Tuesday, January 15, 2013

நழுவும் கருப்பை


உடலின் அவயங்கள் இருக்கவேண்டிய இடங்களில் இருக்க வேண்டும். அவை இடப்பெயர்ச்சி செய்தால் ஏற்படும் தொல்லைகள் பல. இந்திய பெண்களுக்கு கருப்பை கீழ் நோக்கி நகருவது மேலை நாட்டுபெண்களை விட அதிகம் ஏற்படுகிறது.
கருப்பை தசை நாண்களால் ஒரே இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதை தாங்கும் தசைகளும், தசை நாணிகளும் தொய்வுறும் போது, கருப்பை கீழே விழ நகர ஆரம்பிக்கிறது. இதை கருப்பை பிதுக்கம் என்று கூறலாம்.
கருப்பை நிலைகுலைந்து கீழ் நோக்கி நகர்ந்து பெண்ணின் பிறப்புருப்பின் முழுவதிலுமே இறங்கி, ஆக்ரமித்துவிடும். இது தான் கர்ப்ப பிதுக்கம்.
அறிகுறிகள்
இடுப்பு எலும்புக்கூட்டில் கனமானது போல் அழுத்தம் வலி.
முதுகுவலி
நடக்கும் போது அடிவயிற்றில் வலி. ஏதோ வெளிவந்து பிதுங்குவது போன்ற உணர்வு
மலச்சிக்கல் – சிறுநீர், மலக் கழிப்பதில் கஷ்டம். சில சமயம் அதிக சிறுநீர் போகும்.
கர்ப்பையின் கழுத்தில்  புண்கள் தோன்றி இரத்தம் கசியும்.
சிறுநீர் கழிப்பதை அடக்க முடியாமல் போவது.
பிரட்டல்
உடலுறவில் தடை
காரணங்கள்
இடுப்பு, வயிறு எலும்புக்கட்டுக்கள் பலவீனமாதல். குழந்தை பேற்றின் போது இடுப்புக் கூட்டின் தசைகள் இழுக்கப்பட்டு காயப்படுதல். குழந்தைப்பேற்றின் போது தவறான முறைகள், குழந்தை பேற்றிற்குப்பின் ஒய்வு எடுக்காமல் போதல், கருப்பையில் கட்டிகள் இவற்றாலும் கருப்பைப் பிதுக்கம் ஏற்படலாம். குழந்தை பேற்றின் போது கருப்பையைத் தாங்கும், தசைகள் தொய்வு அடைந்து விடுதல் ஒரு முக்கியகாரணம்.
அடிவயிற்றில் அதிக அழுத்தம். இது குண்டானவர்களுக்கு, அதிக உடல்பருமனால் ஏற்படும்.
வயிற்றில் வாய்வு நிறைந்திருத்தல். இதனால் கருப்பை கீழ் நோக்கி தள்ளப்படும் மலசிக்கலினால் பெருங்குடல் பகுதி நிறைந்து கருப்பையை முன்னோக்கித் தள்ளும். நாட்பட்ட மலச்சிக்கலும் ஒரு காரணம்.
அடிக்கடி குழந்தைப்பேறு
இறுக்கமான உடைகள் அணிவது.
மாதவிடாய் நின்றபின் ஏற்படும் எஸ்ட்ரோஜன் (பெண் ஹார்மோன்) குறைபாடு.
சிகிச்சை முறைகள்
அறுவை சிகிச்சை சிறந்தது
நல்ல உணவு – பழங்கள் மிகுந்த அல்லது முதல் 5 நாட்களுக்கு வெறும் பழஆகாரம் – கொடுக்க வேண்டும். தினமும் எனிமாவால் மலக்குடல் சுத்தப்படுத்த வேண்டும். பிறகு படிப்படியாக திட உணவுக்கு வர வேண்டும்.
நன்கு அரைத்து கூழாக்கப்பட்ட பச்சை காரட்டை மெல்லிய துணியில் வைத்து புணர் புசையில் செலுத்தி சுமார் 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். 12 மணிக்கு ஒரு தடவை புதிய காரட் கொண்டு செய்யப்பட வேண்டும் இதனால் கருப்பை, அதை சார்ந்த தசைகள் வலுப்பெறும்.
கேகல் எனப்படும் பயிற்சி பயன்தரும். இந்த பயிற்சி, யோனி, சிறுநீர் அகற்றும் குழாய் மற்றும் மலக்குடல் இவற்றின் தசைகளை பலப்படுத்தும். இந்த தசைகளை 10 விநாடிகளுக்கு இழுத்து, இறுக்கிக் கொள்ள வேண்டும். இதை 10-20 தடவை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு நாளில் பல தடவை செய்யலாம். உட்கார்ந்த வாக்கில், நின்றபடி அல்லது படுத்துக்கொண்டும் பெண்கள் இந்தப் பயிற்சியை செய்யலாம். ஆரம்பநிலை கருப்பை பிதுக்கத்திற்கு இந்த பயிற்சி சிறந்த பலன் அளிக்கும். பொதுவாகவே இந்த பயிற்சியை செய்து வந்தால், கருப்பை பிதுக்கம் ஏற்படுவதையே தடுக்கும். கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் பிரிவதை நிறுத்தும்.
மலச்சிக்கலை போக்க வேண்டும்.
ஹார்மோன்கள் பெண்களில் கருப்பை உறுப்புகளை பலப்படுத்துகின்றன.
சேனைக்கிழங்கு அல்லது கருணைக்கிழங்கில் பெண்களின் ஹார்மோனான ப்ரோஜெஸ்ட்ரோன் உள்ளது. இதை உண்ணுதல் நல்லது. சோயாவும் இயற்கை ஹார்மோன்களை தருவதால் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிமதுரம் – அட்ரீனல் ஹார்மோன் உற்பத்தியை தூண்டுகிறது. ஒட்ஸ் கஞ்சியும் ஹார்மோன் சுரப்பை சீராக்கும். இதர இயற்கை பெண் ஹார்மோன் எஸ்ட்ரோஜன் உள்ள உணவுகள் சோம்பு, ஆப்பிள், பார்லி, பீட்ரூட், கேரட், வெள்ளரிக்காய், பால் சார்ந்த உணவுகள் பேரீச்சை, முட்டை, ஒமம், பூண்டு, ஆலிவ் எண்ணெய், பப்பாளி, பட்டாணி மாதுளம், கோதுமை, உருளைகிழங்கு, பரங்கிக்காய், அரிசி, தக்காளி போன்றவை.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும். அதிக காய்கறி, பழங்கள், கைக்குத்தல் பழுப்பு நிற அரிசி, கம்பு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
உடற்பயிற்சி – கால்கள் இரண்டையும் உயர்த்தி வைத்தபடி 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை படுத்திருக்கலாம். கால்களை நீட்டியபடி தரையில் படுத்துப் பின்னர் கால்களை இயன்றவரை உயர்த்தி ஒரிரு நிமிடங்கள் அதே நிலையில் வைத்திருப்பது கால்களை இறக்கும் பயிற்சியை 10 முறை செய்யலாம். பத்மாசனத்தில் அமர்ந்தபடி மல்லாந்து படுத்து கால்கள் இரண்டையும் மேல் நோக்கி உயர்த்தும் பயிற்சியும் நல்ல பலனைத் தரும்.

No comments:

Post a Comment