ஊட்டி, : ஊட்டியில் போலீசாரின் பல்வேறு கட்டுப்பாடுகளால் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டவில்லை. அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு காரணமாக நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட ஏராளமானோர் குவிந்ததால், ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், ரிசாட்கள், காட்டேஜ்கள் நிரம்பின. வழக்கமாக ஓட்டல்களில் புத்தாண்டை முன்னிட்டு ஆடல், பாடலுடன் பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சுற்றுலா பயணிகள் விடிய, விடிய உற்சாகமாக ஆடி மகிழ ஏற்பாடு செய்யப்படும்.
டெல்லி சம்பவத்தை தொடர்ந்து, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் அறிவித்தனர். இதனால் ஊட்டி ஓட்டல்களில் கேளிக்கைகள் ரத்து செய்யப்பட்டன. பேக்கேஜ் கட்டணத்தில் சிறப்பு உணவு வகைகள் பரிமாறப்பட்டன. சுற்றுலா பயணிகள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதால் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டவில்லை.

No comments:
Post a Comment