும் 12 ஜோடி நரம்புகளில் வேகஸ§ம் ஒன்று. இந்த நரம்பு தான் ஜீரண மண்டல உறுப்புகள் இயங்க வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரக்க, உணவு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு போக, இத்யாதி இயக்கங்களை இயக்கும் தலைவர். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் ஜீரண மண்டலம் ஸ்தம்பித்து விடும். உணவின் பயணம் ஆமை போல் நகரும். இல்லை நின்று விடும்.
கேஸ்ட்ரோபரேஸில் எப்படி வருகிறது
முதல் காரணம் டயாபடிஸ் – சர்க்கரை வியாதி, நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் அபரிமிதமாக படர்ந்திருக்கும் சர்க்கரை நரம்புகளில் வேதியல் மாற்றங்களை தோற்றுவித்து, போதாக் குறைக்கு நரம்புகளுக்கு ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களையும் பாதிக்கும். கொஞ்ச நாட்களில் ரத்த சர்க்கரை, வேகஸ் நரம்பை பீடித்து பாதிக்கும்.
இதர காரணங்கள்
• வயிறு அறுவை சிகிச்சை மற்றும் வேகஸ் நரம்பு துண்டிப்பு
• வைரஸ் தொற்று நோய்கள்
• அனோரெக்ஷியா – நர்வோசா மற்றும் புலீமியா வியாதி
• போதை மருந்துகள், குடல் தசை இயக்கத்தை குறைக்கும் சில மருந்துகள்
• தசை நார்கள் பாதிப்பு – அமிலாய்டோசிஸ், ஸ்க்லாரோ டெர்மா (Amyloidosis) (Scleroderma)
• நரம்பு மண்டல வியாதிகள் – பார்க்கின்சன்ஸ் போன்றவை
• வளர்சிதை மாற்ற வியாதிகள், தைராய்டு சுரப்பி பாதிப்புகள்.
அறிகுறிகள்
• நெஞ்செரிச்சல்
• மேல் வயிற்றில் வலி
• குமட்டல்
• ஜீரணமாகாத உணவை வாந்தி எடுத்தல் சில சமயங்களில் சாப்பிட்ட பல மணி நேரங்களுக்கு
பிறகு.
• கொஞ்சம் சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிய உணர்வு
• எதுக்கலித்தல்
• எடை குறைவு, பலவீனம், சக்தியின்மை
• அடிவயிறு உப்புசம்
• கட்டுக்குள் வராத இரத்த சர்க்கரை அளவு
• பசியின்மை
• வயிற்றுப் பகுதியில் இழுப்பு (Spasm)
விளைவுகள்
• இந்த நோயால் வயிற்றில் நீண்ட நேரம் உணவு தேங்கியிருக்கும். உணவு அழுகி புளித்துப் போய் பாக்டீரியாக்களை உருவாக்கும். தவிர தேங்கிய உணவு ‘களி மொத்தை’ போல் கட்டிகளாகி சிறுகுடலுக்கு உணவு போகும் பாதையை அடைத்து விடலாம். இந்த கட்டிகள், குமட்டல், வாந்தி உண்டாக்கும். சிறுகுடலின் பாதை அடைப்பு அபாயகரமானது.
• குடலில் தேங்கிய உணவு நிறுத்தி நிதானமாக சிறுங்குடலுக்கு வந்து, அங்கே ஜீரணமாகையில், ரத்த குளுகோஸ் அளவு ஏறும் தவிர எப்போது குடல் காலியாகும், எப்போது உணவு சிறுகுடலுக்கு செல்லும் என்பது தெரியாது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கண்டபடி ஏறி, இறங்கும். இந்த நிலையில், சர்க்கரை லெவலை கட்டுப்படுத்துவது கடினம்.
• சர்க்கரை அளவு அதிகரித்தல் நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம், மூளைத் தாக்கு, பக்கவாதம் ஏற்படலாம். மாறி மாறி நீரிழிவு வயிற்றையும், வயிற்றுக் கோளாறுகள் நீரிழிவு நோயாளிகளை பாதித்துக் கொண்டே இருக்கும். இதன் அடிப்படை காரணமான சர்க்கரை லெவல் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியம்.
இந்த இரைப்பை கோளாறை கண்டுபிடிக்க பரிசோதனைகள்
1. என்டோஸ்கோபி
2. அல்ட்ரா சவுண்ட்
3. பேரியம் எக்ஸ்-ரே
இதர தீவிர பரிசோதனைகள்
1. வயிற்றை காலி செய்து எடுக்கும் சிண்டிகிராஃபி (Gastric emptying scintigraphy) இந்த சோதனையில் உப்பு சப்பு இல்லாத உணவு கொடுக்கப்படும். இந்த உணவில் கதிரியக்கம் உள்ள பொருள் ஒன்றும் கலந்திருக்கும். ஸ்கானில் இந்த கதிரியக்கப் பொருள், வயிறு காலியாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை சுட்டிக்காட்டும்.
2. மூச்சுப் பரிசோதனை – இதில் ஐஸோடோப் (Isotope) கலந்த உணவு நோயாளிக்கு கொடுக்கப்படும். மூச்சுக் காற்றை பரிசோதனை செய்து கார்பன் -டை-ஆக்ஸைட் (ஐசோடோப் மூலமாக) அளவு கணிக்கப்படும் இதிலிருந்து வயிறு காலியாகும் நேரம் தெரியவரும்.
சிகிச்சை முறைகள்
• முதலில் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையை ‘நார்மலுக்கு’ கொண்டு வர வேண்டும். கேஸ்ட்ரோபரேசிஸ் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் அளவை அதிகமாக்க வேண்டும். அடிக்கடி போட்டுக் கொள்ளவும் நேரிடலாம்.
• இன்சுலினை உணவு உண்பதற்கு முன் எடுத்துக் கொள்ளாமல், உணவுண்ட பின் எடுத்துக் கொள்ளலாம்.
• குளுகோஸ் லெவலை அடிக்கடி சோதித்துக் கொள்ளலாம் – குறிப்பாக உணவிற்கு பிறகு / இன்சுலின் போட்டுக் கொண்ட பிறகு.
உங்கள் டாக்டர் இந்த முறைகளை பற்றி உங்களுக்கு விவரிப்பார்.
இரண்டாவது உணவு முறை – மூன்று வேளைக்கு பதில், அதே அளவு உணவை 6 வேளைகளாக பிரித்து உண்ணவும். சில சமயங்களில், டாக்டர் ஒன்றிரண்டு நாட்கள் வெறும் திரவப் பதார்த்தங்களை மட்டும் உட்கொள்ளச் சொல்லுவார். ஊட்டச்சத்து செறிந்த, முழு உணவின் சக்தியை உள்ளடக்கிய பல திரவ உணவுகள் தற்போது கிடைக்கின்றன. கொழுப்பு உணவுகளை தவிர்க்கும் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் பொதுவாக நல்ல உணவுகள். ஆனால் கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்கள் நார்ச்சத்து உணவுகளை தவிர்க்கவும். முற்றின நாட்பட்ட கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்களுக்கு வயிற்றில் ஓட்டை போட்டு, அதன் வழியே சத்து நிறைந்த திரவ வடிவில், ஆகாரம் செலுத்தப்படும். மருந்துகளும் செலுத்தப்படும்.
மருந்துகள்
• மெட்டோகுளோப்ராமைடு, எரித்ரேமைசின், டாம்பெரிடோன் போன்ற மாத்திரைகள் இரைப்பையின் தசைகளைத் தூண்டி இயங்க வைக்கின்றன.
• பேட்டரியால் இயங்கும் ஒரு கருவி வயிற்றில் மின் அதிர்வுகளை உண்டாக்கி இரைப்பையில் இயக்கத்தை தூண்டி விடும். இதனால் வாந்தி, குமட்டல், இவை நின்றுவிடும்.
• மறுபடியும் சொல்லுவது – டயாபடிஸ் தான் கேஸ்ட்ரோபரேசிஸ் உண்டாக முக்கிய காரணம். இதை நீரிழிவு நோயாளிகள் கருத்தில் கொண்டு வருமுன் காக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
• ஆயுர்வேதத்தில் டயாபடிஸ், மற்றும் சம்மந்தப்பட்ட வயிறு கோளாறுகளுக்கு, பல மருந்துகள் உள்ளன. இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும் அலோபதி மருந்துகளுடன் உட்கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.
நீரிழிவு உண்டாக்கும் அழிவுகளில் ஒன்று இரப்பை பாதிப்பு. இதை வயிற்றில் தாமதிக்கப்பட்ட கழிவுப்பொருட்கள் நீக்கம் (Delayed gastric emptying) என்பார்கள். இதன் காரணங்கள் வயிற்றின் வெளியேறும் பாதை அடைப்பு (Gastric outlet obstruction) மற்றும் கேஸ்ட்ரோபரேசிஸ் (Gastro paresis). இவை இரண்டும் உருவாக முக்கிய காரணம் டயாபடிஸ்.
இரைப்பை அடைப்பு (Gastric outlet obstruction)
வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு செல்லும் குறுகிய பாதை வழியாகத்தான் உணவு செல்லும். இந்த பகுதி பைலோரஸ் (Pylorus) எனப்படும். இந்த பாதையில் அடைப்பு ஏற்பட்டால், உணவு சிறுகுடலின் முதல் பகுதியான டியோடினத்தை நிதானமாக சென்று அடையும். இல்லை அடைத்துக் கொண்டு கொஞ்சமும் போகாமல் தேங்கிவிடும். அல்சர், பைலோரஸிஸ் தொற்றுநோய், கான்சர் இவை இந்த அடைப்பை உண்டாக்கலாம்.
