* நாம் இறைவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், அவர் நம்மை நோக்கி நூறடி வைத்து நம் அருகில் வருவார்.
* மனதைக் கட்டியாளும் திறமையைப்பெறுவதே நாம் பெற வேண்டிய கல்வியாகும்.
* கருணை, கருணை என்று துடிக்கும் இதயத்தைத் தேடிக் கடவுள் ஓடிச் செல்வார். அத்தகைய இதயமே அவர் விரும்பிக் குடியிருக்கும் கோயில்.
* எந்தவேலையும் முக்கியமற்றதோ, பொருளற்றதோ இல்லை, அந்த வேலையை இதயப்பூர்வமாகவும், அன்புடனும் செய்தால் அது முக்கியமானதாகவும், அழகானதாகவும் மாறி விடும்.
* ஒவ்வொருவரிடமும் உள்ள நல்லதையே காணுங்கள். தேனை மட்டும் சேகரிக்கும் தேனீயைப் போல இருங்கள்.
* பிறருக்கு மகிழ்ச்சி அளிக்காவிட்டாலும், எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.
* நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே. ஆகவே, தோல்விகயைக் கண்டு ஏமாற்றமோ, மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை.
- மாதா அமிர்தானந்தமயி
No comments:
Post a Comment