Tuesday, January 15, 2013

யோகாசனத்தின் பலன்கள்


முதுகெலும்புக்கு சுலபமாக வளையும் தன்மையை கொடுக்கும்
முதுகையும், கைகளையும் பலப்படுத்தும்.
பெண்களின் ஜனனேந்திரியங்களை வலுப்படுத்தும்.
யோகாவின் குரு பதஞ்சலி முனிவர். இவர் எழுதியுள்ள யோக சூத்திரங்கள் யோக கலைகளை விவரிக்கின்றன. யோகா மட்டுமல்ல, பதஞ்சலி சரகஸம்ஹிதைக்கும் ஒரு உரை எழுதியிருக்கிறார். இதிலிருந்தே யோகாவும், ஆயுர்வேதமும் எவ்வளவு ஒன்றிணைந்தவை என்பது புலப்படும். பதஞ்சலி முனிவர் தான் யோகக் கலைகளை தொகுத்து ‘யோக சூத்திரங்கள்’ என்று வடிவமைத்தார்.
வீர பத்ராசனம்
நேராக நிமிர்ந்து நிற்கவும். கால்களை சேர்த்து, உடல் நேர்க்கோடாக, கைகள் பக்கவாட்டில் உடலை தொட்டுக் கொண்டு நிற்கவும்.
கால்களை 1.2 மீட்டர் இடைவெளி இருக்குமாறு தள்ளி வைத்து கொள்ளவும். வலது பாதத்தை 90 டிகிரி கோணத்தில் திருப்பி, இடது காலை 45 டிகிரி கோணத்தில் திருப்பவும். வலது குதிகால் இடது உட் பாதமும் ஒரே கோட்டில் இருக்க வேண்டும்.
மூச்சை வெளிவிடவும். இடுப்பை, சுழற்றி, உடலை வலது பக்கம் திருப்பவும். உங்கள் உடலின் முன்பாகமும், வலது கட்டைவிரல் ஒரு திசையை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
வலது காலை மடிக்கவும். வலது குதிகாலும் முழங்காலும் நேர்க்கோட்டில் இருக்கும்.
மூச்சை உள்ளே இழுக்கவும். கைகளை மேல் தூக்கவும். இரு கைகளுக்கும் நடுவில் உள்ள இடைவெளி தோள்களின் அகலத்திற்கு சமமாக இருக்கும். உள்ளங்கை ஒன்றை ஒன்று பார்த்துக கொண்டிருக்கும். விரல் நுனிகள் கூரையை பார்த்திருக்கும்.
மூச்சை வெளியே விடவும். தலையை பின்வாங்கி, இரு உள்ளங்கைகளின் இடைவெளி வழியே கூரையை பார்க்கவும். இந்த நிலையில் நின்று வழக்கம் போல் சுவாசிக்கவும். கழுத்தை விறைப்பாக வைத்துக் கொள்ள வேண்டாம்.
மூச்சை உள் இழுக்கவும். கழுத்தை தலையை நேராக வைத்துக் கொண்டு, வலது காலை சரியான நிலைக்கு திருப்பவும், உடலை நார்மல் நிலைக்கு திருப்பிக் கொள்ளவும். கால் பாதங்களை நேர் நிலையில் திரும்பிக் கொள்ளவும்.
காலை விலக்கிக் கொண்டு, இது வரை வலது காலை மடித்து செய்தது போல், இடது காலை மடித்து செய்யவும்.
பலன்கள்
கணுக்கால், முழங்கால், மூட்டுக்கள் பலமடையும்
சியாடிகா நோயாளிகள் செய்ய வேண்டிய ஆசனம்
கால் தசைகளை வலிமையாக்கும்.
சுகாசனம்
இருபிட்டங்களின் மீது உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இரு கால்களையும் முன்னே நீட்டிக் கொள்ளவும். கால்கள் சேர்ந்திருக்கட்டும். கால்களை தளர்த்தி வைத்துக் கொள்ளவும்.
கால்களை மடித்து சப்பண மிட்டுக் கொள்ளவும். அதாவது வலது கால் இடது கெண்டைக்காலின் (முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையே உள்ள பாகம்) முன் தரையை தொட்டுக் கொண்டும், இடது கால் வலது தொடையின் உள் வைத்து தரையை தொடுமாறு வைத்துக் கொள்ளவும்.
இரு முழங்கால்களை சிறிது தூக்கி கிட்டே கொண்டு வரவும். உள்ளங் கைகளை விரித்து முழங்கால்களின் மேல் வைத்துக் கொள்ளவும். தோள்களைவும், கைகளையும் தளர்த்திக் கொள்ளவும்.