கேஸ்ட்ரோ பரேஸிஸ்
வயிறு தன் உள்ளிருக்கும் பதார்த்தங்களை காலி செய்ய வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சாதாரணமாக வயிறு தனது தசை அசைவுகளால் உணவை ஜீரணமாவதற்காக சிறுகுடலுக்கு செலுத்தும். இதை ‘கன்ட்ரோல்’ செய்வது வேகஸ் (Vagus) நரம்பாகும். மூளையிலிருந்து வரும் 12 ஜோடி நரம்புகளில் வேகஸ§ம் ஒன்று. இந்த நரம்பு தான் ஜீரண மண்டல உறுப்புகள் இயங்க வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரக்க, உணவு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு போக, இத்யாதி இயக்கங்களை இயக்கும் தலைவர். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் ஜீரண மண்டலம் ஸ்தம்பித்து விடும். உணவின் பயணம் ஆமை போல் நகரும். இல்லை நின்று விடும்.
கேஸ்ட்ரோபரேஸில் எப்படி வருகிறது
முதல் காரணம் டயாபடிஸ் – சர்க்கரை வியாதி, நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் அபரிமிதமாக படர்ந்திருக்கும் சர்க்கரை நரம்புகளில் வேதியல் மாற்றங்களை தோற்றுவித்து, போதாக் குறைக்கு நரம்புகளுக்கு ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களையும் பாதிக்கும். கொஞ்ச நாட்களில் ரத்த சர்க்கரை, வேகஸ் நரம்பை பீடித்து பாதிக்கும்.
இதர காரணங்கள்
• வயிறு அறுவை சிகிச்சை மற்றும் வேகஸ் நரம்பு துண்டிப்பு
• வைரஸ் தொற்று நோய்கள்
• அனோரெக்ஷியா – நர்வோசா மற்றும் புலீமியா வியாதி
• போதை மருந்துகள், குடல் தசை இயக்கத்தை குறைக்கும் சில மருந்துகள்
• தசை நார்கள் பாதிப்பு – அமிலாய்டோசிஸ், ஸ்க்லாரோ டெர்மா (Amyloidosis) (Scleroderma)
• நரம்பு மண்டல வியாதிகள் – பார்க்கின்சன்ஸ் போன்றவை
• வளர்சிதை மாற்ற வியாதிகள், தைராய்டு சுரப்பி பாதிப்புகள்.
அறிகுறிகள்
• நெஞ்செரிச்சல்
• மேல் வயிற்றில் வலி
• குமட்டல்
• ஜீரணமாகாத உணவை வாந்தி எடுத்தல் சில சமயங்களில் சாப்பிட்ட பல மணி நேரங்களுக்கு
பிறகு.
• கொஞ்சம் சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிய உணர்வு
• எதுக்கலித்தல்
• எடை குறைவு, பலவீனம், சக்தியின்மை
• அடிவயிறு உப்புசம்
• கட்டுக்குள் வராத இரத்த சர்க்கரை அளவு
• பசியின்மை
• வயிற்றுப் பகுதியில் இழுப்பு (Spasm)
விளைவுகள்
• இந்த நோயால் வயிற்றில் நீண்ட நேரம் உணவு தேங்கியிருக்கும். உணவு அழுகி புளித்துப் போய் பாக்டீரியாக்களை உருவாக்கும். தவிர தேங்கிய உணவு ‘களி மொத்தை’ போல் கட்டிகளாகி சிறுகுடலுக்கு உணவு போகும் பாதையை அடைத்து விடலாம். இந்த கட்டிகள், குமட்டல், வாந்தி உண்டாக்கும். சிறுகுடலின் பாதை அடைப்பு அபாயகரமானது.
• குடலில் தேங்கிய உணவு நிறுத்தி நிதானமாக சிறுங்குடலுக்கு வந்து, அங்கே ஜீரணமாகையில், ரத்த குளுகோஸ் அளவு ஏறும் தவிர எப்போது குடல் காலியாகும், எப்போது உணவு சிறுகுடலுக்கு செல்லும் என்பது தெரியாது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கண்டபடி ஏறி, இறங்கும். இந்த நிலையில், சர்க்கரை லெவலை கட்டுப்படுத்துவது கடினம்.
• சர்க்கரை அளவு அதிகரித்தல் நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம், மூளைத் தாக்கு, பக்கவாதம் ஏற்படலாம். மாறி மாறி நீரிழிவு வயிற்றையும், வயிற்றுக் கோளாறுகள் நீரிழிவு நோயாளிகளை பாதித்துக் கொண்டே இருக்கும். இதன் அடிப்படை காரணமான சர்க்கரை லெவல் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியம்.
இந்த இரைப்பை கோளாறை கண்டுபிடிக்க பரிசோதனைகள்
1. என்டோஸ்கோபி
2. அல்ட்ரா சவுண்ட்
3. பேரியம் எக்ஸ்-ரே
இதர தீவிர பரிசோதனைகள்
1. வயிற்றை காலி செய்து எடுக்கும் சிண்டிகிராஃபி (Gastric emptying scintigraphy) இந்த சோதனையில் உப்பு சப்பு இல்லாத உணவு கொடுக்கப்படும். இந்த உணவில் கதிரியக்கம் உள்ள பொருள் ஒன்றும் கலந்திருக்கும். ஸ்கானில் இந்த கதிரியக்கப் பொருள், வயிறு காலியாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை சுட்டிக்காட்டும்.
2. மூச்சுப் பரிசோதனை – இதில் ஐஸோடோப் (Isotope) கலந்த உணவு நோயாளிக்கு கொடுக்கப்படும். மூச்சுக் காற்றை பரிசோதனை செய்து கார்பன் -டை-ஆக்ஸைட் (ஐசோடோப் மூலமாக) அளவு கணிக்கப்படும் இதிலிருந்து வயிறு காலியாகும் நேரம் தெரியவரும்.
சிகிச்சை முறைகள்
• முதலில் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையை ‘நார்மலுக்கு’ கொண்டு வர வேண்டும். கேஸ்ட்ரோபரேசிஸ் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் அளவை அதிகமாக்க வேண்டும். அடிக்கடி போட்டுக் கொள்ளவும் நேரிடலாம்.
• இன்சுலினை உணவு உண்பதற்கு முன் எடுத்துக் கொள்ளாமல், உணவுண்ட பின் எடுத்துக் கொள்ளலாம்.
• குளுகோஸ் லெவலை அடிக்கடி சோதித்துக் கொள்ளலாம் – குறிப்பாக உணவிற்கு பிறகு / இன்சுலின் போட்டுக் கொண்ட பிறகு.
உங்கள் டாக்டர் இந்த முறைகளை பற்றி உங்களுக்கு விவரிப்பார்.
இரண்டாவது உணவு முறை – மூன்று வேளைக்கு பதில், அதே அளவு உணவை 6 வேளைகளாக பிரித்து உண்ணவும். சில சமயங்களில், டாக்டர் ஒன்றிரண்டு நாட்கள் வெறும் திரவப் பதார்த்தங்களை மட்டும் உட்கொள்ளச் சொல்லுவார். ஊட்டச்சத்து செறிந்த, முழு உணவின் சக்தியை உள்ளடக்கிய பல திரவ உணவுகள் தற்போது கிடைக்கின்றன. கொழுப்பு உணவுகளை தவிர்க்கும் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் பொதுவாக நல்ல உணவுகள். ஆனால் கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்கள் நார்ச்சத்து உணவுகளை தவிர்க்கவும். முற்றின நாட்பட்ட கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்களுக்கு வயிற்றில் ஓட்டை போட்டு, அதன் வழியே சத்து நிறைந்த திரவ வடிவில், ஆகாரம் செலுத்தப்படும். மருந்துகளும் செலுத்தப்படும்.
மருந்துகள்
• மெட்டோகுளோப்ராமைடு, எரித்ரேமைசின், டாம்பெரிடோன் போன்ற மாத்திரைகள் இரைப்பையின் தசைகளைத் தூண்டி இயங்க வைக்கின்றன.
• பேட்டரியால் இயங்கும் ஒரு கருவி வயிற்றில் மின் அதிர்வுகளை உண்டாக்கி இரைப்பையில் இயக்கத்தை தூண்டி விடும். இதனால் வாந்தி, குமட்டல், இவை நின்றுவிடும்.
• மறுபடியும் சொல்லுவது – டயாபடிஸ் தான் கேஸ்ட்ரோபரேசிஸ் உண்டாக முக்கிய காரணம். இதை நீரிழிவு நோயாளிகள் கருத்தில் கொண்டு வருமுன் காக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
• ஆயுர்வேதத்தில் டயாபடிஸ், மற்றும் சம்மந்தப்பட்ட வயிறு கோளாறுகளுக்கு, பல மருந்துகள் உள்ளன. இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும் அலோபதி மருந்துகளுடன் உட்கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.
குழந்தையின்மை
தாய்மை இறைவனின் வரப் பிரசாதம். பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. எனவே குழந்தையின்மை பெண்களின் மனதிற்கும், உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
திருமணமாகி, ஒருவருடத்தில், அடிக்கடி உடலுறவு கொண்டும், கருத்தரிக்காமல் போனால், குழந்தையின்மை குறை என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. வைத்தியரிடம் போவது நல்லது.
குழந்தையின்மையும், ஆண்மை, பெண்மை குறைவும் ஒன்றல்ல. உடலுறவே மேற்கொள்ள முடியாத பாதிப்புகள் ஆண்மை, பெண்மை குறை எனப்படும். குழந்தையின்மை குறை ஆணிடமும் இருக்கலாம் இல்லை பெண்ணிடமும் இருக்கலாம்.
