ஊட்டி,: நீலகிரியில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன். அப்போது, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பார்க் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். அவர்களை மகிழ்விக்க ரோஜா கண்காட்சி, படகு அலங்கார அணிவகுப்பு, மலர் கண்காட்சி போன்றவை நடத்தப்படுகின்றன.
பாரம்பரிய கார்கள் அணிவகுப்பு, பொருட்காட்சி போன்றவையும் நடத்தப்படும். தாவரவியல், ரோஜா, மரவியல் பூங்காக்களை கோடை சீசனுக்காக தயார்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. ஓரிரு நாட்களில் தொட்டிகளில் மண் நிரப்பும் பணி துவங்க உள்ளது. பூங்காவில் சேதமடைந்துள்ள நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment