Tuesday, January 15, 2013

சிறுநீரக பாதிப்புகள்


நீரிழிவு பாதிக்கும் பல உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. நீரிழிவு உண்டான முதல் 5 வருடங்களில், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது அபூர்வம். 15 ஆவது வருடங்களில் உச்சநிலை பாதிப்பை அடைந்து பிறகு குறைந்து வரும். நீரிழிவு நோயின் ‘வயது’ 25 வருடங்கள் ஆகிவிட்டால் சிறுநீரக பாதிப்புகள் அபூர்வம்.

நீரிழிவு வியாதியால் சிறுநீரக ரத்தக் குழாய்கள் விரிவடையும் புரதம் சிறுநீரில் கசியும். இரத்தம் சுத்திகரிப்பு சரிவர நடக்காது. சர்க்கரை வியாதியால் அதிக சர்க்கரை சேர்ந்து, சிறுநீரகம் அதிக சுத்திகரிப்பு வேலையை செய்ய வேண்டி வரும். இந்த அதிக வேலை பளு சிறுநீரகத்துக்கு கேடு விளைவிக்கும். படிப்படியாக ரத்தக்குழாய்களை பாதித்து அடைப்பு, வெடித்தல் இவற்றை நீரிழிவு உண்டாக்கும், சிறுநீரகம் பழுதாகி விடும். இந்த அறிகுறிகள் லேசில் தெரியாது.

சிறுநீரக வியாதிகளுக்கு அல்பூமின் எனும் புரதம் ஏறுமாறு ஆவது ஒரு காரணம். இரத்த ப்ளாஸ்மாவில் உள்ள அல்பூமின் ரத்தக் குழாய்களில் கசிவு ஏற்படாமல், ஹார்மோன் போன்ற மருந்துகளை ரத்த குழாய் வழியே கொண்டு செல்கிறது. இந்த அல்பூமின் நார்மலாக வெளியேற்றப்பட்டால் நல்லது. நார்மல் – 30 மி.கி, 24 மணி நேரத்தில் வெளியேறினால் சரி. இதற்கு மேல், 300 மி.கி. வரை வெளியேறினால் அதற்கு மைக்ரோ அல்பூமினியுரீயா என்பார்கள். டாக்டர்கள் நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில் அபரிமிதமாக அல்பூமின் இருப்பதை சோதனை செய்து பார்ப்பார்கள். சிறுநீரில் அதிகமாக அல்பூமின் இருந்தால், சிறுநீரகம் பழுதடைவதின் முதல் அறிகுறி. வருடத்திற்கு ஒரு முறையாவது மைக்ரோ – அல்புமின் டெஸ்ட் செய்து கொள்வது அவசியம்.

சர்க்கரை நோயுடன், உயர் இரத்த அழுத்தமும் உள்ளவர்களின் ரத்த அழுத்தம் அதிகமானால் சிறுநீரகத்தின் குழாய்கள் சுருங்கி பாதிப்படையும்.

No comments:

Post a Comment