Tuesday, January 15, 2013

ஸ்பான்டிலைடீஸ்


முதுகெலும்பு மற்றும் பெரிய மூட்டுக்களின் வீக்கம், இதனால் வரும் வலி, விறைப்பு ஆங்கிலோஸிஸ் ஸ்பான்டிலைட்டீஸ் எனப்படும். குறிப்பாக சொன்னால் முதுகெலும்பின் முள்ளியங்கள் இடையே ஏற்படும் உராய்வு, மற்றும் முதுகெலும்புடன், இடுப்பெலும்பு இணைந்த பகுதிகளில் உராய்வு, இதனால் இந்த இணைப்புகளின் வீக்கமும், வலியும் உண்டாகும். சுருக்கமாக முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸ் இந்த வியாதி. இதன் வேறு பெயர்கள் – ருமடாய்ட் ஸ்பான்டிலைட்டிஸ் அல்லது மேரி ஸ்ட்ரம்பெல் நோய். இந்த நோயின் முக்கிய அம்சம் முதுகெலும்பின் கீழே உள்ள முக்கோண வடிவ எலும்புத்தட்டு பாதிக்கப்படும். மூட்டுக்களில் ‘ஆஸ்டியோஃபட்’ உருவாகும். இவை ரோஜா செடியின் முள் போன்ற அமைப்பில் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் உருவாகும் எலும்பு வளர்ச்சி. மூட்டு அழற்சி மற்றும் வீக்கத்தால், எலும்பு முள்கள் ஒன்றோடொன்று இணைவது, இறுகி விடுவதை ‘ஆங்கிலோசிஸ்’ எனப்படும். இவையெல்லாம் ஆஸ்டியோ ஸ்பான்டிலைட்டீஸின் விளைவுகள்.
இந்த வகை மூட்டு வியாதியில் கை, மணிக்கட்டு, விரல்கள், கால் போன்ற சிறிய மூட்டுக்கள் பாதிப்பது அபூர்வம்.
ஆங்கிலோசிஸ் ஸ்பான்டிலைடீஸ் பெண்களை விட 4 மடங்கு ஆண்களை பாதிக்கிறது. 20 வயதிலிருந்து 40 வயதுக்குள் பாதிக்கும். பரம்பரை வியாதி. பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளை தாக்கும் வாய்ப்புகள் 20 தடவை அதிகம்!
காரணங்கள்
மேற்சொன்னபடி பாரம்பரியம் தவிர வேறு காரணங்கள் தெரியவில்லை. வியாதியுள்ளவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மரபணு இருப்பது தெரிய வந்துள்ளது.
அறிகுறிகள்
முதல் முக்கிய அறிகுறி – முதுகு வலி, பகலை விட இரவில் அதிகமிருக்கும். முன்நோக்கி குனிந்தால் வலி குறைவது போலிருக்கும். ஆனால் இந்த மாதிரி வளைவதால், நிரந்தரமாக முதுகு வளைந்து விடலாம்.
முதுகெலும்பு கடினமாகி விறைப்பாக இருக்கும். காலைநேரத்தில் இந்த மாதிரி விறைப்பு ஏறிவிட்டு நேரமாக மறையும்.
பசியின்மை, எடை இழப்பு, களைப்பு, சோகை இவைகள் முதுகு வலியுடன் சேர்ந்து வரும்.
விலா எலும்புகள் பாதிக்கப்படுவதால், மார்பை விரித்து பெருமூச்சு விடுதல் வேதனை தரும்.
பெரிய மூட்டுக்களான தோள் பட்டை, முழங்கால், இடுப்பு இவற்றில் வலி ஆரம்பிக்கும்.
இந்த வியாதிக்கு ஆளாகும் மூன்றில் ஒருவருக்கு கண்கள் பாதிக்கப்படும். கண்பார்வை பாதிக்கப்படுவதில்லை.
இவ்வளவு அறிகுறிகள் இருந்தாலும் திரும்ப திரும்ப வரும் கீழ்பாக
முதுகெலும்பு வலி தான் இந்த நோயின் சாதாரண அறிகுறி. இந்த வலி புட்டப்பகுதிகளுக்கும் பரவும்.
சில ஆலோசனைகள்
பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வளிக்கவும்.
கடினமான மெத்தையில் படுக்க வேண்டாம். தலையணைகள் வேண்டாம். கால்களுக்கு தலையணை வைத்துக் கொள்வதும் கூடாது.
சுடுநீரில் குளிப்பது, ஐஸ் ஒத்தடம் வலியை குறைக்க உதவும்.
மிதமான உடற்பயிற்சி, நீச்சல், பிஸியோதெராபி பலனளிக்கும்.
எப்போதும் எல்லா வியாதிகளுக்கும் செல்லும் அறிவுரை – புகைப்பதை கைவிடவும்.
ஆங்கிலோஸிங் ஸ்பான்டிலைடீஸின் விளைவுகள்
அங்கஸ்திதி, நிற்கும், உட்காரும் முறைகளை சரிவர செய்து வந்தாலே, பாதி வியாதி மறையும்.
கவனிக்காமல் விட்டால் இந்த வகை ஸ்பான்டிலைடீஸ் முதுகெலும்பை விறப்படைய வைக்கும். இடுப்பு முழங்கால், தோள்கள் – இவற்றை தாக்கும்.
முதுகெலும்பின் அடிப்பகுதியிலிருந்து வெளியேறும் “நரம்புக் கட்டுகள்” குதிரை வால் போலிருக்கும். இவை சீரழிந்த முதுகெலும்பின் உடைந்த டிஸ்குகளால் நசுக்கப்பட்டால் வலி உண்டாகும். இது ஒரு அபூர்வமான பாதிப்பு.

No comments:

Post a Comment