காரணங்கள் (ஆண்)
விந்து குறைபாடுகள், விந்து செல்லும் பாதை அடைப்பு, விபத்தினால் பிறப்புறுப்பில் அடிபடுவது, பிறப்புறுப்புகளின் பிறவி குறைபாடுகள், பிறப்புறுக்களின் வளர்ச்சியின்மை இதர பொதுவான வியாதிகள்.
விந்து அசாதாரணமாக, இயற்கைக்கு மாறாக இருப்பது, குறைந்த அளவே உற்பத்தியாவது அல்லது விந்துக்களே இல்லாமல் போவது அல்லது விந்து நகர முடியாமல், ஆணுறுப்பை அடையமுடியாமல் போவது.
ஆணுறுப்புகளுக்கு சூடு – வெப்பம் ஆகாது. உடல் வெப்பநிலையை விட ஆணுறுப்புகளில், உஷ்ணம் குறைவாக இருக்கும். அதிக வெப்ப பாதிப்புகள், விரைகள் பிறவியிலிருந்தே கீழ் இறங்காமல் அடிவயிற்றிலேயே தங்கி விடுவது, பருத்துப் போய், புடைத்து போன இரத்தக் குழாய்கள், நாட்பட்ட ஜீரம் இவைகள் விரைகளின் சூட்டை அதிகரிக்கும்.
ஹார்மோன் குறைபாடுகள் – அதுவும் அட்ரீனலின், பிட்யூடரி சுரப்பிகளின் கோளாறுகள் விந்து உற்பத்தியாவதை பாதிக்கும்.
சுற்றுப்புற மாசுகள், ரசாயன நச்சுப்பொருட்கள் சேர்ந்த பொருட்கள் டியோடரண்ட், ஷாம்பு, ஆஃடர்ஷேவ் லோஷன் விந்துவை பாதிக்கின்றன.
பிறவிக் கோளாறுகளால் செக்ஸ் குரோமோசான்கள் விந்து உற்பத்தியில் குறைபாடை ஏற்படுத்தும்.
மம்ஸ் போன்ற நோய்கள்.
ஸ்டீராய்ட் மருந்துகள் ஹார்மோன் அளவுகளை குறைத்து விந்து உற்பத்தியில் தலையிட்டு, பாதிப்பை ஏற்படுத்தும்.
அபூர்வமாக விந்து முன்னே செல்லாமல், பின்னால், ரிவர்ஸில் சென்று விடும். நீரிழிவு நோயாளிகளுக்கும், இடுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இது ஏற்படலாம்.
பெண்களின் குறைபாடுகள்
மாதவிடாய் பிரச்சனைகள். மாதம் ஒரு முறை சினைமுட்டை வெளியாகாமல் போவது. ப்ரோஜிஸ்டெரோன் ஹார்மோன் சுரக்காமல் போவது.
இந்த ப்ரோஜிஸ்டெரோன் ஹார்மோன், மாதா மாதம் கருப்பை பையின் உட்படையை, கெட்டியாக்கும். முட்டையின் வரவை எதிர்நோக்கி இந்த வேலையை அது செய்கிறது. மூளை, பிட்யூட்டரிக்கு தேவையான கோனாடோட்ரேபின் என்ற ஊக்குவிக்கும் ஹார்மோனை அளிக்க முடியாமல் போனால், முட்டை உற்பத்தியாகாது.
கர்ப்பப்பையின் வாய் பாகம் தொற்று நோயால் பாதிக்கப்படுவது அடைத்துக் கொள்வது, கர்ப்பப்பை இடம் மாறுவது. சோகை, போன்றவை.
தைராயிடு, அட்ரீனலின் சுரப்பிகளின் கோளாறுகள், நீரிழிவு நோய், அதிக உடல் பருமன்.
சீரான மாதவிடாய் இல்லாமை, மாதவிடாய் போது வலி, குறைந்த உதிரப்போக்கு, முட்டை கருப்பைக்கு வரும் பாதையில் அடைப்பு. இதனால் முட்டை கருப்பையை சேரமுடியாமல் போகும்.
சாதாரணமாக பெண்களின் கருப்பையில் இருக்கும் சளி கெட்டியாகவே இருந்துவிடும். விந்துவால் உள்ளே பிரவேசிக்க முடியாது. தவிர தொற்றுநோய்க்காக கொடுக்கப்படும் ஆன்டி பயாடிக் மருந்துகள் விந்துவையும் நாசம் செய்து விடலாம்.
பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புகளின், பிறவிக்கோளாறுகள் கருப்பப்பை, அதன் பாதைகள் இவற்றில் கட்டி ஏற்படுதல்.
இந்த குறைபாடுகளை கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆயுர்வேத முறைகள்
முதலில் உடல் கோளாறுகளை சரி செய்தபின், குழந்தை உண்டாகும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். அதன் பிறகு கருப்பையில் குழந்தை சரியாக வளர பிரத்யேக மருத்துவ கவனம் அளிக்கப்படும்.
ஷோதனா சிகிச்சை முறைகள்
ஸ்நேகபானம் – ஸ்பெஷல் மூலிகை செறிந்த நெய் காலையில் கொடுக்கப்படும். குறைந்த அளவில் ஆரம்பித்து, மெதுவாக அதிக அளவுகளில் கொடுக்கப்படும்.
ஸ்வீதானம் – மருந்துகள் கலந்த நீராவி குளியல் செய்விக்கப்படும்.
விரேசனம் – உடலின் விஷங்களை வெளியேற்றும் சிகிச்சை
கஷாய வஸ்தி – பிரத்யேக மருந்துகளை எனிமா கொடுக்கப்படும். இது நரம்புகளை திடப்படுத்தும்.
ஸ்நேக வஸ்தி – மருந்து கலந்த எண்ணைகள் கொடுக்கப்பட்டு பிறப்புறுப்பு – சிறுநீர் பாதைகளை சரிப்படுத்தப்படும்.
ஒட்டார வஸ்தி – கருப்பப்பை, ஜனனேந்திரியல்களை சுத்திகரித்து, எண்ணைப் பசையை உண்டாக்க, பிரத்யேக நெய் கொடுக்கப்படும்.
பிறகு சற்று ஓய்வுக்குப் பின் வாஜீகர்ணம் சிகிச்சையால் விந்துவின் குணம், தரம், அளவு இவற்றையெல்லாம் மேம்படுத்தி உடல், ஆண்மை பலப்படுத்தப்படும்.
யோகாசனங்களை மேற்கொண்டால் முழுப்பலனை பெறலாம். புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் (மீன், வெண்மாமிசம், முட்டைகள்). வெங்காய சாற்றுடன், தேன் நெய், நெல்லிக்காய் பொடி, பால், வெண்ணை இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
செய்ய வேண்டிய யோகாசனங்கள் (முறையாக பயின்ற பின்)
சூர்ய நமஸ்காரம்
ஹாலாசனம்
சிரசானம்
பத்த கோனாசனம்
கூர்மாசனம்
அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம்
பரியாங்காசனம்
பஸ்சிமோத்ஸானம்
மூலபந்தாசனம்
சர்வாங்காசனம்
புஜங்காசனம்
தநுராசனம்
உபவிஷ்ட கோனாசனம்
கந்தாசனம்
சவாசனம்.
கருநிற திட்டுக்கள்
டி.வி. யை ஆன் செய்து எந்த சேனலை வேண்டுமானாலும் பாருங்கள். எல்லா சேனலிலும் வரும் முக்கிய விளம்பரம் கறுத்த முகத்தை சிவப்பாக்குவது பற்றித் தான். மேனியை 7 நாட்களில் சிவப்பாக்கும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி ஏமாறுபவர்கள் ஏராளம். எந்த க்ரீமும், சோப்பும், நமது ஒரிஜினல் தோல் கலரை மாற்ற முடியாது என்பது தான் நிதரிசனமான உண்மை. சிவப்பு நிறம் வேண்டுமானால் வெய்யில், மற்றும் சில சர்ம பாதிப்பினால் கறுப்பாகுமே தவிர, கறுத்த நிறம் அல்லது மாநிறம் சிவப்பாவது கடினம். உங்கள் சருமத்தின் அசல் வண்ணம் சிவப்பாக இருந்து வெய்யில் போன்ற காரணங்களால் கறுத்துப் போனால், அதை, அசல் வண்ணத்தை ஒரளவு திரும்பப் பெறலாம். மற்ற படி உங்களின் பிறவிக் கலரை மாற்ற இயலாது.
அழகு நிலையங்களில் ப்ளீச்சிங் செய்து கொண்டால் என்று நீங்கள் கேட்கலாம். முகத்தின் கருமையை ஒரளவு ப்ளீச்சிங் நீக்கும். ஆனால் தற்காலிகமாகத்தான்.
சர்மத்திற்கு வண்ணத்தை தருவது, வர்ணமூட்டியான, பழுப்பு நிற மெலானின் தான். மெலானின் சில பிரத்யேக செல்களால் தயாரிக்கப்படுகிறது. இது தோலில், முடியில், கண் விழிகளிலும் காணப்படுகிறது. தோலில், மேல் பகுதியான எபிடெர்மிஸ், மெலானோசைட்ஸ் செல்களால் மெலானின் தயாரிக்கப்பட்டு, இதர சர்ம செல்களுக்கு பரவுகிறது.
சிகப்பு வெள்ளை நிறத்தோடு பிறக்கும் வெள்ளைக்காரர்களுக்கு மெலானின் மிக குறைவாக இருக்கும். பழுப்பு நிறத்தவர்களுக்கு நடுத்தர அளவிலும், மிகக் கறுத்த நிறமுள்ளவர்களுக்கு மிக அதிகமாகவும் மெலானின் இருக்கும்.
சூரிய ஒளி, மெலானோசைட்ஸ்களை தூண்டி, அதிக மெலானினை சுரக்க வைக்கிறது. இதனால் தான் வெய்யிலில் உடல் கருத்து விடுகிறது. இந்த பாதிப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது.
