Tuesday, January 15, 2013

ஆஸ்டியோ – பொராசிஸ்


வயதான மரங்கள் பட்டுப்போய், சுலபமாக ஒடிந்து போவது போல், மனிதனின் எலும்புகள், குறிப்பாக பெண்களின் எலும்புகள், வயதாக வயதாக, நலிந்து போய் விடுகின்றன. எப்போது வேண்டுமானாலும் எலும்புகள் முறியலாம். எலும்பின் “அடர்த்தி” குறைந்து போகிறது. 30 வயது வரை வளர்ச்சியடையும் பெண்களின் எலும்புகள், அந்த வயதில் தான் மிகவும் பலமாக இருக்கின்றன. அதற்கு பிறகு மெதுவாக எலும்புகள் பலவீனமடைய துவங்குகின்றன. எலும்புகளில் நுண்துளைகள் ஏற்படலாம். எலும்பு முறிவு அடிக்கடி உண்டாகும். இது தான் ஆஸ்டியோ – பொராசிஸ்.
பெண்களும், ஆஸ்டியோ பொரோசிஸ§ம்
50 வயதுக்கு மேற்பட்டவர்களில், மூன்று பெண்களில் ஒரு பெண்மணி இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஒன்பதில் ஒரு ஆண் தான் பாதிக்கப்படுகிறார். ஒரு வருடத்தில் 14,000 பெண்கள் ஆஸ்டியோ – பொரோசிஸால் எலும்பு முறிவு ஏற்பட்டு மரணமடைகின்றனர். மார்பு புற்று நோயால் இறக்கும் பெண்மணிகளை விட, இது அதிகம். பெண்களை அதிகமாக தாக்கும் காரணம் – இந்த நடு, முதிர் வயதில் மாதவிடாய் நிரந்தரமாக நின்று விடுவதால் பெண்களின் “பாதுகாப்பு” ஹார்மோன் குறைந்து போய்விடுகிறது. இதனால் பல நோய்கள், பலவீனங்கள் தாக்கும்.
நமது எலும்புகள் கால்சியம் மற்றும் பாஸ்பரஸால் ஆனவை. இவற்றால் எலும்புகள் திடமாகவும், அடர்த்தியாகவும் இருக்கின்றன. எலும்பின் திடத்தை பாதுகாக்க, இந்த தாதுப் பொருட்கள் தவிர பல ஹார்மோன்கள் – தைராய்ட் ஹார்மோன்கள், எஸ்ட்ரோஜனி, டெஸ்டோஸ்ட்ரீன், கால்சிடோனின் – போன்றவை தேவை. தவிர கால்சியம் சக்தியை எலும்புகளில் சேர்க்க விட்டமின் டி யும் தேவை. 30 வயது வரை எலும்புகளின் பழுதான, பழதான திசுக்கள் போய், புதுத்திசுக்கள் உண்டாகின்றன. வயதானால், இறந்த திசுக்களுக்கு இணையாக அதே அளவு புதிய திசுக்கள் உருவாவது இல்லை. இதனால் ஆஸ்டியோ – பொரோசிஸ் தலை தூக்குகிறது.
அறிகுறிகள்
உடல் உயரம் குறைவது, இது கூன் ஏற்பட்டு குனிந்து நடப்பதால் உயரக்குறைவு போல் தோன்றும்.
முதுகு வலி – முதுகெலும்பு கோளாறுகளினால் வரும்
எலும்பு முறிவு – முதுகெலும்பில், இடுப்பு, மணிக்கட்டு முதலிய இடங்களில் ஏற்படும்.
காரணங்கள்
வயது – வயதாகும் போது உடலின் எல்லா பாகங்களை போல, எலும்புகளும் பலவீனமடைகின்றன.
பரம்பரை – உங்கள் மூதாதையாருக்கு ஆஸ்டியோ – பொரோசிஸ் இருந்திருந்தால் உங்களுக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம்.
எஸ்ட்ரோஜன் குறைபாடு / மெனோபாஸ் சில பெண்மணிகளுக் மெனோபாஸ் சீக்கிரம் ஏற்பட்டுவிடும். 45 வயதுக்கு முன்பே மாதவிடாய் நிரந்தரமாக நின்று விடும். இதனால் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையும். குறைந்தால் எலும்பு அடர்த்தியும் குறைய தொடங்கும்.
உடற்பயிற்சி, உடலுழைப்பு இல்லாதது – எலும்புகள் வலுவடைய எடை தாங்கும் பயிற்சிகள் அவசியம். உடலுழைப்பு, நடமாட்டம் இல்லாத வாழ்க்கை முறையினால் எலும்புகள் பலவீனமாகும். எப்போதும் சுறுசுறுப்பாக ஓடியாடியிருப்பவர்களுக்கு ஆர்த்தரைடீஸ், ஏன், வேறு வியாதிகளும் தாக்குவதில்லை.
கால்சியம், விட்டமின் டி குறைபாடு – இவை இரண்டும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய தேவைகள் உணவில் இவை குறைந்தால் எலும்பு தேய்மானம், முறிவுகள் ஏற்படும்.
மெலிந்த உடலமைப்பு – ஒல்லியானவர்களின் எலும்புக்கூடு, வடிவம் சிறுத்து, பலவீனமாக இருக்கும். இவர்களுக்கு எலும்பு, மூட்டு குறைபாடுகள் ஏற்படுவது சகஜம்.
ஸ்டீராய்ட் மருந்துகளின் உபயோகம் மற்றும் டிப்ரெஷன்
எலும்பு இழப்புக்கு சரிசமாக புது எலும்பு திசுக்கள் உண்டாகாமல் போதல்.
மேற்சொன்னவை பிரதான ஆ. பொராசிஸ் வர காரணங்கள் ஆ. பொரோசிஸில் 2 பிரிவுகள் உள்ளன. ஒன்று பிரதான ஆ. பொரோசிஸ். மற்றொன்று இரண்டாம் பட்ச ஆ. பொரோசிஸ். இது வர காரணங்கள் – வேறு வியாதிகளான சிறுநீரக நோய்கள், ஹார்மோன் (தைராய்ட் போன்ற) கோளாறுகள், ஸ்டிராய்டுகள், நீரிழிவு போன்றவை. குடிப்பது, புகைபிடிப்பது இவற்றால் ஆ. பொரோசிஸ் ஏற்படாவிட்டாலும், வந்து விட்டபின், இந்த பழக்கங்கள் வியாதியை மோசமாக்கும்.
பிராதன ஆஸ்டியோ – பொரோஸில், 3 பிரிவுகள் உள்ளன. அவை
‘மெனோபாஸ்க்கு பிறகு வருவது
முதுமையால் வருவது
காரணமன்றி வருவது
முதல் வகை மெனோபாஸ்£ல் வரும் ஆஸ்டியோ பொராசிஸ்
இது ஏற்படும் காரணம் பெண்களின் ஹார்மோனான எஸ்ட்ரோஜன் சுரப்பது குறைந்துவிட்டால். இந்த ஹார்மோன் எலும்பில் கால்சியம் கிரகிப்பதை சீராக்கும். எனவே இது குறைந்தால் எலும்புகள் கால்சியம் குறைபாட்டால் பலவீனமாகி, அடர்த்தியை இழக்கும். பெண்களில், 51 வயதிலிருந்த 71 வயதுகளில் ஏற்படும் இந்த குறைபாடு சிலருக்கு முன்பே வரலாம். மெனோபாஸ் முடிந்த 5 அல்லது 7 வருடங்களுக்குள் பெண்கள் 25% எலும்பு அடர்த்தியை இழக்கிறார்கள். பெண்ணுக்கு பெண் இந்த இழப்பு மாறுபடும். ஒல்லியான, எடை குறைந்த பெண் மணிகளுக்கு எலும்பு இழப்பு அதிகமிருக்கும். மெலிந்த பெண்கள் குறைந்த கொழுப்பும், குறைந்த ஹார்மோனும் உள்ளவர்கள்.
