Tuesday, January 15, 2013

நாளை குழாய் இணைக்கும் பணி அடையாறு, திருவான்மியூரில் குடிநீர் சப்ளை தடைபடும் போன் செய்தால் லாரியில் வினியோகம்


சென்னை, : குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை குடிநீர் வாரிய வட்டம் 175, 176, 180, 181 ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதை மேம்படுத்துவதற்காக இந்திரா நகர் 2வது நிழற்சாலையில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடக்க உள்ளது. இந்த பணி நாளை காலை 11மணிக்கு தொடங்கி 5ம்தேதி காலை 11மணி வரை நடக்க உள்ளது. எனவே, இப்பணி நடைபெறும் நேரத்தில் இந்திரா நகர், பெசன்ட் நகர், திருவான்மியூர், தரமணி மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படலாம். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டால் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக பகுதி பொறியாளரை 81449 30913 என்ற செல்போன் எண் அல்லது 24416341 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment