வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும் அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி.
1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது. இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இருக்கிறது. இங்கு பாலாறும் பொன்னையாறும்
ஓடுகின்றன .வேலூர் மாவட்டத்தின் வெயில் ஊருக்கெல்லாம் தெரிந்த செய்தி. வடஆற்காடு பிரிக்கப்பட்டு அம்பேத்கார் மாவட்டமாக விளங்கிறது.பின்பு வேலூர் மாவட்டமாக பெயர் மாற்றப்பட்டது.
வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார்.
பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ்
கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக
இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.
வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயபட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து தரிசித்து செல்கின்றனர்.
No comments:
Post a Comment