Tuesday, January 15, 2013

கோடை சீசனுக்காக மலர் நாற்று நடும் பணி


ஊட்டி, :ஊட்டியில் மார்ச்சில் துவங்கும் கோடை சீசன் மே மாதம் முடிவடையும். அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மே மாதம் நடைபெறும். இதற்காக மலர் செடிகள் நடவு துவங்கிவிட்டது. மரவியல் பூங்காவில் மலர் நாற்று நடப்பட்டுள்ளது. ரோஜா பூங்காவும் தயாராகிவருகிறது. கோடை சீசனின் போது, சுற்றுலா பயணிகள் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள பாரம்பரிய கட்டிடமான தமிழகம் மாளிகைக்கு செல்வர். அங்குள்ள பூங்காவை ரசிப்பர்.

இது தாவரவியல் பூங்கா நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. கோடை சீசனின் போது விஐபிக்கள் பலரும் இங்குதான் ஓய்வெடுக்கின்றனர். தமிழகம் மாளிகை பூங்காவில் கோடை சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு பணிகள் நாளை துவங்குகிறது. மலர் நாற்றுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 40 வகைகளில் 30 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட உள்ளது. 

No comments:

Post a Comment