Saturday, January 12, 2013

செலவில்லாமல் புண்ணியம்


செலவில்லாமல் புண்ணியம்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
நம்மைவிட உயர்ந்தவரைப் பார்த்து பொறாமைப் படாமலும், நம்மை விடத் தாழ்ந்தவர் மீது வெறுப்பும், ஏளனமும் காட்டாமலும் யார் இருந்தாலும் சமமாக பாவிப்பது நமக்கு மனசாந்தியைத் தரும் நெறிமுறையாகும்.
நம் மனதின் அடிஆழத்தில் பக்தி என்னும் தன்மை அடங்கியுள்ளது. அதனை காமம், உலக ஆசைகள் இவையாவும் பக்தியை மூடியுள்ளன. இவைகளை எப்போது தகர்த்து எறிகின்றோமோ அப்போது பக்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.சங்கீதத்திற்கு இறைவனும் மயங்குவதால் தான் வேதமும் இறைவனை சாமவேதத்தில் சாமகானமாக வழிபடுகிறது. பாகவதமும் கோபிகாகீதம், வேணுகீதம் என்று இசைத்து கண்ணனைப் பாடுகிறது. 
கடவுளை அடைவதற்கு சங்கீதம் மிக எளிய வழியாக அமைந்துள்ளது.வாழ்வில் வெற்றி ஏற்படுமானால் இது இறைவனின் அருள் என்று நினைக்க வேண்டும். அப்படி எண்ணுவதால் அகம்பாவம் வராமல் இருக்கும். வாழ்வில் குறை ஏற்படும் போது நம்முடைய முயற்சியின்மை தான் காரணம் என்று எண்ண வேண்டும். இதனால், நாம் நம்மை திருத்திக் கொள்ள இயலும்.ண புண்ணியம் தேடுவதற்கு வசதி வேண்டும் என்பதில்லை. 
மகான்களை தரிசிப்பது, இறைநாமங்களை ஜபிப்பது, புண்ணியநதிகளில் நீராடுவது, பசுவிற்கு புல் கொடுப்பது, சாதுக்களுக்கு உதவுவது போன்ற செயல்களை செய்வதனாலேயே புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்.
-முரளீதர சுவாமி

No comments:

Post a Comment