கருவளையங்கள்
முகத்தில் அல்லது இதர சரும பிரதேசங்களில், கறுமையான ஒட்டுக்கள் உண்டாகலாம். இதை ஹைபர் பிக்மென்டேஷன் என்பார்கள். இந்த கருநிற திட்டுகளை சுற்றியுள்ள சர்மம் நார்மல் கலரில் இருக்கும். எல்லா இனத்தவர்களுக்கும் இத்தகைய கருந்திட்டுக்கள், வளையங்கள் ஏற்படுவது சகஜம். வெய்யிலால் மெலானின் அதிகமாவது முக்கிய காரணம்.
சில சந்தர்ப்பங்கள் – கர்ப்பமாதல், அடிசன் வியாதி அட்ரீனல் சுரப்பி பாதிப்பு இவைகளும் மெலானின் உற்பத்தியை தூண்டி விடும். சில மருந்துகளும் ஆன்டி – பையாடிக் கருமை திட்டுக்களை உண்டாக்கலாம்.
மெலாஸ்மா
உடலில், குறிப்பாக முகத்தில் ஏற்படும் பழுப்பு கருநிற ஒட்டுக்கள் இதன்
அறிகுறிகள். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது தோன்றுவது சகஜம்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு இந்த கருமையான
திட்டுக்கள் முகத்தில் தோன்றலாம். ஆண்களுக்குக் கூட ஏற்படலாம். ஆசிய
இனத்தவருக்கு மெலாஸ்மா தோன்றுவது அதிகம்.
மெலஸ்மாவால் முகத்தில் இரு புறங்களிலும் ஒரு மாதிரியான கருமை திட்டுக்கள் தோன்றும். கன்னங்கள், நெற்றி, மேல் உதடு, மூக்கு – இந்த பிரதேசங்களில் தோன்றும். சிலருக்கு முகத்தின் ஒரு பக்கம் மட்டும் தோன்றலாம்.
இந்த கரு வளையங்களால் எரிச்சலோ, நமைச்சலோ ஏற்படாது. முகம் விகாரமாக தெரிவது தான் இதன் விளைவு. சூரிய ஒளியிலிருந்து காக்கும் கிரீம்கள், ஹைட்ரோ – குவின்னோன், ரெடினாயிக் அமிலம் உள்ள கிரீம்கள், மெலாஸ்மாவுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.
முகப்பருக்களும் கருமை நிறத் திட்டுக்களை ஏற்படுத்தும். சிலருக்கு, குறிப்பாக பெண்களுக்கு சூரிய வெப்பம் சருமத்தை சீக்கிரமாக தாக்கி, கருமை நிறத்தை உண்டாக்கும்.
உடலின் மடிப்புகளில் அக்குள், அடிவயிறும் தொடையும் சேரும் பாகம், கழுத்து கருமையான இடங்கள் தென்பட்டால் அது அகான்தோசிஸ் நிக்ரான்ஸ் ஆக
இருக்கலாம். இந்த நிலைமை புற்று நோயை குறிக்கும். எனவே உடல் மடிப்புகளில் கரு நிற ஒட்டுக்கள் தோன்றினால் உடனே டாக்டரை அணுகவும்.
ஆயுர்வேதம்
ஆரோக்கிய சர்மம், சரியான லிவர் செயல்பாடுகள், நல்ல ஜீரண சக்தி, உணவுச்சத்துக்கள் சரிவர கிரகிக்கப்படுவது, கழிவுகள் சரிவர வெளியேறுவரை குறிக்கிறது என்கிறது ஆயுர்வேதம். உடலின் கண்ணாடி சர்மம். முகத்தை பாதுகாக்க, கருமை நிற திட்டுக்களை போக்க பல மூலிகை மருந்துகள் ஆயுர்வேதத்தில் உள்ளன.
மூலிகைகள்
வேம்பு – சர்மப் பாதுகாப்புக்காவும், பல தொற்று நோய்களை தடுப்பதாகும். தொன்று தொற்று பயன்படுத்தப்படுகிறது. கிருமி நாசினி.
மஞ்சள் – சிறந்த கிருமி நாசினி. ஆன்டி – ஆக்ஸிடான்ட்.
நாயுருவி – சர்மத்தை காக்கும்.
குப்பைமேனி – சொறி, சிரங்குகள் வராமல் தடுக்கும்.
பூவரசு – சோரியாஸிஸ், சொறி சிரங்குகள் முதலிய சர்ம நோய்களை தவிர்க்கும்.
கடுகரோகிணி – சரும தோஷங்களை போக்கும். சர்மத்தின் நீர் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும்.
வல்லாரை – ஞாபக சக்தியை அதிகரிக்கும் இந்த மூலிகை சர்ம நோய்களையும் தீர்க்கும்.
கருப்பு தாமர் – சர்ம நோய்களுக்கு நல்லது. நாட்பட்ட சரும பாதிப்புகளை போக்கும்.
கோவைக்காய் – சர்ம பளபளப்பை அதிகரிக்கிறது.
புங்கம் – சர்ம நோய்களுக்கு இதன் விதைகள் பலனளிக்கின்றன.
கற்றாழை – இப்போது கற்றாழை இல்லாத மேனி அழகு சாதனங்கள் இல்லை. கற்றாழை சாற்றை முகத்தில் தடவி வர மாசு, மருக்கள், கருமை வளையங்கள் மறையும்.
கருமையான சர்மத்திற்கு
ஆரஞ்சு பழத்தின் தோல், பப்பாளிப் பழத் தோல் – ஒவ்வொன்றிலும் 100 கிராம் எடுத்து, நிழலில் உலர வைத்து, பொடியாக்கிக் கொள்ளவும். இந்த பொடிகளை ரோஜா – பன்னீரில் குழைத்து முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 (அ) 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.
மருதாணிவேர், வேப்ப இலைகள், வேப்ப விதைகள் – தலைக்கு 100 கிராம் எடுத்து நிழலில் நன்றாக உலர வைத்துக் கொள்ளவும். பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும். 1 தேக்கரண்டி அளவில் இந்த கலவைப் பொடியை எடுத்து தண்ணீரில் (ஒரு கப்) போட்டு ஓரிரவு ஊற வைக்கவும். மறுநாள் மேல் நிற்கும் தண்ணீரை எடுத்து விட்டு, கீழிருக்கும் மீதியை (களிம்பை) முகத்தில் உள்ள கருமை திட்டுக்களில் தடவிக் கொள்ளவும்.
கண்களின் கீழ் வரும் கருவளையங்கள்
என்னதான் மேக் – கப் செய்து கொண்டாலும், முகத்தின் கருப்புப் பிரதேசங்கள் கண்களின் கீழ் காணப்படும் கருவளையங்கள், முக அழகை கெடுக்கின்றன. கண்களின் கருவளையங்களுக்கு காரணங்கள்
சூரிய வெப்பம், வெய்யிலில் அலைவது
அலர்ஜிகள்
பரம்பரை
வயது
போஷாக்கான உணவின்மை
களைப்பு, தூக்கமின்மை
ஆயுர்வேதம் சொல்லும் காரணம் – உடலில் நச்சுப் பொருட்கள்
சேர்ந்திருப்பது. எனவே ஆயுர்வேத சிகிச்சையில் முதலில் உடலின் கழிவுப் பொருட்கள் முழுமையாக நீக்கப்படுகின்றன. பிறகு மூலிகை தைல மசாஜ் போன்றவற்றால் சர்மம் புதுப்பிக்கப்படுகிறது.
கருவளையங்களை போக்க சில டிப்ஸ்
அநேகமாக எல்லோருக்கும் தெரிந்தது, வெள்ளரிக்காயை உபயோகிப்பது. மெல்லிய வட்டங்களாக நறுக்கி, டைரக்டாக கண்களின் மேல் 15 நிமிடமாவது வைத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தால் ஏற்படும் கருவளையங்களுக்கு வெள்ளரிக்காய் நல்லது.
ஜாதிக்காயை அரைத்து பூசலாம். பாதாம் பருப்பை பாலில் அரைத்தும் கண்களை சுற்றி போடலாம்.
பஞ்சு துண்டுகளை பன்னீரில் நனைத்து கண்களின் மேல் போடலாம்.
எலுமிச்சம் சாற்றை கண்களை சுற்றி கருவளையங்கள் மேல் தடவ அவை மறையும். முழங்கை, முழங்கால்களில் தோன்றும் கருமையை போக்கவும் எலுமிச்சை சாற்றை உபயோகிக்கலாம். தக்காளிச் சாற்றையும் உபயோகிக்கலாம்.
சீரான உணவு – வறுத்த, பொரித்த உணவுகளை விட, ‘கூட்டு’ போன்ற வேக வைத்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
அதிகமாக தண்ணீர் குடிக்கவும்.
பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.
உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளவும்.
மலச்சிக்கலை தவிர்க்கவும்.
வைட்டமின் இ எண்ணையால் கண்களை சுற்றி மசாஜ் செய்யவும். இதை தினசரி படுக்குமுன் செய்யவும்.
நன்றாக 7 மணிநேரம் தூங்கவும்.
உருளைக்கிழங்கை துருவி சாறு எடுத்துக் கொள்ளவும். தினமும் கருவளையத்தின் மீதிபூசி, 15 நிமிடம் காய்ந்த பின் கழுவவும், தோலுடன் கூடிய உருளைகிழங்கின் துண்டுகளையும் கருவளையத்தின் மீது 15 நிமிடம் வைத்துக் கொள்ளலாம்.
உபயோகித்த டீத்தூள் அடங்கிய சிறிய பைகளால் கண்களை சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம்.
டென்ஷனை குறைக்கவும், யோகா பயில்வது பலனளிக்கும்.
