Tuesday, January 15, 2013

திசு வளர்ப்பு முறையில் நாற்றுகள் உருவாக்கம்



ஊட்டி, :ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அரிய வகை மரங்கள், தாவரங்கள் உள்ளன. 27 கோடி ஆண்டுகள் பழமையான மர வகையான ஜிங்கோ பயலபா, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்குள்ள இத்தாலியன் பூங்காவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வகை மரம், சீனா, ஜப்பான் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இவை அரிய வகை என்பதால், இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மரத்தில் இருந்து திசுக்களை எடுத்து 10 நாற்றுகளை, திசு வளர்ப்பு முறையில் உருவாக்கும் பணிகள் துவங்கின.

ஓரிரு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. பெரிய நாற்றுகளாக வளர்ந்தவுடன் பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மரம் குறித்து சில தாவரவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே தெரியும். ஜிங்கோ பயலபா, டைனோசர் காலத்திய மரம். அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த மரக்கட்டைகளை எடுத்து, அவற்றில் உள்ள திசுக்களை எடுத்து இந்த மரங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டது. சீனாவில் இந்த மரங்கள், கடந்த 5500 ஆண்டுகளாக இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment