வயிற்றைப் பற்றியும், வயிறு கோளாறுகளைப் பற்றியும், ஆயுர்தேம் அனுபவ திறமையும், ஆராய்ச்சிகள் மூலம், விவரமான அறிவையும் உடையது. வயிற்றின் ஆரோக்கியத்தை நிலைநாட்டவும், வயிற்றுப் பிரச்சனைகளை தீர்க்கவும், ஆயுர்வேதத்தில், ஆங்கில வைத்தியத்திற்கு இணையான மருந்துகளும், சிகிச்சைகளும் உள்ளன. ஏன், அலோபதியை விட ஆயுர்வேத சிகிச்சை ஒரு படி மேல். பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஜீரண கோளாறுகளை கிரஹணி என்கிறது ஆயுர்வேதம். கிரஹணி பொதுவான பெயர் எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் பொதுவாக கிரஹணி என்று குறிப்பிடப்படுகிறது.
சில ஆயுர்வேத கருத்துகள்
பிராண வாயுவின் செயல்பாட்டால், உணவு ஜீரணத்திற்காக வயிற்றில் தள்ளப்படுகிறது.
சமான வாயு ஜீரணசக்தியை அதிகரிக்கும்.
கிலேடக கபம் உணவுக்கு கோழையை சேர்க்கிறது.
ஜீரண சக்தியை அக்னி என்கிறது ஆயுர்வேதம்.
செல்களில் உள்ள பித்தம் ஒரு உஷ்ணசக்தி இந்த பித்தம் வயிற்றில் அதிகம்.
அதிக சூடான காரமான உணவுகளை உட்கொள்வதால், வயிற்றில் அதிக அமிலம் சுரக்கும்.
ஆமா என்பது ஜீரணம் ஆகாமல், மீந்த உணவு, ஆயுர்வேதம் 13 வகை அக்னி
களை விவரிக்கிறது. இதில் முக்கியமானது ஜாடராக்னி.
ஜாடராக்னி
ஆயுள், மேனி எழில், பலம், நல்ல ஆரோக்கியம், உற்சாகம், பூரிப்பான உடல், பிரகாசம், பளபளப்பு, உஷ்ணம், மற்றும் உயிர்மூச்சு, இவற்றையெல்லாம் காப்பது அக்னி. உடலுயிரின் அக்னி அணைந்தால், உயிர் பிரியும். தேவையான அக்னி உடல்சூடு உள்ள மனிதன் அதிக நாள், ஆரோக்கியமாக உயிர் வாழ்கிறான். அக்னி குறைந்தால் நோயாளி ஆகிறான். உயிரின் மூலாதாரம் உடலின் வெப்பம்.
ஏனைய கோளாறுகள் போல, வயிற்றுக் கோளாறுகளும் மூன்று தோஷ குறைபாடுகளால் உருவாகின்றன. பாதிக்கப்பட்ட தோஷம் அக்னியை மந்தப்படுத்துகிறது.
ஆயுர்வேதம் சொல்லும் 13 அக்னிகளில், முதல் ஆறும் ஜீரண மண்டலத்தில் உணவின் வளர்சிதை மாற்றத்தை பற்றியது. மிகுந்த ஏழு, தாது (உடல் திசுக்கள்) அக்னிகள், உணவு உடலால் கிரகிக்கப்படுவதில் சம்மந்தப்பட்டவை.
ஜாடராக்னி 4 விதமாக விவரிக்கப்படுகிறது
1. சாமா (சரிசம நிலை)
2. விஷாமா (முறையில்லாதது)
3. அதி (அதிகம்)
4. மந்தா (மந்தம்)
ஆயுர்வேதம் உணவு முறைகளையும், எந்தந்த பருவகாலத்தில் எந்த
வகை உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை அழகாக எடுத்துரைக்கிறது. குளிர்காலத்தில் நாம் கம்பளி உடைகளை அணிந்து குளிர்காற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்கிறோம். அதே போல ஒவ்வொரு சீசனிலும் பொருத்தமான உணவுகளை, ஆரோக்கிய கவசமாக ஆயுர்வேதம் சொல்கிறது.
செய்ய வேண்டிய ஆசனங்கள்
அதிக அமில சுரப்பு
சூரிய நமஸ்காரம் – சர்வங்காசனம், புஜங்காசனம், தனுராசனம், சிராசனம், பச்சிமோத்தாசனம், மத்ஸ்யேந்திராசம், சக்கராசனம்.
பிராணாயாமம் – அனுலோமா, விலோமா, சந்திரபேதனம், உஜ்ஜையி மற்றும் நாடி சுத்திகரிப்பு.
சில டிப்ஸ்
தர்பூசணி, உலர்ந்த திராட்சை, உருளைக்கிழங்கு போன்ற உணவுகள் அமில சுரப்பை குறைக்கும்.
பசியின்மை
சூரிய நமஸ்காரம் – சிரசாசனம், சர்வங்காசனம், மஸ்த்யாசனம், பச்சிமோத்தாசனம், உஷ்ட்ராசனம், புஜங்காசனம், சலபாசனம், தனுராசனம், மகராசனம்.
பிராணாயாமம் – எல்லா வகையும்.
சில டிப்ஸ்
இஞ்சியும், எலுமிச்சைபழச்சாறும் சேர்ந்த ஜுஸை காலையில் குடித்து வந்தால் பசி எடுக்கும்.
மலச்சிக்கல்
சூரிய நமஸ்காரம் – சிரசாசனம், சர்வங்காசனம், பச்சிமோத்தாசனம், சவாசனம்.
பிராணாயாமம் – அனுலோமா, விலோமா, உஜ்ஜையி, நாடி சுத்திகரிப்பு.
ஜீரண கோளாறுகள்
சூரிய நமஸ்காரம் – சர்வங்காசனம், சிரசாசனம், மஸ்த்யாசனம், மயூராசனம், புஜங்காசனம், சலபாசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம், சவாசனம்.
பிராணாயாமம் – அனுலோமா, விலோமா, உஜ்ஜையி, நாடி சுத்திகரிப்பு.
No comments:
Post a Comment