முதுமையில் வரும் ஆஸ்டியோ பொரோசிஸ்
பெண்களில் எலும்பு அடர்த்தி, முப்பது வயது வரை வளர்கிறது. இந்த வயதில் எலும்புகள் முழு வளர்ச்சியுடன், அதிகபட்ச பலமாக இருக்கும். இதன் பிறகு அடர்த்தி குறைய ஆரம்பிக்கும் மெனோபாஸின் பிறகு அடர்த்தி குறைவு வேகமாக தொடரும்.
காரணமின்றி வரும் ஆஸ்டியோ பொரோசிஸ்
இதை காரணமின்றி என்று சொல்வதை விட காரணம் தெரியாமல் வரும் நோய் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இந்த குறைபாடு ஆபூர்வமாகத்தான் ஏற்படும். நார்மலாக இருக்கும் சிறுவர்களுக்கு வரும்.
ஆஸ்டியோ பொரோஸிஸை வந்த பின் காப்பதை விட வருமுன் காப்பது நல்லது. சரியான அளவு 1500 மி.கி. கால்சியம், 400-500 அலகுகள் விட்டமின் ‘டி’ யும் சிறுவயதிலிருந்தே எடுத்துக் கொள்ள வேண்டும். பால் தினமும் இரு தடவை 200 மி.லி. அளவு குடிக்க வேண்டும். மேலும் தேவைப்பட்டால் விட்டமின் ‘டி’ மற்றும் கால்சியம், டாக்டரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். விட்டமின் ‘டி’ கலந்த கால்சியம் மாத்திரைகள் கிடைக்கின்றன.
நடப்பது, மாடிப்படிகளில் ஏறுவது, எலும்புகளை வலுப்படுத்தும். உடலின் எடையை அவயங்களுக்கு பயிற்சி அளிக்க இவை சிறந்தவை.
ஆயுர்வேத அறிவுரைகள்
ஆயுர்வேதத்தின் படி, ஆஸ்டியோ பொரோஸிஸ் கபதோஷகுறைவினாலும், வாததோஷ அதிகரிப்பினாலும் உண்டாகிறது. தோஷ பாதிப்புகளால் ஊட்டச்சத்து எலும்பு திசுக்களுக்கு போய் சேர்வதில்லை. ஆமா (கழிவுகள்) தேங்கி விடுகிறது. ஆஸ்டியோ பொராஸிஸ், ‘அஸ்தியை’ (எலும்புத்திசு) சிதைக்கிறது. கால்சியம், விட்டமின் ‘டி’ உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பால் மட்டுமல்ல, பாதாம் பருப்பு, ஓட்ஸ், சோயா தயாரிப்புகள் இவற்றில் கால்சியம் உள்ளது.
கருமிளகு, முட்டைகோஸ், மீன் எண்ணை, பூண்டு, வெங்காயம், முட்டை (கொலாஸ்ட்ரால் இல்லாதவர்களுக்கு) முதலிய உணவுகள் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
காட்டு கொடிக்கிழங்கு, சோயா இவை ஆஸ்டியோ பொராசிஸ் ஏற்படுவதை தடுக்கும். அதுவும் சோயா சார்ந்த உணவுகள் மெனோபாஸ் முடிந்த பெண்களுக்கு நல்லது.
ஆஸ்டியோ பொரோசிஸிக்கு மருந்து பெண் ஹார்மோனான எஸ்ட்ரோஜன் இதற்கு நிகரான மூலிகைகள் – பலா (நிலதுத்தி), அஸ்வகந்தா, மருது முதலியன.
தாவர எஸ்ட்ரோஜன்கள் உள்ள உணவுகள்
தானியங்கள் – பார்லி, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ்
விதைகள் – சூர்ய காந்தி, எள், பரங்கிக்காய்
பருப்புகள் – சோயா பீன்ஸ்
பீன்ஸ் – கொத்துக் கடலை, அவரை
சில ஆயுர்வேத தயாரிப்புகள்
அசோகாரிஷ்டம், லோதிராஸவ, தசமூலாரிஷ்டம், பிராவல்பிஸ்தி சங்குபஸ்பம் முதலியன.

No comments:

Post a Comment