Diabetes Ayurvedic Treatment Tamil
சர்க்கரை வியாதி புதிதாக வந்த வியாதியல்ல. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியர்களுக்கு தெரிந்த வியாதி. ஏன், உலகின் தொன்மையான வியாதிகளில் சர்க்கரை வியாதியும் ஒன்று. ஆயுர்வேதத்தில், சரகஸம்ஹிதையில் ‘ ப்ரமேஹா’ என்ற தலைப்பில், 20 சிறுநீர் கோளாறுகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இந்த இருபதில் “மதுமேஹா” என்று சர்க்கரை வியாதி குறிப்பிடப்படுகிறது.
சர்க்கரை வியாதி (நீரிழிவு நோய்), புற்றுநோய் அல்லது மாரடைப்பு போன்ற உயிர் கொல்லி நோயல்ல, அதை நோய் என்று சொல்வதை விட, உடலின் குறைபாடு என்றே கூறலாம். ஆனால் பல தொல்லைகளையும், வேதனைகளையும் தரும் ஒர் பெரிய, சிக்கலான குறைபாடு. இதை குணப்படுத்த முடியாது. இவ்வளவு வருடங்களாக நம்முடன் வாழ்ந்து வந்தும் இதற்கு பரிபூரண குணம் காணமுடியாமல் போவதிலிருந்தே இந்த நோயின் கடுமையை உணரலாம். ஆனால் தற்போதைய மருத்துவ கண்டுபிடிப்புகளால் இந்தக் குறைபாட்டை கட்டுபடுத்தலாம்.
நீங்கள் 40 வயதை தாண்டியவராக இருந்து, சாதாரண ஐ§ரத்திற்காக டாக்டரிடம் சென்றால் அவர் கேட்கும் முதல் கேள்வி “உங்களுக்கு” சுகர்” உண்டா, ஙி.றி. உண்டா” என்பது தான். நீங்கள் இல்லையென்றால், அவர் உங்களை ஏற இறங்க, செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த மனிதனை பார்ப்பது போல் பார்ப்பார்! “உடனே டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்” என்பார்.
அவ்வளவு சாதாரணமாகிவிட்டது சர்க்கரை வியாதி. இந்தியாதான் தற்போது அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள தேசம். இந்த புள்ளி விவரங்கள் திகைப்பூட்டுகின்றன. அதுவும் இளவயதினர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவது அதிகமாகிவிட்டது. சர்க்கரை வியாதியும் ஒர் “பரவும்” (ணிஜீவீபீமீனீவீநீ) வியாதியாகிவிட்டது. டயாபடீஸ் பற்றிய விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் மனிதகுலத்திற்கு பெரும் சவாலான இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.
சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் அதனுடன் வாழ நினைத்தால் வாழலாம். எப்படி என்பதை வரும் பக்கங்களில் நீங்கள் பார்க்கலாம்.
உயர் இரத்த அழுத்தமும் நீரிழிவும்
நீரிழிவு நோய்க்கும், உயர் இரத்த அழுத்தம், இவை இரண்டுக்கும் உள்ள பிணைப்பு பலமானது. கிட்டத்தட்ட 50 சதவிகித நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்தமும் உடையவர்கள். இந்த பிணைப்பினால் பல வியாதிகள் / பாதிப்புகள் உண்டாகும்.
நமது இதயம், ஒரு பம்ப் போன்றது. ரத்த ஓட்டத்தை உடலெங்கும் பாய்ச்ச ப்ரஷர் – அழுத்தம் தேவை. இதயம் பம்ப் செய்யும் போது ஏற்படும் ரத்த அழுத்தம் சிஸ்டாலிக் எனப்படும் அதன் பிறகு இதயம் விரிவடைந்து ரத்தத்தை பெறுகிற போது அழுத்தம் குறையும். இதை டயாஸ்டிலிக் என்பார்கள். நார்மல் அளவு 120 / 80. அதாவது ஸிஸ்டாலிக் 120 டையாஸ்டாலிக் 80.
நமது வாழ்நாள் முழுவதும் வேலை செய்து வரும் இதயம், வயதாக வயதாக, பலவீனப்பட்டு வரும். வேறு பல கோளாறுகள் நிகழ்ந்து நாளங்கள் பாதிக்கப்பட்டால் இதயம் செயலிழந்து விடும். இது தான் ஹார்ட் – அட்டாக்.
ரத்த ஓட்டத்தை பாதிப்பது டயாபடிஸ் வியாதி. இரத்த நாளங்களை டயாபடிஸ் சிதைத்து விடும். உயர் இரத்த அழுத்த வியாதியை மௌனமான உயிர் கொல்லி நோய் என்கிறோம். இதனுடன் மற்றொரு தீவிரவாதியான, மௌன கொலையாளி டயாபடிஸீம் சேர்ந்து விட்டால், ஆபத்துகள் அதிகமாகும். எனவே சர்க்கரை நோயாளிகள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்தல் அவசியம்.
பல நிபுணர்கள், டயாபடிஸ் நோயாளிகளின் இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் சிகிச்சை நீரிழிவு இல்லாதவர்களின் சிகிச்சை முறையை விட சிறிது தீவிரம் குறைவாக இருக்க வேண்டும் என்கின்றனர். வீரியம் வாய்ந்த மருந்துகள், டயாபடிஸ் நோயாளிகளின் உடல் உறுப்புகளை பாதிக்கலாம்.
ஆனால் ஒரு நபருக்கு தொடர்ந்து ஒரே நிலையில் 120 / 80 எம் . எம் . எச். ஜீக்கு அதிகமாக ரத்த அழுத்தம் இருந்தால் அவர் உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறார் என்று கூறலாம். மருத்துவர்கள் இதை “இரத்தக் கொதிப்பு” – ஹைபர் டென்ஷன் என்பார்கள்.
ரத்த அழுத்தம் அதிகமாக குழாய்களில் இரத்தம் பாயும் வேகம் அதிகமாகும் வேகமாக பாயும் இரத்தம் சில கொழுப்புகள் ரத்த ஓட்ட தடையை உண்டாக்கி விடும். மூளைக்கு போகும் நாளங்கள் அடைப்பட்டால் மூளைத்தாக்கு (Stroke) ஏற்படும். பக்க வாதம் உண்டாகும். இதயத்திற்கு செல்லும் குழாய்களில் தடை ஏற்பட்டால், மாரடைப்பு வரலாம்.
அறிகுறிகள்
தூக்கமின்மை
தலைவலி
கோபம் வருதல்
தலைசுற்றல்
களைப்பினால் முகம் வாடுதல் போன்றவை ஏற்படலாம்.
தோல் வியாதிகளும் நீரிழிவும்
சர்க்கரை வியாதியால் தோலுக்கு முழுமையாக ரத்தம் பாய்வதில்லை. தோல்களின் உணர்வுத்திறன் இதனால் குறைகிறது. அடிக்கடி புண்கள் ஏற்படும். நீரிழிவு புண்கள் ஆழமாக போய், ஆறுவது தாமதமாகும். பாக்டீரியாவும், ஃபங்கஸ் (Fungus) பெருகிப் பரவும். இதனால் சர்மம் சிதைகிறது. சர்க்கரை லெவல் ரத்தத்தில் அதிகமானால், வெள்ளை அணுக்கள் புண்களின் கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தியின்றி தோற்றுப் போகின்றன. வருமுன் தடுப்பது, வந்த பின் வரும் வருத்தத்தை தவிர்க்கும்.
பூஞ்சன தொற்று (Candida infections)
பிறப்புறுப்புகளை யீஸ்ட் (Yeast) (புளித்த காடி) தாக்குவது டயாபடிஸில் சர்வ சாதாரணமாகும். அரிப்புக்கு இந்த தொற்று நோய் காரணம். பெண்களுக்கு அரிப்பு, நமைச்சலுடன், வெள்ளைபடுவதும் அதிகமாகும். பல சரும உபத்திரவங்களை ஃபங்கஸ் உண்டாக்கும்.
டினியா க்ருரிஸ் (Tinea cruris) (Jock Itch) (படர் தாமரை)
பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும் இந்த அரிப்பு வெய்யிற் காலத்தில் அதிகமாக தாக்கும். பிறப்புறுப்பில் ஆரம்பித்து தொடை இடுக்குகளில் பரவும் இந்த சொறி, சினைப்புகள் சிவந்திருக்கும். வேதனையான இந்த அரிப்பு வியாதி பல தடவை உண்டாகும்.
டினியா பெடிஸ் (Tinea pedis, Athlete’s foot)
இதுவும் வேனிற்காலத்தில் அதிகமாக வரும் தோல் அரிப்பு. உடனே ஒருவருக்கொருவர் தொற்றிக் கொள்ளும் சரும வியாதி, ட்ரைகோபைடின், அல்லது எபிடெர்மோபைடன் ஃபங்கஸால் வருவது. இந்த இரண்டு நுண்ணுயிர்களுக்கும் பிடித்த ஈரமான இடம் கால் விரல்களின் இடுக்கு. சிறு பகுதியாக தோன்றலாம் இல்லை பாதம் முழுவதுமே புண்ணாகலாம். கொப்புளங்கள் தோன்றலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இது பாக்டீரியா தொற்றாகவும் மாறலாம்.
நக படர்தாமரை, நகச்சுற்று, நகச் சொத்தை (Nail ringworm – Tinea unguium)
ட்ரைகோபைடின் தாக்குதல் இந்த நகத்தில் ஏற்படும் சிதைவு. கால் நகங்களில், கை நகங்களை விட அதிகம் வரும். நகம் சதையை விட்டு பிரிந்து, சிதைந்து விடும்
டினியா கேபிடிஸ் (Tinea capitis), தலை படர் தாமரை
இதை தலை மண்டையில் உண்டாக்குவது ட்ரைசோபைடின் தலைமுடி பாதிக்கப்பட்டு சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அரிப்பு ஏற்படும்.
