ஊட்டி. : நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளிடையே தேயிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஊட்டியில் தேயிலை மற்றும் சுற்றுலா விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு விழா, மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் வரும் 22-ம் தேதி துவங்கி 3 நாள் நடக்கிறது. மினி மராத்தான், ஜம்பூரி ஊர்வலத்துடன் விழா துவங்குகிறது.
3 நாட்களும் உணவு திருவிழா, கலை நிகழ்ச்சிகள், பழங்குடியினர் நடன நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 20 அரங்குகளில் தேயிலை பொருட்கள், 20 அரங்குகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

No comments:
Post a Comment