கடவுளிடம் மட்டும் சொல்லுங்கள்
* பிறரிடம் உங்களது கவலைகளைக் கூறி கவலைகளைப் பெருக்கிக் கொள்ளாதீர்கள். சொல்வது என்றால் கடவுளிடம் முறையிட்டுச் சொல்லுங்கள். நிச்சயம் தீர்வு பெறுவீர்கள்.
* நான் ஒன்றுமே செய்யவில்லை. எல்லாவற்றையும் இறைவனே செய்கிறார் என்ற உறுதியான உணர்வுடன் ஒருவன் இருப்பான் என்றால் அவனால் ஒருபோதும் தவறு செய்யும் குணம் இருக்காது.
* ஆசை தான் நாம் படும் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம். உலகியலில் ஈடுபட்டால் நமக்கு உண்டாகும் இன்பம் நமக்குள் இருக்கும் பேரின்பத்தோடு ஒப்பிட்டால் மிகச் சிறியதே.
* சாப்பிடுவதற்கு முன் உணவை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யுங்கள். ஏழைகளுக்கு முடிந்தால் தானம் செய்யுங்கள். இப்படி செய்வதால் நாம் உண்ணும் உணவு தூய்மை பெறும்.
* ஒவ்வொரு சூழ்நிலையிலும், புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்தோடு செயல்களை செய்யும் சக்தியைக் கொடு என்றும், இன்பத்திலும் துன்பத்திலும் உன்னை மறக்காத வரத்தை அருள்வாயாக என்றும் இறைவனை வேண்டுங்கள்.
* குறைவாகப் பேசுங்கள். தேவையற்ற விஷயங்களைப் பேசாதீர்கள். நேரம் விலைமதிப்பற்றது. உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக கடவுள் நாமத்தை ஜெபியுங்கள்.
-மாதா அமிர்தானந்தமயி
No comments:
Post a Comment