உடல் படர்தாமரை, டினியா கார்போரிஸ் (Tinea Corporis)
உடலில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும் இந்த படர்தாமரை ட்ரைகோபைடன், மைக்ரோஸ்போரம், எபிடெர்மோபையன் இவைகளால் ஏற்படும்.
வாய்ப்புண்கள்
இவை கான்டிடா (Candida) ஃபங்கஸ்களால் நீரிழிவு உள்ள சிறுவர்களை அடிக்கடி தாக்கும். இது சர்க்கரை வியாதியின் பாதிப்பு என்றே கருதப்படுகிறது.
அகான் தோசிஸ் நிக்ரிகன்ஸ் (Acanthosis nigricans)
தோல் மடிப்புகள் தடித்து கறுத்து விடும். மரு, பாலுண்ணி இவை கழுத்தின் பின்புறம், அக்குள், மார்புகளின் கீழே, அடிவயிறு பகுதிகளில் உண்டாகும். பருமன் அதிகமுள்ளவர்களை அதிகம் பாதிக்கும். நீரிழிவு வரும் முன்பே இந்த தோல் வியாதி தோன்றும். இந்த சரும வியாதி இன்சுலின் எதிர்ப்பினால் உண்டாகலாம் என்று கருதப்படுகிறது.
கொப்புளங்கள்
டயாபடிஸ் உள்ள நோயாளிகளுக்கு திடீரென்று கொப்புளங்கள் தோன்றலாம். இவை கை, கால்கள், விரல்கள், பாதம் போன்ற பகுதிகளில் தோன்றும் இவை வலியில்லாதவை, தானாகவே மறையும். இவை அபூர்வமான டயாபடிக் பாதிப்புகள்.
தவிர்க்கும் வழிகள்
கால்களை பராமரிக்கும் யோசனைகளை கடைப்பிடிக்கவும்.
பருத்தி உள்ளாடைகளை அணியவும்.
சர்ம வியாதிகள், புண்கள், காயங்கள் இவற்றின் சிகிச்சைக்கு உங்கள் டாக்டரை அணுகவும். நீங்களாக கடையில் வாங்கி. மருந்துகளை உபயோகிக்காதீர்கள்.
வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்கவும்.
வேப்ப மர இலை, ஆலமரபட்டை, துளசி, மஞ்சள் இவற்றின் பொடிகளை குளிக்கும் நீரில் கரைத்து குளிக்கலாம். இல்லை பாதிக்கப்பட்ட இடங்களை கழுவலாம்.
காயங்களை ஆற்ற, கற்றாழை, மஞ்சள் கலந்த ஆயுர்வேத களிம்புகளை பயன்படுத்தலாம்.
தினமும் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளவும்.
சிறுநீரக பாதிப்புகள்
நீரிழிவு பாதிக்கும் பல உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. நீரிழிவு உண்டான முதல் 5 வருடங்களில், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது அபூர்வம். 15 ஆவது வருடங்களில் உச்சநிலை பாதிப்பை அடைந்து பிறகு குறைந்து வரும். நீரிழிவு நோயின் ‘வயது’ 25 வருடங்கள் ஆகிவிட்டால் சிறுநீரக பாதிப்புகள் அபூர்வம்.
நீரிழிவு வியாதியால் சிறுநீரக ரத்தக் குழாய்கள் விரிவடையும் புரதம் சிறுநீரில் கசியும். இரத்தம் சுத்திகரிப்பு சரிவர நடக்காது. சர்க்கரை வியாதியால் அதிக சர்க்கரை சேர்ந்து, சிறுநீரகம் அதிக சுத்திகரிப்பு வேலையை செய்ய வேண்டி வரும். இந்த அதிக வேலை பளு சிறுநீரகத்துக்கு கேடு விளைவிக்கும். படிப்படியாக ரத்தக்குழாய்களை பாதித்து அடைப்பு, வெடித்தல் இவற்றை நீரிழிவு உண்டாக்கும், சிறுநீரகம் பழுதாகி விடும். இந்த அறிகுறிகள் லேசில் தெரியாது.
சிறுநீரக வியாதிகளுக்கு அல்பூமின் எனும் புரதம் ஏறுமாறு ஆவது ஒரு காரணம். இரத்த ப்ளாஸ்மாவில் உள்ள அல்பூமின் ரத்தக் குழாய்களில் கசிவு ஏற்படாமல், ஹார்மோன் போன்ற மருந்துகளை ரத்த குழாய் வழியே கொண்டு செல்கிறது. இந்த அல்பூமின் நார்மலாக வெளியேற்றப்பட்டால் நல்லது. நார்மல் – 30 மி.கி, 24 மணி நேரத்தில் வெளியேறினால் சரி. இதற்கு மேல், 300 மி.கி. வரை வெளியேறினால் அதற்கு மைக்ரோ அல்பூமினியுரீயா என்பார்கள். டாக்டர்கள் நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில் அபரிமிதமாக அல்பூமின் இருப்பதை சோதனை செய்து பார்ப்பார்கள். சிறுநீரில் அதிகமாக அல்பூமின் இருந்தால், சிறுநீரகம் பழுதடைவதின் முதல் அறிகுறி. வருடத்திற்கு ஒரு முறையாவது மைக்ரோ – அல்புமின் டெஸ்ட் செய்து கொள்வது அவசியம்.
சர்க்கரை நோயுடன், உயர் இரத்த அழுத்தமும் உள்ளவர்களின் ரத்த அழுத்தம் அதிகமானால் சிறுநீரகத்தின் குழாய்கள் சுருங்கி பாதிப்படையும்.
சர்க்கரை வியாதியின் வகைகள்
உலக சுகாதார அமைப்பு (WHO) மூன்று விதமாக சர்க்கரை வியாதியை குறிப்பிடுகிறது. டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு (Gestational diabetes). இவை மூன்றும் கணையத்தின் பீடா (Beta)செல்கள் தேவையான அளவு இன்சுலினை சுரக்க முடியாமல் போவதால் தான் உண்டாகும். இருந்தாலும் காரணங்கள் வித்யாசமாகும்.
பழைய பட்டியல் – நீரிழிவின் வகைகள்
1. டைப் 1 ( Type 1)
• இது இன்சுலின் சார்ந்த நிலை (Insulin dependent diabetes mellitus – IDDM).
2. டைப் 2 (Type 2)
• இது இன்சுலின் சாரா நிலை (Non – insulin dependent diabetes mellitus – NDDM ) .
3.கர்ப்ப கால நீரிழிவு (Gestational diabetes)
மேற்சொன்னவை உலக சுகாதார குழுமம் நிர்ணயித்த பழைய வகைகள்.
புதிய பட்டியல் – நீரிழிவின் வகைகள்
1. டைப் 1
நோய் பாதுகாப்பு சக்தியின் குறைபாடு Auto immune.
தானாக உண்டாகும்/ காரணமின்றி ஏற்படும் டயாபடீஸ் - Idiopathic
2. டைப் 2
முக்கியமாக இன்சுலின் எதிர்ப்பால் ஏற்படும் டயாபடீஸ்
முக்கியமாக இன்சுலின் சுரப்பதின் குறைபாடுகளால் வரும் டயாபடீஸ்.
3. கர்ப்ப கால டயாபடீஸ் (Gestational diabetes)
4. இதர வகைகள்
பிறவி கோளாறுகளால் பாதிக்கப்பட்ட கணைய பீடா (Beta) செல்களால் ஏற்படுவது.
இன்சுலின் எதிர்ப்பு, இன்சுலின் தவறாக செயல்படுவது இவற்றால் வரும் டயாபடீஸ்.
கணையத்தை பாதிக்கும் நோய்களால் வருவது. (கணைய டயாபடீஸ்)
என்டோ கிரினோபதியால் (குஷிங் சின்ட்ரோம்) உண்டாவது.
மருந்துகளால் உண்டாகும் டயாபடீஸ் (குளுகோ – கார்டிக் காய்ட்ஸ்) (Gluco corticoids)
தொற்று நோயால் உண்டாவது ( Congenital Rubella)
அபூர்வமான நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் வரும் டயாபடீஸ்
இதர மரபணு கோளாறுகளால் வருவது ( Turner’s Syndrome)
குறிப்பு
இந்த புதிய பட்டியலை உலக சுகாதாரக் அமைப்பு (WHO) அறிவிக்க காரணம் பழைய பட்டியலில் உள்ள Insulin Dependent Diabetic Mellitus (IDDM), Non – Insulin Dependent Diabetic Mellitus (NIDDM) போன்ற குழப்பமான குறிப்பீடுகளை எடுப்பதற்காக. இப்போது இந்த பிரிவுகள் ஒவ்வொன்றையும் விவரமாக பார்ப்போம்.
1. டைப் 1
• உடலில் தானாகவே ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் (ஆடோ – இம்யூன்) கணைய பீடா செல்கள் அழிந்து விடுவதால் ஏற்படும் நீரிழிவு இது.
• இந்த டைப் டயாபடீஸீக்கு எந்த நிலையிலும் தேவையான சிகிச்சை இன்சுலின் ஊசி போடுவது தான். அடிக்கடி ரத்த குளுக்கோஸ் அளவை பரிசோதிப்பது அவசியம். வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
• இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளாவிட்டால், கேடோ அசிடோஸிஸ் (diabetic ketoacidosis) ஏற்பட்டு “கோமா” நிலைக்கு போக நேரிடும். இந்த டைப் நோயாளிகளுக்கு தான் சர்க்கரை நோயின் சகல பாதிப்புகளும் ஏற்படுகிறது.
