Tuesday, January 15, 2013

பெண்களின் பெரும்பாடு


பெண்கள் படும்பாட்டில் தலையானது மாதவிடாய் கோளாறுகள். ஆரோக்கியமான பெண்ணின் அடையாளம் ஒழுங்காக குறிப்பிட்ட நாட்களில் நிகழும் “மூன்று நாட்கள்” மாத விலக்கு சரிவர நிகழ வேண்டும். மருத்துவம் முன்னேறிய இந்த நாட்களிலும் ஒரு தற்காலத்திய நவீன பெண்கள் இந்த மாத சுழற்சி கோளாறுகளுக்கு, பழங்கால கிராமத்துப் பெண்களை விட அதிகம் ஆளாகிறார்கள். அந்த காலத்திய அமைதியான வாழ்க்கையும் இந்த கால பரபரப்பு வாழ்க்கையும் காரணமாகலாம்.
பல விதமாக சொல்லலாம்
மாதச் சுழற்சி சரியான நாள்களில் ஏற்படும். ஆனால் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். இதை மெனோராகியா என்பார்கள். இது சராசரி உதிரப்போக்கை விட அதிகமாக போகிறது என்று எப்படி தெரிந்து கொள்வது நீங்கள் சாணிடரி பேடுகளை நாப்கின் பயன்படுத்துவராக இருந்தால் எவ்வப்போது மாற்றுகீர்கள், அடிக்கடி மாற்றும் படி நேர்கிறதா என்பதை கவனித்தாலே தெரிந்து விடும். இந்த உதிரப்போக்கு ஒரு வாரம் வரை இருந்தாலும் அணிந்த ஒரு மணி நேரத்துக்குள் நேப்கின் முழுவதும் ரத்தக் கசிவு இருந்தால் அபரிமித ரத்தப்போக்கு மெனோராகியா எனலாம்.
டைஸ்மெனோரியா
இது வலி, வேதனையுடன் கூடிய உதிரப்போக்கை குறிக்கும். முதல் கட்டத்தில் அடிவயிற்றில் இனந்தெரியாத வலி. இது மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் தோன்றலாம். இல்லை மாதவிடாயுடன் வரலாம். கூடவே தலைசுற்றல், வாந்தி, தலைவலி, மயக்கம், மலச்சிக்கல் இல்லை எதிர்மாறாக பேதி இவைகள் உண்டாகும். இதன் காரணம் சரியாக தெரியவில்லை. அதிகமான கர்பப்பை சுருங்கி விரிய காரணமான ஹார்மோன் சுரப்பினால் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இரண்டாம் நிலையில் வயதானவர்களை பாதிக்கும். அடிவயிறு இறுக்கம், வலி, இடுப்பு, மூட்டுவலிகள், மாதவிடாய்க்கு 2-3 நாட்கள் முன்பே தோன்றும் 2 வாரங்கள் வரை கூட இந்த வலிகள் இருக்கும். காரணம் – இடுப்பு எலும்புகளின் நோய் என்டோமெட்ரியாசிஸ் கர்பப்பை, ஓவரீஸ் இவற்றின் திசுக்கள் வியாதிப்படுதல், கட்டிகள், கர்பப்பை சிதைவு போன்றவை. மாதவிடாய் கால விளைவுகள் இவைகளும் மாதவிடாய் காலங்களில் வேதனையை உண்டாக்கும்.
மாதவிலக்கு நார்மலாக வரும் சமயங்களில் வராமல் வேறு நாட்களில், அடிக்கடி, இடைவெளிகள் சரியாக இல்லாமல் ஏற்படும் உதிரப்போக்கை மெட்ரோராகியா என்பார்கள்.
மாதவிலக்கு 21 நாட்களுக்குள் ஏற்பட்டால் அது பாலி மெனோரியா எனப்படும்.
அசாதரமான, காரணங்களன்றி, உதிரப்போக்கு ஏற்படுவதை டையஸ்ஃபங்சனல் யுட்ரின் பிளிடிங் என்பார்கள். இதில் மேற்கண்ட நான்கு பிரிவுகளும் அடங்கும்.
முதலில் இந்த கோளாறுக்களான காரணங்களை பார்ப்போம்
