Tuesday, January 15, 2013

குதிகால் வலி

குதிகால் வலியால், குறைந்தது 10 மில்லியன் ஜனங்கள் அவதிப்படுகின்றனர். ஆஸ்டியோ – ஆர்த்தரைடீஸ் நோயாளிகளில் 80% குதிகால் வலியால் பாதிக்கப்படுகின்றனர். ரூமாடாய்ட் ஆர்த்தரைடீஸ் நோயாளிகளை குறைந்த அளவில் குதிகால் வலியால் பாதிக்கப்படுகின்றனர்.
குதிகால் வலி 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் இருந்தாலும் 8 லிருந்து 13 வயது சிறுவர்களையும் பாதிக்கும். குதிகால் எலும்பு பாதத்தில் உள்ள எலும்புகளில் பெரியது. நடக்கும் போது உடல் எடையை தாங்கும் வளைவான அமைப்பு, நாம் தடுமாறாமல் இருக்க உதவுகிறது. இதனுடன் இணைந்த நார் போன்ற பாத திசுக்கள், தசைகள், தசை நாண்கள் எலும்புகளை இணைக்கும் நார்கள், நாம் நடக்க, உடல் எடையை தாங்க உதவுகின்றன.
குதிகால் வலி பாத திசுக்கள் மற்றும் பாத வளைவை தாங்கும், காலின் நான்கு விரல்களை வளைந்து நிமிர செய்யும் தசையை தாக்கும். இந்த அழற்சியை உண்டாக்குபவை
ரூமடாய்ட் ஆர்த்தரைடீஸ்
ஆங்கிலோஸிஸ் ஸ்பான்டிலைட்டீஸ்
கவுட்
சோரியாடிக் ஆர்த்தரைடீஸ்
பாலியல் வியாதிகள்
காச நோய் முதலியன.
காரணங்கள்
கரடு முரடான பாதையில் நடப்பது. எனப்படும் குதிகால் மேலே தூக்கியிருக்கும் படி செய்யப்பட்ட காலணிகள், அதிகமாக நடப்பது.
குளிர் பாதிப்பு, தண்ணீரில் அலைதல்
அதிக எடையை தூக்குதல்
வாதத்தை ஏற்றும் உணவுகள்.
அறிகுறிகள்
நடப்பது கஷ்டமாகும். இரவில் ஏற்படும் வலி அல்லது ஒய்வில் இருக்கும் போது உண்டாகும் குதிகால் வலி.
வலி பல நாட்கள் நீடிப்பது.
குதிகால் கருமை அடைதல், வீக்கம்
ஜுரம்.
ஆயுர்வேத சிகிச்சை
ஸ்நேஹனா – உராய்வை குறைக்கும் ‘வழவழப்பு’ எண்ணைகளால் ‘அப்யங்கம்’ மசாஜ் செய்வது.
ஸ்வேதனா – ஒத்தடம் கொடுப்பது.
லேபம் – களிம்புகளை தடவுதல்
சோதனா – உடலின் கழிவுப்பொருட்களை வெளியேற்றுதல்.
ஸ்வேத முறையினால் ஏற்படும் பலன்கள்
வாத தோஷம் சீரடைகிறது
விறைப்பு குறைகிறது.
தசைகள் இறுக்கம் குறைந்து ரிலாக்ஸ் ஆகின்றன.
இரத்த ஓட்டம் மேம்படுகிறது.
ஸ்வேதத்தின் போது மசாஜ் செய்தால் டென்ஷன், வலி குறையும். உள்ளுக்கு, ருமடாய்ட் ஆர்த்தரைடீஸால் ஏற்பட்ட குதிகால் வலிக்கு, சிம்ஹாநாத குக்குலு கொடுக்கப்படும். ஆஸ்டியோ – ஆர்த்தரைடீஸால் வரும் குதிகால் வலிக்கு நிர்குண்டி தைலம் நல்ல பலனளிக்கும்.
வாத நோய்கள் உள்ளவர்களுக்கு ஏற்படும் குதிகால்வலி ஒரு அறிகுறியே
ஆகும். ஆயுர்வேத சிகிச்சை, இந்த வாதநோய்களையும் கருத்தில் கொண்டு, முழுமையாக தரப்படும். தவிர எஸ்ட்ரோஜன் குறைவு, அதனால் ஏற்படும் கால்சியம் கிரகிக்கபடாத நிலை போன்றவற்றுக்கு நெல்லி, சதவாரி, சல்லாக்கி, மஞ்சள், சுக்கு போன்ற மருந்துகள் தரப்படும்.
குளிர் ஒத்தட பயன்கள்
வீக்கம், சுழற்சி குறையும்
தசைகள் மரத்துப் போவதால் வலி குறையும்
தசை கசிவுகளை குறைக்கும்
சூடு ஒத்தட பயன்கள்
வலி குறையும்
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிக ரத்தம் பாயும்.
தசைகள் தளரும்.
யோகாசனங்கள் பலனளிக்கும் – பிராணாயமம் சேர்த்து ஆசனங்களை
முறையாக கற்றுக் கொண்டு செய்யவும்.
குதிகால் வலி, பாதத்தில் வளரும் முளை போன்ற எலும்பினாலும் ஏற்படும். இதற்கும் யோகாசனங்கள் பலன் தரும்.

No comments:

Post a Comment