• டைப் 1 (a) வகைகள் மேலும் சில ஆடோ – இம்யூன் வியாதிகளுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம். அவை கிரேவ்ஸ் வியாதி (Graves diseases), தைராய்டிடைஸ் (Thyroiditis), ஆடோ இம்யூன் அடிசன்ஸ் வியாதி ( Auto immune Addisons disease), ஓவரிகளின் தோல்வி(Ovarian failure), சோகை.
• இந்த வகை நோய் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெரும்பாலும் வரும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் வரும் சர்க்கரை வியாதிக்கு வித்யாசங்கள் உண்டு. மொத்த டயாபடீஸ் நோயாளிகளில் 5 விழுக்காடு நோயாளிகள் டைப் 1 னால் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை வியாதி பிறந்த குழந்தைக்கும் வரலாம். சிறுவர்களுக்கு வருவதால் இது ஜுவைனல் டயாபடிஸ் (Juvenile diabetes) என்றும் கூறப்படுகிறது.
• டைப் 1 நோயாளிகளுக்கு இருக்க வேண்டிய ரத்த சர்க்கரை அளவு 120 மிகி / டெ.லி. அடிக்கடி தாழ் நிலை சர்க்கரை குறைவை அடைபவர்களுக்கு டாக்டர்கள் 140 – 150 மி.கி / டெ.லி. வரை கூட இருக்கலாம் என்கிறார்கள். 200 மி.கி. / டெ.லி. அளவுக்கு மேல் போனால் அடிக்கடி சிறுநீர் போவது, உடல் உபாதைகள் தோன்றலாம். 300 க்கு மேல் போனால் டாக்டரை அணுக வேண்டிய நிலை. தாழ் நிலைக்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
• மனச்சோர்வு அடையாமல் உரிய சிகிச்சை மேற்கொண்டால், நோயாளிகள் நார்மல் வாழ்க்கை வாழலாம். விழிப்புணர்வு, சரியான பராமரிப்பு, சரியான அளவு இன்சுலினை செலுத்திக் கொள்வது, வாழ்வு முறை மாற்றங்கள் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.
2. டைப் 2 ( Non – insulin dependent diabetes mellitus – NDDM )
• இது இன்சுலின் சாராத நிலை
• இது 30 வயதுக்கு மேற்பட்டவர்களை, நடுத்தர வயதினரை பாதிக்கும்.
• பழைய முறையில், இன்சுலின் சாராத பிரிவு என்று குறிப்பிடப் பட்டது. இந்த டைப் 2 தான் அதிகமாக காணப்படும் நீரிழிவு வியாதி. சேதப்பட்ட பீடா’ (Beta) செல்கள், இன்சுலின் ரிசெப்டர்களுக்கு (Receptors) எதிர்ப்பு தெரிவிக்கும் உடல் நிலை, மற்றும் கல்லீரல் சர்க்கரை உற்பத்தி அதிகமாதல் போன்றவை இந்த டைப்பின் அம்சங்கள். இந்த டைப் 2 வை சில டாக்டர்கள் இரண்டு வகையாக – பருமனானவர்கள் மற்றும் பருமனில்லாதவர்கள் – என்று பிரிக்கின்றனர்.
• உடல் பருமன் அதிகம் உள்ளவர்களில் 55 சதவிகிதத்தினருக்கு இந்த டைப் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. மொத்த சர்க்கரை நோயாளிகளில் 95% டைப் 2 நோய்க்கு ஆளாகின்றனர். இந்த உடல் பருமன் இடுப்பை சுற்றி, “டயர்” (Tyre) போல் அடிவயிறு இருப்பவர்களுக்கு டைப் – 2 வரும் சாத்ய கூறுகள் அதிகம். அதுவும் வயதும் ஆகி, குண்டாகவும் இருந்தால் இதன் தாக்கம் ஏற்படுவது சகஜம். சீக்கிரம் கண்டுபிடிக்கப்பட்டால் கணையத்தை ஊக்குவிக்கும் பல மருந்துகள், ஏற்பாடுகளால் சரிவர சிகிச்சை மேற்கொள்வது சுலபமாகும். இன்சுலின் ஊசி தேவைப்படாமல் போகலாம். ஆனால் டைப் – 2 அறிகுறிகள் தென்பட நாளாகும்.
• குறைந்த இன்சுலின் சுரப்பு, இன்சுலினை புறக்கணிக்கும் தன்மை மற்றும் இன்சுலின் receptor களின் குறைபாடு என்ற மூன்று வித விஷயங்களின் சேர்க்கையால் டைப் – 2 ஏற்படுகிறது.
• உடற்பயிற்சி இல்லாத, உடலுழைப்பும் இல்லாத சோம்பல் வாழ்க்கை வாழ்பவர்கள் இந்த டைப் – 2 க்கு ஆளாவார்கள்.
• டைப் 2 டயாபடீஸிக்கு பரம்பரை ஒரு வலுவான காரணம். இதை விரிவாக பின்னால் பார்ப்போம்.
• அபூர்வமாக டைப் 2 வியாதியஸ்தர்களுக்கு உடல் நீர்ச்சத்து குறை நிலை (dehydration) தீவிரமாக உண்டாகும்.
• டைப் – 2 டயாபடீஸில் அறிகுறிகள் பல வருடங்களுக்கு தென்படாமல் போகும். இதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன.
3. கர்ப்ப கால நீரிழிவு (Gestational diabetes)
இது ஒரளவு டைப் – 2 நீரிழிவை போன்றது.
• கர்ப்ப ஹார்மோன்களால் இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும்.
• குழந்தை பிறந்த உடன் இந்த நீரிழிவு மறைந்து விடும். தற்காலிகமான நிலை தான் இது.
• தற்காலிகமாக இருந்தால் கூட இதற்கு சிகிச்சை செய்யா விட்டால் தாயாருக்கும், கருவுக்கும் ஆரோக்கிய குறைவு ஏற்படும். அதிக உடல் எடையுடன் ( 4 கிலோக்கு மேல்) குண்டான குழந்தை பிறக்கும். பல குறைபாடுகள் – இதய நோய், நரம்பு மண்டல பாதிப்பு – இவை பிறவி நோய்களாக – குழந்தையை பாதிக்கும். அதிக இன்சுலின், பித்தநீர், இவை பல சிக்கல்களை உண்டாக்கும்.
•கர்ப்பகால சர்க்கரை நோய் குறை பிரசவம் நேரிட காரணமாகலாம்.
• குழந்தை இறந்து பிறக்கக் கூடும். தாயின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.
• பிறந்த குழந்தை பிற்காலத்தில் நீரிழிவு நோயாளியாக வாய்ப்புகள் அதிகம்.
• இதனால் கர்ப்பிணிப் பெண்கள், பிரசவம் வரை ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
3.இதர வகைகள்4 (a) பிரிவில் உள்ள பிறவிக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட கணையத்தால் ஏற்படும் டயாபடீஸ், 25 வயதிலேருந்து உண்டாகலாம். இந்த டைப் இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் வரும். ஆனால் இன்சுலினிலேயே குறைகள், கெட்டு போன இன்சுலின் இவற்றால் வருவது டைப் 4(b).
4. நாம் புரிந்து கொள்ள வேண்டியது – பிறவிக் கோளாறுகள் இரு வகையில் கணையத்தை தாக்கும். ஒன்று நல்ல, சுத்தமான இன்சுலினை கணையம் சுரந்தாலும், அளவு போதாமல் போகும். மற்றொன்று இன்சுலின் ஹார்மோன் கெட்டிருக்கலாம்.
5. 4 (c) - புற்றுநோய் தவிர கணையத்தை முற்றிலும் முடக்கும் வியாதிகளால் வரும் டயாபடீஸ் 4 (c) டைப். இது குறைவான ஊட்டச்சத்தின் காரணமாக ஏற்படலாம் என்று முன்பு கருதப்பட்டது. இந்த கருத்து கைவிடப்பட்டு இப்போது நாளமுள்ள சுரப்பிகள்(Exocrine) , கணைய (Pancreas) நோய்கள் தான் காரணம் என்று மாற்றப்படுகிறது. கணையத்தில் கற்கள், ஃபைராய்ட்ஸ் இருப்பதை அல்ட்ரா ஸோனோகிராஃபி, CAT ஸ்கான் மற்றும் MRI Scan இவைகளால் கண்டுபிடித்து விடலாம்.
6. டைப் 4 (d) – பல ஹார்மோன்கள் – வளர்ச்சி ஹார்மோன், கார்டிஸோன் (Cortisone) குளுகோஜன் (Glucagon) - இன்சுலினுக்கு எதிரிகளாகலாம். இவை அதிகம் சுரந்து டயாபடீஸை உண்டாக்கலாம். இந்த டைப் டயாபடீஸ், அதிகம் சுரக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தினால், குணமாகி விடும்.
7. டைப் 4 (e) – மருந்துகளால் ஏற்படும் நீரிழிவு வியாதி. குளுகோகோர்டி காய்ட்ஸ் (Glucocorticoids). சிறுநீர் போக உதவும் தியாஸைட் டையூரிடிக்ஸ் (Thiazide diurectis). பினெ டாய்சின் (Phenetoyin) போன்ற பல மருந்துகள் டயாபடீஸை ஏற்படுத்தும்.
8. டைப் 4 (f) - ரூபெல்லா, அடினோ வைரஸ், ஸைடோமெகலோ வைரஸ் போன்றவற்றாலும் வைரஸ் தொற்றால் வரும் மம்ஸ் (Mumps) போன்றவற்றாலும் கணைய பீடா செல்களை பாதித்து டயாபடீஸ் வர காரணமாகலாம்.