ஹார்மோன்கள் கோளாறு மாதவிலக்கை கன்ட்ரோல் செய்யும் ஹார்மோன் மாறுபடுதல். பெண் ஹார்மோனான எஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தால் உதிரப்போக்கு ஏற்படலாம். இந்த அதிக அளவான எஸ்ட்ரோஜனை சீர் செய்வது ப்ரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன். இந்த ஹார்மோன் கோளாறுகளால் பெண்ணின் சினை முட்டை வெளிவருவது நின்று விடும். இதனால் கர்பப் பையின் சுவர்கள் தடித்து விடும். கர்பப் பையின் சுவர்கள் என்டோமெட்ரியம் என்பார்கள். இந்த வீக்கத்தை என்டோமெட்ரியல் ஹைபர்பிளாசியா என்பார்கள். கர்பப்பை சுவர்களின் லைனிங் தொடர்ந்து, அடிக்கடி உதிர்ந்து விடும். இதனால் ரத்தப் போக்கு ஏற்படும்.
கர்பப்பையில் ஃபைராய்ட் வீக்கங்கள் இருந்தாலும் அதிக உதிர போக்கு நேரிட்டாலும். இந்த ஃபைராய்டுகள் நார்களினாலும், தசையினாலும் ஆனவை. முக்கால்வாசி உதிரப்போக்கு கோளாறுகளுக்கு பைப்ராய்ட் தான் காரணம். இதில் ஏற்படும் புதிய சதை வளர்ச்சி புற்று நோயில்லாத வீக்கம். இந்த பைப்ராய்ட் கர்பப் பையில் உண்டாகும் காரணங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஈஸ்ட்ரோஜன் இந்த தசை நார்கட்டிகளை ஊக்குவிக்குகிறது. பெண்களின் கர்ப்ப காலத்தில் பெரிதாகி, மெனோபாஸ் வந்தவுடன் சுருங்கி விடும். இலை சின்னதாகவும் இருக்கும், பெரியதாகவும் மாறும். கர்பப்பையில் சுவற்றில் குடியிருக்கும் பைப்ராய்ட் ஒன்றுக்கு மேலும் இருக்கலாம். இவைகளிருந்தால் உதிரப்போக்கை உண்டாக்கும். மலக்குடலை அழுத்தி வேதனையை உண்டாக்கும். பெரிய கட்டிகள், வலி, அழுத்தம் உண்டாகலாம். பைப்ராய்ட்ஸ் மூத்திரப்பையை அழுத்தி, அடிக்கடி சிறுநீர் கழிக்க செய்யும்.
கர்பப்பை கழுத்தில் பாலிப்ஸ் சீதமும் சளியும் உள்ள இடத்திலிருந்து தோன்றும் வளர்ச்சி. இவை சிறியவை – கர்பப்பையின் கழுத்தில் ஏற்படும் இந்த பாலிப்ஸ் ஏன் ஏற்படுகிறது என்ற காரணம் தெரியவில்லை. தொற்றுநோய் கர்பப்பையில் உள்ள ரத்த நாளங்கள் அடைபடுதல், எஸ்ட்ரோஜன் ஹார்மோன் கோளாறு இவை காரணமாக இருக்கலாம். இந்த கட்டினை, எளிமையான அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் நீக்கலாம்.
கர்பப்பை சுவற்றில் பாலிப்ஸ் கர்பப்பையின் சுவற்றில் உள்ள ஈரமான, சளியுள்ள லைனிங். இந்த லைனிங்கிலிருந்து நீட்டிக் கொண்டு வரும் பாலிப்ஸ் உண்டாக ஹார்மோன் கோளாறுகளே காரணமாக சொல்லலாம்.
இடுப்பெலும்பு கட்டில் தோன்றும் தொற்றுநோய்கள் அதிக ரத்தப்போக்கை உண்டாக்கலாம். கர்பப்பையின் கழுத்தையும் பாதிக்கலாம். இந்த இடுப்பு எலும்பு தொற்று, கர்பப்பை கழுத்து, கர்பப்பை, ஃபலோப்பியன் குழாய்கள் இவைகளையும் பாதிக்கும்.
கர்பப்பை கழுத்தில் உண்டாகும் புற்றுநோய், கர்பப்பை அல்லது அதன் சுவர்களில் உண்டாகும் புற்றுநோய்.
குடும்பக் கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படும்.லூப் போன்றவை.
சில ரத்தக் கோளாறுகள் ரத்தப்போக்கை நிறுத்த முடியாமல் போதல்.
ஆயுர்வேத சிகிச்சை
பெண்களின் மாதவிலக்கு சுழற்சி சிக்கலானது. ஆயுர்வேதத்தில் ரத்த பிரதார என்று அதிக உதிரப்போக்கு குறிப்பிடப்படுகிறது. நோயாளியின் ‘ப்ரக்ருதி’ முதலில் கண்டுபிடிக்கப்படும். அவர்களின் தற்போதைய ஆரோக்கிய நிலை பரிசோதிக்கப்படும். பிறகு பஞ்ச கர்மா சிகிச்சை ஆரம்பிக்கப்படும். உடலிலிருக்கும் நச்சுப்பொருட்களை களைந்து எடுக்கப்படும்.

No comments:

Post a Comment