மூச்சை உள்வாங்கவும், விரல்களை கோர்த்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் கூரையை பார்க்கும் படி திருப்பி, கைகளை தலைக்கு மேல் தூக்கவும்.
இந்த நிலையில், நார்மலாக சுவாசித்து கொண்டு, இருக்கவும்.
கால்களை பிரித்து முன் நீட்டிக் கொள்ளவும்.
கால்களை மாற்றி மறுபடியும் ஆசனத்தை செய்யவும்.
பலன்கள்
முதுகெலும்பை வலுப்படுத்தும்.
எச்சரிக்கை
முழங்கால்களை கையால் கீழே தள்ள வேண்டாம்.
ஹம்சாசனா அன்னபட்சி
தவழ்வது போல் கைகளை, கால்களை தரையில் வைத்துக் கொள்ளவும். கால்கள் மண்டியிட்டது போலிருக்கும்.
பூனை ஆசனத்தைப் போல், இரு கைகளும் உள்ளங் கைகளால் தரையில் ஊன்றி தோள்களுக்கு கீழே இருக்க வேண்டும். விரல்கள் முன்நோக்கி இருக்க வேண்டும். இரு முழங்கைகளும் தரையில் படிந்திருக்க வேண்டும்.
மூச்சை உள்வாங்கி, தலையை தூக்கி எதிரில் பார்க்கவும். மார்பை விவரிக்கவும். உள்ளிழுத்து. பின் முதுகில் “குழி” ஏற்படுத்தவும்.
வெளிமூச்சு விட்டு, இடுப்பு – பிட்டப் பகுதியை மேலே தூக்கவும். கைகளை தலைக்கு முன் நீட்டி உள்ளங்கைகளால் தரையை தொடவும். தலை தரையை தொடட்டும். கிட்டத்தட்ட ஒரு முக்கோண வடிவில் உடல் தோன்றும்.
இதில் நிலை கொண்டு, நார்மலாக சுவாசிக்கவும்.
உடலை, இடுப்பை பின் தள்ளி கால்களின் மேல் உட்காரவும். உள்மூச்செடுத்து, தலை, உடலை நேராக வைக்கவும். மூச்சை வெளிவிடவும்.
பயன்கள்
முதுகு, கை தசைகள் வலிமை அடையும்
முதுகெலும்பு சீராகும்
முதுகு வலி குறையும்
பிட்ட தசைகள் வலிவுறும்
எச்சரிக்கை
உங்களுக்கு முதுகு மற்றும் முழங்கால் பாதிப்புகள் இருந்தால், ஜாக்கிரதையாக, வைத்தியர் ஆலோசனைப்படி இந்த ஆசனத்தை செய்யவும்.
சலபாசனம்
முதலில் தரையில் வயிறு அழுந்தி இருக்குமாறு குப்புற படுத்துக் கொள்ளவும். தலையின் ஒரு பக்கம் தரையை தொடட்டும். கைகளை தளர்த்தி பக்க வாட்டில் வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் கூரையை பார்த்திருக்கட்டும்.
தலையின் நெற்றி, தாடை தரையில் படுமாறு திருப்பிக் கொள்ளவும். கைகளை வயிற்றுப் பகுதிக்குக் கீழே ஒன்றின் கீழ் ஒன்றாக வைத்துக் கொள்ளவும்.
மூச்சிழுக்கவும், உடலையும், தலையையும் தரையிலிருந்து தூக்காமல், கால்களை மட்டும் மேல் நோக்கி தூக்கவும். கைகளை மடக்கி வைத்திருக்கும் அடிவயிற்று பகுதியிலிருந்து, கால்கள் முழுமையாக மேல் எழும்ப வேண்டுமே தவிர அவற்றை மடக்கக் கூடாது.
மூச்சை வெளியிட்டு, காலை நீட்டி, பிட்ட தசைகளை சுருக்கி, இடுப்புப் பிரதேசத்தை தரையில் அழுத்திக் கொண்டு கால்களை சேர்த்து முடிந்த வரை உயரே தூக்கவும்.
இந்த நிலையில் நார்மலாக சுவாசிக்கவும். 10 – 20 நொடிகள் இருக்கவும்.
மூச்சை வெளியிட்டு கால்களை இறக்கவும். கைகளை தளர்த்தவும்.
பயன்கள்
கால்களை பலப்படுத்தி, பின் முதுகு தசைகளுக்கு வலிமை சேர்க்கிறது.
பிட்ட தசைகள் வலிவுறும்
முதுகெலுபின் வளையும் தன்மை மேம்படும்
கீழ் முதுகு வலி கட்டுப்படும்.

No comments:

Post a Comment