9. டைப் 4(g) Stiff man’s syndrome (உடல் தசைகள் விறைத்துப் போய் ‘கட்டை’ போல் கெட்டியாவது) போன்ற நரம்பு மண்டல கோளாறுகள் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள், டயாபடீஸால் தாக்கப்படுவார்கள்.
10. டைப் 4 (h) - மரபணு கோளாறுகள் (Down’s syndrome, Turner’s syndrome) இவைகளாலும் டயாபடீஸ் தோன்றலாம்.
பன்னீர்செல்வம் பார்க் பெயர் மாறியது எப்படி?
ஈரோடு நகரின் மையப்பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா எப்போதுமே பரபரப்பாக காணப்படும். பொதுவாக ஒரு இடத்தில் ஒரு தலைவரின் பெயரில் பூங்கா அல்லது சாலை பெயர் வைப்பதற்கு ஏதாவது ஒரு சம்பவம் காரணமாக இருக்கும். தற்போது பன்னீர்செல்வம் என அழைக்கப்படும் இடத்தில் ஒரு பூங்கா கூட கிடையாது. பன்னீர்செல்வம் சிலையும் கிடையாது. இந்த பெயர் உருவானதன் பின்னணியில் பெரிய வரலாறே உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதிக்கு வெல்ஸ் பார்க் என்று தான் பெயர். ஈரோடு நகராட்சி தலைவராக இருந்தவர் வெல்ஸ். அப்போது அந்த பகுதியில் ஏராளமான மரங்கள் இருக்கும். மரங்களின் மத்தியில் மாலை நேரத்தில் வெல்ஸ் செல்வது வழக்கம். இதனால் வெல்ஸ் பார்க் என்றே அழைக்கப்பட்டு வந்தது.
ஈரோடு நகரசபை தலைவராக தந்தை பெரியார் பதவி வகித்த காலகட்டத்தில் தஞ்சாவூர் நகரசபை தலைவராக ஏ.டி பன்னீர் செல்வம் பதவி வகித்தார்.பின்னாளில் இருவரும் நீதிக்கட்சியில் இணைந்து இந்தி மொழி திணிப்பை கண்டித்து 1938ல் போராட்டம் நடந்தது. தந்தை பெரியார் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சென்னை மாகான சட்டமன்ற தலைவராக இருந்த பன்னீர்செல்வமும் இந்தியை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பன்னீர்செல்வம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது நீதிக்கட்சி சார்பில் மாநாடு ஈரோட்டில் நடந்தது.
இந்த மாநாட்டில் தந்தை பெரியாருக்கு மாலை அணிவிக்க வந்தார்கள். இதை தடுத்த பெரியார், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறையில் உள்ள ஏ.டி.பன்னீர்செல்வத்திற்கு மாலை அணிவிப்பது போல அவரது படத்தை நாற்காலியில் வைத்து பன்னீர்செல்வம் படத்திற்கு மாலை அணிவித்த பிறகே கூட்டத்தை நடத்தினார். 1940ம்ஆண்டு மார்ச் 1ம்தேதி ஏ.டி.பன்னீர்செல்வம் கராச்சியில் இருந்து விமானத்தில் வந்தபோது திடீரென விமானம் கடலில் விழுந்தது. இந்த விபத்தில் பன்னீர்செல்வம் உயிரிழந்தார். படத்தை வைத்து மாலை அணிவித்ததன் அடையாளமாக அன்று முதல் அந்த பகுதி பன்னீர்செல்வம் பூங்கா என அழைக்கப்பட்டது. பூங்கா என்பதற்கான எந்த அடையாளமும் இப்போது அந்த இடத்தில் இல்லை.
கோவை விரிவான கதை
கோவை நகரம் என்பதற்கு 100 ஆண்டுக்கு முந்தைய அடையாளம் கோனியம்மன் கோயிலும், அதை சுற்றி அமைந்த ராஜ வீதி, கோட்டைமேடு, கெம்பட்டி காலனி, வெரைட்டிஹால் ரோடு, காட்டூர் ஆகிய பகுதி மட்டுமே. கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அப்போது பிளேக் நோய் பரவி ஏராளமான பேர் மடிந்தனர். பிளேக் நோய் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கென தனித்தனி குடியிருப்பு உருவாக்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக குடியேறிய பகுதி தேவாங்கர்பேட்டையானது. தற்போதைய ராம்நகர் பகுதியில் பிராமணர்கள் அதிகளவில் குடியேறியுள்ளனர். முன்பு அக்ராஹரம் என அழைக்கப்பட்டது. பின்னர் ராம்நகர் என மாற்றப்பட்டது.
வீடு இழந்த மக்களை குடியேற்றுவதற்காக மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோடு ஆகியவற்றுக்கு இடையே இருந்த 350 ஏக்கர் தோட்ட நிலத்தை நகரசபை நிர்வாகமே வாங்கி விசாலமான மனையிடங்களாக பிரித்து கொடுத்தது. அந்தப் பகுதி பின்னாளில் கோவை நகரசபை தலைவராக இருந்த ரத்தினனசபாபதி முதலியார் முயற்சியில் வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே அந்த பகுதிக்கு அவரது பெயரும் சூட்டப்பட்டது. அதேபோல் அப்போது நகரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்களின் பெயரால் சாலைகளும் அமைக்கப்பட்டது. அப்போது ராமநாதபுரம், புலியகுளம், பாப்பநாயக்கன்பாளையம் போன்ற கிராமங்கள் தனித்தனியாக தான் இருந்தன. நாளடைவில் கோவை நகர வளர்ச்சியில் இந்த பகுதிகளும் இணைக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தின் வரலாறு
வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும் அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி.
1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது. இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இருக்கிறது. இங்கு பாலாறும் பொன்னையாறும்
ஓடுகின்றன .வேலூர் மாவட்டத்தின் வெயில் ஊருக்கெல்லாம் தெரிந்த செய்தி. வடஆற்காடு பிரிக்கப்பட்டு அம்பேத்கார் மாவட்டமாக விளங்கிறது.பின்பு வேலூர் மாவட்டமாக பெயர் மாற்றப்பட்டது.
வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார்.
பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ்
கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக
இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.
வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயபட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து தரிசித்து செல்கின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் வரலாறு
கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது.
கோயம்புத்தூர் முற்கால சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராஷ்டிரகுட்டர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள் மற்றும் விஜயநகர பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றி பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.
கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது.
1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராக செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.
அரியலூர் மாவட்டத்தின் வரலாறு
அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம், இது ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு சிமெண்ட் ஆலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில். இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு.
திருக்கோயில்கள்
அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர்
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி, அரியலூர்
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர்
அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி, அரியலூர்
அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், உடையவர் தீயனூர், அரியலூர்
முக்கிய ஆறுகள் : கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு.
முக்கிய நகரங்கள் : அரியலூர், ஜெயங்கொண்டம்.
புகைவண்டி நிலையங்கள் : அரியலூர், ஒத்தக்கோவில், வெல்லூர், செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர், ஈச்சங்காடு.
அரியலூர் மாவட்டத்தின் சிறப்புகள்
சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளம் கொண்ட மாவட்டம்.
மாநிலத்தின் செம்மண் படிவங்கள் முந்திரிப் பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
வேட்டக்குடி கரைவெட்டி ஏரி பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும் சரணாலயம்.
அணைக்கரைப் பாலம்: 150 வருட பழமையான இப்பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது தஞ்சாவூர் - கும்பகோணம் நகரங்களை சென்னை மார்க்கத்தில் இணைக்கிறது.
பரப்பு - 1,949.31
மக்கள் தொகை - 6,95,524 | ஆண்கள் - 3,46763 | பெண்கள் - 3,48761
உயரம் - கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 249 மீட்டர் (820 அடி)
வரலாறு சென்னையின் வரலாறு
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.
17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. சென்னையின் பொருளாதாரம் பலத்தரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது.
ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. மேலும் ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரிப்பாகங்கள் உற்பத்தியிலும் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
வரலாறு
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.
1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம் சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.
1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது.
சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது.
1688 ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது.
1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.
வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது.
புவியியல்
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது. சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீ. சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாக கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன
கூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாக பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும். 13 கி.மீ. நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.
சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது மாநகராட்சியின் தலைவர் மேயர் - சைதை சா. துரைசாமி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது.
தமிழகத் தலைமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. பின் 13 மார்ச் 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். மேலும் சென்னையில் 18 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
வட சென்னையில் திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும், தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர்,மைலாப்பூர்,வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன.
இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை , தென் சென்னை ஆகியவை.
தமிழகம், மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.தமிழகக் காவல் துறையின் பிரிவான சென்னை மாநகரக் காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன.
பொருளாதாரம்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. 1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது.
மக்கள்
சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் விகிதம் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மார்வாரி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. அனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது.
கலாச்சாரம்
சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது. சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர்.
சென்னையில் கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும், சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.
சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்கால கோயில்கள் உள்ளன. புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.
போக்குவரத்து
சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.
சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.
சென்னையில் பறக்கும் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், சென்னையின் வடக்கு, மற்றும் மேற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை புறநகர் இருப்புவழி மூன்று மார்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சென்று வர சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னை, கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.
கல்வி
சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும் அதன் எதிரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன. வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம்.
சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் ஒன்று. இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்கு சூட்டப்பட்டது. செப்டம்பர் 15, 2010 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது; 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ 180 கோடி செலவில் கட்டப்பட்டது.
விளையாட்டு
சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் : சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன. விஜய் அமிர்தராஜ், இராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே.
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.
எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பை பந்தயத்தொடர் நடந்தது. மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது.
உயிரியல் பூங்காக்கள்
கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.
Subscribe to:
Posts (Atom)